- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
ஹொன்னாவர் 1605
இருட்டுகிற வரை கவுட்டின்ஹோ பிரபு எழுந்திருக்கவில்லை. வீட்டுத் தரையில் போதம் கெட்டு வீழ்ந்து படுத்திருந்த அவரைச் சுற்றி பேய் மிளகுக் கொடி பந்தலித்து அவர் கால்களை முழுக்கச் சூழ்ந்திருந்தது. தலைக்குப் பின்னால் இருந்து அது நீண்டு அவர் தலையைச் சுற்றிப் படர்ந்து இறுக்கத் தொடங்கியிருந்தது. எழுபத்து மூன்று வயதில் அவருக்கு வாய்த்த வினோத அனுபவம் அது.
வேலைக்காரர்கள், தோட்டக்காரன், சமையல்காரன், வீட்டு நிர்வாகி என்று எல்லோரையும் இன்று வரவேண்டாம் என்று சொல்லியிருந்ததால் அவருக்கு என்ன ஆனது என்று பார்க்க, தேவையானால் வேண்டிய உதவி செய்ய என்று கூட அடிப்படை கவனத்தை ஈயவும் யாருமே இல்லாமல் போனார்கள்.
அவரும் விக்ஞான உபாத்தியாயர் ராயப்பரும் மிளகுக்கொடியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரகசியமான நாள் அது. மிளகு சாகுபடியை மேம்படுத்துவது, குறுகிய கால ஊடுபயிராக மிளகு உற்பத்தி செய்வது, அதிக திடமும், கனமும், வாசனையும், நீண்ட நாள் கெடாததுமாக மிளகின் தன்மையை மேம்படுத்துவது, இதெல்லாம் அல்லது இதில் யாதானும் ஒன்று நோக்கமாகக் கொண்டு நல்ல சிந்தையோடு கவுட்டின்ஹோ பிரபு விக்ஞான உபாத்தியாயரைக் கூட வைத்துக் கொண்டு நடத்தும் ஆராய்ச்சி அதுவென்று கருதினால் பெருந் தவறாகும்.
மிளகு பயிர்பண்ணி சிறு கொடியாக வளர்ந்த பருவத்தில், கப்பலில் பயணம் போகும் பிரயாணி பத்திரமாக எடுத்துப்போய், ஒரு மாதம் கடலில் பயணப்பட்டு, போகுமிடம் போய்ச் சேர்ந்ததும் சேர்ந்த இடத்தில் அந்த மிளகுக் கொடியை ஊன்றி வைத்தால், உடனே பல்கிப் பெருக ஆற்றல் உள்ள மிளகை உருவாக்குவதே கவுட்டின்ஹோ பிரபுவின் தேடலாகும்.
விக்ஞான உபாத்தியாயருக்கு சீனி லட்டுருண்டை தின்கிறது போல் ரொம்பவே பிடித்துப்போன ஆராய்ச்சி இது. அவருக்கு வயது எழுபதாகி, மறதி நிறைய ஏற்பட்டு, நடுராத்திரி தூக்கத்தில் இருந்து எழுந்து வீட்டு வாசல் திண்ணையில் நின்று தாவரவியல் பாடம் நடத்துவதாகக் கேள்வி.
அது இல்லாமல், நாள் பூரா கவுட்டின்ஹோ பிரபு வழிகாட்ட, காய வைத்து, அரைத்து, கரைத்து, கொட்டி, கிளறி, வேக வைத்து, வறுத்து, பொடித்து, கலக்கி, வடிகட்டி இப்படி நாள் முழுக்க விக்ஞான உபாத்தியாயருக்கு வேலை இருப்பதால், இரவு ஆழ்ந்த உறக்கத்தில் அமிழும் அவர், பிரபு மேல் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளார் என்பது சொல்ல வேண்டியதில்லை.
இந்த ஆய்வுகளுக்கு விக்ஞான உபாத்தியாயருக்கு மாதத்துக்கு இருபத்தேழு வராகன் கவுரவ உழைப்புக் காணிக்கை பிரபு தருகிறார் என்பது சந்தோஷமான விஷயம்.

இன்றைக்கு அபூர்வமானதான பேய் மிளகு என்ற வகை மிளகுக்கொடி ஆய்வுக்குக் கிடைத்தது பிரபுவுக்கு. மலையேறப்போன ஒரு தம்ப்ரான் கொண்டுவந்து கொடுத்தது அது. காலையிலேயே பிரபு, உபாத்தியாயர் இருவரும் ஒரு குடுவை நிறைய மூத்திரம் பெய்து, பேய் மிளகுக் கொடி அமிழ்த்தி, முகத்தில் துணி கட்டிக்கொண்டு அதைக் காய்ச்சினார்கள். அடிப்பிடித்து வந்த உப்பை ஜாக்கிரதையாகச் சேமித்துக் கொண்டார்கள்.
வீட்டுக்குள் கழிப்பறை வாடை ஜாஸ்தியாக வந்ததால் மட்டிப்பால் ஊதுபத்திகளையும் சாம்பிராணியையும் கொளுத்தி வீடு முழுக்க நல்ல வாடை வர வைத்திருந்தது நல்லதாகப் போச்சு பிரபுவுக்கு.
கஸாண்ட்ரா பிஃபானா கொண்டு வந்தபோது கவுட்டன்ஹோ பிரபுவும் வீடும் சிறுநீர் வாடை அடிக்காமல் ஊதுபத்தி வாடையோடு கணிகையர் வீதி வாசனை கிளம்பியது. கஸாண்ட்ரா உடனே கிளம்ப அவசரப்பட்டது இந்த ஊதுபத்தி வாடை மிகுந்திருந்ததாலும் தான்.
அவள் முகம் பார்த்து பிரபு உன்மத்தம் கொண்டு அவளை கட்டிலுக்கு தூக்கிப் போக யத்தனம் செய்தது, அவர் தரையில் மயங்கிக் கிடப்பதிலும், கொதிக்க வைத்திருந்த குடுவைநீர் சிந்தி பேய் மிளகு ராட்சசத்தனமாக வளர்ந்து பிரபு காலைச் சுற்றிப் படர்ந்ததிலும் முடிந்தது. தற்போது அவர் இன்னும் தரையில் கிடந்து உறங்கியபடி, மிளகுக்கொடி சுற்றி, கர்ப்பத்தில் சிசு பிரசவிக்கப்படக் காத்திருப்பது போல், பிரக்ஞை திரும்பக் காத்திருக்கிறார்.
விக்ஞான உபாத்தியாயரிடம் நாள்பட்ட ஒரு பழக்கம் உண்டு. காலையில் ஆறு மணிக்கும் சாயந்திரம் ஐந்து மணிக்கும் நாலு கடைவீதி சுற்றி வீட்டுக்குத் திரும்பப் போவது. காலையில் போகும்போது வீதிகளில் கடை பரத்தியிருக்கும் காய்கறிக் கடைக்காரர்கள் ஒரு கீரைக்கட்டோ, வாழைக்காயோ, ஊறுகாய் போடத் தோதான கிடாரங்காயோ அன்பளிப்பாகத் தருவது வழக்கம். மாலையில் அப்படிப் போகும்போது மற்ற கடைக்காரர்கள் அவருக்கு தினசரி ஒன்றோ இரண்டோ கொட்டைப் பாக்கும், கால் கவுளி வெற்றிலையும் காணிக்கையாகத் தருவதுண்டு.
அவரிடம் சிறப்பாகப் படித்து முன்னுக்கு வந்த பிரகாசமான மாணவர்கள் மண்டிக்கடையில் கைமேஜை போட்டுக் கணக்கு எழுதும்போது வாத்தியார் சம்பாவனை என்று ஒரு வராகன் செலவுக் கணக்கு எழுத, அதை ஏற்று அனுமதிப்பார்கள் கடை அதிபர்கள். இவர்கள் பெரும்பாலும் விக்ஞான உபாத்தியாயரின் கடைந்தெடுத்த அடிமுட்டாள் பழைய மாணவர்களாக இருப்பது சகஜம்.
ஒரு மனுஷன் வாழைக்காயையும், வெற்றிலையையும் பாக்கையும் பட்சணம் பண்ணி பசியாற முடியாது என்பதால் தினசரி வரும் சம்பாவனையில் முக்கால் பாகத்துக்கும் மேல் விக்ஞான உபாத்தியாயர் பெண்டாட்டி வீட்டு வாசலில் கூறு கட்டி விற்பது வழக்கம். அந்தப் பணம் மீன் வாங்கவோ, கருவாடு வாங்கவோ பிரயோஜனப்படுவது வாடிக்கை.
உபாத்தியாயர் உலா போகும்போது மாலையில் மட்டும் கவுட்டின்ஹோ பிரபு மாளிகையில் படியேறி அரை மணி நேரம் அவரோடு சல்லாபம் செய்துவிட்டு, என்றால், இலக்கியம், விக்ஞானம், கொக்கோகம், குழுப் பாடல், பாலே ஆட்டம் பற்றி எல்லாம் உரையாடிவிட்டு வீடு திரும்புவது அவ்வபோது நிகழும். இவற்றில் பிரபுவுக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது ஒரு சமாச்சாரம் மட்டும்தான்.
அவர் பிரபுவோடு ஆராய்ச்சி செய்வது வாரம் மூன்று தடவையாவது காலை ஒன்பதில் இருந்து பகல் இரண்டு வரை இருப்பதால் சாயந்திரம் இந்த உபரியான பேச்சு அதற்குக் குந்தகம் விளைவிக்காமல் போகும்.
அபூர்வமான தினங்களில் பகல் ரெண்டுக்கு மேல் ஆராய்ச்சி நீளும்போது கவுட்டின்ஹோ பிரபு மாளிகையிலேயே மாளிகை நிர்வாகி சுபமங்களத்தம்மாள், தாரா முட்டை அல்லது வான்கோழி முட்டை உடைத்து உப்பிட்டுவோடு சேர்த்துக் கிண்டி. புளிக்காடியோடு உபாத்தியாயருக்குத் தர மடையருக்கு ஆக்ஞை பிறப்பிப்பார். முட்டை இல்லாமல் அவரால், பசியாற உண்டாக்கும் எந்த உண்டியையும் கற்பனை செய்யக்கூட முடியாது.
சுபமங்களத்தம்மாளுக்கு கொங்கணி, கன்னடம், தமிழ், தெலுகு, போர்த்துகீஸ், இங்க்லீஷ் என்று ஊர்ப்பட்ட பாஷை அத்துப்படி. என்றாலும் அவரிடம் போய்ப் பேச பிரபுவோ மற்றவர்களோ முற்படுவது அபூர்வம்.
தாட்டியான ஐம்பத்து மூன்று வயது அம்மாளோடு போர்த்துகீசிய இலக்கியத்தில் காதல் பற்றி ஐந்து நிமிடம் பேசிவிட்டுப் போக யார் உத்தேசிப்பார்கள்?
விக்ஞான உபாத்தியாயருக்கு அம்மாளின் கருப்படித்த பற்கள் பார்க்க அவ்வளவாக, அவ்வளவாக என்ன, முழுக்கவே பிடிக்காது. முட்டை கொண்டு வரும் போது அவளுடைய அக்குளில் கற்றாழை வாடை லோகம் முழுவதும் அடிப்பதும், சுபமங்களத்தம்மாளின் வாய் வாசனையும் எட்டு ஊர் தாண்டி விரட்டும். என்ன செய்வது, கவுட்டன்ஹோவின் இந்துஸ்தானி மனைவி, காலம் சென்ற விக்டோரியா கவுட்டன்ஹோவுக்கு ஏதோ தூரத்து சொந்தம் அவள்.
சாவுப் படுக்கையில் அவள் கவுட்டின்ஹோ பிரபுவிடம் சொல்ல நினைத்தது – நான் போனபின் சுபமங்களத்தைக் கல்யாணம் செய்து கொண்டு, வீரையனை வீட்டு நிர்வாகி ஆக்க வேண்டியது. சித்தம் கலங்கிப்போய் அவள் சொன்னதோ, நான் போனபின் சுபமங்களத்தை வீட்டு நிர்வாகி ஆக்கி, வீரையனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது.
கவுட்டின்ஹோ பிரபு பக்கத்தில் அப்போது சாயந்திரம் நடை பயின்று அரட்டையடித்துப் போக வந்திருந்த விக்ஞான உபாத்தியாயர் மட்டும் இருந்ததால் அவரை எளிதாக வென்று தன் பக்கமாக்கி விட்டார் கவுட்டின்ஹோ பிரபு. உபாத்தியாயரே, விக்டோரியா ஆசைப்படி நான் சுபமங்களத்தம்மாளை வீட்டு நிர்வாகி ஆக்கி விடுகிறேன். இப்படி புத்திசாலித்தனமாக அவர் உரைக்க, விக்டோரியா, ”மறுபடி சொல்லும், கேட்கலே” என்று திரும்பத் திரும்ப முணுமுணுத்தபடி சுவாசம் நிறுத்தினாள். வீரையனும் தோட்ட வேலை பார்க்கும்போது பாம்பு தீண்டிப் பரலோகம் போனான் பின்னர் ஒருநாளில்.
ஆக, சுபமங்களத்தம்மாளுடைய மீதி ஜீவித ஆலிங்கனத்தில் இருந்து தப்பினார் பிரபு. அம்மாள் நாலு தும்மல் சேர்த்து தும்மினால் அது இருமலாகி, இருமல் குத்திருமலாகி, குத்திருமல் ஷயம் ஆகி, ஷயம் ஜன்னியாகி கண் மூடுவாளா என்ற எதிர்பார்ப்போடு இருந்தார் அவர். அம்மாள் ஒரு நகச்சுற்று கூட வராமல் குத்துக்கல்லாக இருக்க, பிரபுவுக்குத்தான் சதா உடம்பு சுகவீனம்.
அதோடு தான் காஸண்ட்ரா வயது குமரிகளோடும், கல்யாணம் கழித்த முட்டைக்காரி, மீன்காரி, பால்காரி என்று சகல பெண்டிரோடும் அல்பசல்லாபம், என்றால் சிறு சிறு விஷமங்கள், செய்து நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறார் அவர். காஸண்ட்ரா மட்டும் கிடைத்தால், அவளுடைய இடது கை சுண்டுவிரலைத் தொட்டுப் பார்த்து வாயிலிட்டு சுவைத்துப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவர் சேர்த்து வைத்த பொன்னில் பாதி அவளுக்குத் தருவார். அதுவரை சுபமங்களத்தம்மாள் போன்ற வான்கோழி ஜாடை வாய்த்த மூதாட்டிகளுக்கு கருணை பொழிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது அவர் விதி.
அம்மாள் வீட்டோடு இருப்பதால் அவருக்கென்று ஒரு பெரிய அறையை கவுட்டின்ஹோ தம் கண்ணுக்கு மறைவாக ஒதுக்கிக் கொடுத்து விட்டார். அது சரிப்படாது என்று, அம்மாள் இருக்க மாளிகைக்குப் புரத்திலேயே ஒரு சிறு இல்லம் உண்டாக்கி அவரை அங்கே எழுந்தருளச் சொல்லி அனுப்பினார். சுபமங்களம் அம்மாள் முன்னால் இருந்த அறையில் தான் தாவரவியல் ஆராய்ச்சிக்கான தளவாடங்களை சேகரித்து பத்திரமாக வைத்திருக்கிறார் அவர்.
”பிரபு, வாசலில் விளக்கில்லேயே. உள்ளே மும்முரமாக வாசித்துக் கொண்டிருக்கிறீரா”?
உபாத்தியாயர் உள்ளே நுழையும்போது அழைத்தபடி வந்தார். கீழே தரையில் கிடந்த ஏதோ அவர் காலில் தட்ட சுவரில் கையை வைத்து விழாமல் நின்று கொண்டார்.
சின்ஹோர் சின்ஹோர் என்று இரண்டு தடவை கூப்பிட கீழே இருந்து ஏதோ மிளகு வாசனையோடு அவர் காலில் ஏறத் தொடங்கியது. அவர் கைகளை மிகையாக அசைத்துக்கொண்டு வாசலுக்குத் திரும்ப ஓட, காலையிலேயே சகோதரி வீட்டுக்குப் போயிருந்த சுபமங்களத்தம்மாள் விரைவாக வீட்டுக்குள் நுழைந்து, ’பிரபு காலமாகிவிட்டாரா?’ என்று தான் இழக்க இருக்கும் சுகங்களை நினைத்து வருந்தியோ என்னமோ அழ ஆரம்பித்தாள்.
”அம்மே, பிரபு சுகம்” என்றபடி உபாத்தியாயர் நின்ற இடத்திலேயே நிற்க அவரைச் சுற்றிப் படர்ந்து ஏறும் பேய் மிளகைக் கண்டு மிரண்டு வார்த்தையின்றி நின்றாள் சுபமங்களத்தம்மாள்.
உபாத்தியாயர் காலில் படர்ந்து பந்தலித்த மிளகுக்கொடி சுபமங்களத்தம்மாள் காலில் ஏற முனைந்து அவள் கிறீச்சிடவோ என்னவோ, ,அவளைத் தவிர்த்து கீழே இறங்கி, தரையில் கிடந்த பிரபுவின் கழுத்தை நோக்கித் திரும்பி விட்டது.
விக்ஞான உபாத்தியாயர் இதுவரை செய்யத் தவறிய காரியத்தை உடனே செய்தாள் சுபமங்களத்தம்மாள். ”ஓடி வாங்க, ஐயயோ, ஓடி வாங்க” என்று உச்சக் குரலில் சத்தம் போட்டாள் அவள்.
உபாத்தியாயருக்கு, தனக்கு ஏன் இது தோன்றவில்லை என்று மனதில் பட, அவளுடைய பன்மொழிப் புலமை காரணமாக இந்தத் திறமை வந்திருக்கலாம் என்று நினைப்போடு நிற்க, அண்டை அயல், தெருவில் போனவர்கள் என்று ஏழெட்டு பேர் வீட்டுக்குள் ஓடி வந்து விட்டார்கள்.
பத்தே நிமிஷத்தில் கவுடின்ஹோ பிரபு அவர் படுக்கையில் கிடத்தப்பட்டார் தரையில் கிடந்த மிளகுக்கொடி பலவான்களாக நின்று கொண்டிருந்த இருவரால் அகற்றப்பட்டது. அவர்கள் போனபோது வரவேற்பு அறை மேசையில் இருந்த இரண்டு போர்த்துகீஸ் செப்பு மதுக் குவளைகளும் அகற்றப்பட்டிருந்தன.
சுபமங்களாம்மாள் விக்ஞான உபாத்தியாயர் கையைப் பற்றி பயப்படக் கூடாது என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள். உபாத்தியாயருக்கு அது ரொம்ப பிடிக்கவே அசங்காமல் அங்கே நின்று கட்டிலில் இன்னும் பிரக்ஞை திரும்பாமல் கிடக்கும் கவுட்டின்ஹோவைப் பார்த்தபடி இருந்தார்.
”விலகுங்க, நான் சின்ஹோருக்கு அரிசி நொய் கஞ்சி செய்து எடுத்து வரேன்” என்று விலகிக் கொண்டாள் சுபமங்களத்தம்மாள். நெய் வேணாம், சீரணம் ஆகக் கஷ்டப்படுவார் என்று உபாத்தியாயர் சுட்டிக் காட்டினார்.
அம்மாள் சொன்னாள் – ”நெய் இல்லே வாத்தியாரே, நொய், அரிசியை மாவாக அரைக்காமல் அது அரைகுறை திரிகையிலே அடிபட்டதுமே எடுத்து அதுலே கஞ்சி காச்சறது”.
அந்த நொய் சமாசாரத்தை உண்டு பார்க்கவேண்டும் என்று உபாத்தியாயருக்குத் தோன்றியது. இன்னொருத்தர் வீட்டில் போய் எனக்கு நொய்க்கஞ்சி குடிக்கக் கொடு என்று கேட்கலாமா? அதுவும் வீட்டு எஜமானர் நினைவு தப்பிக் கிடக்கும்போது.
சுபமங்களத்தம்மாள் கஞ்சியோடு வந்து கட்டில் முனையில் உட்கார்ந்து, கவுட்டிங்ஹோவை தோளில் சாய்த்துக்கொண்டு உபாத்தியாயரைப் பார்த்துப் புன்சிரித்தாள்.
“இவர் அடிக்கடி இப்படி நினைவு இல்லாம போயிடுவார். ஆனா இன்னிக்கு பகல்லேயே நினைவு தப்பி தரையிலே விழுந்து கிடந்தார். வாங்க வாத்தியாரே, நீங்க அந்தத் தோளைப் பிடிச்சுட்டு, அவர் தோளை சொன்னேன், கட்டிலுக்கு பின்னாலே நில்லுங்க. இன்னும் பத்து நிமிஷத்துலே கஞ்சி குடிச்சுடுவார்” என்றாள் சாதாரணமான தொனியில் சுபமங்களத்தம்மாள்.
”அது என்னமோ செய்யலாம் தான். ஆனால் மயக்கம் தெளியாவிட்டால்?”
விக்ஞான உபாத்தியாயரின் மனைவி அவருக்காக இந்த ராத்திரிக்கு மீன் பொரித்து வைத்திருக்கிறாள். ஏரி மீன் என்று சாயந்திரம் லாந்திவிட்டு வர, என்றால் உலவிவிட்டு வரக் கிளம்பியபோதே சொன்னாள்.
பிரபு சின்ஹோரையும், அவரை அணைத்து பிடித்து நொய்க்கஞ்சி ஊட்டும் கிழவியையும் பார்த்துக் கொண்டிருப்பது தவிர அவருக்கு வேலை இல்லாமல் அஸ்தமித்து விட்டதா என்ன? அவர் சொல்லிக்கொண்டு கிளம்புவார். நான் காலையிலே வர்றேன் என்றோ சாயாந்திரம் வர்றேன் என்றோ சொல்லிவிட்டுக் கிளம்பலாம்தான். காலையில் அவர் நடப்பது ரதவீதிப் பக்கம். சாயந்திரம் மாதாகோவில் பக்கம். பாதையை மாற்றினால் காலை வயிறு சுத்தப்படாது. என்றாலும் சொல்லி விடலாம்.
அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சுபமங்களத்தம்மாளிடம் பேச முற்படும்போது கர்ர்ர் என்று சின்ஹர் கவுட்டின்ஹோ வாய்க்குள் போன கஞ்சி வெளியே வந்து கொண்டிருந்தது. இது ஏதோ தகராறு என்று உபாத்தியாயருக்குப் புரிந்தது. இப்போது வீட்டுக்குப் போவது எப்படி?
வாசலில் சத்தம். சாரட் ஓட்டிகள் இருவரும், தோட்டக்காரனும், உள்ளே குசினியில் உதவி செய்யும் பய்யனும் எல்லாம் அவசரமாக வந்து கொண்டிருந்தார்கள். குசினிப் பய்யன் எதற்கென்று தெரியாமல் விசும்பி அழுதபடி வந்து கொண்டிருந்தான்.
அவன் சொன்னான் – ”போனவாரம் எனக்கு இருமல் அதிகமாக இருந்தபோது இங்கே ராத்திரி தங்கச் சொல்லி புட்டத்திலே ஏதோ மருந்தை அழுத்தி தடவினார் கவுட்டின்ஹோ பிரபு. இருமல் ஓடியே போச்சு”.
முன்னாலே தடவியிருக்காரா என்று தோட்டக்காரன் கேட்க குசினிப்பையன் நாணிக் கோணி அதெல்லாம் சொல்வேனா என்றான். சுபமங்களத்தம்மாள் கட்டிலில் உட்கார்ந்து, கண்மூடி இருக்கும் எஜமானரை தோளில் சாய்த்து கஞ்சி ஊட்டுவது அவர்களை ஆகர்ஷித்தது இத்தனை அத்தனை இல்லை என்று தோன்ற, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
”கூத்து பார்க்க போயிட்டிருக்கோம். இங்கே என்ன ஆச்சு விளக்கே எரியலியேன்னு பார்க்க வந்தோம். ஒண்ணும் இல்லையே?” என்று தோட்டக்காரன் விசாரிக்க, பக்கத்தில் நின்ற விக்ஞான உபாத்தியாயர் அவர்களைப் பதட்டத்தோடு பார்த்து ”ஏம்ப்பா சின்ஹோர் கண்ணு திறக்காம இருக்கார், அது உங்க கண்ணுலே படவில்லையா?” என்று குற்றம் சாற்றும் தொனியில் கேட்டார்.
“முகத்துலே சாராயம் தெளிக்கலாமுங்க வாத்தியார் ஐயா” என்றான் குசினி உதவிப் பையன்.
‘சாராயம் தெளிச்சா மூச்சு முட்டும் அதற்கு அப்புறம் என்ன ஆகுமோ தெரியலே, வேண்டாம்” என்றாள் சுபமங்களத்தம்மாள்.
”அப்போ வெறும் தண்ணி தெளிக்கலாமே” என்று உபாத்தியாயர் யோசனை சொன்னார்.
“அவருக்கு தண்ணி முகத்திலே சட்டுனு தெளிச்சா கீழே வீங்கிப் போய், ஒரு மணி நேரமாவது ஆகும் திரும்ப சரியாக வர்றதுக்கு” என்று சுபமங்களா அந்தரங்க ரகசியத்தைப் பகிரும் நாணத்தோடு சொன்னாள்.
“ஆபத்துக்கு தோஷமில்லே. பிரக்ஞை திரும்பறது தான் இப்போது முக்கியம். தண்ணி, சாராயம், வென்னீர், பன்னீர் ஏதாவது எடுத்து வாங்க” என்றார் உபாத்தியாயர்.
கஞ்சியை உதட்டில் குவளையைத் தொடுக்கினாற்போல் வைத்து கவுடின்ஹோ பிரபுவின் நெஞ்சில் கை வைத்து தேய்த்தபடி சுபமங்களா இருந்த காட்சி உபாத்தியாயருக்கும் ஈர்ப்பு உள்ளதாகப் போக, அவர் சின்ஹோர் இடத்தில் கட்டிலில் தாம் கிடக்கலாம் என்று கருதத் தொடங்கினார். அவருடைய முகத்தில் வியர்வை ஒரு சிறு கீற்றாகப் பரவியதும் பைஜாமாவுக்குள்ளே இருந்து சிறு வெல்வெட் துணியை வெளியே எடுத்து எல்லா மணமும் ஒரு சேர வீச முகம் துடைத்துக் கொண்டார் அவர்.
அடுத்த பத்து நிமிடம் சின்ஹோர் கவுட்டன்ஹோ உடல்நிலையில் ஏது அபிவிருத்தியும் ஏற்படவில்லை. ஆனால் மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. அவர் தொடையில் பேய் மிளகு அணைத்துக் கிடந்த இடம் வரை தோல் கடினமானதாகப் போயிருந்ததை உபாத்தியாயர் கண்டார்.
காலையில் மயில் துத்தமும், ஒரு துளி ராஜதிராவகமும், கொஞ்சம் போல் சாயநீரும், இன்னும் புகை விடும் இத்தனூண்டு கந்தகமும் சேர்த்துக் காய்ச்சிய நிறமற்ற அந்தக் கூழ், காலிலோ, பேய் மிளகுக் கொடியிலோ பட்டால் நம்ப முடியாத விளைவுகள் ஏற்படுவதை, நாளை ஆராய்ச்சி முடிவாக எழுதி, சின்ஹோர் மூலம், லிஸ்பன் விக்ஞான பேரவைக்கு அனுப்ப நிச்சயம் செய்து கொண்டார், விக்ஞான உபாத்தியாயர்.
அவர்களுக்கு மிளகு பற்றித் தனியான ஆர்வம் எதுவும் இல்லை. நிற்காத யந்திரம், புவியீர்ப்பு விசையைக் கடந்து போவது, மனிதன் பறவைகள் போல் பறந்து செல்வது போன்ற தலைப்புகளில் ஆராய்ச்சியும், சொற்பொழிவும் பேரவைக்குப் பிடித்தவை மட்டுமில்லை. வருமானம் கொண்டு வருகிறவை.
லிஸ்பன் நகரப் பணம் படைத்த தனவந்தர்கள், விக்ஞானத்தில் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல், ஏதோ இந்த சொற்பொழிவுகள் கேட்ட மாத்திரத்தில் அறிவு சேர்வதற்கு வழி செய்பவை என்று நினைத்து, அங்கனமே பறைசாற்றிக்கொண்டு, கட்டணம் கொடுத்து சொற்பொழிவுக்கு வந்து, அங்கே கண்மூடி உறங்குவதெல்லாம் உபாத்தியாயருக்குத் தெரியும்.
அதெல்லாம் எக்கேடும் கெட்டுப் போகட்டும். விக்ஞான உபாத்தியாயர் வீடு போய், மீன் கறியோடு சோறு உண்டு நிம்மதியாக உறங்கப் போகவேண்டும். இந்த உச்சைக் கிறுக்கன் பிரபு, பொம்பளை நாயை ஆசனவாயில் தீர்க்கமாக முகர்ந்து பின்னாலேயே ஓடும் லோலன் அவன் கண் விழித்து மிளகுக் கஷாயம் கேட்டால் என்ன, கண் மூடியே பரலோகம் போனால் என்ன?
அவர் நேரே சுபமங்களத்தம்மாளிடம் போய் ’வீட்டில் கட்டியோள் ஆரோக்யம் நலிந்து குருதரமாக இருப்பதால் நான் போய் நாளைக் காலை திரும்புகிறேன்’ என்று வாசலுக்கு வேகமாக நடந்தார். அதை மீறிப் போக முடியாமல் அவர் காலையும் பேய் மிளகுக் கொடி கட்டியது.
அந்தக் கொடிக்கு பேய் மிளகு என்ற பெயரை வைத்ததே அவர் தான். சாதுவான, காரம் குறைந்த மிளகை வேதியியல் பொருள்கள் சேர்த்துப் பொடித்து, சாறாக்கிக் கலந்து, வடிகட்டி, நீரில் அமிழ்த்தி, கனலில் சுட்டு, ஏதேதோ செய்து உக்ரமானதாக ஆக்கியவர் முதலில் அவர்தான்.
கவுட்டின்ஹோ எல்லா உபகாரங்களும் அதற்காக ஆற்றினார். மிளகுக்கொடி கொசு, கரப்பு, ஈ போன்ற சில்லறை உயிர் பிராணிகளைச் சூழ்ந்து ரத்தத்தை உறிஞ்சி கோர ஸ்வரூபங்களாக எறிவதால் பேய் மிளகு என்ற அந்தப் பெயரை அவர் ஏற்றுக்கொண்டார்.
”இன்னும் கூடுதல் குருதிப் பசியோடு இந்தக் கொடியை முன்னேற்றினால் அது கொடுக்கும் மிளகு அளவு மிகும். எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வளர்ந்து செழிக்க, கோழி, ஆட்டின் குட்டி, கன்றுக்குட்டி, எருமை என்று புலிக்கு இரை போடுகிறதுபோல் ஈய முற்பட்டால் மிளகிலேயே சிறந்ததாகி விடும் நம் பேய் மிளகு”. உபாத்தியாயர் பெருமையோடு சொன்னார்.
”விக்ஞான உபாத்தியாயரே, கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த மிளகுக்கொடியை இன்னும் உக்ரமாக்குவோம் வாரீர்” என்று காலையில் தொடங்கி மயில் துத்தம் சேர்த்து காய்ச்சியது பாதியில் கவனிக்கப்படாமல் போக, கஸாண்ட்ரா என்ற பேரழகி வந்தபின்னர் குறி விடைத்த கவுட்டின்ஹோ வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் அவளது உடல் வாடை நுகர்ந்துகொண்டே பின்னால் போய்விட்டார்.
கஸாண்ட்ரா வந்தால் என்ன, எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா வந்தால் என்ன, கைவேலையை முடிக்காமல் பசு தர்மம் தலைதூக்க விட்டிருப்பது தவறன்றோ.
இப்போது இந்த கவுண்டின்ஹோ கஞ்சி குடிக்க ஆரம்பித்து விட்டார். தலையை கிழவியின் மாரிடத்தில் சாய்த்து வைத்து அவர் கொண்டாடும் சுகம் கொஞ்சநஞ்சம் இல்லை. கண் திறக்கவில்லை. உடல் இயங்கவில்லை. மற்றபடி அவர் கேட்கிறார், தொட்டால் உணர்கிறார், பசியும் தாகமும் தெரிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
விக்ஞான உபாத்தியாயர் வெளியே தப்பி ஓடுவதை ஏனோ அவர் விரும்பவில்லை போல. வீடு முழுக்க அங்கும் இங்கும் மறுபடி பேய் மிளகு மண்ட ஆரம்பித்து விட்டது.
உபாத்தியாயர் மறுபடி உள்ளே போய் வரவேற்பறை நாற்காலியில் வேண்டா வெறுப்பாக அமர்ந்தார். ஐயா என்று சத்தம் கேட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தார். இனிப்பு அங்காடியில் அவற்றைக் கிண்டிக் கிளறி உருவாக்கும் கிழட்டு மடையன் உள்ளே படியேறி வந்து கொண்டிருந்தான்.
இவன் என்ன இழவுக்கு இங்கே வருகிறான்?
அவன் மேல்படியில் நின்று விக்ஞான உபாத்தியாயரை நோக்கி இருகரம் குவித்து வணங்கினான்.
“ஐயா நீங்கள் அறிவியல் மேதையான ஒரு கேரளபூமித் தமிழர் என்று சற்று நேரம் முன்னால் தான் இங்கே குசினிப் பணி நோக்கும் மனுஷன் சொல்ல அறிந்தேன். ரொம்ப சந்தோஷம். அவன் தான் சொன்னான் நீங்கள் இங்கே இருப்பதாக.”.
விக்ஞான உபாத்தியாயர் பெண்டாட்டியோடு சண்டை போட்டு வாசலுக்குத் துரத்தப்பட்டவர் போல் கடுகடுவென்ற முகத்தோடு உட்கார்ந்திருந்தார். என்ன விஷயமாக வந்திருக்கீர் என்று வந்தவனை விசாரித்தார்.
”அது வேறொண்ணுமில்லை, நீங்களும் இவ்விடத்து பிரபுவும் உன்னதமான விக்ஞான மேம்பாட்டுக்காக தாவரவியலில் முக்கியமான முன்னெடுப்பை எடுத்து வைக்கும் விதத்தில் மிளகுக் கொடியை அதிவினோத, அதிநவீனத் தாவரமாக்கியுள்ளீர்களெனக் கேள்விப்பட்டேன். சந்தோஷம். நிரம்ப சந்தோஷம்”.
”நிறைய சந்தோஷப்பட்டு விட்டீர், போய் வரலாமே” என்று விக்ஞானி அவரைப் பார்த்துக் கைகூப்ப, மடையர் சொன்னது இந்த மாதிரி இருந்தது – ”தாவரவியல், வேதியியலில் எனக்கும் அக்கறை உண்டு. நானும் இங்கே ஆய்வுகளில் பங்கெடுத்துக் கொள்ளலாமா? அதுவும் காலம் என்ற இன்னொரு பரிமாணம் பற்றி ஆய்வு செய்ய எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு”.
உம் பெயர் என்ன? விக்ஞானி அமைதியாகக் கேட்டார் வந்தவனை.
”பரமன் என்பார்கள். பரமேஸ்வர அய்யன் என்பது முழுப்பெயர். அப்புறம் ஒன்று. நான் உங்கள் காலத்து மனுஷன் இல்லை. இது பதினேழாம் நூற்றாண்டு தானே, நான் வந்தது இருபதாம் நூற்றாண்டில் இருந்து”.
”அய்யா, பெரியவர் மூர்ச்சித்துக் கிடக்கிறார். நீர் ஏதோ கெக்கெபிக்கெ என்று காலம், இருபதாம் நூற்றாண்டு என்பதுபோல உளறிக் கொண்டிருக்கிறீர். எழுந்து போம்” என்றார் விக்ஞானி கோபத்தோடு.
“நம்புங்கள், நான் விமானத்தில் தில்லியில் இருந்து பம்பாய் பறந்தபோது நாக்பூரில் விமானத்தைத் தவறவிட்டு இந்த இடத்துக்கும் காலத்துக்கும் வந்துவிட்டேன். உம் போன்ற அறிவியல் மூப்பர் வழிகாட்டினால் என் காலத்துக்குத் திரும்பி விட முடியும். தயவு செய்து உதவுங்கள்” என்றார் நெஞ்சுருக.
விக்ஞானியோ அவசரமாக வீட்டுக்கு உள்ளே வந்து கதவடைக்கும்போது அந்த மடையரின் கண்களைப் பார்த்தார். அவை பொய் சொல்வதாகத் தெரியவில்லை. மடையர் நின்று பார்த்துவிட்டுத் திரும்பப் போகும்போது அவர் குப்பாயத்தில் ஒரு சிறு கொழுந்தும் நான்கைந்து இலைகளுமாக பேய் மிளகு படர்ந்தேறி இருப்பதைக் கண்டார் விக்ஞான உபாத்தியாயர்.
ஓய் ஓய் ஓய்
வந்தவரைப் பின்னால் இருந்து கூப்பிட்டது கனவில் நடப்பது போல் மிகுந்த பிரயத்தனத்தின்பேரில், சத்தமே கூட்டாமல் வந்தது. அவர் கூப்பிடுவதற்குள் பரமன் படியிறங்கியாகி விட்டது.
”ஓய் மடையரே, குப்பாயத்தில் நுழைந்த மிளகுவள்ளியை எடுத்துத் தூர எரியும்”.
“நான் எடுத்துப் போகவில்லை. அதுவாகவே உள்ளே நுழைந்துவிட்டது. மன்னிக்கவும். அடுத்தவர் சொத்துக்கு நான் ஆசைப்பட மாட்டேன்”.
பரமன் தன் குப்பாயத்தில் இருந்து கல், மண், செடி, கொடி என்று தானாகவே வந்தது, அவர் எடுத்து உள்ளே போட்டது, எல்லாம் அகற்றிவிட்டு நடந்தார்.
“வாத்தியாரே, இன்னும் தாமதிக்காமல் பெத்ரோ பிரபுவிடம் வந்து பார்க்கச் சொல்லி அவசரச் செய்தி அனுப்பினால் என்ன” என்று சுபமங்களத்தம்மாள் கேட்டாள். அதுவுஞ்சரிதான் என்று ஒரு சாரட் வண்டியில் தோட்டக்காரனையும், குசினிக்காரனையும் அனுப்பி வைக்கச் சொன்னார் விக்ஞான உபாத்தியாயர்.
அனுப்பி வைக்கப்பட்டது. போனவர்கள் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்கள். பெத்ரோ பிரபு கிழக்குக் கரையில் காளிகட்டம் பயணம் வைத்து நேற்றுக்காலைதான் புறப்பட்டுப் போனதாகவும் இன்னும் மூன்று வாரம் ஆகும் அவர் திரும்பிவர என்றும் பெத்ரோ பிரபு மாளிகை நிர்வாகி கஸாண்ட்ரா சொல்லியனுப்பியிருந்ததாக சுபமங்களத்தம்மாளிடம் தெரிவித்தார்கள்.
கஸாண்ட்ரா, பெத்ரோ இங்கே வைத்துவிட்டுப்போன கூடுதல் மருத்துவப் பெட்டியிலிருந்து ஏதோ சில குளிகைகளையும், நாசித் துவாரங்களில் சளி நிவர்த்திக்காகப் பூசும் களிம்பையும் அனுப்பிவைத்திருந்தாள்.
கவுட்டின்ஹோவை அந்தக் குளிகையை விழுங்க வைக்க சிரமமாக இருந்தது. விழுங்கியும் கண் திறக்கவில்லை. என்றாலும் சுபமங்களத்தோடு தன் தன்னை அட்டைப்பூச்சி மாதிரி ஒட்ட வைத்துக்கொண்டு கிடந்தார் அவர்.
அந்தக் களிம்பு பிரயோஜனமாக இருக்கும் என்று எடுத்து அதை பிரபுவின் நாசித் துவாரத்தில் அடைக்க, கண் மூடியபடியே அவர் கை உயர்ந்து அதை எடுத்து சுபமங்களத்தின் வயிற்றில் பூசி அங்கே மீண்டும் தலை வைத்தார்.
ரோஜாப்பூக்கள் தன் வயிற்றுக்குள் இறக்கை முளைத்துப் பறக்கின்றன என்றும், மிளகுக் கொடிகள் சரிகை உடுப்பணிந்து பாடுவதைத் தன்னால் கேட்க முடிகிறதென்றும், வண்ணத்துப் பூச்சிகள் நீந்தும் பச்சைநிற நீர் நிறைந்த குளக்கரையில் வயிறு மின்னும் தவளைகள் பாதிரி உடுப்பணிந்து ஆடுகின்றனவென்றும் சுபமங்களத்தம்மாள் தெரிவிக்க, விக்ஞான உபாத்தியாயர், அவள் பூசியதும், அவள் வயிற்றில் பிரபு வழித்துப் பூசியதும், அபின் கலந்த களிம்பு என்று உறுதியாகத் தெரிவித்தார்.
இன்னொரு முறை வாசலுக்கு நடந்தார். அந்தப் பேய் மிளகு தன் உக்கிரம் எல்லாம் தீர்ந்தோ என்னமோ சும்மா கிடக்க, அவர் வாசலுக்கு செருப்பைக் கையில் எடுத்துப் போய், அங்கிருந்து ஓடி ரட்சைப்பட்டார்.
தோட்டக்காரன் சுவாதீனமாக உள்ளே வந்து சுபமங்களத்தம்மாளிடம் சொன்னது இது – ’மூப்பரை அரண்மனை வைத்தியர் பைத்யநாத்திடம் காட்டினால் உடனே சுவஸ்தமாகும். அதற்கான பணம் கொஞ்சம் கூடுதலாகுமே”. அவனே வைத்தியன் மாதிரி கூட்டிச் சேர்த்தான்.
“மருத்துவக் கூலி பற்றி எல்லாம் நீ ஒன்றும் கவலைப்பட வேணாம். நீயும் குசினிக்காரனும் போய் பைத்யநாத் வைத்தியரை விவரம் எல்லாம் சொல்லி, ஸ்திதி ரொம்ப மோசம் என்று அறிய வைத்து, அவரோடு உடனே வந்து சேருங்கள். கவுட்டின்ஹோ பிரபு என்றால் அவரும் வந்து விடுவார்”.
என்றெல்லாம் பலதும் சொல்லி சுபமங்களத்தம்மாள் அனுப்பி வைத்தாள். கவுட்டின்ஹோ பிரபு அதற்குள் ஆழ்ந்து உறங்கிப் போயிருந்தார். அவர் சுபமங்களாவைப் பற்றிப் பிடித்திருந்த தலம் சொல்லக் கூடாதது என்பதால் அவள் நீளம் அகலம் மிகுந்த போர்வையைப் போர்த்தி, இரண்டு பேரையும் தேவையான அளவு மறைத்து இருக்கும்படி செய்திருந்தாள்.
போர்வை விலகினால் பார்த்துப் போக உத்தேசத்தோடு, கடை எடுத்து வைத்துவிட்டு வீடேகும் சிறுகடை உடமையாளர்களும், அடுத்த, எதிர் மாளிகை நவரத்ன வியாபாரிகள் வீட்டு நவுகர்கள், என்றால் வேலைக்காரர்களும், தெருவில் திரியும் வெறுந்தடியர்களும் உள்ளே வந்து கையைக் கட்டிக்கொண்டு, சட்டமாக நின்று கொண்டிருக்க, உட்கார்ந்தபடிக்கே சுபமங்களத்தம்மாள் பலமாகக் குரல் விட்டு விரட்டினாள்.
அரை மணி நேரத்தில் அம்மாள் தலையணைகளைப் பின்னால் அண்டக்கொடுத்து வைத்தபடி, சாய்ந்து கட்டிலில் உறங்கியிருந்தாள். கவுட்டன்ஹோ பிரபு அவளோடு ஈஷிக் கொண்டு உறக்கமா பிரக்ஞை தவறியதா என்று சொல்ல முடியாத நிலையில் கிடந்தார். கூத்து பார்க்கப் புறப்பட்ட சிப்பந்திகள் கதவை மட்ட மல்லாக்கத் திறந்து வைத்துவிட்டுப் போய்விட்டிருந்தார்கள்.
சாரட் ஒன்று சத்தமில்லாமல் வந்து நின்றது. குதிரைகள் நாள் முழுதும் ஓடி ஓய்ந்து, இப்படி ராத்திரியிலும் ஓடச் செய்யும் கொடுமையை ஆட்சேபிப்பதுபோல் ஓங்கிக் கனைத்த சத்தம் வெளியில் நிறைந்தது.
சாரட் சாரதி உடனே வண்டிக்குள் ஓரமாக வைத்திருந்த பிரப்பங்கூடைக்குள் இருந்து பசும்புல்லும் கொள்ளும் கொடுக்க, போடா மயிரு என்று அந்தக் குதிரைகள் அதைப் புறக்கணித்து இன்னொரு முறை கனைத்துவிட்டு, வாடை எழக் கழிந்து, நின்றபடியே உறங்க ஆரம்பித்தன.
குதிரைகள் என்று சொல்லி சிரித்தபடி, குதிரை லத்தியை மிதிக்காமல் தாண்டிக் குதித்து, பைத்யநாத் வைத்தியர் மருந்துப் பெட்டியோடு கவுட்டின்ஹோ மாளிகைக்குள் நுழைந்தபோது, ஓரமாக வைத்திருந்த பெரிய கடியாரம் டண்டண்டண என்று நிறுத்தாமல் அடிக்க, நெட்டுயிர்த்தபடி நடுராத்திரி என்றாள் சுபமங்களத்தம்மாள்.
வைத்தியர் முன் பிரபுவிடமிருந்து விலகி இருக்க அவள் முயன்றாள். பிரபு நீங்குகிற வழியாக இல்லை. போர்த்திய துணியை வைத்தியர் எடுக்க, கவ்டின்ஹோவின் விரல்கள் உடுப்போடு சேர்த்து சுபமங்களத்தமாளின் அந்தரங்க பாகத்தை கெல்லி எடுப்பதுபோல் பிடித்திருந்தன.
படுக்கை அறைக்கு ஓரமாக ஜன்னல் வழியே பேய் மிளகுக்கொடி திரும்பவும் உள்ளே நுழைந்து படர ஆரம்பித்திருந்ததை சுபமங்களத்தம்மாள் திகிலோடு பார்த்து, குசினிக்காரனை விளித்து அதை வெட்டியெறியச் சொன்னாள்.
அவனும் பயப்பட, பைத்யநாத் வைத்தியர் மருந்துப் பெட்டிக்குள் இருந்து பெரிய கத்தரிக்கோலை எடுத்து கொடியை சுபாவமாக நறுக்கித் தள்ளினார்.
என்ன செய்கிறது இவருக்கு என்று கட்டிலில் சுபமங்களா மேல் முகம் சாய்த்து சயனம் செய்திருந்த பிரபுவுக்கு தன் பிருஷ்டம் இடிபடும் தூரத்தில் நின்று விசாரித்தார் பைத்யநாத்.
பிரபு நல்ல நினைவோடு இருந்தால் இப்படி அவர் முகத்தில் பிருஷ்டம் உரச நிற்பாரா வைத்தியர்? எல்லாம் செயலாக இருந்தால் ஒரு மரியாதை இல்லையென்றால் இன்னொரு வகை மரியாதை, இப்படித்தான் உலகம் போய்க் கொண்டிருக்கிறது என்று தத்துவார்த்தமாக நினைத்தபடி சுபமங்களத்தம்மாள் நடந்ததாக அவள் கருதியதை எல்லாம் வரிசை தப்பியும் முன்பின் யார் என்ன சொன்னது செய்தது குழம்பியும் சொல்லி முடித்தபோது மருத்துவர் பைத்யநாத்துக்குக் கிட்டிய மனக்காட்சியானது, விக்ஞான உபாத்தியாயர் செருப்பை வாயில் கவ்விக்கொண்டு கவுட்டின்ஹோ மாளிகைக்குள் இருந்து துள்ளிக் குதித்து வெளியே ஓடியது.
உபாத்தியாயரும், பிரபுவும் ஏதோ மிளகுப் பதார்த்தத்தை காய்ச்சிக் குடித்து போதம் கெட்டுப் போனதாகவும் தெரிந்து கொண்டார் வைத்தியர். கவுட்டின்ஹோவுக்கு நாடி பிடித்துப் பார்த்தார் அவர். சீராக இருந்தது அது. சுவாசத்தை நாசிக்கு எதிரே உள்ளங்கை வைத்துச் சோதிக்க, அபின் வாடை தூக்கலாக இருந்தததாகப் பட்டது அவருக்கு. அந்த வாடையில் வைத்தியர் தலையே சுற்றத் தொடங்க, பிரபுவுக்கு எவ்வளவு லகரி ஏற்றுவதாக இருக்கும் அது.
என்ன மருந்து பெட்ரோ துரையின் மருத்துவப் பெட்டியில் இருந்து கஸாண்ட்ரா கொடுத்தாள் என்று சொல்லத் தெரியவில்லை சுபமங்களத்துக்கு. அதை விழுங்கியதும் கண் திறக்காமலேயே தன்னோடு சிருங்கார சேஷ்டைகளைத் தொடங்கினார் அவர் என்பதை மட்டும் சொன்னாள் அவள். அதில் ஒரு மறைமுகப் பெருமை தட்டுப்பட்டதை கவனிக்க வைத்தியர் தவறவில்லை.
அந்தக்கொடி காலில் சுற்றி தரையில் விழுத்தாட்டும்படி மூப்பர் என்ன செய்து கொண்டிருந்தாராம்? பதில் தெரிந்தே கேட்கிற கேள்வி அது என்பது போல் சிரிப்போடு வந்த வினா அது.
”வைத்தியர் ஐயா, என்ன ஆச்சு என்று தெரியவில்லை”.
’வேறென்ன ஆகியிருக்கப் போறது? எவளாவது முலைகள் கனத்த தட்டுவாணியை உள்ளே தூக்கிக்கொண்டு வந்து போட்டு ஓடிப் பிடித்து விளையாட உத்தேசித்திருப்பான் கிழவன். இங்கே இப்படி பிரக்ஞை இல்லாமல் இருக்கும்போதே பேய்ப் பிடியாக என்னைப் பிடித்திருக்கிறானே, எழுந்தால் வேறென்ன எல்லாம் பண்ணுவானோ’.
மனதில் பதில் சொல்லி புன்சிரித்தாள் அவள். ரொம்ப நாளுக்கு அப்புறம் தன்னை புஞ்சிரி பொழியும் சுந்தரிப் பெண்குட்டியாக அவள் உணர்ந்தாள்.
இந்த அதிரூப சொரூபத்தோடு காதல், காமாந்தகமான உறவு எல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று தனக்குள் ஆச்சரியப்பட்டார் வைத்தியர். காம அந்தகம் தானே? கண்தெரியா காமத்தோடு முதுமை, சாக்கடையில் மிட்டாய் கிடைத்தாலும் பாய்ந்து எடுத்து, மேலே ஒட்டிய நரகலைத் துடைத்து, தின்னத் தயாராக்குமே, எதுதான் சாத்தியமில்லை? வியந்தார் அவர்.
கொஞ்சம் கஷாயம் காய்ச்ச வேண்டும், குசினிக்கு போக முடியுமா என்று சுபமங்களத்திடம் கேட்க, அவள் பிரபுவின் பிடியிலிருந்து விடுபட செய்ததைப் பார்க்க வைத்தியருக்கே மனம் ஒருநிலைப்படாமல் அலைபாய்ந்தது.
கவுட்டின்ஹோ இன்னும் அதிகமாக பிரக்ஞை தவறி, கஸாண்ட்ரா வந்து படு என்று சொல்லிவிட்டு உறக்கத்திலும் ஆழ்ந்தார்.
”உன் பிரபுவுக்கு இன்னொரு பிரபுவின் மாளிகை நிர்வாகி மேல் அசுரத்தனமான வெறி போலிருக்கு. அதற்கும் பேய் போல அப்பும் மிளகுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”
விசாரித்தபடி குசினிக்குத் தானே போய் கனன்று கொண்டிருந்த கரி அடுப்பை உயிர்ப்பித்து கஷாயம் காய்ச்சிக் கொண்டிருந்தபோது தான் அசம்பாவிதம் ஏற்பட்டது.
அது யாதெனில், பைத்யநாத் பின்னால் இருந்து பேய் மிளகு நேரே நிமிர்ந்து உயர்ந்து இரு பக்கமும் இலைக் கரங்களை பிரம்மாண்டமாக நீட்டி அலாதியான மனுஷப் பிறவியோ, பனிமனிதனோ நடக்கிறது போல் முன்னால் நகர்ந்து பைத்யநாத் வைத்தியர் பின்னால் நெருங்கி நின்று அவர் தோளைத் தீண்டியது.
”சுபமங்களா, நீ போய்ப் படு, இதெல்லாம் ஒண்ணும் நீ நடப்பிக்கிற காரியமில்லை”
பொத்தாம் பொதுவாகச் சொல்லி அடுப்பில் பொங்கி வழியத் தயாராக இருக்கும் கஷாயத்தை இடுக்கி தேடிப் பிடித்து இறக்குவதற்கு முன் பின்னால் திரும்பிப் பார்த்து அவர் அலறியது – ”ஐயோ மிங்கு”.
இடர் வந்தபோது பெண்டாட்டியைக் கூப்பிடும் முதல் மனுஷன் தானாகத்தான் இருக்கும் என்று தோன்ற இடுக்கி போட்டுப் பிடித்த கஷாயப் பாத்திரத்தை சற்றே பின்னால் நின்று அணைக்க முற்பட்ட அசுரத் தாவரத்தின்மேல் வடிக்க, ஒரே வினாடியில் அது இருந்த இடம் தெரியாமல் போனது. அது கிளப்பிய வாடை வீடு முழுக்கச் சூழ்ந்து அங்கங்கே தலை காட்ட ஆரம்பித்த பேய் மிளகை கருவறுத்துப் போட்டது.
அந்த கஷாயத்தை புகட்டியதும் ஒரே நிமிடத்தில் விழித்தெழுந்த கவுட்டின்ஹோ, ”எங்கே அந்த தேவதை கஸாண்ட்ரா?” என்று பைத்யா வைத்தியரின் தாடையைப் பிடித்து அசைத்துக் கேட்டார், ஏதோ, வைத்தியர் அவளைக் கடித்து முழுங்கின மாதிரி.
“அந்தப் பெண்பிள்ளை நினைவை ஒழியும் இந்தக் கிழ வயதில். இறைநம்பிக்கையில் சிறந்து, போகும் காலம் புண்ணியம் தேடும்” என்றாள் சுபமங்களா அவர் விரல்களை நெட்டிமுறித்தபடி.
கவுட்டின்ஹோ அவளை குக்கலின் நரகல் போல் அருவருத்துப் பார்த்து, நீ உன் வீட்டுக்கு போகலாம் என்று துரத்தினார். பைத்யா வைத்தியரிடம் அவர் அடுத்துச் சொன்னது – ”வைத்தியரே, பேய் மிளகுக்கு எதிர்மருந்து நீர் உண்டாக்கிய கஷாயம் தான். செய்முறை சொல்லும். கணிசமாக வராகன் தரேன்”.
சொல்லியபடி மருந்து சீசாவைக் குலுக்குவது போல் குலுங்கிக்கொண்டு அவர் மறுபடி உறங்க ஆரம்பித்தார். அது பிரக்ஞை தவறுவதில்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்ட பைத்யா வைத்தியர் அவரை கட்டிலில் படுக்க வைத்து விட்டுத் திரும்ப, பிரபுவுக்கு நெருக்கமாக சுபமங்களத்தம்மாள்.
”அவருக்கு ஒண்ணுமில்லே. காலையிலே கலகலன்னு எழுந்திடுவார்” என்றபடி நடந்தபோது கவுடின்ஹோவுக்கு நெல்பரலி லேகியம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது வைத்தியருக்கு. போகட்டும் அதை விழுங்கினால், இணைவிழைச்சு சிலருக்கு அதிகமாகிறதாகக் கேட்டறிந்திருந்தார் அவர். கவுட்டின்ஹோ ஏற்கனவே ஸ்திரி நவத்வார வாடை பிடித்து அலைகிறவர். நெல்பரலி வேறே எதுக்கு அவருக்கு?
அவர் வாசல் பக்கம் நகர்ந்தபோது, ”கதவைச் சாத்திட்டு போங்க வைத்தியரே” என்றாள் கண்கள் தரைநோக்கிக் குனிந்து அலைபாய, சுபமங்களம். கதவைச் சார்த்தும் போது வைத்தியர் சுபாவமாக உள்ளே ஒரு நொடி பார்க்க, கட்டிலில் சுபமங்களமும் அவசரமாகப் படுத்துக் கொள்வது கண்ணில் பட்டது. பேய் மிளகு. அவர் தன்னையறியாமல் சொன்னபடி சாரட் ஏறினார் அவர். குதிரைகள் கனைத்து ஆமோதித்து ரதம் உருள ஆரம்பித்தது.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
