குவெம்புவின் படைப்புலகம்

This entry is part 18 of 72 in the series நூறு நூல்கள்

”பிறைச்சந்திரன்” என்றொரு கவிதை. அதில் ஒரு சிறுவன் தன் தாயைப் பார்த்துத் தனக்குத் தெரிந்த உவமையைக் கொண்டு,

”கடவுளின் பெப்பர்மெண்டா அம்மா
வானில் சுழலும் சந்திரன்”

என்று எளிமையாகக் கேட்கிறான். அம்மா பதில் சொல்கிறாள்.

”நீயும் கடவுளின் குழந்தையானால்
உனக்கும் தருவான் கண்ணே”

இளமூதாக்களும் கழிவுநீரும்: சால் பெல்லோவின் கலை

அன்புள்ள திரு பெல்லோ அவர்களுக்கு,

நீங்கள் நேசிக்கும் நியூ இங்கிலாந்தை இப்போது குளிர்காலம் நெருங்கி விட்டது. “சென்ற வேனிலின் இலைகள்” அளிக்கும் கசப்பும் இனிப்பும் கூடிய அழகு ஒரு புறம் இருந்தாலும், இந்தக் குளிர்காலம் ஒளியற்றதாக இருக்கும் போலிருக்கிறது. இவ்வாண்டின் கோடையில் நான் ஒரு பெருந்தீனிக்காரி போல், நீங்கள் எழுதிய ஏறத்தாழ எல்லாவற்றையும் வாசித்தேன் (மீண்டும் மீண்டும் வாசித்தேன்). ராவல்ஸ்டீன் போலவே நானும் அவற்றின் நுண்மையான இசையில் “எண்ணங்கள் கரைந்து போக” என்னை இழந்தேன். சிந்தனைகள் சுள்ளிகளாய் முறித்துத் தெறித்துச் சுடர் விட்டுக் கனலாய்த் தகிக்கும் ஓர் உள்ளத்தின் வெம்மையில் குளிர் காய்வது போன்ற அனுபவமாய் என் வாசிப்பு இருந்தது. நான் உங்கள் தீவிர வாசகி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா!

நகர்ப்புற அமெரிக்கா குறித்த உங்கள் வர்ணனைகள் அற்புதம், ஒரு லேசர் போல் குவியும் உங்கள் பார்வையில் புலப்படும் புற விவரணைகள் அத்தனையும் (நவீன இலக்கியத்தில் இவற்றுக்கு இணையான வேறொன்று இல்லை) அந்த மடிசஞ்சி நபகோவ், டிக்கன்ஸ் போன்றவர்களுக்கு மட்டுமே உரித்தென்று வைத்திருந்த தண்டுவடச் சிலிர்ப்புக்குத் தக்கவை (மரக்கால் கெர்ஸ்பாக், “ஒரு பரிசல்காரன் போல் நளினமாய் வளைந்து நிமிர்கிறான்” என்பது நினைவுக்கு வருகிறது, ஆனால் அண்மையில் எனக்கு மூர்க்கம் மிகுந்த ஒரு “நிதர்சன-படிப்பினை” அனுபவம் ஏற்பட்டது.

தமிழர் முகங்கள் : எனக்கோர் அறிமுகம்

“சீக்கிய வீரனைப் போல் முண்டாசு கட்டியிருந்தார்;வற்றி உலர்ந்த உடம்புதான்;வாடிப் போன கன்னங்கள்தான்; எனினும் மார்பை முன்னே தள்ளித் தலை நிமிர்த்தி ஒரு வெற்றி வீரனைப் போல் உள்ளே நடந்து வந்தார். எந்த போர் வீரனுக்குத்தான் அவ்வளவு காம்பீர்யம் இருக்கமுடியும்? நீண்டு நிமிர்ந்த மூக்கும், அடர்ந்த புருவங்களும், உருண்ட கண்களும் அவற்றின் கூர்மையான வீரப்பார்வையும், பரந்த நெற்றியும், அதன் நடுவிலே குங்குமப் பொட்டும் அந்த வீரம் செறிந்த முகத்தை வசீகரமாக்கிவிட்டன. பித்தான் இல்லாத கிழிந்த ஷர்ட்டு மேலே அல்பாகா கோட்டு ;அதற்கு ஒரே பித்தான்; கோட்டும் காலம் கண்டதுதான். ஆனால் அவ்வளவு வறுமையாலும் அவிக்க முடியாத ஒரு பெருமை-ஒரு பெருமிதம்-ஒரு மாட்சி ஒளி வீசியது அந்த முகத்திலும்,கண்களிலும்-மெல்லிய மேகத்திரைக்குள்ளே ஒளிந்து கொண்ட சந்திர பிம்பம் போலே .

அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

தன் உயிருக்கு உயிரான பஞ்சாப் பிரதேசம், தன் கண்முன்னாலேயே பிளக்கப்பட்டு சிதைவதைக் கண்டு துடித்தார் அம்ரிதா. லாகூரிலிருந்து இந்திய பஞ்சாபிற்கு விரட்டப்பட்ட அம்ரிதா நல்லவேளை, தாக்கப்படாமல் தந்தையுடன் பாதுகாப்பாக இந்தியா வந்துசேர்ந்துவிட்டார். கொடூரக் கதையாகிவிட்ட பஞ்சாப் பிரிவினையின் தாங்கவொண்ணா அவலத்தைக் குறிப்பிடுகிறது ‘ வாரிஸ் ஷா! நான் உனை அழைக்கிறேன் !’ எனும் அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. அம்ரிதாவின் இலக்கிய வருகைக்கு முன்பே, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபின் சிறந்த கவியாகப் புகழ்பெற்றிருந்தவர் வாரிஸ் ஷா. ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தை பஞ்சாபி இலக்கியத்துக்கு வழங்கிய மகாகவி. அம்ரிதா அவரை தன் ஆதர்ஷ கவியாக மனதில் கொண்டிருந்தார். இளம் வயதில் விதவையாகிப்போன, சிதைக்கப்பட்ட பஞ்சாபிப்பெண்களின் துக்கத்தைத் தாளமாட்டாது வாரிஸ் ஷாவை அழைத்து முறையிடுவதாக அமைந்திருக்கிறது அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற அந்தக் கவிதை. மொழியாக்கம்…

முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

தமிழில் இருக்கிற மிக முக்கியமான படைப்பாளியாக அவரைக் கருதுவதற்கு என்ன காரணம் என்றால், பாரதி சொன்ன மாதிரி எட்டுத்திக்குகளில் இருக்கும் கலைச் செல்வங்களை அவர் தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார். இந்த இரண்டாவது வகைக் கதைகள் பல்வேறு வெளிநாடுகளில் நடக்கிற கதைகள். அது காபூலாக இருக்கலாம். இஸ்லாமாபாத்தாக இருக்கலாம். டொராண்டோவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதைகளிலெல்லாம் தமிழ்ப்பாத்திரங்கள் இடம் பெறுவார்கள். கதைசொல்லியோ, கதையிலுள்ள பிரதானப் பாத்திரங்களோ தமிழராக இருப்பார்கள். இது அவரது இரண்டாவது உலகம். அவரது பெரும்பாலான படைப்புக்களை இரண்டாவது வகைக்குள்ளே கொண்டு வந்துவிடலாம்.

மூன்றாவது வகைக் கதைகளும் வெளிநாடுகளில் நடக்கிற கதைகள்தாம். வெளிநாட்டு மண்ணில் வெளிநாட்டு கலாசாரப் பின்புலத்தில் நடைபெறும் கதைகள். ஆனால் இந்தக் கதைகளிலே ஒரு தமிழ் கதாபாத்திரமும் இராது. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்கள் இடம் பெறும் தமிழ்க் கதைகளாக அவை இருக்கும். இரண்டாவது வகைக் கதைகளில் தமிழ்ப் பாத்திரங்கள் எனும் ஒரு சின்னப் பாலம் இருக்கிறது. இதில் அதுவும் இல்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்களை வைத்து நமக்கு முற்றிலும் அந்நியமான சூழலில் நிகழும் கதைகளை தமிழ் வாசகனுக்கு நெருக்கமான குரலில் அவரால் சிறப்பாகச் சொல்ல முடிகிறது. இந்தக் கதைகளின் வழி மனித மனத்தினுடைய ஆசாபாசங்கள் அடிப்படையிலே ஒன்று என்பதாக எடுத்துக் கொள்ளலாம். கலாசார வேறுபாடுகளை அவர் கொண்டு வந்து சேர்க்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சிரமமான வேலையை அவர் லாவகமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

களம் புதிது, கதை புதிது, கதையாடலும் புதிது

பணியின் நிமித்தம் உலகம் முழுதும் சுற்றும் வாய்ப்பு பெற்றவர்கள் எழுதும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். அதே போல், எழுதும் திறமை பெற்றவர்கள் இது போல் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் சென்று வாழும் வாய்ப்பு கிடைக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால்,முத்துலிங்கத்துக்கு இந்த இரண்டுமே வாய்த்திருக்கிறது. அது அவருக்குக் கிடைத்த வரம் என்று தோன்றுகிறது.

அ .முத்துலிங்கம் படைப்புகள்

நான் பல்வேறு கால கட்டங்களில் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்று படிக்கும் ஒரு கதை ‘பூமாதேவி’. தனது ஒவ்வொரு பருவத்திலும், அமெரிக்க பண்பாட்டு சூழலில் தனக்கான உலகை மகள் கட்டமைத்துக்கொண்டிருக்கும் காலத்திலெல்லாம் அதனை விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்க்கமுடிந்த தந்தையால், புராணங்களை அமெரிக்க நடைமுறை வாழ்க்கையின் உதாரணத்திலிருந்து தன்னால் இனிமேல் தன மகளுக்கு புரியவைக்க முடியாது என்று உணரும் நொடியில் அவளை இழந்துவிட்டதாக நினைக்கிறார். தனது மண் சார்ந்த, பண்பாடு சார்ந்த புராணம் அடுத்ததலைமுறைக்கு தொடர்பில்லாமல் போவது ஒரு நீண்ட நெடிய பண்பாட்டு சங்கிலியில் ஒரு தொடர்ச்சியை தன்னால் ஏற்படுத்தமுடியாமல் போனதால் ஏற்பட்ட இயலாமையின் வலியல்லவா அது?

அ.முத்துலிங்கம்: காலம் வழங்கிய கொடை

அ.முத்துலிங்கம் கதைகள் படிப்பதற்கு அலாதியானவை. அவர் கதைகளின் மிகப்பெரிய சிறப்பம்சம் அயர்ச்சியோ சலிப்போ ஏற்படாத வகையில் நாம் அவற்றைப் படிக்க முடியும் என்பதுதான். அவரது சரளமான நடையில் நாம் தங்குதடையின்றி சறுக்கி விளையாடலாம். நகைச்சுவை அவரது பலம். அவரது எந்தக் கதையையும் சிறு புன்னகை கூட வராமல் நாம் படிக்கவே முடியாது. அதனால்தான் ஜெயமோகன், “அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. ‘இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்கிறார்.

ஆறாம் நிலத்தின் அடையாளம்

அவரது சிறுகதைகளை வாசித்தபிறகு ஏற்படும் உணர்வுக் கொப்பளிப்பில் பலமுறை அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.சிலமுறை லேசாக பகடி செய்ததுமுண்டு.ஒரு மூத்த எழுத்தாளரை பகடி செய்யும் துணிவையும் சுதந்திரத்தையும் தந்தது எது? என பலமுறை ஆச்சர்யமடைந்திருக்கிறேன். அது அவரது படைப்பு மொழியும் அது தந்த நெருக்கமும் என பின்னாளில் உணர்ந்துகொண்டேன்.ஒரு வாசகனாக அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது வாசகர்களின் கடிதங்களுக்கும் தாமதமின்றி உடனுக்குடன் பதில் எழுத்துவதைக் கூறுவேன். உண்மையில் வேறு எந்த மூத்த எழுத்தாளர்களும் அவர் அளவிற்கு வாசகர்களுடன் இணங்கி உரையாடுவார்களா என்பது சந்தேகமே.

அ முத்துலிங்கம்: நேர்காணல்

எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் முந்தைய பதிவுகள்: அ. முத்துலிங்கம் நேர்காணல் வாசகர் தேவை : அறிவியல் மறந்துவிட்டீர்களா? : வெ.சா. அஞ்சலி கடவுளை ஆச்சரியப்படுத்து : சிறுகதை வெளிச்சம்: சிறுகதை ஆச்சரியம்: சிறுகதை ஆற்றேன் அடியேன் : இலக்கியம் பற்கள் சாபம்: அனுபவம் கடவுளின் காதுகளுக்கு பாகிஸ்தானில் பறந்த “அ முத்துலிங்கம்: நேர்காணல்”

குமாஸ்தா எழுத்தாளர்களுக்கான இலக்கியம்

2016ஆம் ஆண்டு அரபு இலக்கியத்துக்கான நக்விப் மஹ்ஃபூஸ் பதக்கம் எகிப்திய எழுத்தாளர் ஏடல் இஸ்மாட் (Adel Esmat) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தினரால் வழங்கப்படுவது. ஆங்கில மொழியாக்கம் செய்யப்படாத சமகால அரபு மொழி நாவல்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. ‘யூசுஃப் டாட்ரஸின் கதைகள்’ (Hikayât Yûsuf Tadrus- The Tales of Yusuf Tadrus) என்ற நாவலுக்காக விருது பெற்ற இஸ்மாட்டின் ஏற்புரை

தோல்விக்கு மருந்து: எண் 76

அன்பார்ந்த எழுத்தாளர்களே.
உங்களுக்கு நான் எண் 76 ஐக் கொடுக்கிறேன். எதையும் 76 தடவைகளாவது முயன்று பார்க்காதவரை கைவிடாமல் இருக்க உங்களை ஊக்குவிக்கிறேன், அது வேலைக்கு விண்ணப்பிப்பதானாலும் சரி, ஒரு படைப்பைத் திருத்தி எழுதுவதானாலும் சரி அல்லது வெளியே அனுப்பி வைப்பதானாலும் சரி. தன்னை இழந்தும், சலியாத உறுதியோடும் எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுக்கிறேன்.

ஒரு பணிவான அப்பா

எழுத்தாளர்கள் எப்படி எழுதத் துவங்குகிறார்கள்? அவர்களின் முதல் நாவல் எவ்வாறு உருவானது? பாரிஸ் ரிவ்யூ பல நாவலாசிரியர்களை பேட்டி கண்டிருக்கிறது. அகில் ஷர்மாவின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்:

பூதாகாரப் பின்ச்சன் – க்ரையிங் ஆஃப் லாட் 49- புத்தக அறிமுகம்

மிக எளிமைப்படுத்தப்பட்ட வடிவில், பின்ச்சனிய உலகு முழுமையும் ஒற்றை மையம் கொண்ட வட்டங்களின் தொகை என்று நாம் புரிந்து கொள்ளலாம்:
….. கிராவிட்டி’ஸ் ரெயின்போ பற்றி இவ்வளவு போதுமென்று நினைக்கிறேன், அது நீண்ட ஒரு நூல் (பெங்குவின் பதிப்பில் 776 பக்கங்கள்)- வரலாற்று, கலாசார எச்சங்களையும் மேற்கத்தியராய் அல்லாத வாசகருக்கு மர்மமாய் ஒலிக்ககூடிய வேறொரு யுகத்துக்குரிய உதிரித்தகவல்களையும் சுட்டும் அதன் பல்பொருள் தொகுதித்தன்மை சில சமயம் சலிப்பூட்டக்கூடியது. ஆனால் உங்களில் துணிச்சல்காரர்களுக்கு இது ஒரு தடையாய் இருக்க வாய்ப்பில்லை.

பதாகை சிறப்பிதழ்

ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.

பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி

இந்திய தத்துவம், பண்பாட்டு வரலாறு ஆகியவை குறித்த அவரது ஆழ்ந்த அறிவு இந்திய எதார்த்தத்தின் பல தள இயக்கத்தை எளிதாகக் கைப்பற்றி படைப்புலகக் கருப்பொருளாக அமைக்க உதவியிருந்தது. இதனால் அவரது புனைவுகளில் அவை புராணத் தன்மை கொண்டதாக அமைந்தன, ஆனால் தொன்ம குணம் கொண்டு அமையவில்லை. அவருடைய வாழ்வு நெடுக இருந்த பரிணாமத் தன்மை கொண்ட தேடலை எந்த சக்தி உந்தியது என்று பார்க்க முயன்றோமானால், அது அவருடைய விசாலமான பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வரும்.

சுயதிருப்தியில் சிக்காமல் விலகி எழுதுதல்

இந்தப் புத்தகத்தில் தவிர்க்கமுடியாதபடி ஒரு கருவாக இருப்பது பெண்கள் மீது வெறுப்பு. இது ஆண் எழுத்தாளர்களிடம் உள்ளதும், பெண்களை கற்பனையைத் தூண்டும் சக்திகளாகவோ, அல்லது வேசைகளாகவோ, மனைவிகளாகவோ, வேலைக்காரிகளாகவோ வருணித்து அவர்கள் வாழ்வுகளைக் கட்டுப்படுத்தி வைக்கிறதுமான பெண் வெறுப்பு. இந்தப் பெண் வெறுப்பைத் தாமும் உள்வாங்கிக் கொண்டுள்ளதாலேயே தமது காலத்துக்கும் இடத்துக்கும் எதிராக முரண்டிக் கொண்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள் . இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையில் உள்ளே உங்களைப் பொருத்திக் கொள்வதால் நீங்கள் ஏதோ தனிச்சிறப்பான ஒன்றைச் செய்கிறீர்கள்- பெண் வெறுப்பு என்பது இதயத்தை நொறுக்குவது, இல்லையா…

உறுதிப்படுத்தல்: ஐசாயா பெர்லினின் பிற்காலக் கடிதங்கள் -1975-1997

தமிழகத்தில் இன்னமுமே கணிசமான ‘அறிவு ஜீவிகள்’ மார்க்சிய மாயையில் மூழ்கியவர்கள் என்பதால் இந்த எழுத்தாளரின் கருத்துகளைப் பற்றிய ஒரு கட்டுரை ஒரு சிறு அளவு மயக்கத் தெளிவிப்பு முயற்சியாக இருக்கட்டுமே என்றுதான் இதைக் கொணர்கிறேன். மாறாக, மனநல மருத்துவ சிகிச்சையை அளித்தாலாவது ஏதாவது பயன் இருக்கும் என்று சிலர் சொல்லக் கூடும். இப்படி நகைச்சுவையைக் கருதிச் சொன்னாலும், இன்றைய மனநல மருத்துவமுமே அப்படி ஒன்றும் பயனுள்ள சிகிச்சை முறை என்று தோன்றவில்லை என்றும் சுட்டுகிறேன். வேப்பிலை அடித்து மஞ்சள் நீராட்டிப் பேயோட்டியவர்கள் காலம் போய்…

விளக்கு விருது – 2014

தமிழில் கவனிக்கப்படும் விமர்சகரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான சி.மோகன், கடந்த நாற்பது ஆண்டுகளாக இலக்கியம், கலை, சிந்தனை ஆகிய தளங்களில் ஊக்கத்துடன் செயல்படுகிறவர். படைப்பு மையப் பார்வையையும், சிறுபத்திரிகை இயக்கத்தின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தும் இவருடைய செயல்பாடு, சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, உரையாடல், நூல் பதிப்பு எனப் பன்முகத் தன்மை கொண்டது. உலக இலக்கியங்களில் “விளக்கு விருது – 2014”

பாடலை நிறுத்திய பாணன் – எஸ். பொ.

எஸ்.பொ. என்று தமிழிலக்கிய உலகில் அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை அவர்களைப் பற்றி நான் அறிந்தது அதிகமில்லை. நான் மட்டுமன்ன? ஈழத்து எழுத்தாளர்களில் எத்தனை பேர்களை தமிழ்நாட்டு தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்? அல்லது அறிந்திருப்பார்கள்? எஸ். பொ. ஏதாவது தமிழ் சினிமாவில் தலை காட்டியிருந்தால் ஒருவேளை தமிழர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.

அம்ரிதா ப்ரீதம்

அம்ரிதா ப்ரீதமின் பிராபல்யத்துக்கும் புகழுக்கும், அவரது அழகு, இடது சாரி, கவித்வம் எல்லாமே உதவின. அதற்கும் மேல் அவரது சுதந்திர தாகம் கொண்ட வாழ்க்கை. அது தன் முனைப்புக்கொண்ட பெண்யம். தன் ஆளுமையிலிருந்து கிளர்ந்த பெண்­யம். சுதந்திரம். கோட்பாடாகப் பெற்றதல்ல.

பரிச்சயமற்ற மண் – ஜும்பா லஹிரி

ஜும்பாவின் எழுத்துக்கள் பொதுவாக குடியேறிகளின் இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் அவர் இந்த வகைப்படுத்தலை ஏற்றுக்கொள்வதில்லை. “அப்படிப் பார்த்தால் அமெரிக்காவின் ஒவ்வொரு படைப்புமே குடியேறிகளின் இலக்கியம் தான்” என்கிறார். இவரது கதாபாத்திரங்கள் மரணம், உறவுச்சிக்கல்கள் போன்ற மானுடத்திற்கே பொதுவான பிரச்சனைகளைத் தான் எதிர்கொள்கின்றனர் என்றாலும்…

என் மறதிக்கு ஆளானவர்கள்

மறந்து தொலைக்கிறது. என்ன செய்ய?

 

நண்பர் ராம்ஜியாஹூ சில பெயர்கள் விட்டுப் போனது பற்றி எழுதியிருந்தார். எனக்கு இப்பெயர்கள் புதியன. எல்லா எழுத்துக்களையும் ஒருவர் தெரிந்திருப்பது துர்லபம். எல்லாவற்றிற்கும் ஒரு சாத்திய எல்லை உண்டு தானே. தெரிந்திராதது ஒரு புறம் இருக்க, தெரிந்தவர்களே, படித்த எழுத்துக்கள் கூட ஒரு சமயம் மறந்துவிட்டால் என்ன செய்ய?

அர்சுலா லெ குவின்: புனைவின் கலை (2)

அது அனேகமாக த டிஸ்பொஸஸ்டு புத்தகத்தைப் பொறுத்து உண்மையாக இருக்கலாம். அது ஒரு சிறுகதையாகத்தான் துவங்கியது என்றாலும், எனக்கு ஒரு இயற்பியலாளரின் பாத்திரம் மனதிலிருந்தது, அவர் எங்கோ ஒரு சிறைப்பாசறையில் இருப்பதாக என் எண்ணம். அந்தக் கதை எங்கும் போய்ச் சேரவில்லை, ஆனால் எனக்கு அந்தப் பாத்திரத்தை நன்கு தெரிந்திருந்தது. என்னிடம் ஒரு காங்க்ரீட் பாறை இருந்தது, அதனுள் எங்கோ ஒரு வைரம் பொதிந்திருந்தது, ஆனால் இந்த காங்க்ரீட் பாறைக்குள் துளைத்துப் போக- அதற்குப் பல வருடங்கள் ஆயிற்று. என்னவோ காரணங்களால், நான் அமைதி வழி போதிக்கும் பிரசுரங்களைப் படிக்கத் துவங்கினேன், போரை எதிர்க்கும் கிளர்ச்சிகளிலும் பங்கெடுத்தேன். (அணு) குண்டைத் தடை செய் இத்தியாதி. நீண்ட காலமாகவே நான் ஏதோ விதங்களில் அமைதிமார்க்க இயக்கத்தினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு என் தேர்வு மார்க்கம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று உணர்ந்தேன். சொல்லப் போனால், காந்தியைக் கூட நான் படித்திருக்கவில்லை.

அர்சுலா லெ குவின் – புனைவின் கலை

நான் யோசிப்பது என்னவென்றால், அதை ஒரு மத வழிப் பார்வை என்று சொல்ல முடியாது, ஏனெனில் மதம் என்ற சொல்லே பிரச்சினையானது- நான் டாவோயியத்திலும், பௌத்தத்திலும் மிக ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன், அவையும் எனக்கு நிறைய அளித்திருக்கின்றன. இப்போது, டாவோயியம் என்பது என் புத்தியின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது. அப்புறம் பௌத்தம் என்பது குறித்து என் ஈடுபாடு தீவிரமாக உள்ளது. அதை மத வழி புத்தி என்று நாம் அழைக்கவில்லை என்றால், ஆன்மீகம் என்று அழைக்க வேண்டி வரும். அதுவோ மிகவும் இரண்டுங்கெட்டதாக, பட்டும் படாமலும் இருப்பது போலத் தெரியும். மதம் என்பது சில பெரும் பிரச்சினைகளைக் கையாளப் பார்க்கிறது, அதில் எனக்கு மிகவே ஈடுபாடு இருக்கிறது.

தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ

உண்மை எது பொய் எது என்ற தெளிவில்லாத மார்லோவின் உலகில் போலீஸ்காரர்கள் வராமல் இருக்க முடியாது. சான்ட்லரின் போலிஸ்காரர்கள் லட்சியவாதிகள் அல்ல, முழுக்க முழுக்க ஊழலானவர்கள் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட, யதார்த்தத்தை ஒட்டிய பாத்திரங்களைக் கொண்டு சான்ட்லர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையை அடைகிறார். சான்ட்லரின் கதைகளில் மார்லோ அத்தனை வகை போலீஸ்காரர்களையும் சந்திக்கிறான். சிலர் வன்முறையால்தான் குற்றங்களை ஒடுக்க முடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று நினைப்பவர்கள், சிலர் மிகவும் கடுமையான காவல்துறைப் பணியைத் தங்களால் இயன்ற அளவு நன்றாகச் செய்ய முயற்சி செய்பவர்கள்.

'டிசம்பர் பத்து' – ஜ்யார்ஜ் சாண்டர்ஸ்

அவரின் மற்றப் படைப்புக்களை படித்து விட்டு ஸாண்டர்ஸ் பாணி என்று இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று சமகாலத்திய அரசியல்/சமூகப் போக்குக்களைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பற்றிய அவதானிப்புக்களைத் தன் கதைகளின் கருப்பொருட்களாக (themes) பெரும்பாலும் வைத்துள்ளது. இன்னொன்று இந்தக் கருப்பொருட்களை குறியீடுகளாகக் கொண்ட கதைகளாக மாற்றி, ஒரு புதிய உலகை உருவாக்கும் அவருடைய அசாதாரணமான கற்பனைத் திறன்.

விழியனின் சிறுவர் உலகம்

சிறுவர்களைப் பொறுத்தவரை ஒரு புத்தகமானது வெறுமனே நீதி போதனை செய்யும் ஆசானாக மட்டுமில்லாமல், அவர்களின் உலகத்துக்குள் எளிதாகச் சென்று ஒரு தோழனைப் போல் கதை பேசினால் அவர்களும் புத்தகத்துடன் ஒன்றி விடுவர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சானலைப் பார்க்கும் ஒரு சிறுவன், தன்னை “சோட்டா பீமாகவோ”, “லிட்டில் கிருஷ்ணா”வாகவோ சுலபமாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.

கொர்த்தாஸாருடன் பாண்டியாடுதல் – அவரது சிறுகதைகளுக்கு ஒரு சிறு அறிமுகம்

இவ்வளவு எளிமையான, திறந்த அமைப்பு கொண்ட கதையாக இருப்பதால் ‘எடுத்துக் கொள்ளப்பட்ட வீடு’ பல்வேறு வாசிப்புகளுக்கு இடம் தருகிறது. முறையற்ற கலவியைத் தண்டிக்கும் மூதாதையர், பணக்கார வர்க்கத்தை வெளியேற்றும் ஒடுக்கப்பட்ட, கண்ணுக்குத் தெரியாத வர்க்கம், வேற்றுக் கிரகவாசிகளின் படையெடுப்பு என்று இன்னும் பலவற்றைக் அடையாளம் சொல்லப்படாததாகக் கற்பனை செய்து கொள்ளலாம்.

டேவிட் ஃபாஸ்டர் வாலெஸ் (1962-2008) – எழுத்தாளர் அறிமுகம்

இவர் படைப்புக்களின் வடிவம், அதில் உள்ள உத்திகளில் ஜான் பார்த், பிஞ்சன், காடிஸ் போன்றோரை சற்றே நினைவு படுத்துவார். வாசகன் அப்படியே கதைக்குள் மூழ்கி விட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகளுக்கு நேர்மாறாக, ஆசிரியர் இடையிடையே வாசகனுடன் உரையாடி அவன் ஒரு கதையைத் தான் படித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வை ஏற்படுத்துவது, நாவலுக்குள் இன்னொரு நாவலோ அல்லது சிறுகதையோ ஒரு கதாபாத்திரத்தால் எழுதப்படுவது, அடிக்குறிப்புக்கள், அடைப்புக்குறிகள் பயன்படுத்துவது என பல யுத்திகள் இவர் படைப்புக்களில் உண்டு.