‘அவனுக்கென அமைஞ்ச ஒரு உறவை ஆதரிக்கிறதுக்குப் பதிலாக புழுங்குறனே, தாயெண்ட உறவையும் மேவின ஆதங்கம்தானே இது,’ அவளுக்குத் தன்மேல் பச்சாதாபமும் கோபமும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. ‘என்ரை விதி இப்படியானதுக்காண்டி, என்ரை பிள்ளையும் காயுறதே?’ அவள் நினைவுகள் சங்கிலியாகத் தொடர்ந்தன.
Category: சிறுகதை
ஆனந்த நிலையம்
“கெழவனும் கெழவியும் இருக்கறவரைக்கும் யாரும் எதுவும் பேசல. ரெண்டு பேரும் மண்டய போட்டதும், எல்லாருக்கும் சொத்து ஞாபகம் வந்துட்டுது…”
“சாகறதுக்கு முன்னால யாருக்கு என்ன உண்டோ அத பெரியவரே சுமுகமா பிரிச்சி குடுத்திருக்கலாம்ல?”
“அதான் பெரியவங்க செஞ்ச பெரிய தப்பு. கடசி மூச்சு இருக்கறவரைக்கும் அவரும் அத செய்யல. இவரும் அத பத்தி ஒரு வார்த்த கூட வாயத் தெறந்து கேக்கல. கேளுங்க கேளுங்கன்னு இவருகிட்ட தலபாடா அடிச்சிகிட்டன். நீ சும்மா இரும்மா, என் கூட பொறந்தவங்கள்ளாம் அப்பிடி இல்லம்மா. எல்லாருமே சொக்கத்தங்கம். எதுவும் கேக்கமாட்டாங்க. எல்லாருமே அந்த நாட்டுல ஊடு பங்களானு இருக்கறவங்க, இதுக்கு போயி பங்குக்கு வரப்போறாங்களான்னு மெதப்புலயே காலத்த தள்ளிட்டாரு. இப்ப என்ன சொல்றாங்க தெரியுமா?”
ரசவாதம்…
மலையில பெய்யுற மழை ஓடி வரப்போ அதோட மண்ணு, மரஞ்செடி இதுல இருக்குற சத்தெல்லாம் அள்ளிட்டு வந்துரும். அது பாறைகளோட இடுக்கு, குழி இதுல தேங்கி நிக்கும். இப்படி தேங்கி நிக்குற தண்ணியோட சக்தி சொல்லி மாளாது. உங்களுக்குப் புரியற மாதிரி சொன்னா, இதுவரை சயின்ஸ் கண்டுபிடிக்காத பவர்புல் கெமிக்கல் அது. நினைச்ச நேரத்துல அதை எடுத்துற முடியாது. ஒவ்வொரு மலைக்கும், அதுல உள்ள ஒவ்வொரு பாறைக்கும், ஒவ்வொரு பாறையில உள்ள ஒவ்வொரு குழிக்கும் தனித்தனி இயல்பு இருக்கு. அதப்பொறுத்தும் கால நேரத்தைப் பொறுத்தும் எடுத்தாத்தான் வேலை செய்யும்.
யாத்திரை
பஸ் நின்றது. ஒரு இளைஞன் ஏறிக்கொண்டான். இருபத்தைந்து வயதிருக்கும். சுமாரான உயரம் முகத்தில் ஒரு சிறுவனுக்குரிய விஷமமும் விளையாட்டுத்தனமும் தெரிந்தது. கழுத்துக்கு இருபுறமும் இரு நேர்க்கோடுகள் போட்டாற் போல் தோள்கள் தோளில் குறுக்காக ஒரு ஜோல்னாப் பையைத் தொங்கவிட்டிருந்தான். முதுகுப்புறம் ஒரு கருப்பு ஜர்னி பேக். பயங்கர கனம் போலும். முதுகை வளைத்து நின்றான். காம்பேட் யூனிபார்ம் அணிந்திருந்தான்…
கரி
தூங்கறப்போ அவ பின்னாடி நின்னதும் பின் அவளைப் பார்த்து பயந்ததும் அவனை சீண்டிருச்சின்னு நினைக்கிறேன். ஒண்ணை மறைக்க இன்ணொண்ணு.. அதை மறைக்க வேறொண்ணுன்னு போயிட்டே இருக்கான். நாம என்னைக்கும் ஒரு கோடுபோட்டு அதுக்குள்ளதான் வாழறோம். அதுக்கு மேலயோ கீழயோ போறதில்ல. ஆனா இவனைப்பாரு.. அஞ்சு வருஷத்துக்கு ஒரு கெட்டப்புன்னு இப்ப இந்த இடத்துல வந்து நிக்கிறான்..”
கெவுரவம்
“மக்கா..அதுல ஒரு மேட்டரு இருக்கு…ஒனக்கு அதெல்லாம் புரியாது…விடு மக்கா.. லைஃப நல்லா என்ஜாய் பண்ணுவோம் மக்கா..நம்மூரு மீங்கறி US-ல கெடைக்குமா சொல்லு….எங்களுக்குல்லாம் அவியலா, லட்சம் ரூவாயான்னு கேட்டா அவியல்னு தா சொல்லுவோம்…விடு டே..ஒனக்குப் புரியாது..”
யானை யானையாகும் தருணம்
நாங்கள் இப்போது பாதி மனித உடலுடனும், மீதி தாவர உடலுடனும் இருக்கிறோம். இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கான சாதகங்கள் அதிகம். உடலுக்கு தேவையான சக்தியை உடலில் இரண்டறக் கலந்துள்ள தாவரம் சூரிய சக்தியிலிருந்து பெற்றுவிடும். தாவர உண்ணிகளான மான்கள், ஆடுகள், மாடுகள் போன்ற தாவர உண்ணி விலங்குகள் எந்தத் தாவரங்களை உண்பதில்லையோ அந்தத் தாவரங்களின் விதைகளோடு எங்கள் மரபணுக்களைக் கலந்து பிறழ்வு செய்துகொண்டால் மட்டும் போதும். அந்தத் தாவரங்களாக எங்கள் உடலின் ஒரு பாதி இருப்பின், தாவர உண்ணிகள் எங்களை தவிர்த்துவிடும்.
நவம்
“தெய்வங்க மண்ணுக்கு எறங்கி வரணும். மனுசங்கள போலவே எட்டு திசைக்கும் அவங்க கட்டுப்பட்டாகணும். எட்டு திசை தெய்வங்களுக்கு கட்டுப்பட்டாகணும். கிழக்குல இந்திரன், தென்கிழக்குல அக்னி, தெற்குல யமன், தென்மேற்கு ல நிருதி, மேற்குல வருணன், வடமேற்கு ல வாயு, வடக்குல குபேரன், வடகிழக்குல ஈசானன்” என்று ஒவ்வொன்றாக புள்ளிவைத்து, “மொத்தம் ஒன்பது கட்டங்க.
கண்காட்சி
நான் பிறந்தபோது ஆக்ஸிஜனை சுவாசித்தேன். இப்போதோ நான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கிறேன். நான் என் எஞ்சிய வாழ்வை வெறும் ஒரு தாவரமாகவே கழிக்கக் கூட நேரலாம். என் வாழ்வின் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் விலங்காக இருந்து நிறைவேற்றினேன்? எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன்? நான் விலங்கிலிருந்து தாவரமானது இந்த பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கின் எந்தப் புள்ளியை முழுமையடையச்செய்ய இருக்கிறது?
கொடிப்பூ மாலை
அவன் ஆசிரியர் அருள்தாஸ் கூறியது நினைவுக்கு வரும். “கணக்குங்கிறது வெறும் நம்பர்களைப் படிக்கிறது இல்ல. கணக்குத் தெரிஞ்சவன் வாழ்க்கைய சரியா வரையறுக்குறான். ஏன்னா இங்க நம்மள சுத்தியிருக்குற எல்லாத்தயும் எண்களோட மொகமா மாத்திறலாம். பட்டினி என்பது மாசம் ஐநூறு ரூபாய் இல்லாததுதான். அடிமைத்தனத்திலிருது மாசம் ரெண்டாயிரம் சம்பாரிக்க தெரியிறது மூலமா வெளியில வந்துறலாம்.” நேர்முகமாக் குனிந்து அவன் கண்களை நோக்கி கூறினார்.
மிகப்பெரிய அதிசயம்
“நிகழ்காலம் பிடிக்காவிட்டால் எதிர்காலத்தை மாற்றி அமைக்க திட்டம் தீட்டுகிறோம்.”
“முன்னேற்றம் என்று நாம் சொல்லும் அத்தனைக்கும் அது காரணம்.”
“எதார்த்தத்தை மறுத்து நமக்குப்பிடித்தமான கற்பனையை நிஜம் என நம்புகிறோம். அளவுக்கு மிஞ்சிய சத்தில்லாத உணவும் சோம்பல் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு மட்டுமே நோய் நமக்கு இல்லை என நினைக்கிறோம். நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளில் பெரும்பாலோருக்கு அநாவசிய சந்தேகம்.”
முதல் காலடி
பயணக்குழுவில் சாஹிப்புகளைத் தவிர, என் ஷெர்பா அணியில் இருந்து ப்யு தார்கே, டா நாம்க்யால், அஜ்பா, டோர்ஜி மற்றும் நோர்பு……அன்று மட்டும் கிட்டதட்ட எட்டு மணி நேரங்கள் ஏறியிருப்போம்.
25,680 அடிகள் உயரமான நெப்ட்ஸ்ஸின் சிகரம் (nuptse) இப்போது எங்களுக்குப் பின்னால் இருந்தது. நாங்கள் அதற்கு சரிக்கு சரியான உயரத்தில் இருந்தோம். ….சூரிய ஒளி சுருங்கிக்கொண்டே வந்தது, குளிர் மேலும் கடுமையாக எங்களை போர்த்திக்கொண்டு இறுக்கி அணைத்துக்கொண்டிருந்தது. சற்று நேரம் சிரமப்பட்டுக்கொண்டு வந்த நோர்பும் டோர்ஜாவும் திடீரென நின்றார்கள்.
நிழல்
“மைந்தர்கள் தந்தையரின் உச்ச கணத்தில் பேரண்ட பெருங்களிப்பில் நிகழ்கின்றனர். தந்தையரின் விந்தில் நாம் உற்ற போது மைந்தராகிய நாம் நிகழ்ந்துவிடுகிறோம். பிறத்தல் என்பது பின்னர் தான் நிகழ்கிறது. “தந்தையே, தந்தையே ” என்ற நம் குரலை அவர் அப்பெருங்களிப்பில் இருக்கும் போது செவி மடுக்கவேண்டும். ஆயிரமாயிரம் குரல்களில் எக்குரலுக்கு அவர் செவி மடுக்கிறாரோ அவரையே தந்தையர் தன் மகன்களாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களே அன்னையரின் கருவில் திகழ்ந்து பிறக்கவைக்கப்படுகின்றனர்.
திருவண்ணாமலை
“கண்ணன், நீங்க இப்படி திருவண்ணாமலைன்னு சொல்றீங்க பாருங்க.. அது ஒரு நல்ல பழக்கம்.. அதன்மூலம் கோபத்தை அடக்கலாம்.. ஆயிரத்தியெட்டு முறை சொன்னால் ஒரு கிரிவலம் சென்ற பலன் கிடைக்கும்… தெரியுமா,” என்றார் லேத்து மிஷின் இன்சார்ஜ்.
தரிசனம்
உள்ளே சின்ன அறையில் வழக்கத்துக்கு அதிகமாக ஆட்கள் கூட்டமாகத் தென்பட்டார்கள். ஓரமாக தரையில் படுக்கை, ஜூர வேகத்தில் உடம்பு அதிர ,அரைக் கண்ணைத் திறந்தபடி ராமானுஜன் படுத்திருந்தான். மூச்சு சிரமப் பட்டு வந்தது. பக்கத்தில் கைக்கெட்டும் இடத்தில் சில பேப்பர்கள். இரண்டு நாள் முன்பு கூட ஏதோ எழுதிக் கொண்டிருந்தாக லட்சுமி சொன்னாள். அருகிலேயே ஜானகி தரையில் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பக்கம் தோல் பெட்டி இருந்தது. ராமசந்திரராவ் நின்றிருந்தார். ராமானுஜனின் தம்பிகள் இரண்டுபேர், கூடவே இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். ராவ்தான் வருகையைக் கண்டு லேசாக தலையை அசைத்தார். மௌனம், ராமானுஜனின் கனத்த மூச்சைத்தவிர.
வேலைக்கு ஆள் தேவை
‘குச்சினா-க்ராஃப்ட்’டின் அதிவேக வளர்ச்சியில் தனக்கும் ஒரு பங்கு என்று ராகுல் நினைத்ததால் வேலை நிரந்தரம் என அடிமனதில் ஒரு நிச்சயம். அது இல்லாமல் போனதால் விரக்தி. அடுத்துவந்த சில வாரங்களில் அது ஏமாற்றமாக மாறியது. பதினோரு ஆண்டுகளுக்கு முந்திய பொருளாதாரத் தாழ்வின்போது அவன் மாணவன். அவனை அது பாதிக்கவில்லை. இப்போதைய பொருளாதார சுருக்கத்தின் இறுக்கத்தை முழுமையாக உணர்ந்தான். அவனுடைய அனுபவமும் அறிவுமே அவனுக்குப் பகை.
சீதா
மாமா,“கல்லாவில பணம் எண்றவங்க வேணாம்ன்னா நமக்கு மாப்பிள்ளை அமையுமா? நம்ம ஆளுக சிறுசிலருந்து எல்லாம் கடையில வளந்ததுக,” என்றார்.
சீதா குறுக்கே புகுந்து, “அவங்க கீழ எல்லாம் என்னால இருக்க முடியாது. . ” என்றாள்.
தெளிவு
மாமியின் பேச்சில் பொதுவாக ஒரு ஐம்பதைந்து வயதான , மேல் மத்திய தரக் குடும்பப் பெண்மணியிடம் நாம் எதிர்பார்க்கிற மனமுதிர்ச்சி, பக்குவம், நிதானம் இவை எதுவும் இருப்பதில்லை. மனதில் தோன்றியதை தோன்றியவுடன் பேசுகிற சுதந்திரமான, விளையாட்டுத்தனமான மனநிலையில் இருப்பவர்போலத்தான் அவர் பேசுகிறபோது தோன்றும். சில சமயம் அவரின் கேள்விகள் இருட்டு அறைக்குள் , தெருவில் வருகிற காரின் தலை விளக்கு வெளிச்சம் ஒரு க்ஷணம் சடக்கென்று எதிர்பாராத வெளிச்சத்தைத் தருவது போல இருக்கும்.
ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்
அவன் ஆரம்பங்கள் அனைத்துமே இப்படித்தான். நாள் நேரம் தேதி பொழுது அனைத்தும் துல்லியமாக இருக்கும். மனதில் அவை இன்னும் முழுமையான உயிர்ப்புடன் இருக்கின்றன. மறதி இன்னும் தீண்டவேயில்லை. அந்தக் கணங்கள் அந்த பொழுதுகள் அடர்த்தி குறைய வேண்டும். அவற்றின் இடத்தில் வேறேதாவது வந்து அமர வேண்டும். படைத்த தெய்வங்கள் கருணை வைத்தால்தான் உண்டு. கடவுள் சில விஷயங்களை ஒரு துளி மட்டுமே கொடுக்கச் செய்கிறான்.
நிவிக்குட்டியின் டெடிபேர்
கரடிபொம்மையின் முகத்துக்கு நேரே கீழே இறங்கி, சேர்ந்திணைந்து பொம்மையைக் கவ்வியது. நிவிக்குட்டியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. கைகளை விரித்துக்கொண்டு குதித்தாள். “அப்பா தேங்க்ஸ்ப்பா” என்று கத்தினாள். பொம்மையைக் கவ்விய கைப்பிடி, மேலே உயர்ந்தபோது பொம்மையை நழுவவிட்டு, கம்பி மட்டும் மேலே போனது.
என்ன பொருத்தம்!
பொதுமக்கள் நலத்தில் எம்.எஸ். பட்டம் வாங்கி வெவ்வேறு இடங்களில் வேலை தேடியபோதுதான். பெரிய மருந்து நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மக்களில் இத்தனை பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இன்னின்ன நோய்கள், அவற்றுக்கு என்னென்ன மருந்துகள் விற்கலாம் என்று கணக்குக்காட்டுவது அவன் வேலைத்திட்டம். அதற்கு எதிராக அரசாங்க அலுவலகத்தில் நுழைந்து மருந்துகளின் துணையில்லாமல் மக்களின் உடல்நலத்தை உயர்த்த அவள் முயற்சித்தது விரிசலுக்குக் காரணம். …. டாலரை எண்ணியெண்ணி செலவழிக்கும் சில்லறை மனிதர்களுடன் பழகும் அவளுக்கும், அஷ்வின் டயானா போல பணத்தை எப்படியெல்லாம் வாரியிறைக்கலாம் என்று யோசிக்கும் குடும்பங்களைக் குறிவைக்கும் ராகுலுக்கும் ஒத்துப்போகுமா?
அவர் வழியே ஒரு தினுசு
“மார்க்கெட்டிங். இந்தியாவில் சத்து இல்லாத செயற்கை சாப்பாட்டை விற்க எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற தலைப்பில். சென்னை டிவியில் சோடா, சாக்லேட், சிப்ஸ் இதுக்கெல்லாம் எவ்வளவு கமர்ஷியல்! கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும் இட்டிலி, லட்டு, காப்பிக்கு பதிலாக வெள்ளை ப்ரெட், டோநட், கோலா. அதானல உடல் பருமன், இதய பலவீனம், இரத்தத்தில் சர்க்கரை.”
பந்தயம்
தொப்பென்று கனவில் மாம்பழம் விழுந்ததை கேட்டு விழித்தான் ராமன். மணி என்ன இருக்கும் என்று எண்ணியவாறு முற்றத்தை நோக்கினான்.வெயிலுக்காக சிறுகட்டைகளை வைத்துக்கட்டி அதன் மேல் பனைநாரால் கட்டப்பட்டிருந்த பனையோலை இற்று உதிர்ந்த இடைவெளியில் வானம் கருநீலமாகத் தெரிந்தது. நேரமாகியிருக்கும் என்ற பதட்டத்துடன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த அக்காமேல் படாமல் மெதுவாக எழுந்து இரும்பு…
செந்திலின் சங்கீதம்
அதுவரை ஒரே ராகத்தில் வாசித்து வந்து விட்டு, இந்த கீதம் மாறுதலாக, மிக அழகாகத் தோன்றியது. தொடக்கத்தில் எளிதாக இருந்தது. ஆனால் ஒரு வரியில் தாவுவது போல மேலே போகும் இடம் வரவில்லை. பல முறை முயன்ற பிறகும் கை தடுக்கியது. ஆரம்பித்ததிலிருந்து ஒரு நாள் கூட இந்த மாதிரி ஆனதில்லை. செந்திலுக்கு கோபம் வந்தது. மீனாட்சி மாமிதான், “நான் முதல்லயே சொன்னேனே, பொறுமை வேணும், வீட்டுக்குப் போய் நூறுதரம் வாசி, தானாக வரும்,”என்றார்.
நிஜமான வேலை
“மூலதன வருமானத்தின் பெருக்கத்திற்கு பொருளாதார வளர்ச்சி ஈடுகொடுக்க முடியாது என்று அவர் சொல்வது சமீபத்திய வரலாற்றின்படி சரி. அதனால் ‘கூப்பான்கள் வெட்டும்’ ஏழைகள் ஏழைகளாகவே இருக்க, பணக்காரர்களிடம் இன்னும் பணம் சேர்கிறது என்பதும் ஓரளவுக்கு உண்மை. ஆனால், உலகமுழுவதுக்குமான மூலதன வரி பிரச்சினையைத் தீர்க்கும் எனத்தோன்றவில்லை.”
நாகரிகம்
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். –திருக்குறள்.
பிரகாசமான எதிர்காலம்
அப்போது தான் அவன் மனமாற்றம் தாற்காலிகமானது இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவள் காதல் வாழ்க்கையில் புதிய அனுபவம். கல்வி அல்லது தொழில் நிமித்தம் ஊர் மாறியதால், இன்னொரு பெண் அபகரித்ததால், பழக்கம் புளித்துப் போனதால் உறவுகள் முறிந்திருக்கின்றன. அவனிடம் நிகழ்ந்த மாற்றங்கள் அவள் எதிர்பாராதவை. உலர்சலவை செய்த வர்த்தக ஆடைகளுக்கு பதில் சுருங்கிய சட்டையும் பான்ட்ஸும். கடைகளில் வாங்காமல் அவனே தயாரித்த மதிய உணவு. முகத்தில் தீவிர சிந்தனையின் ஆழம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு கொலை
“படிச்சி என்ன புண்ணியம், பிள்ளைய பரலோகம் அனுப்பவா படிக்க வச்சேன். எங்க நிலம் அணைக்கட்டு தாண்டியும் உண்டு. இந்த ரப்பர் எஸ்டேட் காரங்க எங்க நிலத்தை கேட்டானுங்க. கவெர்மென்ட்ல ஆளுங்க வந்தாங்க, காசு கீசு தாரேன்னு சொன்னாங்க. இது எங்க காடு, எப்புடி கொடுக்க. டவுனுக்கு தண்ணீ வேணும்னு பாதி காடு டேம்முக்குள்ள முங்கி கிடக்கு. இதையும் கேட்டா, எங்க போவோம். எம்பிள்ள கேசு போட்டான். சந்தோசம் எங்க ஆளுங்க எல்லாரும் பெருசா பேசுனாங்க. ஆனா இழப்பு எனக்கு தானே”
அலகுடைய விளையாட்டு
அந்த முதல் வெற்றியை, நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே கவனித்து கொண்டிருந்த, மறக்கவே முடியாத கணங்களை அன்றிரவு வீடு திரும்பும்போது அசை போட்டேன். கை குலுக்கியபின் திரும்பிய டோடியாவின் தளர்வான நடையை, ஸ்கோரை மைக்கிடம் சொன்ன போது மைக்கின் கண்களின் ஆச்சரியத்தை, அன்றிரவு வீடு திரும்பி காரை அணைத்த பின்பும் ரேடியாவை அணைக்காமல் pink-கின் million dreams பாடல் முடியும் வரை கேட்டுக்கொண்டிருந்ததை, காரிலிருந்து இறங்கிக் கடும் குளிர் காற்றிலும் வானத்தின் மூன்று நேர்கோட்டுத் தாரகைகளைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்ததை…அடுத்த நாள் அலுவலகப் பயணத்திலும் அசை போட்டேன். மாலை, இரவு என்று அந்த வாரம் முழுவதும் யோசித்ததை நினைத்துச் சிரிப்பாக வந்தது.
உயிராயுதம்
சுட்டெரித்த சுடலையின் வெப்பம் தணிந்தபின் சாம்பல் தரித்த கங்குகளென என்புகள் கிடந்தன. இந்திரன் முனிவருக்குரியவைகளைச் செய்து என்புகளை பாதுகாத்தான். விஸ்வகர்மாவை அழைத்தான்.
அவர் என்புகளை கங்கையின் நீரில் முழுக்கி எடுத்தபின் அவை வைரம் என, மின்னலின் பருவடிவென ஔிகொண்டிருந்தன. ’என்பினாலான மானுட உயிர்ப்பொருள் இத்தகைய ஒன்றாகுமா!’ என்று அவரின் மனம் பதைத்துக்கொண்டிருந்தது.
2016 – எண்கள்
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இருக்கும். எல்லாருடைய வீட்டிலும் டிவிக்கு கேபிள் இருக்கு, நாமும் வச்சுண்டா என்னன்னு கேட்டான். நமக்கு கட்டுப்படியாகாதுன்னு சொல்றதுக்குப் பதிலா அவனையே வீட்டுக்கணக்கு போடச்சொன்னேன். நான் வீணை சொல்லித்தரேன், அவ பாட்டு க்ளாஸ் நடத்தறா. அதில வரும்படி இவ்வளவு. வீட்டு வாடகை, எலெக்ட்ரிக் பில், சாப்பாட்டுச்செலவு… எல்லாம் கணக்குப்போட்டு கடைசியில அறுபது டாலர் தான் மிச்சம்னு கண்டுபிடிச்சான். அதில ஐம்பது டாலரைத் தூக்கி கேபிளுக்கு கொடுக்கறது அனாவசியம்னு அவனுக்கே தோணிடுத்து.”
“நீங்க செஞ்சது புத்திசாலித்தனமான காரியம். முடியாதுடான்னு ஆரம்பத்திலயே பட்னு சொல்லியிருந்தா அவனுக்கு ஏமாற்றமா இருந்திருக்கும்.”
2019- ஒரேயொரு டாலர்
கட்டுரை வெளிவந்தபிறகு அதைத்தாக்கி வாசகர் கடிதங்கள். எழுதியவன் சோம்பேறிப் பொதுவுடமைவாதி. இங்கே பிடிக்கவில்லை யென்றால் வெனிஸுவேலாவுக்குப் போகட்டும். தனிமனிதர்களின் தோல்வி முதலீட்டுப் பொருளாதாரத்தின் தோல்வி என்ற கட்டுரையின் உள்ளடங்கிய கருத்து மேல்தட்டு மக்களின் மனசாட்சியை சுட்டிருக்க வேண்டும்.
மக்களின் எதிர்ப்புக்கு பயந்து அவன் எழுத்தைத்தொட பத்திரிகையாளர்கள் பயந்தார்கள்.
தேனாண்டாள்
இது வெறும் காடுல்ல. கரியராமன் உறங்குற எடம். அவனோட காடுல இது. இங்க இருக்க ஒவ்வொரு தேனீப்பூச்சியும் அவனோட இருப்பாகபட்டது தான். அதோட நாசில புகையபோட்டு வெரட்டினா அது எங்களுக்கே சாபமால்ல மாறிடும். அந்த பொகையோட நெடி அதோட நாசில அப்படியே தங்கிபோய்டும். அப்புறம் எந்தவொரு பூவும் அதுக்கு உவக்காது பாத்துக்கோங்க. பின்ன தேனேது மரமேது காடேது. நாளப்பின்ன இந்த காடேல்ல அழிஞ்சுபோகும். ஒரு பொட்டு காடு கூட மிஞ்சாது. அப்படிப்பட்ட வேலைய நாங்க செஞ்சிட மாட்டோம் சார். இது எங்க பாட்டன் காலத்து தொழிலு.
2010- மீண்டும் மால்தஸ்
நசி தோசையைத் தின்னாமல் அதை துண்டுதுண்டாகப் பிய்த்து அழகு பார்த்தாள். ‘என்னை நான் கவனித்துக் கொள்வேன். என் எதிர்காலத்துக்காக இன்னொரு குழந்தையை வரவழைக்க வேண்டாம். அதற்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டால்… அஜீரணம் என்று மருத்துவரிடம் போக, அவர் வயிற்றில் கான்சர் என்று சொல்வதுபோல ஆகும்.’
விறால்
‘எதுத்த தண்ணியில ஏறி வருது. வலையை திருப்பிப்போடு ” என்றார் தாடிதாத்தா. அப்பா அப்போதும் அப்படியேதான் நின்றுகொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூட்டமாக கெண்டைகுசுமான்களும், சில ஜிலேபிகளும், குரவை மீன்களும் கால் பக்கமாக ஏறிக்குதித்து நீந்திப்போயின. தங்கக்காசு போல கெண்டைகுசுமான்கால் விளக்கின் வெளிச்சத்தில் ஜொலித்து நீரில் விழுந்து மறைந்தன. அப்பா பக்குவமாக காலை விலக்கி வலையின் வாயை சுருக்கி கரையில் இட்டார். கொத்து கொத்தாக மீன்கள். துள்ளும் பட்டை மீன்களையும், நெளிந்து வழியும் குரவையையும் பிடித்து அன்னக்கூடையில் போட்டுவிட்டு
மொழி
எந்த வெளி நாட்டுக்குப் போனாலும் உடனே, எங்கே சரவணபவன் என்று தேட மாட்டேன். சைவமாகவே வளர்ந்திருந்தாலும், இப்போது எல்லா உணவு வகைகளையும் விரும்பிச் சாப்பிடுவேன். ஸ்வீடனில் ஏறக்குறைய அழுகிய மீனையும், பாரிசில் தவளைக் கால்களையும், ஜெர்மனியில் பன்றி மாமிச ஸாசேஜை உப்பு கூட இல்லாத மசித்த உருளைக் கிழங்குடன் ருசித்து சாப்பிட்டிருக்கிறேன்
2015: சட்டமும் நியாயமும்
“என் பணத்தைத் தொடாதே என்று தடை போடுவது ரொமான்டிக் காதலைக் கொன்றுவிடும், ஒப்புக்கொள்கிறேன். கல்யாண தினத்தில் இருந்து அது முடிகிறவரை – எந்தத் திருமணமும் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும் – இருவரும் குடும்பப் பொறுப்புகளைப்போல வருமானத்தையும் பகிர்ந்துகொள்வதும் நியாயம். ஆனால், அதற்கு முன்பும், பின்னாலும் வரும் செலவுகள் அவர் அவர் பொறுப்பு. இதை எழுத்தில் பதிப்பது எப்படி தவறாகும்?”
மழைத்திரை
அக்காவுக்குக் கல்யாணமான பின் குடும்பமே பெருமாள் மலை ஏறினார்கள். அம்மா மூச்சு வாங்க நல்லதங்காள் கதையைச் சொன்னாள். “புறப்பட்ட எடத்துக்கும், சேந்த எடத்துக்கும் அலையறத்துக்கு இப்படி மூச்சப் பிடிக்கனும். விட்றப்பிடாது குட்டிகளா. . பொம்பளப் பிள்ளைக்குதான் அத்தன தெம்புண்டு,” என்று பேசியபடி ஆயிரத்து ஐநூறு சொச்சம் படிகளை ஏறுவது தெரியாமல் ஏற்றிவிட்டாள்.
ஆப்பிளும் விஷமும்
“கங்கேச யமுனே சைவா கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு” என்று சொல்லி எங்கு நீராடினாலும் இந்த அனைத்து நதிகளிலும் நீராடுவதற்கு சமானம். அப்பா வழி தாத்தா ஒவ்வொரு நாள் குளியலிலும் இதனைச் சொல்வார். இந்த ஏழு நதிகளும் கிளைத்து பரந்து ஊடுருவி வேர் விட்ட மண் இந்த இந்திய நிலம்.
நம்பிக்கை
ராத்திரி ரயிலுக்கு நேரம் இருக்குன்னா பக்கத்தில் இருக்கற குன்று மேல ஒரு சின்ன பீடம் இருக்கு. நூறு வருஷத்துக்கும் மேல அதில ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டிருக்கு. ஆடு மாடு மேய்க்கறவா தினமும் மேலே போய் எண்ணெய் விட்டுட்டு வறா. நான் மாசம் ஒரு தடவ போவன்.”
நூறு வருடமாக எரியும் தீபம். இங்கே வியப்புகளுக்கு குறைவே இருப்பதில்லை
ஒளி
பிரிசில்லாவின் உடலில் இருந்த இயல்பான சமன்பாடு ஃபிலோமினாவில் என்றுமே தோன்றியதில்லை. பாந்தமில்லாமல் பருமனாக இருந்தாள். சுழலும் பரிசலைப்போல் நடந்தாள். என்னேரமும் ஏதோ ஒரு பக்கத்திலிருந்து ஒரு பறவைக்கூட்டம் படபடபடவென்று வெடித்துவெளிவரும் என்பதுபோல் அவள் உடலில் ஒரு ததும்பல் இருந்துகொண்டே இருந்தது. உடலில் குடிகொண்ட அந்த சமனின்மை முகத்தில் இன்னும் கூர்மையாக வெளிப்பட்டது. களைகளைப்போல் பிசுறுபிசுறாக வடிவமற்ற புருவங்கள். சற்றே ஒற்றைக்கண் பார்வை. இடதுபக்க யானைக்காது.
2084: 1984+100
“மாயப் பணம் பெருகியது, மக்கள் தொகை வளர்ந்தது, எங்கு பார்த்தாலும் குப்பை. ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்த பொருட்கள். சீர்ப்படுத்த முடியாதபடி பழுதுபட்ட அல்லது நல்ல நிலையில் இருந்தாலும் காலவதியான இயந்திரங்கள்.
இயற்கை சுருங்கியது.
உடல்நிலை, மகிழ்ச்சி, சமுதாய உணர்வு குறைந்தது.
குருதி வழி
ஆனால் காலம் என்னைச் சோதிக்கிறது. சுகப் பிரசவம் ஆக எத்தனை எத்தனை பிரயத்தனங்கள். யோகா முதல் மாலை நடை வரை விதவிதமான தயாரிப்புகள். இதோ இப்போது அனைத்தையும் தாண்டி இந்த அறுவை சிகிச்சை. எனக்கு நன்றாகத் தெரியும் கத்தி பட்ட உடம்பு மீண்டும் பழைய நிலைக்கு வருவது கடினம். தெரிந்தே இன்னொரு முறை இது நடக்க வேண்டாம். எதுவாயினும் மற்றொரு குழந்தை எனக்கு வேண்டாம். என் மனைவியே ஆசைப்பட்டாலும் சரி.
பூமுள்
உள்ளங்கை வியர்வையை கைகுட்டையில் துடைக்க துடைக்க அது வியர்த்துக் கொண்டேயிருந்தது. எட்வின் வராண்டாவில் அவனுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அவள் மனதிற்குள் வந்தது. மனம் மீண்டும் இல்லை என்றது. இது என்னையே நான் வீழ்த்திக்கொள்ளும் கண்ணி. ஒருபார்வை , ஒருசொல், ஒருமுகக்குறிப்பு அன்று உணர்த்திய எள்ளலை மீண்டும் கண்டால் எழுப்பிய அனைத்தும் சரியும். ஆனால் உள்ளுக்குள் மிக ஆழத்தில் எட்வின் முகம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான்.
ஒரு மழைநாள்
வெளியே மழை ஒழுகிக்கொண்டிருந்தது. பெரியப்பா என் கண்களை நேருக்கு நேர் பார்த்தார். அகல் திரியின் கடைசிச்சுருள் தீப்பிடிக்க சுடர் கரகரத்து எழுந்ததில் பெரியப்பாவின் கண்களில் உறைந்திருந்த குரோதத்தின் ஜுவாலை தெரிந்தது. தீயின் ஒளி முகத்தில் நீர் போல் வழிந்திறங்கியது.
2020- நிலமடந்தை
“ஆண் குழந்தைகள் பேச்சில நிதானமாத்தான் இருக்கும். அதுவும் வீட்டிலயே வளர்ந்திருக்கான். ப்ரீ-ஸ்கூல்ல போடு! மத்த குழந்தைகளோட விளையாடினா பேச்சு தன்னால வரும்.”
அறிவாளியாக வளரப்போகிறான் என்ற ஆசையில் வித்யாகேந்திரம். விரைவிலேயே காப்பாளர்களின் முறையீடுகள்.
“தானாகவே விளையாடுகிறான்.”
“மற்ற குழந்தைகளுடன் பேசுவதில்லை, உறவாடுவதும் இல்லை.”
“எங்களையும் சரி, மற்ற யாரையும் சரி, நேருக்குநேர் பார்ப்பதில்லை.”
காத்திருப்பு
ரயில் நிலையத்துக்கு ஃபோன் செய்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் விவசாயக் கல்லூரி மாணவிக்கு வீட்டுச்சாவி கிடைத்து விடும். ஆதலால் அவளது நண்பர்கள் திட்டமிட்டவாறு ரயிலில் பயணிக்கலாம். பயணத்தின் அடுத்தடுத்த நிலையங்களில் எங்காவது சாவியைத் தவற விட்டவர் சேர்ந்து கொள்வார் என்ற தகவலை அறிவிக்கச் சொன்னான். ஸ்டேஷன் மாஸ்டர் பயணியின் பெயர் சொல்ல வேண்டுமா என்றார். லக்ஷ்மி பெயர் சொல்ல வேண்டாம் என்றான்.
மாசிக் களரி
கரங்கூப்பி கண்களை மூடியிருந்த பெண்களில் சிலர் கண்களிலிருந்து ஈரம் கசிந்தது. பெரும்பாலானவர்கள் கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது. மூடிய கண்களை அப்பெண்கள் திறக்கவேயில்லை. துயரமோ ஆற்றாமையோ ஏமாற்றமோ பொருட்படுத்தப்படாத புறக்கணிக்கப்பட்ட உரிமை அல்லது அன்பின் வஞ்சம் என அனைத்தும் அங்கு நின்று கொண்டிருக்கும் பெண்களின் கண்களில் துடித்து திரண்டதைப் போல விழித்தார்கள். பெண்ணினத்தின் யுகத்துயரை அழவே தங்களுக்கு கண்கள் வாய்த்தது போல் எல்லா பெண்கள் பொங்கிப் பொங்கி அழுதார்கள். ஓங்கிக் குலவையிட்டார்கள்.
அழியாத கோலங்கள்
ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள்ளிருந்த தவளை – சயின்ஸ் சார் ஜீரண உறுப்பு விளக்கத்திற்காக அறுத்துக் காண்பிக்க பிடித்து வரச் சொல்லி இவன் பிடித்துவந்ததுதான்.இன்னைக்கு சயின்ஸ் சார் லீவு – செல்லப்பாண்டியையும் கணக்கு சாரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது. திங்கட்கிழமை அப்பாவைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். இல்லையேல் டி .சி கொடுக்கப்படும். ஆனால் ஸ்கூலுக்கே டி சி கொடுத்துவிட்டான் செல்லப்பாண்டி.
ஹேங் ஓவர்
மயக்கமென்ன என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது சைக்கிள் வலது பக்கம் திரும்புவதற்குப் பதில் இடது பக்கமே திரும்பியது. மறுபடியும் மதுரைக்காரங்க வளவு இருந்த சந்து வழியாக அன்னமக்கா வீடு , கட்டிலில் படுத்திருந்த சுப்புத்தாத்தா தலையை மட்டும் தூக்கும் நாய், என்று சுழன்றது. அவன் சைக்கிளை வீட்டுக்கு முன்னால் நிறுத்தினான். போதையினால் தான் இப்படி ஒரே இடத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறோமா.
