மதுரை மாநகரின் மையத்தில், தன்னை நாடி வரும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக, அவர்களின் பிணிகளைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ரட்சகனாக, எண்ணற்ற தனது கருணைக் கரங்கள் மூலமாக நிழல்பரப்பி அரவணைக்கும் ஆல விருட்சமாய் இருப்பது, “கோரிப்பாளையம் தர்ஹா”. தர்ஹாவோடும், தர்ஹாவைச் சுற்றியும் வளரும் நகரத்தின், அதன் மனிதர்களின் கதையைப் பேசுகிறது எஸ்.அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” என்னும் புதினம். சொட்டாங்கல் விளையாட்டில் ஒரு கல்லைத் தவற விட்டாலும் தோற்றதாகத் தான் அர்த்தம். அது போலவே மேலும் கீழுமாய் தூக்கியடிக்கப்படும் வாழ்க்கையில்…
ஆசிரியர்: வி. பாலகுமார்
பந்தயக்குதிரை
கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் நுழையும் போது மணி நான்கு. உடனே பேருந்து கிடைத்தால் எப்படியும் விடிவதற்குள் ஊருக்குப் போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டான். எதிர்பார்த்தது போல, பேருந்து நிலையத்தில் எந்தவித அசம்பாவிதத்திற்கான அறிகுறியும் இல்லை. தொலைக்காட்சி செய்தி சேனல்களின் அசுர வாய்க்கு எப்போதும் பெருந்தீனி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. சிறு சலசலப்பைக் கூட பூதாகரமாக்கி பிரளயம் போல் பிரகடனப்படுத்தி விடுகின்றனர். அதையொட்டிய வதந்திகளுக்கு கைகால் முளைத்து ஊரெங்கும் பரவி விடுகின்றன.
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் – “கெடை காடு”
மேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டையும், அதையொட்டிய சிறுகிராமத்தையும் பற்றிய புதினம் என்ற வகையில் நாவலை வாசிக்கத் துவங்குகையில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. மக்களின் வழக்குமொழி, வாழ்க்கைமுறை, சாதி சங்க அமைப்புகளின் செயல்முறை, வேற்று சாதி மக்களுடனான உறவுமுறை விளிப்புச்சொல் என்று பல இடங்களில் கிராமத்தின் இயல்புத்தன்மை அப்படியே பிரதிபலிக்கப்பட்டிருந்தது.
காற்றில் அலையும் யாரோவொருவனின் பட்டம்
“பறக்கும் பறவை” என்னும் கவிதையிலோ, ஆகாயத்தை அளந்து ஒவ்வொரு முறையும் இலக்கை குறி தப்பாமல் வீழ்த்தும் பறவை, ஒரு துர்கனவைப் போல மீண்டும் மீண்டும் வந்து பயிற்றுநரின் உறை போர்த்திய கையில் அமர்கிறது. பயிற்சிக்கு அடிமைப்பட்டபின் ஆகாயமும் ஒரு கூண்டைப் போலத் தான் காட்சியளிக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்த உள்நோக்குதல் (introvert), வெளி நோக்குதல் (extrovert) ஊசலாட்டம் ஏன் என்ற கேள்விக்கு, ”ஆராய்ச்சி மையம்” கவிதையை கருவாக, மையப்புள்ளியாக வைத்து அடுக்கடுக்கான பொதுமைய வளையங்கள் வரைந்து மற்ற கவிதைகளை ஒவ்வொரு வெளி வட்டத்திலும் பொருத்தினால் கிடைக்கும் சித்திரம், கவிதைகளின் இந்த அலைவு தற்செயலானது அல்ல மாறாக அவை கவிஞரின் மன அலைவையே நுண்ணிப்பாக பிரதிபலிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
நாகதேவதை
ஆறு மாதத்திற்கு முன்பு அவன் இந்த இடத்தை பார்க்க வரும் போது தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. சுற்றியுள்ள மற்ற மனைகளை விட இந்த இடத்திற்கு மட்டும் கணிசமாக விலை குறைத்து சொல்லியிருந்தார்கள். காரணம், இந்த மனையின் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய கரையான் புற்று ஒன்று இருந்தது. கூட வந்த தரகர், “எத்தனை முறை இடிச்சு விட்டாலும், மறுக்கா இங்க புத்து உருவாகிருதுப்பா…
வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை
மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல்.
விழியனின் சிறுவர் உலகம்
சிறுவர்களைப் பொறுத்தவரை ஒரு புத்தகமானது வெறுமனே நீதி போதனை செய்யும் ஆசானாக மட்டுமில்லாமல், அவர்களின் உலகத்துக்குள் எளிதாகச் சென்று ஒரு தோழனைப் போல் கதை பேசினால் அவர்களும் புத்தகத்துடன் ஒன்றி விடுவர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சானலைப் பார்க்கும் ஒரு சிறுவன், தன்னை “சோட்டா பீமாகவோ”, “லிட்டில் கிருஷ்ணா”வாகவோ சுலபமாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.