“குமாரரே! இன்றைக்கு சுமார் நாற்பத்தெட்டு வருடங்களுக்குமுன் உலுக்கான் படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளரையும் உபய நாச்சியார்களைக் காப்பாற்றுவதற்காக அரங்கத்திலிருந்து அவர்களைப் பிள்ளை லோகாச்சாரியர் எனும் ஆன்றோர் தலைமையில் எடுத்துச்சென்றார்கள். பிள்ளை லோகாச்சாரியர் எனும் முதிர்ந்த ஞானி பழம் பழுத்து மரத்திலிருந்து விழுவதுபோல் ஜ்யோதிஷ்குடி எனும் ஊரில் பரம பதம் எய்தினார். அதிலிருந்து பெருமாளும் நாச்சிமாரும் அழகர் கோயில் வழியாக மாவார் சென்றுவிட்டனர். அங்கே திருக்கணாம் என்கிற ஊரில் சேவை சாதித்து வந்தனர்.
Author: அஸ்வத்
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – இறுதி பாகம்
என் தந்தை யானை போன்ற நினைவாற்றல் கொண்ட சான்றோர். என் அன்னை அன்பும் இலக்கிய நுகர்வும் கொண்டவர். இது போன்ற பெற்றோர் சங்கீதத்தில் தோய்ந்த உறவினரும். இவற்றிலிருந்து கிளைத்தெடுத்த நான் இவற்றில் எவைகளை ஸ்வீகரித்தேன் என்பது விளங்காத விஷயம் தான். தவிர என் தந்தையை முந்தைய தலைமுறை எவ்வெவற்றைக் கொண்டிருந்தார்கள் என்று அனுமானிக்கிற நிலையில் நான் (அவர்களையெல்லாம் பிரத்யட்சமாய்ப் பார்க்காததால்) இல்லை. இப்படியிருக்கும் போது ஆதித்யா யாரிடமிருந்து எவ்வெவற்றை ஸ்வீகரித்தான்…
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-12
குருநாதர்கள் எல்லோரும் தியாகராஜ ஸ்வாமிகள் என்று தம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகராஜ ஸ்வாமி லோகாயதமாகப் பணம் சம்பாதிக்காமல் உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்து வந்தவர். சரபோஜி மகாராஜா தனம் சமர்ப்பித்துச் சபையில் வந்து பாட அழைத்த போது ‘நிதி சால சுகமா’ என்று பாடியவர். இவருடைய மேன்மையை இன்றிருக்கும் குருநாதர்களுடன் எந்த வகையில் ஒப்பிட முடியும்? மனமெல்லாம் பணம் புகழ் செல்வாக்கு; வாயில் மட்டும் ஆன்மீகம் தெய்வீகம்! ஜானகி ராமன் எழுதுவாரே ‘நடன் விடன் காயகன்’ என்று அது போல் தான் பெரும்பாலானவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் தானோ என்னவோ காந்தர்வ வேதம் என்று புகழப் பட்டாலும் சங்கீதத்தை வேத அத்யயனத்துக்கு ஒரு படி தாழ்த்தித் தான் வைத்திருக்கிறார்கள்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-11
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக முகநூல் வாட்ஸப்பும் பெரிய தொல்லையாகத் தொடர்ந்தன. என் மனைவி போடுகிற படங்களை சூசகமாக எடுத்துக் கொண்டு ஏதாவது செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். திருவள்ளுவர் படம் போட்டால் திருக்குறளைப் பாடுவது, தஞ்சாவூர்க் கோயில் படம் போட்டால் தஞ்சாவூரில் போய்க் கச்சேரி செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். ஒரு முறை என் மனைவி மண்டை ஓட்டு மாலையுடன் கையில் அசுரனின் கொய்த தலையைப் பிடித்தவாறு நிற்கும் பத்ர காளியின் படத்தைப் போட்டிருந்தாள். உடனே அங்கிருந்து ‘தாயே! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று பொருள் படும் படியாக பதில்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 10
என் மனைவி அத்துடன் இதை விடுவதாக இல்லை. அவளுக்கு பொங்கிப் பொங்கி வந்தது. அப்போது ஆதித்யாவிற்கு வாய்ப் பாட்டிற்காக ஒரு வித்வாம்ஸினியிடம் ஏற்பாடு செய்திருந்தோம். இசை ஆசிரியை ஓய்வு பெறும் தருவாயில் இருந்தார். ஏற்கெனவே தந்தி வாத்யக்கார தூரத்து உறவினரிடம் கிடார் வகுப்புகளுக்காகச் சென்று கொண்டிருந்தான் ஆதித்யா. அது போதாது என்று வாய்ப்பாட்டிற்கு இந்தப் பெண்மணியிடம் போய்க் கொண்டிருந்தான். நல்ல தாட்டியான உடல்வாகு. பாடிப் பாடிப் பண்பட்ட காத்ரமான குரல். பதவியில் இருந்ததாலும் வித்வத்தாலும் இயல்பில் வந்த அதிகார தோரணை. அவரே சங்கீதத்தில் இரண்டாம் மூன்றாம் பரம்பரையைச் சேர்ந்தவர்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 9
இன்னொரு கச்சேரியில் ‘மகுவா நின்னே கோரி’ என்கிற வர்ணத்தை எடுத்தான். நாராயண கௌளையில் அமைந்த வர்ணம். நாராயண கௌளை ராகத்தை யாரும் அவ்வளவு எளிதாகப் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால் கரணம் தப்பினால் மரணம் என்பது போல் கொஞ்சம் பிறழ்ந்தால் கேதார கௌளைக்குச் சென்று விடும். … இந்தக் கச்சேரி பற்றி பெரிய இசை வாணரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நாராயண கௌளையைப் பற்றிக் கூறினோம். அவர் ஆச்சர்யப்பட்டுப் போனார். ‘பெரிய வித்வானகள் கூட ட்ரை பண்ண மாட்டா. வெரி குட் ஆதித்யா’ என்றார்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 8
அத்யாயம் 25 இந்த சமயத்தில் பல்வேறு சபாக்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வழங்கும் விருதுகளைப் பற்றியும் பரிசுகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட ராகங்களில் நன்கு தயார் செய்து கொண்டு வருவார்கள். அந்த ராகங்களிலேயே அவர்களைக் கேள்விகள் நிகழ்ச்சியின் நடுவர்களாகிய வித்வான்கள் கேட்கும்படியான ஏற்பாடு அவர்களுக்குள் உண்டு போலும் “தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 8”
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 7
“ஆதித்யா எங்களுக்கெல்லாம் மேலே” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்! அவர் எங்களிடம் என்ன எதிர்பார்த்தார் நாங்கள் எதைப் பூர்த்தி செய்யவில்லை என்று இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை. பணம் என்றால் இயன்ற அளவு செலவழிக்கத் தயாராகவே இருந்தோம். விஜயதசமி என்றால் நாங்களே உபயோகிக்காத சாமானாக வெள்ளியில் நாதள்ளாவில் வாங்கிக் கொடுப்போம். “பையனை இஞ்சினீரிங் படிக்க வெச்சா செலவழிப்பேளா இல்லியா? அந்த மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான்” என்பார்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 6
இசைவாணருக்கும் பெரிய இசை வாணருக்கும் ஒப்புமை நோக்கும் போது பெரிய இசைவாணரை இன்னமும் சாத்வீகமானவர் என்று தான் சொல்ல வேண்டும். மழலை மேதை என்று அறியப் பட்டிருந்ததாலோ என்னவோ இசைவாணரிடம் இருந்த வித்தை போதாமை உணர்வு இவரிடம் கிடையாது. பெரிய சங்கீத விற்பன்னர் என்றும், வாக்கேயக்காரர் என்றும் அறியப்படுபவர் ஆதலால் தன் வித்தையைப் பற்றிய தன்னம்பிக்கையின்மையோ தாழ்வு மனப்பான்மையோ இவரிடம் கிடையாது என்பதே உண்மை. ஆரம்ப நாட்களில் இவர் ஆதித்யாவைத் தன் பிள்ளை போலவே நடத்தி வந்தார்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 5
என் எண்ணம் என்னவாக இருந்ததென்றால் அவனுடைய திறமையின் மேன்மை எப்படியாவது உலகம் அறியும் படிச் செய்து விட்டால் அவன் நடத்தையின் விநோதங்களை உலகம் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொள்ளும் என்று நம்பினேன். புல்லாங்குழல் கலைஞர் டி ஆர் மகாலிங்கம் விஷயத்தில் உலகம் முதலில் அவர் வாசிப்பில் இருந்த மேன்மையை அங்கீகரித்தது. பின்னர் தான் அவர் குணாதிசயங்களில் இருந்த விநோதங்களை உள் வாங்கிக் கொண்டது. அப்போதெல்லாம் அவர் மேதைமையின் காரணமாக உலகம் அவர் குணாதிசயக் கூறுகளை சகிக்கக் கற்றுக்கொண்டது. இதே போல் ஆதித்யா விஷயத்திலும் நடந்தால் தேவலை என்று நான் நினைத்தேன். இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருந்தது. அவன் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வருகிறான். இதைப் போய் நான்கு சுவர் உள்ள ஒரு கட்டுமானத்தில் போட்டோம் என்றால் இதனால் அவன் இயற்கையான இசை மேதைமை அதில் தீய்ந்து விட்டால் என்ன செய்வது?
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 4
‘மூதுரை, நன்னெறி, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்’ போதாதென்று ஆளாளுக்குத் தயார் செய்து வரும் அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன நம் நாட்டில். யாராவது அடுத்தவன் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து அதைப் பரிவுடன் சொல்கிறார்களா என்றால் அது சொற்பமே. ஜெயகாந்தன் சொல்வாரே ‘சஹ்ருதயர்கள்’ என்று அது போன்ற சஹ்ருதயர்கள் உலகில் சொற்பமே என்று தோன்றுகிறது. குறிப்பாக ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று அடுத்தவன் உணரும் போது எதையாவது தெளித்து விட்டு ஓடத்தான் நினைக்கிறானே ஒழிய, அதில் பங்கெடுப்போம் என்று முனைவோர் நிறைய பேர் கிடையாது.
அவரவர்க்கு அவரவர் கவலை. அவ்வளவுதான் பொருளாதார சமூக சூழல் காரணிகளும் காரணம். மற்றவர் படும் அவதிகளை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நகர்ந்து விடுகிறது. இதற்கு நானும் விதிவிலக்கன்று.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 3
“எங்க குடும்பமே இசைக் குடும்பம் தான். நாங்க எல்லோரும் ‘ப்ராடிஜீஸ்’. ஆனா இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரதுக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கேன் தெரியுமா? என் கம்பெனியோட டர்ன் ஓவர் இப்போ ஃபைவ் க்ரோர்ஸ். நான் ஆரம்ப நாள்ல அவ்வளவு கஷ்டப் பட்டேன். அப்ப ஒரு முடிவு பண்ணேன். இந்த மாதிரி டாலண்ட் உள்ள பசங்களுக்குத் தான் முன்னுரிமை. இங்க டாலண்ட் ப்ரமோஷன்னு ஒரு ப்ரோக்கிராம் இருக்கு. உங்க பையனைப் பொறுத்த மட்டில ஆரம்பப் பாடம்லாம் தேவையில்லை. அந்தப் ப்ரோக்ராம்ல போட்டுடுங்கோ. பத்தாயிரம் ரூபா. பீஸைக் கட்டிடுங்கோ” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.
“பையன் இன்னும் வளரலியே சார். இன்னும் கொஞ்சம் மெச்சூரிடி இருந்தாத் தேவலயில்லையா. . . . . . ” என்று நான் இழுத்தேன்.
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. சங்கீதத்திலேயே மூழ்கியிருக்கறவா அப்படித்தானிருப்பா. அவன் வயசுக்குத் தேவையான மெச்சூரிடி நிறைய இருக்கு. மத்ததெல்லாம் தானா வந்துரும் என்றார்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 2
அந்த மருத்துவரை என்னால் மறக்க முடியவில்லை – ‘டெட்டி பேர்’ போன்றதொரு உருவத்துடன் தடிமனான கண்ணாடி அணிந்து ‘பிரஸன்ன வதனம்’ என்பார்களே அதுபோல் சிரித்துக் கொண்டேயிருந்தார். கண்களும் சிரித்துக் கொண்டேயிருந்தன. உறவினர் அவருடன் ஏற்கனவே தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும் போது பையனைப் பற்றி விவரித்திருப்பார் போலிருக்கிறது. அவர் நேரடியாகப் பையனிடம் “நான் கேக்கறதுக்கு நீ பதில் சொன்னேன்னா நான் உனக்கு சாக்லேட் தருவேன்” என்றார்.
பையன் அவர் மேஜையில் இருக்கும் சாமான்களில் எதை எடுத்து உடைக்கலாம் என்பதுபோல் தொட்டுத் தொட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். அவர் வற்புறுத்திக் கேட்கும் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னான். சிரித்துக் கொண்டே இந்த அவர்
“தேர் இஸ் நத்திங் ராங் வித் த சைல்ட்” என்றார் சிரித்துக் கொண்டே.
உறவினர் விடாமல் “பையனுக்கு ‘ஆட்டிஸம்’ இருக்கோல்யோ?” என்றார்.
டாக்டர் சிரித்துக் கொண்டே, நான்தான் சொன்னேனே “தேர் இஸ் நத்திங் ராங் – ஹி இஸ் நாட் ஆட்டிஸ்டிக், ஹி இஸ் ஒன்லி ஆர்ட்டிஸ்டிக்,” என்றார் தீர்மானமாக
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை
என் மகன் ஆதித்யா பாடிய கல்யாணி நினைவுக்கு வருகிறது. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். “தல்லி நின்னு நேர” என்கிற கல்யாணி ராகப் பாட்டை அநாயாசமாகப் பாடினான். அப்போதுதான் அப்பாடலை முதன் முதலில் கேட்கிறேன். அவன் அந்தப் பாட்டை யார் பாடிக் கேட்டான் எப்போது கற்றுக் கொண்டான் என்பதெல்லாம் எனக்குப் புரியாத புதிர்தான் இன்று வரை. அந்தக் கச்சேரியில் அவன் பாடிய பாடல்களை அதற்கு முன் நான் கேட்டதில்லை. அப்போதெல்லாம் ‘அவன் பாடும்போது அந்தப் பாட்டு உண்மையிலேயே வாக்கேயக்காரர்களால் பாடல் பெற்றதா அல்லது இவன் இட்டுக் கட்டிப் பாடுகிறானா’ என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. இவனுடைய பாடல் தொகுப்பைச் சொல்ல வேண்டுமென்றால் இவன் எப்படி இவற்றைக் கற்றுக் கொண்டான் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன் இவன் வளர்ந்த விதத்தைச் சொல்ல வேண்டும். அதற்கு இவன் பிறந்த சூழ்நிலையைச் சொல்ல வேண்டும்.