- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
ஹொன்னாவர் 1606
ஹொன்னாவர் புல்தரைத் தெரு இல்லத்தில் நான் பரமன்.

எந்த பெண்ணும் கல்யாணம் ஆனால் என்ன ஆகலேன்னா என்ன, அப்படியான முடிவு எடுக்க மாட்டாங்க தான். ஆனால் ரோகிணி பிசாசு ஆச்சே.
என்னை வச்சு என்ன என்ன செய்யணும்னு நினைச்சாளோ அதெல்லாம் செய்து முடிச்சா. என்னை பேருக்கு கல்யாணம் பண்ணிண்டு, நேமிநாதனோடு கள்ளக் குடித்தனம் பண்ண நினைச்சா. முடிச்சுட்டா.
குழந்தை மஞ்சுநாத்துக்கு நேமிநாதன் தான் அப்பாங்கற உறவு தெரியாமல் அவனை என் பிள்ளைன்னு சொல்லிக்க ஒரு கல்யாணம் இப்படி. கல்யாணத்துக்கு மூணு வருஷம் முந்தி பெத்துண்ட குழந்தைன்னு அவளை யாரும் ஒண்ணும் சொல்லலே.
கிழவன் மிட்டாய் மேஸ்த்ரித்தனம் ஒரு பக்கம், சித்த ஸ்வாதீனம் அப்போப்ப்போ தவறிடறவன், இதோடு எழுபது சில்லரை வயசிலும் சிருங்காரத்திலே சளைக்காம ஊறிக்கெடக்கறான், பாரு பிள்ளை பெத்துண்டு சாவதானமா கல்யாணம் பண்ணிக்கறான்.
இப்படி என்னை சொல்வாங்க. சொல்லிட்டு போகட்டும். அந்த குழந்தைக்காக, மஞ்சுநாத்துக்காக என்ன வேணும்னாலும் இழிசொல் பொறுத்துப்பேன்.
அப்புறம் இன்னொண்ணு, நான் இங்கே ஸ்திரமா இருக்கப் போறவன் இல்லே. திடீர்னு இங்கே இந்தக் காலத்துக்கு வந்த மாதிரி திடீர்னு இந்தக் காலத்திலே இருந்து, எங்கேயிருந்து வந்தேனோ அங்கே, போயே ஆகணும். இங்கே இறந்து போனா காலவெளியிலே சிக்கல் ஏற்பட்டுடும். இங்கே செத்தா, அப்புறம் 1960-லே பம்பாய்லே திலீப், சாலினி மோரே, கற்பகம் அம்மா எல்லோர் ஜீவிதக் கோடும் சிக்கலாகி விடும் ஆகவே நான் திரும்பப் போகிறவன்.
ரோகிணிக்கு இது சொன்னா புரிய மாட்டேங்குது. புரியாட்ட போகட்டும். அது என்னமோ நாலு நாளா இந்தப் பொண்ணு ரொம்ப ஜாக்கிரதையா பேசறா, பழகறாள். என் கிட்டே எதுக்கு ஜாக்கிரதை பாலிக்கணும்? என்ன தான் ஊர் மேயப் போனாலும், ஊர் அறிய நான் தான் கோகர்ணத்துலே வச்சு அவன் யோசனைப்படி, அவள் தீர்மானித்தபடி அவளை கல்யாணம் செஞ்சுண்டவன். அவ உலகத்துக்கு சொன்னபடி என்னோடு கூடி இருந்து குழந்தை பெத்துண்ட என் பெண்டாட்டி.
அப்படீன்னா, ஏன் என்னை சாகடிக்க பார்க்கிறா இப்போ? கட்டியவனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல திட்டமோ?
முந்தாநாள் நடுராத்திரி கூடத்திலே தரையிலே பத்தமடைப் பாய் விரித்து சின்னதா ரெண்டு தலைகாணி தலைக்கு ஒண்ணு காலுக்கு ஒண்ணுன்னு வழக்கம்போல் வச்சு தூங்கிண்டிருந்தேன். தலைமாட்டுலே கொஞ்சம் தள்ளி சுவர்லே குழிச்ச மாடப் புறையிலே அகல் விளக்கு ராத்திரி முழுக்க சின்னதாக இருந்தாலும் நந்தாவிளக்காக, வெளிச்சம் வந்துண்டே இருக்கறது எல்லா வீட்டிலும் ராத்திரி நடவடிக்கை ஆச்சே. இல்லேன்னா தேளும், ஜலமண்டலியும், பூரானும் செவியனும் வீட்டுக்குள்ளே ராத்திரி வந்து ஜீவிதத்தை நரகமாக்கிடுமே. இத்தனை ஏன், நீர்ப் பாம்பு கூட நல்ல பாம்பு மாதிரி நீளமாக சுருண்டு மேலே ஏறப் பார்க்குமே இருண்ட ராத்திரியிலே.
என்வீட்டு மாடப்புறை தீபம் திடீர்னு அணைஞ்சு இலுப்பெண்ணெய் வாடை. கூடவே எனக்கு தெரிந்த, ஆரம்ப காலத்திலே என்னை அவளோடு முயங்க ரோகிணி அனுமதித்தபோது அவள் காது மடல்லே, இடுப்பிலே இருந்து வந்த ரோகிணி வாடை. அவள் வாய் ஏகத்துக்கு நாறி, லஹரியை அதிகமாக்கியது.
நான் எழுந்திருக்காமல் படுத்துண்டே இருந்தேன். எனக்கு ரொம்ப அருகே அவளோட ஸ்தன வாசனை. அது தனியான மனுஷத் தோல் வாசனை. அடைச்சு அடைச்சு வச்சு மேல் பிரதேசத்துலே இருந்து கிளம்பற அந்த வாடை இல்லாம சிருங்காரம் சரி பாதியாக் குறைஞ்சிடும். கடும் ஜலதோஷமான போது மூக்கில் நீர்வடிய ஏனோதானோன்னு கலவி பண்ற மாதிரி.
ஆக முந்தாநாள் ராத்திரி என்மூக்கு பக்கம் அவளோட பயோதர வாடை நெருங்க, ரொம்ப நாளைக்கு அப்புறம், அந்த உருண்டு திரண்ட மார்பு ரெண்டையும் சேர்த்துக் கவ்விப் பிடிச்சு ரமிக்க ஏற்பாடு பண்ணிண்டிருந்தேன். ஆனா,
அவள் கை நீண்டது என் தலைக்குக் கீழே இருந்து தலைகாணியை உருவ. நானும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் தலைகாணியை விட்டுக் கொடுத்துட்டேன்.
சாகசி, தலைப் பக்கம் இருந்ததை எடுத்த மாதிரி கால் பக்கம் வச்சிண்டிருந்ததையும் பிடுங்கிண்டுட்டா. ரெண்டையும் என் முகத்திலே வச்சு மூச்சு முட்ட வச்சு நான் இப்படி அப்படி அலைபாய்ந்து சுவாசிக்க கஷ்டப்பட்டதை மீறி ரெண்டு மூக்குத் துவாரத்தையும் கையாலே வேறே அடச்சுண்டு என்னை பிணம் ஆக்கறதுக்கான முஸ்தீபுகளிலே இருந்தாள்.
ஓஓஓஓஒ. நான் சுவாசத்துக்காக சத்தம் போட்டேன். அவள் சட்டுனு என் பக்கம் உக்காந்து, விளக்கு அணைஞ்சு போச்சு. நீங்க துர்ஸ்வப்பனம் கண்டு கத்திக்கிட்டிருக்கீங்க. எழுந்து தண்ணீர் குடிச்சுட்டு தூங்குங்க. இல்லேன்னா தலைகாணி ரெண்டையும் சாப்பிட்டுடுவீங்க என்றாள் சிரித்தபடி.
அவள் இதை என் முகத்தைத் தடவிக்கொண்டு சொல்ல, நான் விளையாட்டாக அவளுடைய கொங்கைகளைப் பற்றினேன். கையை விடுவித்துக் கொண்டு பஞ்சுத் தலைகாணி இல்லே இதை பிய்ச்சா ரத்தம் தான் வரும் என்று சொன்னபடி கலகலவென இன்னொரு தடவை சிரித்தாள்.
கனவா, நினைவா என்று புரியாமல் நான் கிடந்த அந்த நிமிஷம் மகத்தானது. ரெண்டுக்கும் இடைப்பட்ட சில வினாடி நேரத்திலே தொங்கிக்கொண்டு இருந்தபடி முழு உறக்கத்துக்கு நழுவிப் போனேன்.
என் உள் மனதுக்குத் தெரிந்தது, அவள் என்னை சுவாசம் திணற வைத்துக் கொல்ல முயன்றாள். கனவாக இருக்கலாம் என்று ஒரு மனம் சொல்ல, அப்படியே எடுத்துக்கொண்டு விடிந்து படுக்கையை சுருட்டி வைத்து விட்டு குளித்துவிட்டு இட்டலி தின்னப் போனேன்.
நேற்றுக் காலை அது. ஷராவதி ஆற்றுத் தண்ணீர் சுத்தமாக இல்லாததால் கிணற்றில் இருந்து நீர் இரைத்து வைக்கும் வேலைக்காரர்கள் அதைச் செய்ய மறந்து போயிருந்தார்கள். இரும்பு வாளியும் அதன் முனையில் நீண்ட தேங்காய்நார் இழைகொண்டு கனமாக உருட்டி நீட்டிய கயறும் மாட்டி கிணற்றடியில் இருந்து வாளியைக் கயறு சகிதம் கிணற்றில் விட்டுத் தண்ணீர் மொண்டிட முனைந்தபோது யாரோ என்னைக் கிணற்றில் தள்ளிவிட பின்னால் இருந்து ஓடி வந்தது போல தோன்றியது.
அந்த உடம்பு வாடை ரோகிணியுடையது என்று சொல்ல வேண்டியதில்லை. நான் திரும்பப் பார்க்க, தோட்டச் செடியில் மகரந்தப் பொடி எடுக்க வந்தமர்ந்த பட்டாம்பூச்சியைப் பார்க்கிறதில் அமிழ்ந்து போனமாதிரி சிலையாக என் பின்னால் நின்றிருந்தாள் ரோகிணி.
நிச்சயம் நான் விலகாமல் இருந்திருந்தால் இன்னேரம் பாதாளம் வரை பாயும் ஆழக் கிணற்றின் உள்ளே இறந்து கிடப்பேனாக இருக்கும்.
உங்களுக்கு வயசாகி விட்டது இல்லையா, அதுதான் தலை சுற்றலும் தேகம் பலவீனமாக நீங்களே உணர்வதும் வரவர அடிக்கடி ஏற்படுகிறதாகி விட்டது. இப்போது என்ன என்றால் கிணற்றில் தண்ணீர் சேந்த நின்றபோது தலைசுற்றல். நல்லவேளை நான் பின்னால் இருந்து தாங்காவிட்டால் இன்னேரம் இதைப் பேசிக்கொண்டு நாம் சாவதானமாக பட்டாம்பூச்சியைப் பார்த்தபடி கிணற்றடியில் நின்றிருக்கமாட்டோம். நான் கிணற்றடியிலும் நீங்கள் கிணற்றுக்கு அடியிலுமாக இருந்திருப்போம்.
அவள் பலமாகச் சிரித்தபடி சொல்ல நான் சும்மா சிரித்தேன். மனசில் ஒரு மூலையில் ரோகிணி பின்னால் இருந்து கிணற்றில் தள்ளிவிடப் பார்த்தாள் என்று தோன்றியபடி இருந்தது.
அது அப்படியாச்சா, இன்று காலை நடந்ததுதான் பின்னும் வேடிக்கை, பெரும் வேடிக்கை.
காலையில் ரதவீதி மிட்டாய்க்கடைக்கு வேலைக்குப் போவது எட்டு மணிக்கு பிரதி தினமும். வீட்டில் இருந்து புறப்பட்டு சுமார் முக்கால் மணி நேரம் நடந்து கடைக்கு வந்து சேருவேன்.
உடலுக்கு தேகப் பயிற்சி என்பதோடு, கால் இருக்கறதாலே கிடைக்கும் சந்தோஷத்தை எல்லாம் உடனே அனுபவிக்க ஆசையும் கூட. இந்தக் காலத்தில் இருந்து பம்பாய், தில்லி, நாகபூர், ரயில், விமானம் என்று நான் இருந்த காலத்துக்குத் திரும்பப் போகும்போது அங்கே ரயில் விபத்தில் இரண்டு காலும் பாதத்தோடு எடுக்கப்பட்டு பழையபடி கட்டைக்கால்களோடு அன்றோ மெல்ல நகர்ந்து போவேன்.
இந்த காலத்தில், கால்கள் முழுசாக இருப்பது தான் எனக்குக் கிட்டிய ஒரே சந்தோஷம். அந்த சந்தோஷத்தை இங்கே எத்தனை நாள் இருக்கப் போகிறேனோ அத்தனை நாள் தீர அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.
முடிந்தால் ஓடலாம். ஆனால் ஓடினால் சீக்கிரம் இனிப்பு அங்காடிக்குப் போய்ச் சேர்ந்துவிடுவேன். அதற்கு மெல்ல இருகாலையும் பலமாகத் தரையில் காலணிக்குள் கவ்விப் பிடிக்க வைத்து அணிந்து சீராக நடக்கிற சந்தோஷம் அது.
வெய்யிலோ மழையோ. வலது தோளில் சீனக்குடை ஆடியாடி, தலைகீழான பூ மலரக் காத்திருப்பது போல் தொங்கிக்கிடக்க, அதை லாகவமாகத் தாங்கி நடப்பேன். மேடு, பள்ளம். கல் பாளங்கள் மேவிய நெரிசலான வீதிகளின் நடைபாதை, ஷெராவதி ஆறு கடலோடு கலக்கும் அழிமுகம் இப்படி ஒரே நடையில் முக்கியமான ஊரிடங்கள் வழியே போகும்படி என் பாதையை நான் தீர்மானித்து வைத்திருக்கிறேன். மழையோ வெய்யிலோ எது வந்தாலும் அந்த வழியை மாற்றவோ, சாரட் ஏறி பயணம் போகவோ நான் எனக்குள் உடன்பட்டதில்லை.
மழை காலத்தில் தோளோடு அணைத்தபடி குடையைப் பிடித்து ஈரம் காதில் கசிய பெரும்பாலும் செருப்பு அணியாது நடப்பது வாடிக்கை. பள்ளமான பிரதேசங்களில் மழைநீர் அல்லது ஷராவதி ஆறு உடைப்பெடுத்து நிறைத்திருக்க, அந்தப் பள்ளங்களை கால்கள் ஸ்பரிசித்து எவ்வளவு ஆழமான குழிகள் என்று அனுமானித்து காலை விட்டோ அல்லது குழியைத் தாண்டிக் குதித்தோ முன்னேறிப் போவது மனசுக்கு பிடித்த ஒன்று.
இன்று மழையும் இல்லை, வெய்யிலும் இல்லை. அழிமுகத்துக்குப் போகும் சாலை வழியே நடந்து கொண்டிருந்தேன். வீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக துறைமுகத்துக்கு ஏலமும் கிராம்பும் மூட்டைகளாக் கட்டி எடுத்துப் போகிற மாட்டு வண்டிகள் வேகமின்றி ஊர்ந்து கொண்டிருந்தன. நடைபாதையில் என்னைத் தவிர அழிமுகத்தை நோக்கி நடப்பவர் வேறு யாருமில்லை.
அப்படி இருக்க இயற்கையிலும் பறவைகளின் இனிய சத்தத்திலும் மனதைப் பறிகொடுத்து மெல்ல நடந்து வரும்போது பின்னால் இருந்து களேபரமான ஒலி. அவசரமாகப் பார்க்கக் கூட இல்லாமல் தெருவுக்குக் குதித்து குறுக்கே ஓடி ரக்ஷைப் பட்டேன்.
தெருவின் எதிர் நடைபாதையில் ஏறி என் பின்னால் வந்த ராட்சத வாகனம் எது எனப் பார்த்தேன். இரட்டைக் குதிரை பூட்டிய சாரட். அந்தக் கழுவேறி நேமிநாதனுடைய அடித்துப் புரண்டு நரகத்துக்கு ஓடிப் போய்க் கவிழ்ந்து சில்லு சில்லாக உடைபடப்போகும் வண்டியை இந்தப் படுபாவிப் பெண்பிசாசு நான் சாவதானமாக நடக்கிற நேரம் பார்த்து பின்னால் இருந்து என்மேல் மோதி என்னைக் கொல்ல முயற்சி எடுத்ததும்தான் எனக்குப் பொறுக்க முடியாமல் போனது.
இந்த பதினேழாம் நூற்றாண்டின் முதல் வருஷங்களில் மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் மனுஷ மனுஷிகளை கிறிஸ்துநாதர் பிறந்த 20ஆம் நூற்றாண்டு வருஷம் 1960களில் ஜீவிக்கிறவர்களோடு ஒப்புச்செய்தால் ஒரு மண்ணும் தெரியாத நிராட்சரகுஷ்டிகள் இவர்கள்.
காலமும் நீள அகலம் மாதிரி ஒரு பரிமாணம், காலத்தில் பயணம் செய்து இருநூறு வருஷம் பின்னால் போகவோ, முன்னூறு வருஷம் முன்னால் போகவோ சாத்தியம் உண்டு என்று யோசித்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். இதிலே, நானூறு வருஷம் முந்தைய காலத்தில் இருந்து வந்து இருக்கிற என்னை கொல்லணுமாம். காலச் சங்கிலி அறுந்து போகுமல்லோ அப்புறம்?
நான் ஒரு கிறுக்கன் என்று ஒருத்தன், ஒருத்தி விடாமல் நம்புகிறார்கள். ஒரே ஒருத்தர் தான் இதைப் புரிந்துகொண்ட தொனியும் தோரணையுமாக என்னோடு ரெண்டு நிமிஷம் பேசியவர். திக்குகளையே உடுப்பாக உடுத்திய நிர்மலானாந்தா என்னும் நிர்மல் முனி.
போன வாரம் ஹொன்னாவர் பழைய அங்காடித்தெரு ஜெயின் மந்திரத்தில் தீர்த்தங்கர விஜயம் என்று எல்லா தீர்த்தங்கரர்களைப் பற்றியும் தொடர் சொற்பொழிவு செய்ய நிர்மல் முனி வந்தபோது பல நாள் சாயங்காலம் நான் போயிருந்து நாலு நல்ல வார்த்தை காதில் விழுந்து மனசில் படிய முயற்சி எடுத்துக் கொண்டேன்.
அவர் சொன்ன ஒரு வாக்கியம் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது – காலம் தொடக்கமற்றது. முடிவுமில்லாதது. காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. கடியார முட்கள் போல் பிரதட்சணமாக அந்தச் சக்கரம் சுழல்கிறது. காலம் என்ற ஒற்றைவெளி மேல்நோக்கி அல்லது முன்நோக்கிச் சுழலும் காலம், கீழ்நோக்கி இயங்கும் காலம் என இரண்டு பகுதிகளால் ஆனது.
சுழல் இயக்கத்தால் எல்லா நிகழ்வும் திரும்பவும் திரும்பவும் திரும்பவும் நிகழலாம். இதோ நான் பேசுகிறேன், நீங்கள் கேட்கிறீர்கள் இந்த கணம் இனியும் ஒரு முறை, பல முறை திரும்ப நிகழலாம். ஏற்கெனவே நிகழ்ந்திருக்கலாம்.
நான் பரபரப்பாக கைகூப்பி எழுந்தேன். யார் யாரையோ எப்படித் திரும்பப் போவது என்று விசாரித்து அலைந்து திரிந்தேனே. காலம் பற்றி இந்த சமண முனிவர் மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருப்பார் என்று தெரியாமல் போய்விட்டேனே. எழுந்து நின்று வணங்கினேன்.
பூஜ்யஸ்ரீ முனிபுங்கவரே, நான் வெறுந்தூசி. பரமன் என்ற பரமேஸ்வரனின் லட்சம் கோடி நமஸ்காரம். காலப் பெருவெளியில் எனக்கு மட்டும் ஏன் பின்னோக்கி இயக்கம்? நானூறு வருடம் பின்னால் ஏன் வரவேண்டும்?எப்போது திரும்புவேன் எங்கிருந்து வந்தேனோ அங்கிருந்து?
அவர் நிமிர்ந்து பார்த்துச் சொன்னார் – உன் வண்டி வரும் நேரம் நெருங்குகிறது. சும்மா இரு.
நான் இரண்டு நாளாக இதை மனதில் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஹொன்னாவர் ரதவீதி மிட்டாய் அங்காடியில் நான் ரோகிணி
ஒண்ணொண்ணும் பார்த்துப் பார்த்துத்தான் செய்கிறேன். இந்த விமானக் கிறுக்கு கிழவன் எல்லாவற்றையும் தொடர்ந்து பாழ்பண்ணி விடுகிறான். இன்றைக்கு சனிக்கிழமை. கடந்து போன ஞாயிற்றுக்கிழமை முதல் இவனுக்காக வலை விரித்து வைத்திருக்கிறேன்.
இது காமமும் உடல் பசியும் சேர்த்து உருட்டிப் பிடித்த, ஆகர்ஷிக்கும் மனுஷ உடம்பு மேற்தோல் போர்த்திய வலை. வலை விரித்து, போதம் கெடவைத்து, என் கணவனுடைய உயிரை எடுக்க நான் கடுமையாக உழைக்கிறேன்
ஆனால் பட்சி வலையில் சிக்கவில்லை இதுவரை. முதல் வேலையாக ஞாயிறு காலையிலேயே குழந்தை மஞ்சுநாத்தை ஹொன்னாவர் வீட்டில் இருந்து ஜெருஸூப்பா இல்லத்தில் என்னோடு இருத்திக் கொண்டேன்.
குழந்தை என்னோடு அவ்வளவாக ஒட்டவில்லை. எப்போதும்போல்தான் இது. அப்பாவை பிரிந்த துக்கம். அவனுக்கு அப்பா என்பது பரமன் என்று பேசத் தெரிந்த காலத்திலேயே சொல்லிக் கொடுத்தாகி விட்டது.
நேமிநாதனுக்கு அவன் மகன் என்பதில் அக்கறை இல்லை. அவனுக்கு நேமி தான் தகப்பன் என்பது இன்றுவரை தெரியாத உண்மை. அது தெரிய வரும்போது அவனும், நானும், நேமியும் பரமனும் என்ன ஆகியிருப்போமோ.
ஞாயிறு முழுக்க அப்பா அருகில் இல்லாத துக்கத்தை அழுது தீர்த்தான் மஞ்சுநாத். தெருநாய்களும், வீட்டில் வளர்க்கும் பூனையும், முயல்களும் பட்டாம்பூச்சிகளும் அவன் கவனத்தை அடுத்துக் கவர மஞ்சுநாத் தானே தனக்கான விளையாட்டுகளை இவற்றோடு சேர்ந்து வடிவமைத்துக் கொண்டான். அவன் வயதுக்கு இது அதிகமான பக்குவமும் சுய அறிவும் கலந்த முன்னெடுப்பு.
அவனை ஜெரஸோப்பாவில் விட்டுவிட்டு திங்களன்று நான் ஹொன்னாவர் திரும்பும்போது, வீட்டு ஊழியர்களோடு இருப்பதில் சந்தோஷம் அடைந்ததாகவும், ஒரு வாரம் முழுக்க இருக்க எந்த கஷ்டமும் இல்லை என்றும் என்னிடம் குழந்தை மஞ்சுநாத் சொன்னபோது அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுக்க எந்தத் தாயும் போல் பாசத்தால் செலுத்தப்பட்டேன்.
நான் பிடிவாதமாக பிரியம் காட்டாது அவன் தலை தடவி உச்சந்தலையில் முத்தமிட குனிய அவன் நகர்ந்திருந்தான்.
சாப்பாடு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை அவனுக்கு. சமாளித்துக் கொள்வான்.
ராத்திரியில் உறங்கும் முன் ஒரு கதை சொல்ல யாராவது வேணும். அது பரமனப்பாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றான் குழந்தை மஞ்சுநாத்.
கறுப்பன் என்பதால் கோச் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்ட ஒரு உயரமான மெலிந்த மனிதனைப் பற்றி நிறையக் கதை சொல்லியிருக்கிறார் பரமன் அப்பா.
சமுத்திரத்தில் இருந்து உப்பு எடுத்து காய்ச்சி உபயோகிக்க வரி ஏன் தர வேண்டும் மாட்டேன் என்று அமைதியாக யுத்தம் செய்தவனாம் அவன். அரை நிர்வாணப் பக்கிரியாம். அவனையும் அவன் சகாக்களையும் அரசாங்கக் காவலர்கள் மூர்க்கமாகத் தடி கொண்டு தாக்கியும் அதெல்லாம் பொறுத்து, திருப்பி அடிக்காமல் வரிசை வரிசையாகப் பிடிவாதமாக உப்பெடுக்க முன்னால் நகர்ந்த அந்தக் கிழவனையும், அவனுடைய சகாக்களையும் பற்றி மஞ்சுநாத் சொன்ன ஆர்வம் எனக்கே அந்தக் கதை கேட்கத் தோன்றியது.
போகட்டும். அரைக்கிறுக்கன் பரமன் சொன்ன கதைக்கு கால் ஏது வால் ஏது? உப்புக் கிழவன் கதை எல்லாம் குழந்தையை முக்கால் கிறுக்கன் ஆக்கிவிடும். அவனுக்கு பயம் போக பிசாசுக் கதைகள் சொல்ல வேண்டும்.
போகட்டும். இனிமேல் இரண்டு பேரும் சந்திக்கப் போவதில்லையே.
திங்கள் பகல் ஹொன்னாவர் வந்து உறங்கலாம் என்று ஓய்வெடுக்கப் படுக்க, ஆப்பிரிக்க மந்திரவாதி வந்து சேர்ந்தான். ஒரு மணி நேரம் வீட்டுக் கூடத்தில் எங்கே ரகசிய அறை கட்டுவது, நீள அகலம்,உயரம் எவ்வளவு எப்படி மறைத்து வைப்பது எப்படி திறப்பது எல்லாம் ஏற்கனவே சர்ச்சை செய்ததை வரைபடமாக்கிப் போட்டுக் கொண்டுவந்திருந்தான்.
சொன்னது சொன்னபடிக்கு அச்சாக வரைபடம் வந்திருந்தது. இதை நாளை முதல் கட்டுமானப் பணி தொடங்கலாம் என்றான். செவ்வாய் வேணாம் புதன் தொடங்கலாம் என்று நான் ஒரு நாள் தள்ளி வைத்தேன்.
செவ்வாயன்று ரொம்ப பழக்கமான, கட்டடம் கட்டும், என்றால் கல்லறை எழுப்பும் கொத்தர்கள் காலையில் பரமன் இனிப்புக் கடைக்குப் போன பின் வந்து பார்த்தார்கள். அவர்களுக்கு இப்போது நிறைய கிராக்கி. வீட்டுக்கு வீடு புதையலாகக் கொஞ்சம் மறைத்து வைக்க இந்தக் கல்லறை அமைப்புகள் வாகாக இருக்கின்றன.
நடுவிலே பெரிய கட்டுமானம் செல்வ மகாராணியை வைக்க. ரெண்டு பக்கத்திலும் காவல் வாசல். ஆப்பிரிக்க மந்திரவாதி சொன்னது புரியாமல் கொத்தனார்கள் விழிக்க நான் சமாளித்தேன் – நடுவிலே இருக்கற இடத்திலே மதிப்பு கூடிய பொருளும் பொன்னும். பக்கத்திலே பூச்சி பொட்டு கிருமிகள் கிட்டே இருந்து பாதுகாப்பாக வைக்க மிளகும் உப்பும். உள்ளே தண்ணீர் கசியாமல் பார்த்துக் கட்டணும்.
இது கட்டடம் கட்டும் கொத்தனார்களுக்குத் தெரிய வேண்டிய தகவல். எனக்கும் ஆப்பிரிக்க மந்திரவாதிக்கும் தெரிந்திருக்கும் தகவல் கொஞ்சம் கூடுதலாக, நிஜம் கிட்டத்தட்ட முழுக்க இருப்பதாக வேண்டியது.
ஜெருஸோப்பாவில் எல்லோரும் தாற்காலிகமாக புதையல் வைத்து வீட்டை இடித்து வைக்கிற காரியத்தில் மும்முரம் என்றால் நான் வித்தியாசமாக ஹொன்னாவரில் ஒரு வீடு அடிமட்ட விலைக்கு வாங்கி அங்கே புதையல் மறைத்து வைக்க சூழ்நிலை ஏற்பட்டால் அந்தப்படிக்கு கொத்தனார் கட்டுமானம் செய்யத் திட்டமிட்டேன்.
அந்தப் புதையலைப் பாதுகாக்க நரபலி வேண்டும் என்றான் சீன மந்திரவாதி. ரொம்ப யோசித்து, எந்த நரன் என்று முடிவு செய்தோம். இந்தக் கிழவன் பரமன் தான். என் புருஷன்.
வீடு பரமனுக்குப் பழக்கமாக, அவனை இங்கே இருப்பு மாற்றிக்கொள்ள மோகன வசியம் செய்து நச்சரித்தேன். ரொம்பக் கிழமானதால் வசிய வலை எல்லாம் ஒரு மயிரும் பிரயோஜனப்படவில்லை.
நாளையில் இருந்து புல்தரைவீதி வீட்டில் போய் இரும். இது நேமிநாத மகாராஜா கட்டளை. இதற்கு சரி என்றால் தான் நீர் விமானத்தில் தில்லி போய் நடுவே பம்பாயில் இறங்க முடியும். ஆப்பிரிக்க மந்திரவாதி வந்திருக்கிறான். நாளை ஊடு மந்திரவாதம் செய்யப் போகிறான் என்று அடித்து விட அவன் ஒரு வார்த்தை விடாமல் நம்பிவிட்டான்.
ஊர்ப்பெயர் நான் தப்பாக சொன்னதாக வேறே சுட்டினான் – தில்லியில் இருந்து பம்பாய் போகும் விமானத்தில் நாக்பூரில் இறங்கினேன் என்பது தான் உண்மை. என்னை பம்பாயில் கொண்டு போய்ச் சேர்த்தாலே போதும் என்றான் உச்சைக் கிறுக்கனாக. அப்புறம் அவனை வீடு மாற்ற எந்தக் கஷ்டமும் இல்லை.
புதன்கிழமை அதிகாலை அவனை அதிகாலையில் முகத்தின் மேல் தலையணைகளை வைத்து அழுத்தி சுவாசம் நிறுத்த முயற்சி செய்தேன். அவனுக்கு நுரையீரல் பலமாக இருப்பதால் மூச்சுத் திணறலோடு தப்பினான்.
அடுத்து கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட முயற்சி. பின்னால் இருந்து வேகமாக நான் ஓடி வர அவன் ஒரு வினாடி திரும்பிப் பார்த்தான். என் லேசான காலை நிழல் அவனுக்கு கிணற்றடியில் தெரிந்திருக்கலாம். என்னவோ, அவன் அப்போதும் தப்பி விட்டான்.
அழிமுகம் போகும் சாரெட்டை ஏற்றி காயம் உண்டாக்க முயற்சி அவசர அவசரமாக நினைத்து அவசரமாக நிறைவேற்றப் பார்த்து தோற்றுவிட்டது.
எனினும் நாளை புதையல் கிடங்கு கட்டும் நாள். போன வாரமே முடித்திருக்க வேண்டியது. மழை காரணமாக முடியவில்லை. இனியும் அதைத் தள்ளிப்போட முடியாது. முடிந்தால் ராத்திரி தங்கி வேலையை முடிக்கட்டும் கொத்தனார்களும் சிற்றாள்களும். காவல் மாடம் இப்போதைக்கு வெற்றிடமாக இருக்கட்டும். பரமன் கிடைத்தபிறகு அடைத்துக் கொள்ளலாம்.
நேமி மூலம் இன்று ராத்திரி இவன் கதையை முடிக்க வேண்டியதுதான். அது முடியுமானால் காவல் மாடம் நிறையும். வெளியாரோ மிட்டாய் அங்காடியிலோ யாரும் கேட்டால் விமானம், தில்லி, பம்பாய் என்று பைத்தியம் முத்திவிட்டதால் மலபார் பிரதேசத்து நம்பூதிரி மனைக்குள்ளே சிகிச்சைக்காகக் கட்டி வைத்திருக்கிறதாகச் சொல்லிவிடலாம். வேலை மெனக்கெட்டு நம்பூத்ரி மனைகளில் யார் ஏறி இறங்கப் போகிறார்கள்?
இங்கே அவனைக் காவல் இருக்கக் கொண்டு வர முடியாவிட்டால், மால்பே துறைமுகத்தில் கடல் கொள்ளட்டும் அவனை.
மஞ்சுநாத் மட்டும் அவனுக்காக வருந்துவான். அப்பா அப்பா என்று தேடுவான். அவனுக்கு சீக்கிரம் வேறு உறவுகள் கிடைக்கட்டும். அவர்களுக்கு சமுத்திரத்தில் உப்பு எடுத்த அரை நிர்வாணக் கிழவன் பற்றித் தெரிந்திருக்குமோ என்னமோ.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
