தனது சொந்த ஊரின் பெயரை தன் வாயால் சொன்னது அவருக்குள் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புன்னகைக்கும் அதுவே காரணம். “என்னிடம் சில விலங்குகள் இருந்தன. அவற்றைப் பராமரித்து வந்தேன்.” என்று விளக்கினார். என்ன சொல்ல வருகிறார் என விளங்காமல், “அப்படியோ” என்று மேலும் அவர் சொல்லப் போவதை கவனிக்கத் தொடங்கினேன். “ஆமாம். என் விலங்குகளைக் கவனித்துக்கொண்டு அங்கேயே இருந்தேன். சான் கார்லோஸ் நகரத்தை விட்டு வெளியேறிய கடைசி ஆள் நான்தான்.” அவரின் அழுக்கு படிந்த கருப்பு ஆடைகளையும் புழுதி படிந்த முகத்தையும் மூக்கு கண்ணாடியையும் மீண்டும் ஒருமுறை நோட்டம் விட்டேன். ஆடு மேய்ப்பவராகவோ பண்ணை வைத்திருந்தவர் போலவோ தெரியவில்லை. “என்ன விலங்குகள் அவை?” என கேட்டேன். “வித விதமான விலங்குகள்,” ஆற்றாமையில் தலையசைத்தார்.
ஆசிரியர்: எர்னஸ்ட் ஹெமிங்வே
ஸ்விட்சர்லாந்தைப் போற்றி
அந்த பணிப்பெண் அவர் போவதை கவனித்தாள். அசிங்கமானவர், அவள் நினைத்தாள், அசிங்கமானவர் மற்றும் வெறுக்கத்தக்கவர். முந்நூறு ஃப்ராங்க்குகளாம், ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்கு. எத்தனை முறைகள் சும்மாவே அதை நான் செய்திருக்கிறேன். இங்கே ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. அவருக்கு கொஞ்சமாவது அறிவிருந்திருந்தால் இங்கே இடம் இல்லை என்று தெரிந்திருக்கும். நேரம் இல்லை, ஒதுங்குவதற்கு இடமும் இல்லை. முந்நூறு ஃப்ராங்குகளாம் அதை செய்வதற்கு. என்ன மாதிரியான மனிதர்கள் இந்த அமெரிக்கர்கள்.