ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் பற்றி பல காட்டமான விமரிசனங்கள் எழுகின்றன. அவற்றில் முக்கியமானது, ஆர் கே நகர் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள், இதனால் ஜனநாயகம் தோற்றுப் போய் விட்டது என்பது. குறிப்பிட்ட சாதிகளைக் குறி வைத்து, கல்வியிலும் வேலையிலும் அரசு ஒதுக்கீடு பெற்றுத் தருகிறோம், என்று வாக்குறுதி அளித்து சில கட்சிகள் வெற்றி பெற்றபோது தோற்காத ஜனநாயகம் இப்போது தோற்றுப் போய் விட்டதா? அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள், ஏழ்மையை அறியாதவர்கள், இவர்களால்தான் …
Author: பதிப்புக் குழு
அவர்கள் முகத்தின் வியர்வை
இது வரை பிரபுக்களின் படங்களையும் ராணிகளின் ஓவியங்களையும்தான் அருங்காட்சியக கலைக்கூடங்களில் பார்த்திருப்போம். இப்போது “அவர்கள் முகத்தின் வியர்வை” (“The Sweat of Their Face”) என்னும் கண்காட்சியை ஸ்மித்ஸோனியன் (Smithsonian’s National Portrait Gallery) அமைத்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளிகள், அடிமை சிப்பந்திகள், ரயில் வேலையாட்கள், எஃகு தொழிலாளிகள் என “அவர்கள் முகத்தின் வியர்வை”
கணிதமும் இயற்பியலும்
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் எண்ணியல் துறையில் மின்யாங் கிம் (Minhyong Kim) ஆராய்ச்சியாளராக இருக்கிறார். கடந்த ஆயிரமாண்டுகளில் கணிதத் துறையின் ஆதார கண்டுபிடிப்புகளுக்கு பௌதிகம் எவ்வாறு துணை புரிந்திருக்கிறது என்பதை இங்கே விளக்குகிறார். குவாண்டா இதழில் வெளிவந்த குறிப்பு: Secret Link Uncovered Between Pure Math and Physics “கணிதமும் இயற்பியலும்”
வாசகர் மறுவினை
நீங்கள் குறிப்பிட்ட ’ரே’ என்ற உச்சரிப்பு பிரபலமாக ஒரு காரணம் இவர் குடும்பம் மரபு இந்துக் குடும்பம் இல்லை. ப்ரம்மோ சமாஜ் என்ற ஒரு கிளைக் குழுவைச் சார்ந்தவர்கள் இவர்கள். இந்த சமாஜிகள் பாதிக் கிருஸ்தவர்கள் போல என்பது என் நினைவு. சோதிக்க வேண்டும். யூரோப்பியப் பண்பாட்டின் தாக்கப்படி இந்து சமுதாயத்தை (மரபுக் குழுக்களை, பழக்க வழக்கங்களை) விமர்சித்து, ஏக இறைத் தத்துவத்தை மெச்சி, பற்பல செமிதிய நம்பிக்கை/ பழக்கங்களைத் தம் பழக்கமாக மாற்றிக் கொண்டு, அதே நேரம் இந்து மரபை முற்றிலும் அழிக்காமலும் வைத்திருந்த கூட்டம் இது என்று படித்த நினைவு. நீங்கள் சுட்டுகிற ரொபீந்த்ரநாத் தாகூரும் இந்த ப்ரம்மோ சமாஜிதான்…
ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ
சென்ற மாதத்தில் மட்டும் 2,371 பேர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று மெக்சிகோ கருதுகிறது. போதை மருந்து கடத்தல், மாஃபியா ஆள் கடத்தல், அரசியல் அதிகார ஊழல் என்று இந்த வருடத்தில் இருபதாயிரத்திற்கும் மேலான கொலை சம்பந்தமான புகார்களின் மேல் புலன் விசாரணையை நடத்தி வருகிறது மெக்ஸிகோ. செய்தி: “ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ”
ஓவியம் வரைய – மைக்ரோசாஃப்ட் எக்செல்
73 வயதில் டட்சுவோ ஒரியுச்சி ஓவியம் வரைந்து தன் ஓய்வுக் காலத்தைக் கழிக்க நினைத்தார். கடைக்குச் சென்று தூரிகைகள் வாங்குவதற்கு பதில் மைக்ரோசாப்ட் எக்ஸெல் நிரலியைத் திறந்தார். வண்ணங்கள் தீட்டி தன் படைப்பை, அட்டவணைச்செயலி கொண்டு உருவாக்குவதை இங்கே காணலாம்:
மகரந்தம்
18-19 ஆம் நூற்றாண்டுகளில் அடிமை முறையை பெரும் ஆர்ப்பரிப்புடன், கிருஸ்தவத்தின் நம்பிக்கையோடும் கைக் கொண்டிருந்த தென் மாநிலங்கள் இந்தக் கருப்பின மக்கள் தம் இரும்புப் பிடியிலிருந்து தப்பி தொழில் பேட்டைகளுக்கு வட/ மத்திய மாநிலங்களுக்குப் போனதை இன்னமும் பெரும் நஷ்டமாகக் கருதுகிற அரசியலையே தம் மாநிலங்களில் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். தெற்கு மாநிலங்கள் மைய அரசுக்கு எதிராகப் பிடித்த கொடி (கான்ஃபெடரேட் கொடி என்று அழைக்கப்படுவது) இன்னமும் ஏராளமான தென் மாநிலங்களில் கொண்டாடப்படும் சின்னம்,, தனியார் மட்டுமல்ல மாநில அரசுகளே கூட இந்தக் கொடியை பற்பல நகரங்களில், தலை நகரங்களில், ஏன் நீதி மன்றங்களில் கூட ஏற்றிப் பறக்க விடுவதைத் தம் பெரும் சாகசமாகக் கருதும் அவலம் இன்னும் தொடர்கிறது.
அப்படி இருக்க இந்த மாநிலங்களுக்கு முன்னாள் அடிமை முறையிலிருந்து தப்பிய கருப்பினத்தவர் மறுபடி திரும்பும் அவலம் நேரக்காரணம் உலக முதலியமும், அமெரிக்க முதலியமும் தம் நலனை மட்டுமே கருதும் அற்பத்தனம்தான். இன்று பல தென் மாநிலங்களில் நகரங்களில் கருப்பின மக்கள் பெருகி விட்டது அம்மாநிலத்து அரசியலில் சில சிக்கல்களையாவது ஏற்படுத்துகிறது.
வாசகர் மறுவினை
உணர்வுத் திறன்கள் நம் உடலில் இயங்கும்போது கலவையாக இயங்குகின்றன. ஆனால் மனித உடலில் வேறு சில பிரச்சினைகள் உண்டு. அது எந்திரத் தயாரிப்பு இல்லை. எந்திரத் தயாரிப்பிலும் தயாரிப்புப் பிழைகள் என்று எழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகப் பொருள் தயாரிப்பில் கூட, உலோகத் துண்டுகள் எல்லாம் ஒரே போல இரா. எங்கோ ஒரு இழை ஒரு புள்ளி ஒரு கூறில் மாறுதல் இருக்கும்/ அது தேவைக்கு மேலான வலுவோடு இருக்கலாம், குறைவான வலுவோடு இருக்கலாம், அல்லது மேல் பூச்சு (க்ரோமியம், வெள்ளி, அலுமினம் ஏதோ ஒரு பூச்சு) இரு மில்லிகிராம் கூடுதலாகக் குறைவாக இருக்கலாம். பலன் இறுதிப் பொருளில் குறை எழும். அந்தக் குறை பயன்பாட்டின் இயல்பைப் பொறுத்து பிரச்சினை இல்லாத குறையாக இருக்கலாம்.
குளக்கரை
செய்தி அமெரிக்க ஆட்சியாளர்களின் அபிமானத்துக்கு உரிய, அந்த ஆட்சியாளர்களின் எஜமானர்கள் என்றே நாம் கருதக் கூடிய ஒரு கூட்டம் பற்றியது.
உலகின் மொத்தச் சொத்துகளில் பாதியை இந்தச் சிறு கூட்டம் தன் கையில் வைத்திருக்கிறது என்று த க்ரெடிட் ஸ்விஸ் வங்கி கணக்கிடுகிறது. உலகத்தில் சுமார் 36 மிலியன் நபர்களே உள்ள இந்த மிலியனேர்கள் உலக மக்கள் தொகையான சுமார் 7600 மிலியன் மக்களில் அரை சதவீதத்துக்கும் கீழான எண்ணிக்கை உள்ளவர்கள். ஆனால் உலகச் சொத்துகளில் 50% இவர்கள் கைவசம் உள்ளது.
மகரந்தம்
கலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் உள்ள பல்கலையில் ஒரு வகுப்புக்குப் பாடம் நடத்தும் பேராசிரியர் ஒருவர் ‘Desire, Sexuality and Gender in Asian American literature’ என்ற தலைப்போடு ஒரு வகுப்பை நடத்துகிறார்…..வகுப்பு ஆசிய அமெரிக்க இலக்கியத்தில் பால் விருப்பம், பாலடையாளம், பால் பாகுபாடு ஆகியன எப்படிக் கையாளப்படுகின்றன என்பதை விவாதிக்கிறது….பேராசிரியரின் ஒரு முக்கிய உத்தி. மாணவர்களைத் தமது எதிர்காலத் துணை பற்றி அவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் உண்டு என்று ஒரு பட்டியல் தயாரிக்கச் சொல்கிறார். அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். பிறகு அவர்களின் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பின் படி மாணவர்களின் துணைகள் எப்படி இருப்பது நல்லது என்று அறியச் சொல்கிறார். அந்தக் குணாம்சங்களைப் பட்டியலிட்டு வாங்கிக் கொள்கிறார். இந்த இரு பட்டியல்கள் பற்றிய தம் கருத்துகளை மாணவர்கள் வகுப்பில் பகிர்கின்றனர்.
புது தில்லியின் மைனா
ஒரு கோணத்தில் உலகம் சுருங்கித்தான் போயிருக்கிறது. மொத்த உலகிலும் வெப்ப தட்ப நிலை காலச் சுழற்சியோடு நம்பத்தக்க விதங்களில் மாறி வருவது என்பது கேள்விக்குரியதாகி இருக்கிறது. இது மனிதரின் பற்பல செயல்களின் கூட்டுத் தாக்கத்தால் மாறியது என்று ஒரு சாராரும், இல்லை இதுவும் தற்செயல்/ இயற்கையான மாறுதல்தான் என்றும் “புது தில்லியின் மைனா”
மழுவன் மூளை கண்டாய்
செய்தி: Legendary Rock Climber Alex Honnold Gets Put Into an MRI, and the Results Are Surprising
அடிமுடி ஒன்றில்லாத பேரண்டம்
பிரபஞ்சம் முடிவிலியா? அல்லது அதன் வரம்புகளை அறிவியல்பூர்வமாக வரையறுத்துவிட்டோமா? நாம் இருக்கும் இடத்தில் இருந்து 46 பில்லியன் ஒளி வருடங்களைப் பார்க்க இயலுகிறது. ஆனால், இப்போதைக்கு நம்மால் இவ்வளவுதான் அளவிட முடிகிறது. நம் அகிலத்தை அளந்து முடித்து விட்டோமா? அண்டம் என்பது முடிவே இல்லாததா? ஈதன் விடை காண “அடிமுடி ஒன்றில்லாத பேரண்டம்”
இந்தியாவின் வண்ணம்
புகைப்பட வித்தகர் டோனி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை படம் பிடித்திருக்கிறார். அதில் கிடைத்த அனுபவங்களையும் படங்களையும் இங்கே பதிவு செய்கிறார்.
குளக்கரை
தமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
மகரந்தம்
டாலர் இருந்தாலே போதும். 130 நாடுகளில் விசா இல்லாமல் பயணம் செய்ய உதவும் கடவுச்சீட்டைப் (பாஸ்போர்ட்) பெறலாம். செயிண்ட் கிட்ஸ் போன்ற கரிபியன் தீவுகள் தம் நாட்டின் கடவுச் சீட்டுகளை விற்கின்றன. மால்டா, மாண்டெநெக்ரோ போன்ற யூரோப்பியச் சிறு நகர அரசுகளும் இதில் இறங்கியுள்ளன. அமெரிக்காவே அரை மிலியன் டாலர் முதலீட்டுக்கு குடியிருக்க வழி செய்கிறதாம். இராக்கியர்கள், லிபியர்கள், சீனர்கள், மாஸ்கோவியர்கள் இன்னும் பற்பல நாடுகளின் மக்களுக்கு உதவும் மசை. அமெரிக்கர்கள் கூடப் பல நாடுகளில் நுழைய இந்த மாற்று கடவுச் சீட்டுகளைப் பயன்படுத்துகிறார்களாம். குஷ்னரும் சீன பிலியனேர்களும் இந்தத் திட்டத்தைத்தான்…
மகரந்தம்
1. அச்சுப் பத்திரிகைகளின் அந்திம காலமா இது?
2. போக்குவரத்துச் சந்தடியால் நரம்பு இழி நோய் வருமா?
3. காற்றாலை மேடைகளின் அதிசய உடன் விளைவுகள்
புகைப்படப் போட்டி
நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகை வருடந்தோறும் தங்கள் வாசகர்களுக்கான புகைப்படப் போட்டியை நடத்துகிறது. 2017க்கான படங்களை இங்கே பார்க்கலாம். கீழே கனடாவின் நுனாவுட் (Nunavut) பகுதியில் பனிக்கரடி:
சுயமும் சூர்யோதயமும்
மேற்கத்திய தத்துவத்தின்படி நாம் சுயம் என்னும் தனிப்பட்ட குணத்தோடு பிறப்பதில்லை. தன்னியல்பு என்பது நம்முடைய முதல் இரண்டாண்டுகளில் உருவாகி ’சுயம்’ என்னும் பிம்பத்தை எழுப்புகிறோம். நாம் பார்ப்பது, கேட்பது எல்லாம் நம் கற்பிதமே. இதனால் நம் அறிதலை சுருக்கிக் கொள்கிறோமா? புத்தரின் வழியில் யோசித்தால் தற்சார்பற்ற உண்மைகளை இன்னும் “சுயமும் சூர்யோதயமும்”
ஜோசியர்கள், அகதிகள் & காந்தி
ஃபிரெஞ்சு புகைப்படக்காரர் ஹென்ரி கார்ட்யெ பிரசன் (Cartier-Bresson) இந்தியாவில் பல்லாணடுகள் செலவழித்திருக்கிறார். இவர் நம் மகாத்மா காந்தியை படங்களாகப் பதிவு செய்தவை உலகப் புகழ்பெற்றவை. காந்தியைத் தவிர ரமண மகரிஷியின் ஆசிரமம், கதகளி குருகுலத்தின் நடனப்பயிற்சி, காஷ்மீரத்தின் இயற்கை, அகமதாபாத் நகரத்தின் சந்து பொந்துகள் எல்லாம் உண்டு. அவற்றை “ஜோசியர்கள், அகதிகள் & காந்தி”
மைட்டோகாண்ட்ரியாவும் உங்களின் அம்மாவும்
மைட்டோகாண்ட்ரியா என்பது செல்லின் ஒரு நுண்ணுறுப்பு ஆகும். இது செல்லுக்குத் தேவையான ஆற்றலைத்தருவதால் இதை ‘செல்லின் ஆற்றல் நிலையம்’ என்கிறோம். இவை செல்லின் சைட்டோபிளாசத்தில் விரவிக்காணப்படுகின்றன. மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டே உண்கிறோம்; தூங்குகிறோம்; சிந்திக்கிறோம்; நேசிக்கிறோம்… அவை எங்கிருந்து வருகின்றன? எப்படி உருமாறுகின்றன? எவ்வாறு நோயைக் கண்டுபிடித்து உங்களை ஆரோக்கியமாக “மைட்டோகாண்ட்ரியாவும் உங்களின் அம்மாவும்”
மகரந்தம்
எட்வர்ட் மன்ச் வரைந்த அதிபுகழ் பெற்ற ஓவியமான அலறல் (ஸ்க்ரீம்). அதைக் குறித்து அவர் இவ்வாறு தனது கையேட்டில் எழுதுகிறார்: ‘என்னுடைய இரு நண்பர்களுடன் சாலையில் நடந்தேன். சூரிய அஸ்தமனம் ஆனது. ஆகாயம் ரத்தநிறமானது. மனச்சோர்வு என்னைத் தொட்டதை உணர்ந்தேன். என் நண்பர்கள் என்னைவிட்டு முன்னே நகர்கிறார்கள். என் மார்பில் திறந்த காயம் இருப்பதை போல் பயம் கவ்விக் கொண்டது. சோர்வாக கைப்பிடியில் தளர்ந்தேன். கருப்பும் நீலமும் கலந்த மலையிடைக் கடல் நுழைவழி தெரிந்த நகரத்தின் மேகங்களில் இருந்து ரத்தம் சொட்டி உதிர அலை அடித்தது. இயற்கையினூடே மாபெரும் அலறல் துளைத்து வந்தது.’ அந்த ஓவியத்தைப் பார்த்தால் யாரோ அலறுவதை சித்தரிப்பது போல் இருக்கும். ஆனால், அந்த ஓவியம் தான் மட்டுமே கேட்ட ஓலத்தை, மற்றவர்களுக்குக் கேட்கக் கிடையாத அலறலைக் குறிக்கிறது. அது போல் புத்தாக்கங்களைக் கொணர கொஞ்சம் சித்தம் கலங்கியிருக்க வேண்டுமோ என எண்ணும் கட்டுரை
கோணக் கணிதம்
பொது சகாப்தத்திற்கு முன் 120ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் ஹிப்பார்க்கஸ் என்னும் வானவியலாளர் கோணவியலின் சூத்திரத்தை நிறுவினார் என நேற்று வரை எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், இப்போது பொது சகாப்தத்திற்கு முந்தைய 1762ஆம் வருடத்திலேயே பாபிலோனியர்கள் கோணக் கணிதத்தை அறிந்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டு காட்டுகிறது. பித்தேகோரஸ் தேற்றம் சொல்வதற்கு ஆயிரம் “கோணக் கணிதம்”
நீரின் பாதை
அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாநிலம் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் மியாமி நகரை நீர் கபளீகரம் செய்யுமா என்பதை நேஷனல் ஜியாகிரபிக் இங்கே படம் பிடிக்கிறது. எவர்கிளேட்ஸ் சதுப்பு நிலத்தின் உபரி நீரை பொங்கி வழியாமல் பாதுகாக்க 3,400 கிலோமீட்டருக்கு கால்வாய் வெட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் உப்புநீர், “நீரின் பாதை”
மகரந்தம்
மூன்று இதயங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது. அதில் நீலமும் பச்சையும் கலந்த ரத்தம் ஓடுகிறது. மென்மையான தோல் கொண்டதால் மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்தவை. தமிழில் பெரிய கணவாய். எட்டு கால்கள் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் ஆக்டோபஸ். எத்தனை கால் இருந்தால் என்ன… பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு தீர்த்து வைப்பதில் அறிவாளி. மனிதர் மட்டுமே கருவிகளைக் கொண்டு தன் திறமையை பன்மடங்காக்கும் வித்தை தெரிந்தவர் என்பதை தவிடுபொடியாக்கும் நுண்ணறிவாளர். ஆனால், மனிதர் போலவே ஏமாற்றவும் தெரிந்த மிருகம். அதைத் தவிர தன் நகையுணர்வை வேறு வெளிபடுத்துகிறது. விலங்கு போல் ஒலியெழுப்பும்/பேசும் கலையை அறிந்திருக்கிறது. ஒரு வேளை நமக்குள்ளேயே உலாவும் வேற்றுக்கிரக வாசியோ?
குளக்கரை
செஞ்சிலுவைச் சங்கம் நிஜமாகவே அவ்வாறு தன்னலமற்ற சேவையை வழங்குகிறதா என்பதை ஆராய்ந்தபோது ரெட் கிராஸ் வெறுமனே புறத்தோற்றத்தில் மட்டும் அப்படி பாவ்லா செய்வதாக தெரியவந்திருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு நியு ஆர்லான்ஸ் நகரில் வெறுமனே ஷோகேஸ் பொம்மை போல் ஒரு காரை அங்கும் இங்கும் ஓட்டி, நிவாரணத்தில் ஈடுபட்டது போல் சி.என்.என். டிவியில் பிரச்சாரம் மட்டும் செய்தது பல ஆண்டுகள் முன்பு அம்பலமானது. அதன் பின்னும் ஹைதி பூகம்பம் போன்ற பேரழிவுகள் நடந்த சமயங்களில் பணம் வசூல் செய்வதையும், நன்கொடைகளை புதிய நுட்பங்களைக் கொண்டு குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதை இந்தக் கட்டுரை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது. 2011ல் ஹய்தி நாட்டில் நடந்த நில நடுக்கத்திற்குப் பின் ஐம்பது கோடிகளை தானமாக சேகரித்துவிட்டு, மொத்த நாட்டிற்கும் ஆறே ஆறு வீடுகளை கட்டிக் கொடுத்தது போல் …
வாசகர் மறுவினை
பாரபட்சம் (discrimination) , கோடல்கள் (bias), நுட்பக் கோடல்கள் (micro bias) ஆகியவை நாம் பல நூறு ஆண்டுகளாக சந்தித்து வருபவை. வேற்றுக் கிரகத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை சென்றடையச் செய்து அவர்களைப் போல் குளோனிங் முறையில் பலரை உருவாக்கினாலும், அதிலும் பாகுபாட்டை முதலில் சுட்டிக்காட்டும் மனநிலை உள்ளுர ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிற வகையில் ஒரு அத்யாயத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாராருக்கு இருக்கிற advantage அவர்களால் உணரப்படுவதில்லை என்பனவற்றை விவாதித்த பின் இன்றும் சாதிய மோதல்கள், பாகுபாடு மோதல்கள் ஏன் தொடர்கிறது என்பது பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதன் சிந்திக்க சிந்திக்க பல்வேறு வளர்ச்சிகளும், சாதனைகளும் சாத்தியமாயிருக்கிறது.
மகரந்தம்
தபால் ஓட்டுக்கள் என்ற உடன் ஓட்டுக்கள் எண்ணும் நாளில் முதலில் எண்ணப்படுபவை அவை என்பதுதான் நம் நினைவுக்கு வரும். அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகணத்தில் இப்படித் தபால் மூலம் ஓட்டளிப்போர் வீடுகளில்த், அரசியல் பேசத் தடைவிதிக்கும் சட்டமுன்வரைவு ஒன்று பிரச்சனையைக் கிளப்பியுள்ளது. டெக்ஸாஸ் செனேட்டில் மெஜாரிட்டி மூலம் நிறைவேற்றபட்ட இந்த முன்வரைவு தற்போது டெக்ஸாஸ் பிரதிநிதிகளின் சபைக்குச் சென்றுள்ளது.
குளக்கரை
பரிணாம வளர்ச்சியைப் பொருத்தவரை, மலர்களின் பரிணாம வளர்ச்சி எப்போது துவங்கியது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 140 மில்லியனிலிருந்து 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்பட்டாலும், மலர்களின் படிமங்கள் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படவே இல்லை. டார்வின் கூட மலர்களின் பரிணாம வளர்ச்சியைப் புதிராகவே கருதியிருக்கிறார். திடீரென்று பல்வேறு வடிவங்களில் காணப்பட்ட மலர்களின் வளர்ச்சியை ஒரு மர்மம் என்றே அவர் வர்ணிக்கிறார்.
குளக்கரை
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நாடகத்தில் அதிபர் தமது சட்ட மந்திரி போன்ற பதவிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு நபரை ‘முறைப்படி’ தேர்ந்தெடுக்கக் கூட்டப்பட்ட ஒரு அவையில், பார்வையாளர் ஒருவர் அங்கு இந்த நபரின் ‘நேர்மை, நம்பகத்தன்மை, நியாய உணர்வு’ போன்றன விதந்தோதப்பட்டதைக் கேட்டுத் தன்னை அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அப்படிச் சிரித்தது அவையின் ஒழுங்கைக் கெடுக்கச் செய்யப்பட்ட முயற்சி என்று சொல்லி அவரை அவை அதிகாரிகள் கைது செய்து அவர்மீது வழக்குத் தொடர்கிறார்கள். ஆக அமெரிக்காவில் என்னவொரு சட்ட அமைப்பு இருக்கிறது என்றால், அரசு நிகழ்ச்சியில் விசாரணை நடக்கும்போது சிரித்தால் சிறை தண்டனை கிட்டும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் அது.
மொழியியல்
சென்ற வருடம் உலகெங்கும் சிறிது பரபரப்பை உண்டாக்கிய அறிவியல் புனைவுப் படமான ‘அரைவல்’ படத்தில் காண்பிக்கப்பட்ட ஏலியன்களுடன் ஆன உரையாடலுக்கும், நிஜ வாழ்க்கையில் நடக்கும் மொழியியல் ஆராய்ச்சிக்கும் எவ்வளவு நெருக்கம் உள்ளது என்று நாம் யோசித்திருக்கலாம்.
மகரந்தம்
மிஹிர் சென்னைப் போல யோசிப்பவர்கள் ஸ்வீடனிலும் சிலர் உண்டு. ஸ்வீடனில் கொஞ்சம் இடது சாரித்தனமும், கொஞ்சம் ஃபாசிசமும், கொஞ்சம் பழமை வாதமும், கொஞ்சம் அடாவடி/ தத்தாரி நாகரீகம். அங்கு வ்யூவர்டோன்யோ (Övertorneå) என்ற ஒரு சிறு நகரில், பொழுது போகாதவர்கள் நிறைய இருந்திருப்பார்கள் போல இருக்கிறது. ஆனால் சும்மா இருப்பதை விரும்பாத மிஹிர்சென் கோஷ்டி போலவும் இருக்கிறது. அதனால் ஒரு போட்டி வைக்கலாம் என்று யோசித்து அதன்படி, உலக சாம்பியன்ஷிப் விருது வழங்கும் போட்டி ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். அந்த ஊரில் கோடையில் கொஞ்சம் கொசுக்கள் மண்டுமாம். அந்தக் கொசுக்களை யார் அதிகமான எண்ணிக்கையில் பிடித்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த விருது கிட்டும்.
இரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை
தி கார்டியன் கொடுக்கும் இந்தப் படத் தொகுப்பில் இரானிய வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்று நிகழ்த்தல் காட்சிகள் மூலம் ஒரு கலைஞர் சித்திரித்திருப்பதைத் தொகுத்திருக்கிறார்கள். அவர் மிக நுண்மையான கேலியாகப் பல காட்சிகளை அமைத்து அவற்றைப் படமாக எடுத்தவை ஒரு தொகுப்பாகக் கிட்டுகின்றன. அந்தத் தொகுப்பில் சிலவற்றைக் கார்டியன் “இரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை”
இசை நாடகம் நடக்கும் முன்னே
நியு யார்க் நகரத்தில் இருக்கும் மெட் ஆபரா (Metropolitan Opera House) எவ்வாறு தன்னை தயார் படுத்திக் கொள்கிறது? ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் என்ன நடக்கிறது? யாரெல்லாம் என்ன வேலையை எப்பொழுது செய்கிறார்கள்? இசை நாடகம் துவங்குவதற்கு முன் பின்னணியில் நடக்கும் தயாரிப்புகள் குறித்த வீடியோவை இங்கு பார்க்கலாம்:
இந்தியாவின் முகங்கள்
ஜோஷுவா க்ளக்ஸ்டைன் (Joshua Gluckstein) இந்தியா நெடுக பயணித்திருக்கிறார். சந்தித்தவர்களில் சிலரை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். கோட்டோவியமாக இந்தியர்களின் முகங்களை அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு தெரியுமாறு பதிந்திருக்கிறார்.
சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி
சென்னை தினம் (மெட்ராஸ் டே) நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். கதைகள் சென்னையைப் பின்னணியாகக் கொண்டதாக இருக்கவேண்டும். சென்னையில் நடக்கும் கதையாகவோ அல்லது சென்னையைப் பற்றிய கதையாகவோ அல்லது சென்னையைக் களமாகக் கொண்டு நிகழும் கதையாகவோ இருக்கலாம். சென்னையை மையமாகக் கொள்ளாத கதைகள் நிராகரிக்கப்படும். போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2017.
குளக்கரை
உலகுக்கு அற போதனை செய்வதில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சிறுவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தடையேதும் இல்லையாம். 13, 14 வயதினர் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். அதுவும் சில நேரம் 14 வயதுப் பெண்கள் அவர்கள் வயதைப் போல இரட்டை மடங்கு மூத்த ஆண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்கிறார்களாம். அதோடு முடிந்ததா கதை, ஒரு (வயதால் மூத்த) ஆண், சிறுமியை வன்புணர்வு செய்து அவள் கர்ப்பமானால், அவளை அந்த ஆண் திருமணம் செய்து கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம். இதைப் பற்றிப் பலமான விவாதங்கள் சட்ட சபைகளில் சில மாநிலங்களில் நடந்திருக்கின்றன. கிருஸ்தவம் இந்தியாவில் மேலோங்கி வரும் இந்நாளில் இந்து சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சிக்க அவர்களுக்குப் பிரச்சாரத்துக்கு நிதி உதவியைக் கொட்டும் நாடுகளில் அமெரிக்கா ஒன்று. இப்படி ஒரு மாநிலமான டெக்சாஸில் மட்டும் கடந்த 14 வருடங்களில் 40,000 சிறு பிராயத்தினர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மகரந்தம்
சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் உமன்’ என்கிற திரைப்படத்தை ஒட்டி அமெரிக்கன் ஸ்காலர் பத்திரிகை இந்தக் கட்டுரையைப் பிரசுரித்திருக்க வேண்டும். உளவியலாளரான விலியம் மார்ஸ்டன் இந்தப் பாத்திரத்தை உருவாக்கி முதல் புத்தகத்தை வெளியிடக் காரணமாக இருந்தவர். ஒரு பெண் பாத்திரம் ஏன் அவசியம், அந்தப் பாத்திரத்துக்கும் இதர சூப்பர் ஹீரோ பாத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, 1940களிலேயே இந்தத் தேவையை உணர்ந்து அவர் ஏன் இப்படி ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்ட காமிக் புத்தகங்களை உருவாக்க முயற்சி செய்தார் என்ற விவரங்களை இந்தக் கட்டுரை கொடுக்கிறது. விலியம் மார்ஸ்டனும் பெண்களைப் பற்றி யோசிக்கையில் இதரரிடம் அன்பாக இருத்தல், பராமரிப்பில் கவனம் செலுத்துதல், இனிமையாகப் பழகுதல் என்ற சில குணங்களை முன்வைக்கிறார் என்று ஒரு குற்றச் சாட்டு இருக்கிறது.
குளக்கரை
இந்த உடலுறுப்பு தானம் என்பதை நாம் கதை என்று கூட எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எத்தனையோ ஆயிரம் இந்தியர்களின் உடல் உறுப்புகளை அவர்களுக்குத் தெரியாமலே அவர்களிடமிருந்து அகற்றி வெளிநாடுகளிலோ, அல்லது உள்நாட்டிலேயே பெரும் விலைக்கோ விற்கும் குற்றக் கும்பல்கள் இந்தியாவெங்கும் உலவுகின்றன. இவற்றில் பல மருத்துவ மனைகள், கெடுமதியாளராகி இருக்கிற மருத்துவர்கள், உள்ளூர் குற்றக் கும்பல்களிலிருந்து அடியாட்கள், தரகர்கள் என்று ஒரு ஆழ்ந்த குற்ற வலை இந்தியாவில் இருக்கிறது. இஷிகுரோவுக்குத் தான் எழுதியது கற்பனை என்ற நினைப்பு இருக்கலாம். இந்தியருக்கு இது நிதர்சன நடப்பு.
வைரச் சுரங்கத்தின் எச்ச சொச்சங்கள்
மாஸ்கோவில் இருந்து 8,500 கி.மீ. (5,200 மைல்கள்) கிழக்கே மிர்னி நகரம் இருக்கிறது. இங்கே உள்ள வைரச் சுரங்கத்தை 1956ல் ருஷியா கண்டுபிடித்தது. சோவியத் யூனியன் காலத்தில் இங்கே வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாது. மிர்னிக்குள் ரஷியர்கள் நுழைவதற்கே சிறப்பு விசா வாங்க வேண்டும். 2001ல் “வைரச் சுரங்கத்தின் எச்ச சொச்சங்கள்”
தலை காக்கும் பாஞ்சசன்னியம்
கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கானது கல்லிலும் மணலிலும் புதைந்தாலும் தாக்குப் பிடிக்கிறது. கோரப்பற்களுடைய கடல் வாழ் சுறாக்கள் முதல் திமிங்கலம் வரை அதே சங்கை பலமாய்க் கடித்தாலும் சேதாரம் இல்லாமல் இருக்கிறது. புயலும் சுனாமியும் அலையும் தூக்கிப் போட்டு பந்தாடினாலும் இறுதியில் வென்று நிற்கிறது. அதன் உறுதியான அமைப்புடைய “தலை காக்கும் பாஞ்சசன்னியம்”
மகரந்தம்
ஜெர்மனியில் பண்டைக்காலத்து உப்புப் படிவங்கள் நிலத்தடியில் இருப்பனவற்றில் மின் சக்தியைச் சேமித்து வைக்க முயற்சி செய்கிறார்களாம். உப்புப் படிவங்கள் மீது ஏராளமான நீரைச் செலுத்தி அவற்றைக் கரைத்து அவற்றூடே பெரும் குகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். தரைக்குக் கீழே அரைமைல் தூரத்தில் இந்தக் குகைகள் உள்ளன. உபரி மின் சக்தியைப் பயன்படுத்தி காற்றை அழுத்தத்துக்கு உள்ளாக்கி அதை இந்தக் குகைகளில் சேமிக்கின்றனர். மின்சக்தி உற்பத்தி குறைந்து விட்ட நேரத்தில் குகைக்குள்ளிருக்கும் அழுத்தத்துக்குட்பட்ட காற்றை வெளிப்படுத்தி அதை நிலவாயுவை எரிக்கப் பயன்படுத்தி மின் சக்தியைத் தயாரிக்கிறார்கள். அழுத்தத்தில் இருந்து விடுபடும் காற்று ஆக்ஸிஜனை எரிவாயுவுக்குச் செலுத்துவதில் திறன் அதிகம் உள்ளது என்பதால் இது பயனுள்ள முறையில் மின்சக்தியைச் சேமிக்க உதவுகிறது.
46,000 கி.மீ. – 500 நாள்கள் – ஒரு புல்லட் பைக்
தீபக் சௌஹான் மும்பையைச் சேர்ந்தவர். இந்தியா முழுக்க தன் புல்லட் பைக்கை எடுத்துக் கொண்டு 46,000 கிலோமீட்டர் சுற்றி வந்திருக்கிறார். நீல மலை நிலமான மிஜோரம் முதல் விசாகப்பட்டின வயல் வரை எல்லாமும் படம் பிடித்திருக்கிறார். கீழே கைவினைக் குடை தாங்கிய ஆடு மேய்ப்பவரை ஓரிஸாவின் பிரம்பூர் பகுதியில் “46,000 கி.மீ. – 500 நாள்கள் – ஒரு புல்லட் பைக்”
பட்டதாரி
இது கல்லூரி பட்டமளிப்பு விழாக்காலம். வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைப்பதை வைபவமாகக் கொண்டாடும் காலம். பட்டதாரிகளின் படிப்பு முடிந்து புதிய பாதை துவங்குவதை வரவேற்கும் காலம். இங்கே விவேகானந்த் விமல் பேசுகிறார். பிராண்டெயிஸ் பல்கலையில் நரம்பு இயங்கியல் துறையில் ஆராய்ச்சியை முடித்து பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். கொஞ்சம் “பட்டதாரி”
குளக்கரை
”என்னுடைய முந்தைய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது முந்தைய பிஸினெஸைக் காட்டிலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி வாழ்வு கொஞ்சம் சுளுவாக இருக்கும் என்று நினைத்தேன். ஏதோவொரு கூண்டில், பட்டுப்பூச்சியின் கூட்டினுள் அடைபட்ட மாதிரி உணர்வு கிடைக்கிறது. எனக்கு காரோட்டப் பிடிக்கும். அது முடியவில்லை. எனக்கு மேற்சென்று சாதிக்கப் பிடிக்கும். அதுவும் இடைஞ்சலாக இருக்கிறது.” என்கிறார் டிரம்ப்
மகரந்தம்
தமிழில் சாதாரணமாக நாம் காணுவது எழுத்தாளர்களுக்கு இருக்கும் அதீத தன் முக்கிய உணர்வு. சிறு திருத்தங்களையோ, அல்லது எழுத்தில் காணப்படும் குறைகளையோ சுட்டினால் ஒன்று காட்டமாகப் பதில் எழுதுவார்கள், இல்லையெனில் பிறகு எழுதிக் கொடுக்க முன் வரமாட்டார்கள். தமிழில் பதிப்பிக்கப்படும் பெருவாரி புத்தகங்களைச் சரிவர பதிப்பு வேலைக்கு உட்படுத்திப் பிரசுரிப்பது கூட நடப்பதில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் நன்கு பிரபல்யம் கொண்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் மீள் பிரசுரம் ஆகையில் அந்தப் புத்தகங்களைப் பார்த்தால் நிறையப் பிழைகளோடு காணப்படுகின்றன.
இவ்வளவு பெரிய சீனா எப்படி ஒரே நாடாக இருக்கிறது?
பொருளாதார வளர்ச்சி என்றால் மண்டை காய வைக்கும் கணிதமும் பொருளியல் அளவாக்கங்களும் கொண்டு விளக்குவார்கள். இவர் சரித்திரமும் சேர்த்துக் கொண்டு சீனாவின் 19ஆம் நூற்றாண்டின் பட்டு ஏற்றுமதியையும் 20ஆம் நூற்றாண்டின் வங்கி வளர்ச்சியையும் ஆராய்கிறார்: தொடர்புள்ள கட்டுரை: What would count as an explanation of the “இவ்வளவு பெரிய சீனா எப்படி ஒரே நாடாக இருக்கிறது?”
மகரந்தம்
யாரோ ஒரு ‘புரட்சியாளர்’ சொன்னாராமே, ‘த மீக் ஷல் இன்ஹெரிட் த எர்த்’ என்று. அதைக் குறித்து யோசித்திருக்கிறவர்களுக்குத் தோன்றி இருக்கலாம். இந்த வாக்கியம்தான் என்னவொரு கனமான அர்த்தங்களை உள்ளே மறைத்திருக்கக் கூடும் என்று. … எல்லாப் போர்களிலும், நெஞ்சு நிமிர்த்தித் தீரனாகச் செல்லும் அப்பிராணிகள் முதல் கட்டக் கொலை வீச்சில் அனேகமாகக் கொல்லப்பட்டு விடுவார்கள். த மீக், அதாவது தயங்கித் தயங்கிச் செல்லும் மிச்சப் பிராணிகள் கடைசியில் என்ன எஞ்சுகிறதோ அதைத் தம்முடையதாகக் காணலாம் என்று ஓர் அர்த்தம் இதில் கொள்ள முடியும். இறுதிக் கணக்கில் திமிங்கிலம் கடலை ஆள்வது போலத் தோன்றினாலும், அதன் இருப்பே ப்ளாங்டன் போன்ற நுண்ணுயிர் பல்கிப் பெருகுவதில்தான் இருக்கிறது.
ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி
கட்ஸுஷிகா ஹொகுசாய் (Katsushika Hokusai – 葛飾 北斎) 1760 முதல் 1849 வரை வாழ்ந்த ஜப்பானிய ஓவியர். அவரின் இறுதி முப்பதாண்டுகளில் வரைந்த சித்திரங்களின் கண்காட்சியை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கவனப்படுத்துகிறது. அவரின் அந்திமக்காலத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்: ”சொர்க்கம் மட்டும் இன்னுமொரு பத்தாண்டுகளுக்கு என்னை வாழ வைத்தால்…” என்று “ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி”
குளக்கரை
டிஜிடல் இந்தியா என்ற கனவை நடைமுறைபடுத்த மோடி அரசு மிக துரிதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணமற்ற வணிகம் என்பது டிஜிடல் இந்தியாவின் ஆதார கூறுகளில் ஒன்று. அது சீராக நடைபெற தொய்வில்லாத இணைய வசதி எப்போதும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக வியாபார நிறுவனங்களுக்கு ஸ்திரமான இணைய சேவையும், தொடர்பும் இரவு பகலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.
அதே சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரக் கூடிய காலங்களிலும், இடங்களிலும் இதே அரசு இணைய தொடர்புகளை முழுவதுமாக முடக்குவதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக மக்கள் குறைந்த அவகாசத்தில் தங்களை ஒருங்கிணைப்பதற்கு செல்பேசி இணைய தொடர்புகளை தொடர்ச்சியாக அரசு பல இடங்க்களில் கடந்த 2 வருடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வாரங்கள் முடக்கியுள்ளது.
