எம். எஸ். தோனி டெஸ்ட் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இதில் ஆச்சரியப்பட பல காரணங்கள் உண்டு. ஒருதொடரின் மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தன் கடைசி ஆட்டத்துக்கு பின்னால் நடந்தபத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் இதைப் பற்றி மூச்சு கூடவிடவில்லை. மைதானத்தைச் சுற்றிய சம்பிரதாயமானஓட்டமோ (lap of honour). சொற்பொழிவோ, கண்ணீர் மல்கிய விடைபெறுதலோ இருக்கவில்லை. செய்தியாளர்களுக்கென விடுவிக்கப்பட்ட ஒரு அறிவிப்பு மட்டுமே. இந்த முடிவின் தருணம் மற்றும் காரணங்களைப்பற்றி நாம் விவாதிக்கலாம். அவரது உடல் சோர்ந்துவிட்டதா அல்லது அவரது மனதுக்குப் போதும் என்றாகி விட்டதா?
ஆசிரியர்: சித்தார்த்தா வைத்தியநாதன்
ஷார்தா உக்ரா – சந்திப்பு
நிஜத்தில் இத்துறையில் நிறைய பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பலரும் அறிவதில்லை. தொலைக்காட்சியில் அதிகமாய் அவர்களைப் பார்க்கிறோம், ஆனால் அச்சுப்பத்திரிகைகளிலும் விளையாட்டுப் பகுதியில் ஒரு பெண் பத்திரிகையாளர் என்பது இன்று ஆச்சரியமே இல்லை. ஒவ்வொரு பெரிய ஆங்கிலப் பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள், சிலவற்றில் தலைமைப் பதவியிலும் இருக்கிறார்கள்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்கள்
“சுற்றிலும் இருப்பவர்கள் அவர்களுக்குத் தடையாய் இல்லாமல் இருந்திருந்தால் மொரோக்கோவில் பல பெரிய பெண் விளையாட்டு வீராங்கனைகள் உருவாக்கியிருப்பார்கள்” என்றார் . “பலரும் 13 வயதில் தொடங்கி 18 வயதில் நிறுத்திவிடுகிறார்கள் ஏனெனில் இது பெண்களுக்கானதல்ல என அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.” என்றார்.
ஸச்சின் எனும் ஆச்சரியம்
பித்துப் பிடித்த ரசிகர்கள் உலோகத் தடுப்புக் கதவுகளை உலுக்குவதை, இங்கிலாந்தின் MCC கிரிக்கெட்டின் கிளப் உறுப்பினர்களுக்கான (egg and bacon )டை கட்டிய எண்பது வயதுக்காரர்கள் பயபக்தியுடன் எழுந்து நிற்பதை , பிள்ளைகளை தலைக்குமேல் உயர்த்திக் காட்டும் தந்தைகளை, பெண்கள் கிறீச்சிடுவதை, ராஸ்தாஃபாரிய தாடி வைத்த சுருங்கிய வயதான மனிதர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதை, நாட்டின் அதிபர்கள் கைதட்டி வரவேற்பதை. கிரிக்கெட்டின் பிரபலங்கள் ஒரு விருந்தை எதிர்நோக்கி இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் கணத்தின் பாவத்தை ஒரு கவியைத் தவிர யாரால் கைப்பற்ற இயலும்?…’
இறுதியில் உறுதி – எம்.எஸ்.தோனி
இது கிரிக்கெட் ஆட்டமில்லை; போக்கர் விளையாட்டு. M.S.தோனி மிகவும் அமைதியாய், அலட்டிக்கொள்ளாமல் அசாத்திய தந்திரத்துடன் இருந்தார். ஏமாற்றினார், ஏமாற்றிக் கொண்டே இருந்தார். ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்துகொண்டிருக்கையிலும் அபாயத்தை அதிகரித்துக்கொண்டு போனார். தன் அதிருஷ்டத்தின் மேல் சவாரி செய்து, ஒரு ரன் அவுட்டிலிருந்து பிழைத்து, இஷாந்த் ஷர்மாவுடன் இரண்டு அபாயகரமான குழப்பங்களிலிருந்து தப்பித்து கடைசியில் ஆட்டத்தை முடித்தார்.
ஊடகங்கள் ஆடும் கிரிக்கெட்
இதுதான் இன்றைய கிரிக்கெட் பற்றிய செய்திகளின் பெரிய முரண்பாடு. இன்றைய கிரிக்கெட் வீரர்கள் சதா சர்வகாலமும் காமிராக்களின் ஒளியில் இருக்கிறர்கள். ஓட்டல் லாபிகள், ஏர்போர்ட்டுகள், பார்ட்டிகள், சிறப்பு விற்பனை விழாக்கள், ப்ராக்டீஸ் நேரம் என்று எங்கு பார்த்தாலும் நிருபர்களும் விசிறிகளும் அவர்களை மொய்க்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை கவனமாய் கண்காணிக்கப்படுகிறது, ஒவ்வொரு அடியும், சறுக்கலும் கவனிக்கப்பட்டு சிரத்தையுடன் செய்தியாக்கப்படுகிறது.
விளையாட்டு, வினை, வினாக்கள்
இதையெல்லாம் விட பெரிய விஷயம்: இது தனித்த சம்பவம் அல்ல. மூன்று ஆட்ட வீரர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தப்பித்துவிட்டார்கள். ஒரு கூடையில் சில அழுகிய ஆப்பிள்கள் என்ற கதை இல்லை இது, பெரிய பனிப்பாறையின் நுனி என்கிற கதை. இதை BCCI நிர்வாகமும் மேலிடமும் உள்வாங்கிக்கொண்டால், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது எளிது.
சச்சினுடன் வளர்ந்தோம்
ஸிட்னியில் டெண்டுல்கர் ப்ரெட் லீயை இரக்கமில்லாமல் வருத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மேலே பறக்கும் கவர் டிரைவ். பின் பந்து வீச்சாளரைத் தாண்டி புல்லட் போல் செல்லும் அடி. லீ ஒரு தெய்வீகமான புன்னகையை உதிர்க்கிறார். டெண்டுல்கர் அசைவில்லாமல் நிற்கிறார். ஜென் துறவி போல, கடந்ததும் வருவதும் பற்றிய சிந்தனையற்று, அந்தக் கணத்தில் அமிழ்ந்து போய்.
உழைப்பாளி எறும்பு : செதேஷ்வர் பூஜாரா
(பூஜாரா) சிரமம் எடுத்து ஆடுபவரோ இல்லை. அவரிடம் கள்ளத்தனமும் இல்லை, அடாவடியும் இல்லை.. அவரிடம் இருப்பது ஒரு முழுமை. இவரை ஆட்டம் இழக்கச் செய்வது எதிர் அணிக்குக் கஷ்டமான வேலை. லீக் மேச்சுகளின் வழக்குப்பேச்சில் சொன்னால் அவர் ஒரு ‘திடமான’ பேட்ஸ்மன்., ‘த்த்த்த்த்த்த்த்………..திடம்” இந்தப் பதம் எத்தனை நீளமாகிறதோ அவ்வளவு கவனம் செலுத்தப்படவேண்டியவர் அவர் என்று அர்த்தம்.
குட் பை, வி வி எஸ்
குழந்தைகளின் புத்தகங்களில் வரும் தேவதைகள் போல லக்ஷ்மன் நம் விருப்பங்களை பூர்த்தி செய்வார். நீண்ட நாட்களாய் நீங்கள் ஆசைப்படுவதை, கிரிக்கெட் களத்தில் நடக்கவே நடக்காது என்று நினைக்கும் விஷயங்களைக் கூட, நீங்கள் அவரிடம் கேட்கலாம். அவர் அதை பூர்த்தி செய்வார்.
ஐ பி எல், கூடைப்பந்து மற்றும் கேலிக்கூத்து முரண் புதிர்
ஐ பி எல் என்பது கிரிக்கெட்டா? டி 20 என்பது கிரிக்கெட்டா? இவை எல்லாம் சுவாரசியமான சர்ச்சைகள்தான். ஆனால் இந்தப் பந்தயத்தைப் பார்க்கும்போது நான் இது எதையும் யோசிக்கவில்லை. நீங்கள் முதல்முறை கிரிக்கெட் பார்த்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்.அது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா? யாரேனும் கிரிக்கெட் என்பதை உங்களுக்கு வரையறுத்தார்களா?