வசந்தகாலம் வருமோ?….

This entry is part 1 of 6 in the series பருவம்

வசந்தா என்றே ஒரு அழகான ராகம் – உள்ளங்களில் நம்பிக்கையையும்  நல்ல எண்ணங்களையும் வளர்ப்பது. வசந்த காலத்துக்கு உரியதா எனில், இல்லை; அவ்வாறு எந்தப் பகுப்புகளும் இல்லை. நளினகாந்தி, கர்ணரஞ்சனி போன்ற ராகங்களையும் வசந்தத்தின் ஓர் அழகான மனோநிலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என எங்கேயோ படித்த நினைவு!!

சந்தனம் வாடும் பெருங்காடு

This entry is part 9 of 19 in the series கவிதாயினி

சங்ககாலத்தில் இளம் பெண்கள் முருகு பிடித்து விட்டது என்று முருகனுக்கு பலி கொடுத்து குறிகேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு முருகு அயர்தல் என்று பெயர். வழக்கத்துக்கு மாறாக தலைவி சோர்வும் தனிமையும் கொள்வதை  அன்னை கவனிக்கிறாள். அவள் உள்ளம் திடுக்கிட்டு விழித்து குழந்தை பெண்ணானதை உணர்ந்திருக்கும். அவள் அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தத்தளிக்கிறாள். வழிபாடு மூலம் எதையோ அறிவிக்கிறாள்.

புனரபி ஜனனம்….

நான் செய்த எத்தனையோ செயல்களுக்கு அவரிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதற்கு, சத்தமே செய்யாமல், சந்தோஷமாக, என்னிடம் எதையுமே எதிர்பார்க்காமல் அவர் செய்த அத்தனை செயல்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு, எனக்கும் அவருக்குமேயான பிரத்தியேகமான தருணங்களில் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு இருப்பதற்கு,

வயதான வாயேஜர்

நம்மில் பெரும்பாலோர் ஒன்றிரு நாட்களில் மதிப்பிழந்து ம(றை/ற)ந்து போகும் வாட்ஸப் தகவல்களை படித்து மிகப்பொறுப்பாக ஃபார்வார்டு செய்து கொண்டிருக்கையில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத, பாதை பிறழாத விக்கிரமாதித்தனாய் பயணித்து வரும் பூமியின் தூதுவன் வாயேஜர்-1 கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதை பற்றி “வயதான வாயேஜர்”

மிளகு அத்தியாயம் அறுபத்தாறு

ராணி மகாராணியா நாற்காலியை இறுகப் பிடிச்சுக்கிட்டு பதவி போதையிலே, அதிகார போதையிலே, புகழ் போதையிலே இருக்கணும், மகனே ஆனாலும் ராஜ பதவி எல்லாம் தர முடியாது. மூணு வேலை நெய் விட்டு சாப்பிட்டுவிட்டு வயத்தைத் தடவிக்கிட்டு நிம்மதியாக உறங்கி உறங்கி மோர்க்குழம்பிலே போட்ட சேப்பங்கிழங்கு மாதிரி வழவழ கொழகொழன்னு ஏதாவது பேசிக்கிட்டிருக்கணும். அதான் ராணியம்மாவுக்கு வேண்டியது. 

சந்திரசேகர் கவிதைகள்

தீராக் கனவின் பச்சையை
எங்கே வைப்பது
இன்னொரு கனவில்
கனவுகளை வேண்டி
கண்களை மூட
பகல் தீராமல் வதைக்கிறது
இரவுகள் தொலைந்து
கனவுகள் தீரும் நாளில்

இமானுவல் கன்ட்டின் அழகியல் தத்துவம்

This entry is part 2 of 14 in the series குடாகாயம்

ஊஞ்சலையும், கதைமாந்தர்களையும், ரோஜாச்செடியையும், கயிறுகளையும், கூபிட்-ஐயும், குரைக்கும் நாயையும், விலகும் வெளிர்சிவப்பு ஆடையையும், கிளர்வூட்டும் கால்களையும், ஏங்கித் தவிக்கும் இளைஞனின் கண்களையும் தனித்தனியே காண்கிறோம். இவற்றை ஒருசேரப் பொருத்தி நம் மனம் நமக்கு ஒரு கதை சொல்கிறது.

வேர்முள்

அந்த நேரத்தில் தான் செழியனின் வரன் வந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரம். முடிவு ஏதும் ஆகி இருக்கவில்லை. ஆனாலும் கலையரசி “அச்சச்சோ இப்பதான் என் மகளுக்கு மாணிக்கராஜ் வீட்ல பேசி முடிச்சோம், நீ அப்பவே வந்திருக்கக் கூடாதா” என்று ஏதோ சோப்பு விற்க வந்தவனிடம் பேசி அனுப்புவது போல் பேசினாள். அந்த வரன் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் ஏதும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

லாவண்யா சத்யநாதன் கவிதைகள்

படித்ததை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால்
அறிவு வளர்ந்த அறிகுறிகளாகக் கருதலாம்
அறிகுறிகள் எளிதில் தென்படுவதில்லை
பிறகு புத்தகங்கள் படிப்பதால் என்ன நன்மை?

பனிவிலகலில் அக்கரை வெண்மை

இந்த நதியின் கரையில் அஜிரோகி என்றொரு வகையான மூங்கில் செடிகள் வளர்கின்றன. மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்படும் முன் இம்மூங்கிலின் பட்டைகளைச் சிறிது இடைவெளியுடன் முறம்போல் பின்னி ஜப்பானியர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவலை இப்பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது.

பாரபட்சம் 

கீழ் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் எங்கோ மறைமலை நகர் உறவினர் வீட்டுக்குப்போய்த் தங்கிவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். கீழ் வீட்டு தோட்டக்கதவு, ரூம் கதவு  இவை பொல பொல என உதிர்ந்து தூளாய்க் கொட்டியன. தரை தள வீட்டில்  குடியிருந்தவர் ஆந்திரா ஊறுகாய் வியாபாரம்,  எல் ஜி கூட்டுப் பெருங்காயம்  இத்யாதிகளை லொட லொட  டூவீலரில் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்பவர்.

மனித இனத்தினர் எப்பொழுது அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தனர்?

பேலியோ சைபீரியர்கள் மற்றும் பேலியோ அமெரிக்கர்கள்  மரபணு ஆய்வு முடிவுகளின் ஒப்பீடு தரும் தகவல்  உறுதி செய்கிறது. அமெரிக்கப் பழங்குடியினர் மரபணு ஆய்வு முடிவுகள்,   67% அமெரிக்கப் பழங்குடியினர் மரபணுக்கள்  அவர்களுக்குக் கிழக்காசியப் பகுதியினர் மரபணுவுடன் தொடர்புள்ளதாகக் காட்டுகிறது. 

அதிரியன் நினைவுகள் -31

This entry is part 30 of 48 in the series அதிரியன் நினைவுகள்

கல்லறைக்கான இடத்தை தேர்வுசெய்வதில் எனக்கு இன்னமும் தயக்கமிருந்தது. நாடெங்கும் இறந்தவனுக்காக,  அவனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் சடங்குகள் ; இறுதிச்சடங்கினை முன்னிட்டு விளையாட்டுகள், நினைவு நாணயங்களை அச்சிடுதல், பெதுவெளிகளில் சிலைகளை வைத்தல் முதலான ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டபோது, ரோம் நகருக்கு மட்டும் விதிவிலக்களித்தேன் ;  காரணம்,    ரோமுக்குச்  சொந்தமில்லாத மனிதர்களைப் பிரியத்துக்கு உகந்தவர்களாகக் கொண்டாடுகிற எந்தவொன்றும் நகரில் பகையை அதிகரிக்கும் என்கிற பயம் எனக்கிருந்தது. அன்றியும், இக்கல்லறைக்கு நிரந்தரமாக காவலிருக்க என்னாலும் ஆகாது.

நாம்

இயற்கையே நமது இருப்பிடம்- இயற்கையில் நமது இருப்பிடத்தில் இருக்கிறோம்‌.  அறிநுண்ணுணர்வு நமக்கு அளிக்கும்,  சிறு துகள்களாலான வெளியினைக் கொண்ட, காலமே இல்லாத, எதுவுமற்ற  விந்தையான, பலவண்ணமுடைய, ஆச்சரியமூட்டும் இந்த பிரபஞ்ச சித்திரம் நாம் எதனால் உண்டாக்கப்பட்டுள்ளோம் என காட்டுகிறது. நம்மை உண்மை இயல்பிலிருந்து முரண்பட வைப்பதில்லை‌

ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

This entry is part 6 of 9 in the series பயணங்கள்- லண்டன்

அடுத்து நாங்கள் நிறுத்திய இடம் ‘World War II Commando Memorial’. இரண்டாம் உலகப்போரின் பொழுது அந்தப் பகுதிகளில் தங்கி பயிற்சி அளித்த நேச நாட்டுப் படைவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அருகே போரில் இறந்த வீரர்களின் நினைவிடமும் இருந்தது. அங்கிருந்து பிரிட்டனின் உயரமான மலையான ‘Ben Nevis’ காட்சி தருகிறது. உச்சியில் பனிக்காலத்தின் அடையாளமாகச் சிறிது பனி. அந்த மலையில் ஏற குறைந்தது ஒன்பது மணிநேரங்கள் ஆகலாம். வேண்டாம். தூரத்திலிருந்து பார்க்க அழகாக இருக்கிறது. என்ன? ஒருகாலத்தில் எரிமலையாக இருந்த மலை. உச்சியில் அதன் அடையாளங்களைக் காண மக்கள் செல்வார்கள் என்று அங்கிருந்த பயணிகள் கூறினார்கள்.