அதை எழுதியபோது நான் கால்வினோ, போர்ஹெஸ் போன்ற எழுத்தாளர்களை நினைத்துத்தான் அப்படி எழுதி இருப்பேன். ஆனால் வகைமைப் பட்ட இலக்கியம் எழுதியவர்கள், நடை என்று ஏதும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, மிகவுமே தட்டையான, செய்தியாளர்களின் எழுத்தைப் போன்ற உரைநடையைத்தான் வேண்டுமென்றே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அன்று கதை எழுதிய ஆண்களின் குணங்களைப் பொறுத்து அப்படி அமைந்தது என்று நான் ஊகிக்கிறேன். மேலும், ஹெமிங்வேயைப் போன்ற, முழுக்க முழுக்க ஆணடையாளமுள்ள ஒரு எழுத்தாளரின் ஆடம்பரமாகவே மிகத் தெளிவான, தட்டையான நடையை அவர்கள் பெரிதும் விரும்பியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.
ஆசிரியர்: ஜான் வ்ரே
அர்சுலா லெ குவின்: புனைவின் கலை (2)
அது அனேகமாக த டிஸ்பொஸஸ்டு புத்தகத்தைப் பொறுத்து உண்மையாக இருக்கலாம். அது ஒரு சிறுகதையாகத்தான் துவங்கியது என்றாலும், எனக்கு ஒரு இயற்பியலாளரின் பாத்திரம் மனதிலிருந்தது, அவர் எங்கோ ஒரு சிறைப்பாசறையில் இருப்பதாக என் எண்ணம். அந்தக் கதை எங்கும் போய்ச் சேரவில்லை, ஆனால் எனக்கு அந்தப் பாத்திரத்தை நன்கு தெரிந்திருந்தது. என்னிடம் ஒரு காங்க்ரீட் பாறை இருந்தது, அதனுள் எங்கோ ஒரு வைரம் பொதிந்திருந்தது, ஆனால் இந்த காங்க்ரீட் பாறைக்குள் துளைத்துப் போக- அதற்குப் பல வருடங்கள் ஆயிற்று. என்னவோ காரணங்களால், நான் அமைதி வழி போதிக்கும் பிரசுரங்களைப் படிக்கத் துவங்கினேன், போரை எதிர்க்கும் கிளர்ச்சிகளிலும் பங்கெடுத்தேன். (அணு) குண்டைத் தடை செய் இத்தியாதி. நீண்ட காலமாகவே நான் ஏதோ விதங்களில் அமைதிமார்க்க இயக்கத்தினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு என் தேர்வு மார்க்கம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று உணர்ந்தேன். சொல்லப் போனால், காந்தியைக் கூட நான் படித்திருக்கவில்லை.
அர்சுலா லெ குவின் – புனைவின் கலை
நான் யோசிப்பது என்னவென்றால், அதை ஒரு மத வழிப் பார்வை என்று சொல்ல முடியாது, ஏனெனில் மதம் என்ற சொல்லே பிரச்சினையானது- நான் டாவோயியத்திலும், பௌத்தத்திலும் மிக ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன், அவையும் எனக்கு நிறைய அளித்திருக்கின்றன. இப்போது, டாவோயியம் என்பது என் புத்தியின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது. அப்புறம் பௌத்தம் என்பது குறித்து என் ஈடுபாடு தீவிரமாக உள்ளது. அதை மத வழி புத்தி என்று நாம் அழைக்கவில்லை என்றால், ஆன்மீகம் என்று அழைக்க வேண்டி வரும். அதுவோ மிகவும் இரண்டுங்கெட்டதாக, பட்டும் படாமலும் இருப்பது போலத் தெரியும். மதம் என்பது சில பெரும் பிரச்சினைகளைக் கையாளப் பார்க்கிறது, அதில் எனக்கு மிகவே ஈடுபாடு இருக்கிறது.