க.நா.சுப்ரமணியத்தின் படைப்பிலக்கியம்

தமிழில் க.நா.சுவின் இடம் என்ன? அவரது இரு நாவல்களும் கலைச்சாதனைகளே. ஆனாலும் தமிழ் புனைவிலக்கியத்தில் அவரது இடம் ஒப்புநோக்க முதன்மையானதல்ல. அவர் விரிவான விமரிசன மதிப்பீடுகளை உருவாக்கியவர். ஆனால் அவரது விமரிசனங்கள் எவையுமே முழுமையான இலக்கிய விமரிசனங்கள் அல்ல. அவரை ஒரு இலக்கிய மையம் என்று கூறுவதே பொருத்தமானது. எல்லா மொழிகளிலும் இம்மாதிரி இலக்கிய மையங்கள் முக்கியமான மாறுதல் கணங்களில் உருவாகி வருவதைக் காணலாம்.

கதைக்களன் – ஓர் உரையாடல்

ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை அவன் வாழும் இடத்திலிருந்து இடம்பெயர்க்கப்படுவதுதான். அப்படி இடம்பெயரும்போது, படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண் திடீரென்று அடைக்கப்பட்டதுபோல் பெரும்பாலான படைப்பாளிகள் உணர்வார்கள். ஒரு எழுத்தாளனை நாடு கடத்துவது அவனைக் கொல்வதை விட சித்திரவதையளிக்கும் தண்டனை.