தத்துவப் படிப்பு நிச்சயமான விடைகளுக்காக மேற்கொள்ளப் படுவதில்லை, மாறாக அது எழுப்பும் கேள்விகளுக்காகவே பயிலப்படுகிறது. இந்த கேள்விகள், சாத்தியமானவற்றைக் குறித்த நம் கருத்தாக்கங்களை விரிவாக்குகிறது. நமது அறிவார்ந்த கற்பனையை வளப்படுத்துகிறது. மனதின் பரீசீலிக்கும் தன்மையை தடுக்கும் மூர்க்கமான தீர்மானங்களை குறைக்கிறது.எல்லாவற்றிற்க்கும் மேலாக பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை சிந்தனை செய்யும் மனதை மேன்மை அடையச் செய்து அது பிரபஞ்சத்தினோடு ஒன்றாகும் தன்மையை நோக்கி நகர்த்துகிறது.
Author: ஆர். பிரபு
ராய் மாக்ஸம் நேர்காணல்
முதல் சிப்பாய் கலகம் வரை கிழக்கிந்திய கம்பனியின் ஆட்கள் தான் கலெக்டர்களாக இருந்தார்கள். அதனால் ஊழல் சாத்தியம். பின் கிழக்கிந்திய கம்பனி நாட்டுடைமையாக்கப்பட்டு அரசாங்கம் அதை எடுத்துக்கொண்டது. அதன் பின் மிக அர்ப்பணிப்புள்ள கலெக்டர்கள் அமைந்தார்கள். ஆனால் காலனி நாட்டை பிடிப்பதன் காரணம் அதன் நலன் கருதியோ அதை முன்னேற்றுவதற்கோ அல்ல. அப்படி நினைப்பது ஒரு வெகுளித்தனம் மட்டுமே. பொதுவாக இந்தியர்களைச் சுரண்டுவதில் சக இந்தியர்களுக்கு நிகர் யாரும் இல்லை. ஜாதியமைப்பு முதலியவற்றைப் பார்த்தாலே அதை தெரிந்து கொள்ளலாம்.
பரிச்சயமற்ற மண் – ஜும்பா லஹிரி
ஜும்பாவின் எழுத்துக்கள் பொதுவாக குடியேறிகளின் இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் அவர் இந்த வகைப்படுத்தலை ஏற்றுக்கொள்வதில்லை. “அப்படிப் பார்த்தால் அமெரிக்காவின் ஒவ்வொரு படைப்புமே குடியேறிகளின் இலக்கியம் தான்” என்கிறார். இவரது கதாபாத்திரங்கள் மரணம், உறவுச்சிக்கல்கள் போன்ற மானுடத்திற்கே பொதுவான பிரச்சனைகளைத் தான் எதிர்கொள்கின்றனர் என்றாலும்…
நம்பிக்கை
உடன் பிறந்தவர்கள் நான்கு பேரிலும் பெண் குழந்தை உள்ள ஒரே குடும்பம் இவருடையது தான். ஒரு கோழி குஞ்சை போல் அத்தனை சிறியதாக, வெதுவெதுப்பாக இருந்த பிறந்த குழந்தையை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பே கண்ணாக இரு கைகளிலும் ஏந்தி மனம் பொங்க நின்றார். இத்தனை சிறிய உயிருக்கு இவ்வளவு கனம் இருக்க முடியுமா? கனம் அதன் உடலில் இல்லை.குவிந்த அவர் கவனத்தில் இருந்திருக்க வேண்டும்.
துயர்களில் இருந்து மீட்பு – மிஹாய் சீக்சென்ட்மிஹாயி
இது ஒரு செயலை முழு கவனத்துடன் வேறு சிந்தனைகளே இல்லாது செய்யும் போது உருவாகக் கூடிய ஒரு ஆனந்த நிலை. ஒவ்வொருவருமே இந்த நிலையை ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். ஒரு வேலையில் மூழ்கி இருக்கும்போது நேரம் போவதே தெரியாமல் இருப்பது, மற்றும் அந்த வேலையை முடிக்கும்போது வரும் உற்சாகம் போன்றவை. கலைஞர்கள், ஓவியர்கள்,அறுவை சிகிச்சை நிபுணர்கள், மலையேறிகள்,விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் இந்த நிலையை அதிகமும் அடைகின்றனர் என்கிறார் மிஹாய்.
அப்பா
ராதிகாவின் பொறுப்பில் இருந்த ப்ரொஜெக்டில் பெரிய குளறுபடி ஒன்று ஏற்பட்டு அதனால் எங்கள் நிறுவனத்திற்கும் அந்த செல் போன் கம்பனிக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டது. ராதிகா முகம் சில நாட்களுக்கு பேய் அறைந்தது போல் இருந்தது. அந்த தவறுக்கு அவள் இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பப்படுவாள் என்று பரவலாக பேசப்பட்டது. ராஜ் எங்களுடன் மதிய உணவிற்கு வருவதை நிறுத்தினார். மிகுந்த சோர்வுடன் சென்று கொண்டிருந்த தினங்கள் அவை. குறிப்பாக ராதிகாவிற்கு.
அம்மா
மறுநாள் சாயங்காலம் வீட்டிற்கு கிளம்ப தயாரானான். துணியுடன் சேர்த்து பாட்டி கொடுத்த மாதுளம்பழமும் எடுத்துக்கொண்டான். பாட்டி ஒரு தடவை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தாள். பாட்டி கிட்ட எப்பவும் இந்த விக்கோ வஜ்ராதந்தி வாசன. அவனுக்கு அப்போ அது புடிச்சு இருந்துது. மாமா அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டுவிட்டுச் சென்றார்.