வெளியே, வெட்டவெளியில்

அந்தி ஆகவிருக்கிறது.நீ இப்போது போகவேண்டும்,
மீண்டும் உன் வழித்தடங்களைக் கண்டுகொண்டு: வயலில் கிடக்கும் துருபிடித்தக் கருவிகள்
மற்றும் ஏரிக்கு அந்த பக்கம் இருக்கும் வீடு, செம்பழுப்பாக,
சதுரமாக சரக்குபெட்டி போல திடமானதாக.

வெர்மீயர்

காதுகளில் ர்ர்ர் என்ற ரீங்காரம்.ஆழமா? உயரமா?
அது அந்த சுவருக்கப்பாலிருந்து வரும் அழுத்தம்,
யதார்த்தத்தை மிதக்க வைத்து,
தூரிகையை நிலைக்க வைக்கும் அழுத்தம்.