சூர்யனைச் சுற்றி வரும் நம் புவியின் வட்டப்பாதை மாறிக் கொண்டு வருகிறது; அது பெரிய அளவில் வருடம் தோறும் மாறுவதில்லை. சந்திரன், மற்றும் சில கிரகங்களின் ஈர்ப்பு இழுவைகளால், புவியின் சுற்று வட்டப் பாதை பாதிக்கப்பட்டு அதில் மாறுதல்கள் உண்டாகின்றன. இதனால், நம் பூமி காலநிலை/ பருவ நிலை மாற்றங்களுக்கு உட்படுகிறது. பூமியின் அச்சு சிறிது சாயும், அதன் சுழற்சி பாதை மாறும், மெலான்கோவிட்ச் கால நிலை சுழற்சிக்குக்(MilankOvitch Climate Cycles) காரணமாகும்.
