உன்னதமான வாழ்வை வாழ்வது எப்படி என்று சிந்திக்கத் தூண்டியவர். சந்தேகம் – அதனுடன் கூடவே வரும் சங்கடம் மற்றும் குழப்பம் – இவையே உன்னதத்தை நாம் கண்டடைய முக்கிய வினையூக்கிகள் என்று உணர்த்தினார். நம்மை வசதியாக உட்கார்ந்துகொண்டிருக்கும் குகைகளை விட்டு வந்து, பரந்த வெளியையும் கண்கூசும் சூரியனையும் காண, அதன்மூலம் உலகைப் புரிந்துகொள்ளச் சொன்னவர். அவர் வாழ்ந்த நாட்களில் இவை பெரும் குற்றங்களாகக் கருதப்பட்டன, அதற்கான மரண தண்டனையையும் அவர் ஏற்கவேண்டியிருந்தது.
Category: இதழ்-323
எழுத்தாளர் பொன்னம்மாள்
இந்த முரண்கள், பொது வாழ்க்கைக்கும் உதவியது. ஜாதகத்தைப் பெரிதும் நம்பினார். அதை துருப்புச்சீட்டாக்கி வாழ்வில் சோர்ந்தவர்களுக்கு பரிகாரங்களும், ஊக்க மந்திரங்களும், குட்டிக் கதைகளும் தொடர்ச்சியாகச் சொல்லி, பற்பலரை தூக்கி விட்டவர். மண வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதைத் தனிமையில் ஆலோசனை வழங்கி தாம்பத்திய உறவை வெற்றிப் பெறச் செய்வதாக இருக்கட்டும்;
சாய்ந்தாடி
‘கடும் பஞ்சத்திலும், மைசூர் போரின் அவதிகளிலும் சிக்குண்ட இந்த மக்களை பிரித்தானிய அரசாங்கம் ஒரு போதும் கை விடாது’ என்றார் பெல்லி. நாராயண பிள்ளையின் உதட்டோரம் பூத்த புன்னகையின் அர்த்தத்தை வில்பர் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. சிறு தோல் பையிலிருந்து ஒரு சிறு தாளை வெளியே எடுத்தான் வில்பர். ஏதோ பேங்க் ஆப் பெங்கால் அச்சடித்து விநியோகிக்கும் ஐநூறு சிக்கா ருபாய் தாளை முதன் முதலாகப் பார்ப்பது போல பெல்லியின் கண்கள் விரிந்தது.
கொடை மடம்
ஒவ்வொரு நிகழ்வுகளைச் சொல்லும் பொருட்டு அதில் தொடர்புள்ள மனிதர்களை மட்டும் காட்டாமல் அந்த இடத்தை அதோடு இயைந்த இயற்கைக் காட்சிகளை பருந்துப் பார்வை கொண்டு வாசிப்பின் போது உறுத்தா வண்ணம் உள்ளது உள்ளபடியாய் கண்முன் நிறுத்துவது தனித்துவமான ஒன்று. கதையில் நாம் ஆழ்ந்திருந்தாலும் இந்தத் தருணங்களையும் தவற விடாது ரசிக்க வைக்கிறது.
டச்சு ஆங்கில இந்திய நாகரீகங்களின் வணிகவியம்
17 ஆம் நூற்றாண்டின் போது, ஐரோப்பாவில் அரசுகள் தங்கள் கால்களை அழுத்தமாக ஊன்றி கரங்களை உலகை நோக்கி விரித்தன, அதிகாரம் மையத்தில் குவிதல் விசை கொண்டது. அதன் செயல்பாட்டிற்கு இரண்டு வகுப்புகள் முக்கியமானவையாக மாறின. ஐரோப்பாவில் அக்காலத்தில் பெரும்பாலும் முடியாட்சிகளே இருந்தன. அதிகாரம் முடியாட்சியில் இருந்தே வழங்கப்பட்டது.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 7
அதன் வழியே, ஊரில் இருந்த அழகிய பெண்கள் அவரைக் காணும் பொருட்டு மற்ற வேலைகளை விட்டு அங்கு கூடியிருந்தனர். மாளிகைகளின் மேல் பகுதிகள் நிறைந்து இருந்தன. மணமகனைக் காணும் ஆசையால் கிடைத்த இடங்களில் ஊரார் நின்று பூக்களை மழையாக பொழிந்தனர். தங்களும் தங்களை நன்றாக அலங்கரித்துக் கொண்டு போக விரும்பியவர்கள் பாதியில் விட்டு ஓடி வந்தார்கள். கேசத்தை முடிந்து கொண்டிருந்தவர்கள், காலில் பாதி செம்குழம்பு பூசிக் கோண்டிருந்தவர்கள், எதிரில் வராமல் ஜன்னல்கள் அருகிலேயே நின்றபடி ஊர்வலத்தைக் கண்டனர்
மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
இவர்களுக்கு ஆடி ஓடி சாடும்போது உடலில் தடை செய்யாமல் எப்படி வஸ்திரம் அணியத் தருவது? ஒரே நிறத்தில், நீலக் குப்பாயத்தை ஹொன்னாவரிலும் ஜெருஸூப்பாவிலும் கோகர்ணத்திலும், மீர்ஜான் கோட்டையிலும் தையல்காரர்கள் தைத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கு குறைந்தது இரண்டு குப்பாயமாவது தரவேண்டும். அப்படிக் கொடுத்தால் அதில் ஒன்றை வீட்டில் பிள்ளைகளுக்குத் தரப் பத்திரமாக எடுத்து வைத்து விட்டு, ஜீவித்திருந்தால் ஒரே குப்பாயத்தோடு நாள் கணக்காக வியர்வை மணக்க ஓடியாடுவார்கள்.
ஈவா ஹாஃப்மன் எழுதிய ‘இலுமினேஷன்ஸ்: அ நாவல்’- ஓர் உளவியல் பார்வை
இசபெல் இந்த மாய உலகில் பயணித்துச் செல்லும்போது, அவர் தனது குடும்ப வரலாற்றின் மறைக்கப்பட்ட அடுக்குகளை அவிழ்த்து, நீண்ட காலமாக தன் நினைவுகளில் புதைக்கப்பட்ட ரகசியங்களின் படிமங்களைத் தன்னையும் அறியாமலேயே வெளிப்படுத்துகிறாள். ஒவ்வொரு வெளிப்பாட்டிலும், நிலையான புறஉலகத்திற்கும், அலைக்கழியும் அக உலகின் மாயத்திற்கும் இடையிலான கோடுகள் மெலிந்து, இசபெல்லை தனது கடந்த காலத்தின் மாய பூதங்களையும் அவளது ஆன்மாவின் சிக்கலான பின்னல்களையும் எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறது.
சொல்லெழும் கல்வனம்
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அதிமானுடர்களின் கல்சமாதிகள் மட்டுமே இதுவரை தென்பட்டதால், திடீரென பெயரற்ற முகமற்ற ஒரு போர் வீரனின் கல்லறையை கண்டதும் வியப்பில் நின்று விட்டேன். முதல் உலகப்போரில் சண்டையிட்டு யுத்த களத்தில் உயிரழந்த அந்த போர் வீரனின் கல்லறையை சுற்றி சிகப்பு பாப்பி (Poppy) பூக்களும், மலர்வளையங்களும் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வெற்றி
நகுலன் கண்களில் மட்டுமே சினேகம் தெரிந்தது. ஐவரில் ஆசைகள் அற்றவன் அவனே. அவன் காதோரம் ஓடி இருக்கும் நரை கூட அவனுக்கு அழகாகவே இருந்தது. துச்சாதனனுக்கும் அதே போல நரை ஓடும் காதோர முடி. இப்போதும் செதுக்கியது போலிருக்கும் தன் உடலின் அழகு மட்டுமே இந்த நகுலன் கண்களுக்கு புலப்பட்டுக் கொண்டிருக்கும். நகுலன் தன்னிச்சையாக தண்ணீரைப் பார்த்து தன் தலைமுடியை ஒதுக்கிக் கொள்ள, துரியோதனன் தன் புன்னகை வெளிவராமல் அடக்கிக் கொண்டான்.
அதிரியன் நினைவுகள் – 40
லூசியஸ் ஒருபோதும் கேள்விகளை எழுப்புவதில்லை; பதிலாக என் சிந்தனைக்குள் பிரவேசித்திருந்தான். எனது அசைவுகள் ஒவ்வொன்றையும் அவனுடைய கண்கள் பின்தொடர்ந்தன. இரண்டாவது முறையாக அவனைக் கான்சல் ஆக நியமித்தேன். ஆனால் இம்முறை அப்பணிகளைத் தம்மால் நிறைவேற்ற முடியுமாவென்கிற அச்சம்,. என்னை விரக்தியடையச் செய்கிறோம் என்கிற வேதனை அவனுடைய உடல் நிலையை மோசமாக்கியது
நசையறு மனமும், விசையுறு உடலும்
இன்று வயதில் மூத்தவர்களில் உங்களுக்குத் தெரிந்து ஆரோக்கியமாகவும், பயனுள்ளவர்களாகவும் வாழ்பவர்களை அவதானியுங்கள். அவர்கள் தங்களின் நாற்பது வயது கடந்தபருவத்தில் போட்ட விதை தான் இன்று அவர்களின் முதுமையில் இளைப்பாறும் நிழல் தரும் பெருமரமாக அவர்களுக்குப் பற்றுக்கோடாக இருக்கிறது.
ரவி அல்லது கவிதைகள்
பொருளீட்டலின்
பொருட்டான
பிரிதலில்
துய்த்த நேசம்
வாய்க்காது போகிறது
நான் ஆணையிட்டால்…-2
சென்ற ஆண்டு ஆந்தரா அட்ராக்ஷனின் வெள்ளிக்கிழமை மதிய உணவு ஒப்பொந்தத்தை டெபரா முறித்ததால் அந்த விடுதி மூழ்கிவிடவில்லை. மிஸ் பால்சனை மாவட்டத்தின் கோடியில் திறந்த புதிய பள்ளிக்கு மாற்றியதால் வேலைக்குப் போய்வருவதில் அவளுக்குக் கொஞ்சம் அசௌகரியம். இதெல்லாம் சில்லறை விஷயங்கள். வெஸ்ட்வுட் உயர்நிலைப்பள்ளியில் மிஸ் லீஸா ஸிம்மர்மன் ஆங்கில ஆசிரியர்.
வசந்த காலத்து உணவுப்பட்டியல்
மறுநாளே உணவு வகைகளை வரிசைப்படுத்தி அழகாகத் தட்டச்சு செய்து ஒரு சீரான மெனு கார்டைத் தயாரித்துக்கொண்டு போய் ஷூலென்பர்கிடம் காட்டினாள் சாரா. சாப்பிட வருபவர்களை ஈர்க்கும் வகையில் சரியான தகுந்த தலைப்புக்களுக்கு அடியில் உணவுப்பொருட்களை அவள் தட்டச்சு செய்திருந்தாள். பசியைத் தூண்டுவதற்கான தொடக்கச்சிற்றுணவுகள் தொடங்கி ‘சாப்பிட வருபவர்கள் மறந்து போய் விட்டு விட்டுப் போய்விடும் குடைகளுக்கும்,கோட்டுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல’ என்ற வாசகம் வரை எல்லாவற்றையும் சரிவர வகைப்படுத்தி அமைத்திருந்தாள் அவள்.
தற்செயலாய் வாழ்க்கை
இரவின் அமைதியில் எங்கோ ஒலிக்கும் ராஜா
எதிர் ஜன்னலில் கையசைக்கும் யாரோ ஓர் குழந்தை
குதித்துக் குதித்து புவியீர்ப்பு விசையை சோதித்து பார்க்கும் குழந்தைகள்
கோடையின் வருகையை அறிவிக்கும் மரத்தில் சில மாம்பூக்கள்
மதிய வேளையில் அசரீரியாய் காக்கைகள்
நானே நானா, யாரோ தானா? – 2
இந்த அகிலம் பரந்து விரிந்திருக்கிறது. நம் நவீன அறிவியல் சாதனங்களாலும் இன்று வரை அறிய முடியாத பல விண்மண்டலங்கள் இருக்கின்றன. இத்தகையதொரு பிரும்மாண்டத்தை படைத்துள்ள ‘ப்ரும்மம்’ எல்லையற்ற ஒன்றாகத்தான் இருக்க முடியும் எனக் கருதுகிறோம். உணர்வு என்பது உணர்பவரைச் சார்ந்தது, உணரப்படும் பொருளைச் சார்ந்ததில்லை என்பது உபநிஷத்தின் கருத்து
பிண்ட தானம்
தனது பிஞ்சுக் கரங்களை என் மீது போட்டு அவள் தூங்கும் நினைவுகள் லேசில் மறக்க கூடியதா? அவள் பிறந்த பின் தான் நான் என்னையே புதிதாக உணர்ந்தேன். அவள் இந்த உலகில் இருந்த இரண்டு வருடங்களும் எனது வாழ்க்கையின் உச்ச கட்ட சந்தோஷ நாட்கள். காரில் போனாலும் என் மடியில் தான் உட்கார்ந்து கொண்டு என் விரலைப் பிடித்த படி வருவாள். என்னுடன் இருக்கும் போதெல்லாம் என் விரல்களை பிடித்த படியே இருப்பாள்.அந்த ஸ்பரிசம் ஈடு இணையற்ற மகா ஆனந்தம்.
துயரறுத்தலே துயரமோ?
வாழ்வின் துயரங்களிலிருந்து விலகியிருக்க விரும்பினாலும் மலைக்குடிலுக்குத் தொலைவில் கேட்கிறது அடிபட்ட மானின் துயரக்குரல்.
தொவள மறி
கோவிலின் வாசலில் பெண்கள் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள். மின்னலங்காரத்தில் பொங்கல் வைக்கும் புகை சூழ அந்த இடமே கோலாகலம் நிரம்பி வழிந்தது. சிரிப்பு சத்தங்களும், பேச்சுக்களும், பொங்கல் பொங்கும் பொது பெண்கள் விடும் குலவை சத்தமும் அந்த இடத்தை நிறைத்திருந்தது. கோவிலின் உள்ளே மலரலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. அம்மனுக்கு அலங்காரம் செய்ய அலங்காரக் காரர்கள் கருவரையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு புறம் வில்லுப்பாட்டுக்காரர்கள் அவர்களின் வாத்தியங்களை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
பிழைப்பு
கடந்த ஒரு வார காலமாக அவனின் நிறுவன உரிமையாளர் அவர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்த அலுவலரிடம் பேசச் சொல்லி இவனைக் கோருகிறார். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான அவருக்கு அனைத்திலும் சில்லறையான அலுவலரிடம் கெஞ்சுவது அவரால் ஆகாது. என்ன செய்வது? சம்பளம் வாங்கும் வரை நிறுவனத்திற்கு வேலை செய்துதான் ஆக வேண்டும்.நிறுவனம் இடும் கட்டளைகளை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். கடந்த ஒருவாரமாக தினமும் சென்று அவன் அலுவலரைப் பார்க்கிறான்.ஆனால் முதல் மூன்று நாட்கள் அவர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நேற்றும் அதற்கு முந்தின நாளும் இவனது வேண்டுகோளை கேட்டவர், அதற்கு எந்த பதிலும் தராமல் வெறுமனே வேலை விசயங்களை மட்டும் பேசி அவனை அனுப்பிவைத்துவிட்டார்
