க.நா.சு-வின் ‘இலக்கிய வட்டம்’ – ஓர் எழுத்தியக்கம்

“நான் உன்னத உலகப் படைப்புகள் பற்றிய என் அறிவைக் கொண்டும், அனுபவத்தைக் கொண்டும் சொல்கிறேனே தவிர என் சொந்த விருப்பு, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி கொண்டு சொல்லவில்லை” என்பதுதான் க.நா.சுவின் பதிலாக இறுதி வரை இருந்தது. தமிழில் யார், யாருடைய எழுத்துகள் இலக்கியமில்லை என்பதுடன், எவர், எவர் இலக்கியம் படைக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்வதையும் தன் பணியாக இறுதிக் காலம் வரை செய்து வந்தார் அவர்.