போர் – நினைவுகள், சாட்சியங்கள்

என்னைப் பொருத்தவரை இலக்கியமும் கலையும் இறுதியில் மானுடம் குறித்தவை. ஒரு நாவலை நான் எழுதி முடிக்கையில், அதிலிருந்து எதையாவது நான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும், அல்லது இந்த உலகில் மனிதராய் வாழ்வதன் அர்த்தத்தைக் குறித்து என் மண்டைக்குள் ஏதாவது குடைந்துகொண்டிருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் அறம் என்றால், ‘ஆம்’ என்பதே என் பதில்.

எலெக்ட்ரிக் எறும்பு – 2

என் பேரண்டமே என் விரல்களுக்கு இடையில் உள்ளது, அவன் புரிந்து கொண்டான். இந்த சனியன் பிடித்த நாடா எப்படி வேலை செய்கிறது என்று மட்டும் புரிந்து விட்டால். நான் முதலில் என்ன தேடினேன் என்றால், என் செயல்திட்டத்தை இயக்குகிற சர்க்யூட்களைக் கண்டுபிடித்தால், என் வாழ்க்கையை உண்மையாக ஒரு நிலைப்புள்ளதாக ஆக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் இதைப் பார்த்தால்…

கல்மேடு

சிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”

மொழிபெயர்ப்பு என்னும் கலை – இறுதிப்பகுதி

முழு எத்தர்கள், சற்றே மந்த புத்திக்காரர்கள், மலட்டுப் புலவர்கள் ஆகியோரைத் தவிர்த்தால், தோராயமாக, மூன்று விதமான மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர். நான் முன்னர் கூறிய மூன்று வகைத் தீங்குகள்- அறியாமை, விட்டு விடுதல், மற்றும் ஒற்றித் திருத்தல்- அவற்றுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், இந்த மூன்று வகையினரும் மேற்படி மூவகைப்
பிழைகளையும் செய்யக் கூடும்.

மொழிபெயர்ப்பு என்னும் கலை

ஷேக்ஸ்பியரையும், ஃப்ளூபேரையும் ட்யூட்சேவையும், டாந்தேவையும், ஸெர்வண்டெஸையும், காப்காவையும், ரசிக்க ஒரு மனிதனுக்கு ஆறு மொழிகளில் ஆழமான நுண்ணறிவு வேண்டியிருக்கிறது. இவற்றைத் தவிர பிற மொழிகள் இருக்கின்றன. அந்ததந்த மொழிகளில் சிறந்த கவிஞர்கள் இருக்கின்றனர்… லத்தீன் உள்ளதா, கிரேக்கமும் உள்ளதே? பிறகு, மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் என்னதான் செய்வதாம்?

எலெக்ட்ரிக் எறும்பு

மேல்பரப்பில் பார்த்தால் சாதாரண உடலுறுப்பு போலவே இருந்தது. இயற்கையான தோல், அதன் கீழே இயற்கையான சதை, நிஜமான ரத்தம் தமனி, நாடி, சல்லிக் குழாய்களில் எல்லாம் ஓடியது. ஆனால் அதற்குக் கீழே, எலெக்ட்ரிக் சர்க்யூட்கள், சிறு கம்பிகள், நுண்ணிய அளவில் பொருத்தப்பட்டு… மின்னின…கைக்குள் கூர்ந்து பார்த்தான்…

ரகு ராய் – பேட்டி

உண்மையில் இது ஒரு நாடே அல்ல. திரும்பிப்பார்த்தால் நீதி வழங்க 25 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இது ஒரு கௌரவமோ அல்லது சுயமரியாதையோ அற்ற நாடு. ஆண்டர்சனை முதலில் தப்ப விட்டுவிட்டு அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் நம்மை சமமாக மதிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? சரிசமமாக நடத்தத் தகுதியற்றவர் நீங்கள். பிரிட்டிஷ் பெட்ரோலியக் கிணறு கசிவில் இறக்கும் பறவைக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த விபத்தில் இறந்த மக்களுக்கு இல்லை.

வித்யா சங்கர் – ஒரு பேட்டி

நான் வீணை கற்றுக் கொள்ள துவங்கியபோது என் வயது எட்டு. ஒரு சுவாரஸியமான சம்பவம் இருக்கிறது. ஒரு முறை, ”எளியேனே” எனும் ஆனய்யாவின் கீர்த்தனையை சபேச ஐயர் பாடப்பாட, என் தந்தை ஸ்வரப்படுத்த முயன்றார். சரணத்தில், ஒரு குறிப்பிட்ட வரியை ஸ்வரப்படுத்துவதில் என் அப்பா சற்று திணறினார். நான் என் உள்ளுணர்வு சொன்னபடி உடனடியாக ஸ்வரப்படுத்தினேன். உடனே சபேச ஐயர் என் தந்தையிடம் நான் பாடிய விதமே ஸ்வரப்படுத்தும்படி சொன்னார்.

மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

மொழிபெயர்ப்பு கவிதைகள்

வார்த்தைகளால் அடைய முடியா இடத்தில் அது தொங்கியது
வெளிச்சம் செல்ல முடியா இடத்தில் அது உறங்கியது.
அதன் வாசனை பாம்பைப் போலவோ எலியைப் போலவோ இல்லை,
புலன்நுகர்ச்சியாகவோ புலனடக்கமாகவோ இல்லை.

கரும்பறவையைப் பார்க்க பதிமூன்று வழிகள்

நீண்ட சாளரத்தின்
கரடு முரடானக்
கண்ணாடியில்,
நீர் உறைந்து நிறைந்தது.
அதன் குறுக்கும் நெடுக்குமாய்
கரும்பறவை நிழலாக நகர்கிறது.

சீனப் பெண் கவிஞர்களின் ஐந்து கவிதைகள்

யாரிடம் சொல்வேன்
இறந்தோருக்கான எனது
நிரந்தர சோகத்தை?
இந்த வேகத்தில்
மலைகளையும் நதிகளையும்
மட்டுமே கண்டேன்.
என் ஆடையிலிருந்த
உதிரத்துடன் சேர்ந்தது என் கண்ணீர்.

பூச்சுகளற்ற எதார்த்தம், இடரில் நகைப்பு- போலிஷ் கவிதைகள்

இவருடைய பல கவிதைத் தொகுப்புகளும், படித்தவர் மனதில் ஸ்டாலினிய காலத்து அடக்கு முறை ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துன்பங்களையும், யூரோப்பின் இருண்டகாலம் எனப்படும் அந்த வருடங்களையும் ஒருக்காலும் மறக்க் முடியாமல் பதிப்பன எனச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் பரபரப்பான முழக்கங்கள் நிறைந்த, ஆரவாரிப்புகள் உள்ள கவிதைகள் அல்ல இவருடையவை. அவை அரசியல் கவிதைகளே அல்ல, கவனமான உளவியல் பார்வை கொண்டவை.

சிறு பிள்ளைக் குறும்பு

காகம் சிரித்தது.
கடவுளின் ஒரே மகனை, அப்புழுவைக் கடித்து
நெளியும் இரு துண்டுகளாக்கியது.வால்பாதியை ஆணுக்குள் திணித்தது,
காயப்பட்ட முனையை வெளியே தொங்க விட்டு.

பிற மனிதர்கள்

பைசாசம் அவன் உயிரை அக்கக்காகப் பிரித்து எடுத்தது. கணம் கணமாக, படுமோசமான ஒவ்வொரு சம்பவத்தையும். இதெல்லாம் ஒரு நூறு வருடம் நீடித்தாற்போலிருந்தது, இல்லை இல்லை, ஆயிரம் வருடங்கள் போல நீண்டது- அவர்களுக்கென்ன அந்த சாம்பல் நிற அறையில், கால நெருக்கடி என்று ஏதும்தான் இல்லையே, எல்லா நேரமும் இருந்ததே. இறுதியில் அவனுக்குப் புரிந்தது, அந்தப் பைசாசம் சொன்னது சரிதான். உடலால் சித்திரவதைப்பட்டது எவ்வளவோ அன்பாக இருந்தது.

கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 1

நான் விருந்தளிக்கிறவன் அல்ல. நான் அவன் அப்பா. இல்லாத அவன் அப்பா நான்தான். அவன் தொட்டுணர்ந்த அப்பா. அவனைவிட்டு விலகியிருப்பதான என் பாவனையில், அவனது இதயத்துக்கும், ஆத்மாவுக்கும் வஞ்சனை செய்தேன் நான். ஆனாலும் உள்ளூற நான் அவன்சார்ந்த நெருங்கிய இணைப்பைக் கொண்டிருந்தேன், அதையிட்டு மேலதிகம் அக்கறையான சிந்தனையைச் செலுத்தவில்லை.

சந்தேகம்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில்
துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும்
எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும்
சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்?

தலைமை அறிஞர்களாக விளங்கிய இவர்களின் வார்த்தைகளை உதிரி சமூக விஞ்ஞானிகளும் வழிமொழிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வழிமொழிந்து நின்றவர்கள் JNU போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், மேற்கு நாடுகளிலிருந்து அழைப்பையும் பெற்றனர். மதச்சார்பின்மைவாதிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தன்னுடைய உள்ளார்ந்த தணிக்கையை உருப்பெருக்கிக் கொண்டது. எந்த ஆய்வுகள் பதிக்கப்படவேண்டும், அரசின் நிதி உதவி எதற்கு ஒதுக்கப்படவேண்டும், எந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படவேண்டும் போன்றவற்றை இந்த உள்ளார்ந்த தணிக்கை முடிவு செய்தது.

சத்தியத்தின் தாமரை பூத்துவருவதை திஸ்ஸ கண்டாரா?

உண்மையைக் கொண்டுபோய் அடகுவைத்து
உரிமையை இரும்புச் சங்கிலி கொண்டு
சிறையிலிட்ட அந் நாளில்
திஸ்ஸ கண்டாரா
அதிகாரத்தால் உன்மத்தம் பிடித்தவோர் அரசனை

”ஆர்மீனியன் கோல்கத்தா”*

ஒரு துருக்கியக் கேப்டன் பலாகியனிடம் சொன்னான். ”யுத்தநேரம் என்பதால் குண்டுகள் கிராக்கியாயிருந்தன. எனவே மக்கள் கிராமத்தில் என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் கையிலெடுத்தார்கள் – கோடரிகள். வெட்டுக்கத்திகள், புல் அரிவாள், பிடியறுவாள், தடிகள், மண்வெட்டிகள். சுத்தியல்,கொறடுகள்- இவற்றை வைத்தே கொன்று குவித்தார்கள்.”

வீட்டுக்கு வடக்காய் பனிக்குவியல்கள்

இரவெல்லாம் கடல் எழுந்து விழுகிறது, நிலவு
இணைவற்ற சுவர்க்கங்களின் ஊடாய் தனியாக செல்லும்.
ஷூவின் பெருவிரல் பகுதி தூசில்
மையங்கொண்டு சுழலும் …

திராவிட-ஹரப்பன் தொடர்பு? ஆய்வுமுறைச் சிக்கல்கள்

சிந்து நாகரிகம் மீதான திராவிடர்களின் உரிமை குறித்த கருத்துக்கள், ஆரிய படையெடுப்புக் கோட்பாடு குறித்த காலனிய ஆராய்ச்சிகளின் எஞ்சிய மிச்சங்களே. ஆரிய படையெடுப்பு குறித்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக விளங்குவதால் இன்று வரை இவை உயிர்ப்புடன் உள்ளது. ஒரு சில சித்தாந்தங்களின் துணையுடன் இந்த ஆராய்ச்சிகள் அசைக்க முடியாத தூணைப் போல் நிறுவப்பட்டுள்ளது. “ஆரிய இனம்” அல்லது “திராவிட இனம்” என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. எப்போதும், அந்த கருத்துருக்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளிக்க முயலும் யாரும், அத்தகைய ஒன்று என்றுமே இருந்ததில்லை என்பதை வெகு விரைவில் கண்டுகொள்கிறார்கள்.

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு

இறந்த குழந்தைகள்

நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
ஆனால் நீ பனிக்கட்டி பூக்களை விட அதிகம் ஜொலிக்கிறாய்
எனக்கு நாய்களின் குரைப்பு உன் அமைதியை விட
ஒன்றும் சத்தமாயில்லை.

பனிச்சறுக்குப் பயணம்

எல்லா ஆரம்பங்களும் ஒன்றுதாம். அனைத்தும் மறக்கப்படுகின்றன.
நீங்கள் செய்துள்ளது மறத்தல். அதை மீட்க முடியாது.
இப்போது அல்லது எப்போதுமாய். உள்ளுக்குள் நீங்கள்
போட்டுள்ள வார்ப்பு அது.

சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள் (பகுதி 2)

திராவிட மொழி – குறிப்பாகக் கன்னடமும் தமிழும் ஹரப்பன் மொழியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு கருதுதற்கு ஏதுவாக இருப்பனவற்றுள் ஒன்று, எட்டு என்ற எண் ஹரப்பன் நாகரிகத்தில் அடிப்படை எண்ணாக இருப்பதும் ‘எண்’ என்ற தமிழ் – கன்னடச் சொல், எட்டு எட்டாக எண்ணும் முறையே தொடக்கத்தில் நிலவிய முறை என்பதை உணர்த்துவதும் ஆகும். மற்றொன்று தானியங்களுள் ஒரு வகையின் பெயரும், திங்களைக் (சந்திரனையும், மாதத்தையும்) குறிக்கும் பெயரும் (நெல், நிலா என்பன) தொடர்புடைய பெயர்களாக இருப்பது.

விடுப்பு

அவளது மாமியார் ஏற்கனவே தனது கூச்சலால் அண்டைவீட்டார் பலரை கூட்டியிருந்தாள். ராதா அசையாமல் இருந்தாள். அவள் தண்ணீரை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள்.
புன்தி, பொஜுரி, காலிஷா, கஜோலி ஆகிய வகை மீன்குட்டிக் கூட்டமொன்று அவளது பாதங்களை மொய்த்தன. ‘ஓ, தயவு செய்து தூரப் போங்கள், இன்று நான் உங்கள் யாருக்கும் உணவு கொண்டு வரவில்லை.’ ஆனாலும் அவளின் பாதத்தை சுற்றி மகிழ்ச்சியாய் அவை பல்டியடித்துக் கொண்டிருந்தன. தங்களுக்கு அருகில் ராதா இருப்பது அவைகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவைகள் அதைவிட வேறெதுவும் கேட்கவில்லை.

சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த அறிஞர் கமில் சுவலபில் (Kamil V. Zvelebil) செக்கொஸ்லொவாக்யா நாட்டில் பிறந்தவர். ப்ரேக் நகரின் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலை முக்கியப் பாடமாகப் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் திராவிட மொழியியல் சொல்லித்தரும் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

மொழியியல் மற்றும் இலக்கியம் பற்றி இவர் எழுதியுள்ள நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும்.

சிந்துவெளி எழுத்துகள் பற்றி, 1983ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஒன்றில் கமில் சுவலபில் வாசித்தளித்த கட்டுரையின் தமிழாக்கத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

ஆகஸ்ட் மாதப் பேய்கள்

அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.

நதிக்கடியில் மனிதர்கள்

“கடவுள் என்னைக் காப்பாற்றினார் சகோதரர்களே! கடவுள் எப்போதும் பாவப்பட்டவர்களுடன்தான் இருப்பார். நதிக்கடியில் நிறைய புனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் என் கஷ்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, எனக்கு அன்பளிப்பாக இந்த மாடுகளைக் கொடுத்தார்கள். என்னைப் பாதுகாப்பாக கரையேற்றிவிட்டதும் அவர்கள்தான். என் நினைவுக்காக என் உடையை மட்டும் அவர்கள் வைத்துக்கொண்டார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்!”

ஹாரிசன் பெர்ஜரான்

2081-ஆம் ஆண்டு. எல்லோரும் ஒருவழியாக முழுமுற்றான சமத்துவத்தை அடைந்து இருந்தனர். கடவுளின் முன்போ, சட்டத்தின் முன்போ மட்டுமே கட்டுப்பட்ட சமத்துவம் இல்லை அது. எல்லா நிலைகளிலும் அனைவரையும் முழுமையாக ஒருமைப்படுத்திய அதிசயம் அது. யாரும் யாரை விடவும் புத்திசாலியாக இல்லை, அழகாகவும் இல்லை. அவ்வளவு ஏன், எந்த ஒருவரும் மற்றவரை விட அதிக வலிமையும், சுறுசுறுப்பும் கூட கொண்டு இருக்கவில்லை.

பஞ்சம்

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தோட்டத்தை சுற்றிப் போடப் பட்டிருக்கும் மூங்கில் வேலி தங்கம் போல் பிரகாசிக்கும். இந்த வேலிக்கு ஐம்பது கஜம் தொலைவில் ரயில் போகும். இந்த முறை கூட நந்தினியின் நீண்ட தலைமுடி அவள் பின்னால் காற்றாடி போல் படர்ந்திருந்தது. இரவில் படுக்கையில் அவள் கட்டிக் கொள்ளும் பழைய சேலை சுருக்கங்கள் ஏதுமற்ற அவளது உடலில் ஒழுங்கற்று சுற்றப் பட்டிருந்தது. அந்த ரயில் கடக்கும் போது அவளைக் காணாத ஜோடிக் கண்களே இருக்காது எனலாம்.

பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்

காய்கள் பழுக்கத் தொடங்கினால் பக்கத்து வீடுகளிலிருந்து பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் அவளை ஏமாற்றிவிட்டு பழங்களைக் கொண்டுபோய் விடுவார்கள். கோபத்தில் கிழவிக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கும்.

சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?

பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் – கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல.

வன்முறையின் வித்து – இறுதிப்பகுதி

மாஓவின் அடுத்த சுய-விளம்பரம் 1960-களில், சீனாவில் கொடிய பஞ்சம் நிலவிய காலகட்டங்களில், பெரிய அளவில் நடைபெற்றது. அந்த வருடத்தில்(1960) மட்டும் 20 மில்லியன் மக்கள் பசியால் மடிந்தனர். அதே காலகட்டத்தில், மாஓ பிறநாடுகளில் இருந்த இடது-சாரி அமைப்புகளுக்கு பணத்தை வாரி வழங்கி, வேற்று நாட்டு மக்களிடமும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார். இந்த காலகட்டம் தான் ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த கவனத்திற்கு உட்படுத்தப் பட வேண்டியதாக கருதுகிறேன்.

பேரரசின் தொலைந்த தொடுவானங்கள்

மத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.

வன்முறையின் வித்து – ஓர் உரையாடல் – பகுதி 2

தன் மூத்த மகன், கொரிய போரில் இறந்தபோது கூட மாஓ எந்த வருத்தமும் கொள்ளவில்லை. தன்னுடன் வார இறுதிகளையும், விடுமுறைகளையும் கழித்த தன் மகனின் விதைவையிடம் கூட இந்த செய்தியை இரண்டரை வருடங்களுக்கு பிறகுதான் தெரிவித்தார். கம்யூனிஸ ரகசிய நடவடிக்கைகளுக்கு பழகிபோயிருந்த அவரது மருமகளும், தன் கணவனிடமிருந்து தனக்கு எந்த கடிதமும் வராததை குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை.

வன்முறையின் வித்து – ஓர் உரையாடல் – பகுதி 1

ஸ்டாலினின் இளமைக்காலம் குறித்தான Young Stalin எனும் புத்தகத்தை எழுதத் துவங்கியபோது, புத்தகத்தில் அவர் செய்த எந்த வித கொலைக்குற்றத்தையும் பதிவு செய்ய நேராது என்றே நினைத்தேன். ஆனால், தனது 22 வயதிலேயே, தனக்கு துரோகம் புரிந்ததாகக் கருதியோரை எல்லாம் அவர் “அகற்றினார்”.