ஆல்கெஸ்டிஸ் நாடகம், வாழ்க்கை மரணத்துடன் குழம்புவதால் இரண்டாகப் பிளக்கும் தீமை ததும்பும் பெரிதான மைய வீட்டொன்றில் நிகழ்கிறது. அதில் ஹிட்ச்காக்கை நினைவுபடுத்தும் ஏதோவொன்று இருக்கிறது. ஹிட்ச்காக்கின் Shadow of a Doubt படத்திலும் இதைப் போன்ற ஒரு வீடு வருகிறது. மற்றவர்களின் மெய்ம்மைகளும், ஏன் தங்கள் சொந்தத் தேவைகளும்கூட அதில் வசிக்கும் இல்லத்தோர்கள் கண்களுக்கு புலப்படுவதில்லை. அவர்கள் மத்தியில் ஒரு கொலைகாரன் இருக்கிறான் என்பதுகூடத் தெரியாமல் குருடர்களாக அவர்கள் வாழ்கிறார்கள். ஹிட்ச்காக்கைப் போல் யூரிபிடீஸிலும் கொலைகாரன் யாரென்று முதலிலேயே நாம் தெரிந்து கொள்கிறோம்; குற்றத்தின் தாமதப் பரிவர்த்தனையின் வழியே மர்மம் அதிகரிக்கிறது. ஆனால் இரு படைப்புகளிலுமே குற்றம் நடைபெறாமல் முறியடிக்கப்படுகிறது. அதன் பிறகு கதையின் முடிச்சுக்களை அவிழ்க்கும் வகையில் ஒரு எளிமையான முடிவு வருகிறது. ஆனால் நம் மனங்களோ விசித்திரமான வகையில் இன்னமும் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்கின்றன.
Author: ஆன் கார்ஸன்
யூரிபிடீஸ்: நான்கு முன்னுரைகளில் ஓர் அறிமுகம் (பாகம் 1)
இக்காட்சியை வேறெங்கோ பார்த்த நினைவு மின்னி மறைந்தது. பின்னர் அன்றிரவு தூக்கத்தில் ஒரு வரி, நான் தேடியது கிட்டிவிட்டது. பக்குடுக்கை நக்கண்ணியாரின் புறநானூற்றுப் பாடல் :
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே
இந்தப் பாடலிலும் சாவுமேளமும் திருமண கொண்டாட்டத்தின் இனிய முழவோசையும் ஒருசேர ஒலிக்கின்றன. “படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்” – என்ன ஒரு வரி, தமிழ்க் கவிதையில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய வரி. கடவுள்களையே நம்பக் கூடாது என்று ஹெராக்ளீஸ் முடிவெடுக்கிறான். இப்பாடல் அதைக் காட்டிலும் மிக நுட்பமாக அவர்களை விமரிசனம் செய்கிறது. பண்படுத்தல் என்ற கோணத்திலிருந்து. உலகத்தைப் படைத்தவனை விமரிசனம் செய்வதாகவே நான் இதை அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.