பழையன கழிதல்

உடமைகளை வெளியேற்றிய விட்டில் நின்று பார்க்கும்போது எங்களில் ஒரு பகுதியை விட்டுச் செல்வது போல இருந்தது. சுவரின் தீபாராதனை கருப்பு திட்டு, பென்சில் கிறுக்கல்கள், கைவிரல் தடங்கள், எண்ணெய் பிசுக்கு என்று எங்கள் அடையாளங்கள் மிச்சம் இருந்தன. எங்கள் நினைவுகளிடமிருந்து உன்னால் அவ்வளவு சீக்கிரம் விடுபட முடியாது என்று வீட்டிடம் சொல்கிறமாதிரி தோன்றியது. அத்தனையும் ஒரு சுண்ணாம்புப் பூச்சில் ஒளிந்து கொண்டாலும் இந்த விட்டின் நிரந்தரமான ஒரு அங்கமாய் உள்ளே உறைந்துவிடும்.

த்ரிவம்பவே த்ரிபாவே

” ஈசான்” என்று தாய்லாந்தில் ஒரு மாவட்டம் இருக்கிறது.. அது “ஈஸ்வரன் ” என்கிற இந்துக்கடவுள் பெயரைத் தழுவி வந்திருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று ஆரம்பித்தான். ” தாய்லாந்தின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அந்தப் பிரதேசத்துக்கு “ஈசான மூலை” என்கிற உங்கள் வாஸ்த்தி சாஸ்த்திரத்திலிருந்து கூட வந்திருக்கலாம்” என்று சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினான்.