இராஜகுமாரனின் மன விசாரங்கள்

தந்தைக்குரிய பொறுப்புகளுடன் அவனுக்கு கல்வி கற்கவும், மற்றும் தேவைகளையும்  கவனித்துச் செய்தார்.  என் தாய் அவனுக்கு அதே போலத் தானே தாயாக இருந்து வருகிறாள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் தானே, ஏன் இந்த முடிவு? அரச குலமே ஒரு நல்ல மகனை இழந்து விட்டதே.   ஏன் இப்படி செய்தான்?  அப்படி என்ன துக்கம் அல்லது கவலை?  தலை கனம் தாங்க முடியாமல் இந்த கேள்விகளால் தவித்த ஹர்ஷன், ராஜ பவனத்துக்கு போகாமல் அங்கேயே அமர்ந்து விட்டான்

ஹர்ஷ சரித்திரம்

ராஜ்யஸ்ரீ  தன் தோழிகளுடன் மணமகளுக்கான அலங்காரங்களுடன் தயாராக நின்றாள்.  சந்த்யா கால சிவப்பை ஒத்த தலையை மூடியிருந்த குங்கட்- முகத்திரை.  எதையும் குறிப்பாக பார்க்காமல், சற்றே தலை குனிந்து இருந்தவளை மணமகன் நெருங்கினான். வெட்கம் அவள் முகத்தின் அழகை தூக்கி காட்டியது. சந்தனத்தால் செய்த கொடி போன்ற உடல், சௌந்தர்யமே உருவாகி வந்தவள் போல, உவமைகளுக்கு அப்பால் நின்றவளாக, வசந்த ஹ்ருதயம் – மன்மதனின் சகா வசந்தன் – அவன் முன்னால் வந்து மன்மதனுக்கு உதவி செய்வதாக செய்தி- அவன் தானே வந்து மேற்பார்வையிடுவது போல இருந்ததாம்.

தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்

அதன் பின் ஜ்யேஷ்டா  ஆடி மாத க்ருத்திகா நக்ஷத்திரத்தில், பஹுல பக்ஷ ( தேய் பிறை) துவாதசி திதி முடியவும், ப்ரதோஷம் ஆரம்பித்து விட்ட நிலையில், இரவின் ஆரம்பத்தில்,  திடுமென அந்த:புரத்தில் கோலாஹலமான சப்தம் எழுந்தது.  பரபரப்புடன் யசோவதியின் நெருங்கிய தாத்ரி, சுபாத்ரீ என்ற பெயருடையவள், அரசனிடம் வந்து வணங்கி, ‘தேவ! அதிர்ஷ்ட வசமாக, உங்கள் இளைய மகன் பிறந்து நலமாக  இருக்கிறான்’ என்றாள். செய்தி சொன்ன அவளுக்கு அரசன் பலவிதமாக பரிசுப் பொருட்கள் கொடுத்தான்.

ஹர்ஷ சரித்திரம் – 4

என் பால பருவம் வெறுமையாக இருந்திருக்கவில்லை. “சதாயுஷ: புருஷ:” மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு.  அதற்குள்  தங்களைத் தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடனேயே வளர்ந்தவன் நான்.  மறு உலகம், மறு பிறவி உண்டு என்பதை நம்புவதால்,  இதையும் நம்பி அதற்கான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் போதிக்கப் பட்டவன்.  என் பால பருவம் வீணாக ஆனதாக நான் நினைக்கவில்லை. எந்த குறையும் இல்லை. 

ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்

ஒரு பக்கம் மல்லிகை போன்ற மணம் வீசும் மலர்கள் குவித்து வைக்கப் பட்ட கடை வீதிகள்.  மறுபக்கம் அதைப் போல அட்டகாசமாக சிரிக்கும் சத்தம்.  மல்லிகை மலரின் வெண்மையும் அட்டகாசமான சிரிப்பும் வெண்மையாக வர்ணிக்கப் படுகிறது.  கடைகள்-அட்டா எனப்படும். சிரிப்பும், மலரின் இதழ் விரிதலும் ஹாஸம் என்ற சொல்லால் வர்ணிக்கிறார்.  தவிர மகாகாலன் என்ற தேவன் சிவ பெருமான் உள்ள இடம்.  கல்பம் முடிந்து பிரளயம் வரும் காலத்தில் மகா கால  அட்ட ஹாஸமாக சிரித்து உலகை சம்ஹரதே – சம்ஹாரம் செய்கிறார்

ஹர்ஷ சரித்திரம்- 2

ஆபரணங்களின் ஒளி கண்களைக் கூசச் செய்ய, நடுவில் ஒரு இள வயது வீரன், மாலதி மலர்களால் ஆன மாலை இடை வரை தொங்க, உலகையே வெற்றி கொள்ளும் முக பாவனையோடு அமர்ந்த்திருந்தான்.  அணிந்திருந்த பொற் சங்கிலியில் பதிக்கப் பட்டிருந்த சிவந்த மாணிக்கம் தூசியினால் மறைக்கப் பட்ட அவன் முகத்தை தெளிவாக காட்டியது.  வன தேவதையில் கையில் பல வண்ண மலர்கள் இருப்பது போல அவன் உடலில் பத்ம ராக, வெண்ணிற மணிகள்  அலங்காரமாக பதிக்கப் பட்ட ஆடை.

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1

பாணருடைய படைப்புகள் நீள நீளமான சம்ஸ்க்ருத கூட்டு எழுத்துக்களால் ஆன வசன நடை.  காதம்பரியில் எளிய சொற்களை பயன்படுத்திய பாண கவி, இந்த ஹர்ஷ சரித்திரத்தில் பத பிரயோகங்களும், வசனங்களுமாக  கடினமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார்.  பதங்களைப் பிரித்தபின் திரும்ப படித்தால் தான் பொருளே புரியும்,  மற்ற மூன்று நாடகங்கள் பிரசித்தமானவை. ரத்னாவளி, நாகாநந்தா மற்றும் பிரிய தர்சிகா. அவர் காலத்தில் ஹிந்து மதமும், பௌத்தமும் தழைத்திருந்தன என்று அறிகிறோம்.

குமார சம்பவம் மஹா காவ்யம்- 17

அசுர சக்ரவர்த்தி ஆத்திரத்தில் மதியிழந்தவனாக,  ரதத்திலிருந்து இறங்கி த்ரிபுராரி மகனையே, கார்திகேயனையே குறி வைத்து அடிக்கும் எண்ணத்துடன் பயங்கரமான ஆயுதம் ஏந்தி அவர் இருந்த திக்கில் ஓடினான்.  தன்னை நோக்கி வேகமாக ஓடி வருபவனை ஈசன் மகன், கார்த்திகேயன் தூரத்திலிருந்தே பார்த்து, அவன் புஜ பலத்தையும், கோபத்தால் யுகாந்த அக்னி போல ஜொலித்தவனை ,  தன் சக்தி ஆயுதத்தை எடுத்துக் கொண்டான்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 16

நேருக்கு நேர் நின்று போரிட்டவர்கள் எதிரில் நிற்பவரின் கம்பீரமான ஆக்ருதியையும் ஆற்றலையும் உணர்ந்து சிலர் மூர்ச்சையானர்கள். சிலர் எதிர்த்து நின்றனர், சிலர் தங்கள் வீரமோ, புத்தியோ ஸ்தம்பித்து போக செய்வதறியாது நின்றனர்.  ஆஹவம்- யுத்தம் – சிலர் மல் யுத்தம் போல யுத்தமும் இவர்களுக்கு விளையாட்டு போலவே மனதுக்கு பிடித்தமானதாக இருக்கவும்,

குமார சம்பவம் மஹா காவ்யம்- 15

கார்த்திகேயன், எதிரி பலத்தையும் கவனித்துக் கொண்டான். தன் பக்ஷத்து வீரர்களின் பயத்தையும் பார்த்தான். அம்ருதம் பொழியும் தன் கடைக் கண்ணால் அனைவரையும் பார்வையாலேயே வருடி ஆட்கொண்டு பயப்பட வேண்டாம் என்று அபயம் அளித்து,  கவலையின்றி யுத்தம் செய்வோம் என்று ஆறுதலாக சொன்னான்.    அதனால் பெற்ற உத்சாகம், சக்தி தரனான குமாரன் இருக்கிறான் என்ற தைரியமும், போர் செய்ய தூண்டுதலையும் பெற்றனர். 

குமார சம்பவம் மஹா காவ்யம்- 14

படையினரின்  போர்க் கொடிகள் விழுந்து பூமியில் நிரம்பி, புழுதியோ, கடலோ, நீர் நிலையோ எது என்ன என்று புரியாமல்  திசைகள் ஆக்ரமிக்கப் பட்டன. வழிப் போக்கர்கள் சாதாரணமாக திசையை அறிந்து கொள்ளும் ஒரு உபாயமும் பயன் படாதது போல திகைத்தனர்.  யானைகளின் கழுத்து மணிகள் தாறு மாறாக ஆடி, கர்ஜனையாக ஒலிக்க, பெரு வெள்ளம் வந்த நதியின் இரைச்சல் போல கேட்டன. 

குமார சம்பவம் மஹா காவ்யம்- 13

தாயாரையும் அவள் பாதங்களைத் தொட்டு குமாரன் வணங்கினான்.  அவளும் மகனை அணைத்து தன்  ஆனந்த கண்ணீரால் முழுக்காட்டியவளாக மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தாள். வீரனை பெற்றவள் மகிழ்வது இயல்பே.  மடியில் இருத்திக் கொண்டு, உச்சி முகர்ந்து, ‘சத்ருக்களை வெற்றி கொண்டு, செயல் வீரனாக திரும்பி வா மகனே, என்னை உலகில் மா வீரனைப் பெற்றவள் என்று புகழும்படி செய்’ என்றாள்.  

குமார சம்பவம் மஹா காவ்யம்- 9

இந்த வினாடியே என் மகனை உங்கள் சேனாபதியாக நியமித்துக் கொள்ளுங்கள். இவன் அந்த பதவியைப்  பெற சக்தியுடையவனே. சத்ருவை ஜயித்து, தேவ லோகத்தை நீங்கள் அனைவரும் திரும்பப் பெறுவீர்கள்.  இதைச் சொல்லி விட்டு பகவான்  தன் மகனைப் பார்த்தார். அவனோ மகா உத்ஸாகமாக இருந்தான். மிகப் பெரிய உக்ரமான யுத்தம் அதில் பங்கு பெறுவேன் என மகிழ்ந்தான். மகனே! அந்த தேவ விரோதியான அசுரனை வதைத்து விடு என்று சொன்னார். 

குமார சம்பவம்: பாகம் – 2

அசலராஜபுத்ரீ! மலை மகளே இனியும் ஏன் யோசிக்கிறாய். நன் மக்களை பெற்ற தாயார்களின் வரிசையில் நீ முதலாக எண்ணப் படுவாய்.  உலகமே இவனைக் கண்டு பரவசமாகி நிற்கிறது. பிரிய தர்சனன்-  கண்களால் காண அழகன்,  தயங்காதே.  உன் மகன், அள்ளி அணைத்துக் கொள், என்றார். 

குமார சம்பவம் மஹா காவ்யம்- 10

வழக்கமாக சப்த ரிஷிகள் நீராடி முடித்து, மலர்களையும், தூர்வா என்ற புல்லையும் வைத்து அர்ச்சனை செய்தவை மட்டுமே இருக்கக் கண்டவர்கள், நதியின் வெண் மணலையே கண்டனர்.  யோக சாதனைகள் செய்பவர் மூடிய கண்களுடன் தங்கள் தியானத்தில் ஆழ்ந்து இருந்ததையும் கண்டனர்.  பாதங்களின் கட்டை விரல் மட்டுமே பூமியை தொடுவதாக நின்றபடி ஸூரியனையே நோக்கியபடி ப்ரும்ம ரிஷிகள் தவம் செய்தபடி நின்று கொண்டு இருந்ததைக் கண்டனர். 

குமார சம்பவம் மஹா காவ்யம்- 9

சர்வபக்ஷன்- கிடைத்ததை உடனடியாக முழுவதுமாக உண்பவன் என்று அக்னிக்கு பெயர். பகவான் சொன்னார், சர்வபக்ஷ! மிகப் பெரும் செயலை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.   என்றார். தேவி மலைமகளோ சபித்தாள்.  எனக்குரியது என் மகனைப் பெறுவது என்ற செயல், அதைப் பறித்த உன்னை குஷ்டம் வந்து ஸூழட்டும் (புகை அக்னியுடன் இணைந்தே இருப்பது) 

குமார சம்பவம் மஹா காவ்யம்- 8

ஹே! பார்வதி, திடுமென அந்தகாரம் மறைந்து வானம் சந்திரனின் ஒளி நிரம்பி நிர்மலமாகத் தெரிவதைப் பார். யானைகள் குளித்து குளத்தை சேறாக்கி விட்டு சென்ற பின் சற்று நேரத்தில் குளத்து ஜலம் சுத்தமாக ஆவது போல இருள் சேறு போல வானத்தை மறைத்திருந்தது.  சந்திரனின் வரவால் தூய்மையாகி விட்டது. தூய்மையான எண்ணங்கள் கொண்ட நல்லவர்கள் கால வசத்தால் கஷ்டங்கள் அனுபவிப்பதும், பின் நன்மை அடைவதும் போல இருக்கிறது.

குமார சம்பவம் மஹா காவ்யம்- 7

அதன் வழியே, ஊரில் இருந்த அழகிய பெண்கள் அவரைக் காணும் பொருட்டு மற்ற வேலைகளை விட்டு அங்கு கூடியிருந்தனர்.  மாளிகைகளின்  மேல் பகுதிகள் நிறைந்து இருந்தன. மணமகனைக் காணும் ஆசையால் கிடைத்த இடங்களில் ஊரார் நின்று பூக்களை மழையாக பொழிந்தனர்.   தங்களும் தங்களை நன்றாக அலங்கரித்துக் கொண்டு போக விரும்பியவர்கள் பாதியில் விட்டு ஓடி வந்தார்கள்.  கேசத்தை முடிந்து கொண்டிருந்தவர்கள், காலில் பாதி செம்குழம்பு பூசிக் கோண்டிருந்தவர்கள்,  எதிரில் வராமல் ஜன்னல்கள் அருகிலேயே நின்றபடி  ஊர்வலத்தைக் கண்டனர்

குமார சம்பவம் மஹா காவ்யம் – 5

அவர் முன் ஒரு சமயம் உன்னை அலட்சியப் படுத்தியதாக கேள்வி.  இருந்தும் அவரை விரும்புவதாகச் சொல்கிறாய். எனக்கு சந்தேகம் – அமங்களமான தோற்றம்.  காமனை எரித்தவர் என்பதால் கோபம் அதிகம் உடையவர் என்று தெரிகிறது.  மேலும் அவர் சம்பந்தப் பட்ட சில விஷயங்கள் அமங்களமே.  மிகவும் துச்சமாக நினைக்கும் விஷயங்கள் அவரிடம் உள்ளன. எப்படி நீ அவரை சகிப்பாய்?

குமார சம்பவம் மஹா காவ்யம் – 4

வளைந்த வில்லை சீராக்கி கொண்டு, கால் முட்டியில் வைத்துக் கொண்டு, வசந்தனைப் பார்த்து, பின் என்னையும் பார்த்து சிரித்தாயே, அது கண் முன் நிற்கிறது. உனக்காக பூக்களைத் தொடுத்து வில்லை செய்து கொடுத்து அனவரதமும் உடன் இருக்கும் வசந்தன், அவனையும் காணோமே,  பிரிய சகா, உன்னை பிரியமுடியாமல் உடன் வந்து விட்டானா? 

குமார சம்பவம் மஹா காவ்யம் – 3

பகவான் சங்கரன் திடுமென அப்சர பெண்கள் பாடுவதைக் கேட்டும் தன் சமாதி கலையாமலே இருந்தார். தன்னை அடக்கியவர்கள், அனிச்சையாக எதுவும் செய்வதில்லை என்பர். நந்திகேஸ்வரர் லதா மண்டபத்தின்  வாயிலில் வந்து நின்றபடி வாயில் விரலை வைத்து, சபலத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று ஆணையிடுவது போல நின்றது.  அதைக் கண்டு அவருடைய பூத  கணங்கள் மட்டுமல்ல, வண்டுகள் மாமரத்தை விட்டு விலகின, முட்டையிடும் பறவை இனங்கள்,  மற்றும்  ஊர்வனவைகளும் ஸ்தம்பித்து நின்றன

குமார சம்பவம் மஹா காவ்யம் – 2

பகவானே! நீங்கள் சொன்னது சரியே. எங்களை பொறுப்பு கொடுத்து பதவிகளில் அமர்த்தினீர்கள். அவைகளை எதிரிகள் அபகரித்துக் கொண்டு விட்டனர்.  ஒவ்வொரு உயிரிலும் உங்கள் ஆத்மா உள்ளதே, எப்படி இது வரை நீங்கள் அறியாமல் இருந்தீர்கள்.  உங்களிடம் வரம் பெற்றவன் தான் தாரகன் என்ற அசுரன். மூவுலகையும் ஆட்டி வைக்கும் தூம கேதுவாக வளர்ந்து விட்டான்.  அவன் செய்யும் உபத்ரவம் தாங்க முடியவில்லை.

குமார சம்பவம் மஹா காவ்யம்

ஈசனின் பிரிய பத்னியாக அவருடைய மடியில் அமர ஏதுவாக இருக்கவே என்பது போல இடை பாகமும் பின்னழகும் விளங்கின. அடுத்து அழகிய நாபியும், அதைச் சுற்றி ரோம ராசியும், மேகலையில் பதித்த மணி போலவும், வளித்ரயம் என்ற கோடுகள், அழகிய ஸ்தனங்கள், உத்பலம் போன்ற கண்கள் என  ஒவ்வொரு அங்கமும் யௌவனம் வந்து விட்டதை பறை சாற்றின போலும்