நவம்

“தெய்வங்க மண்ணுக்கு எறங்கி வரணும். மனுசங்கள போலவே எட்டு திசைக்கும் அவங்க கட்டுப்பட்டாகணும். எட்டு திசை தெய்வங்களுக்கு கட்டுப்பட்டாகணும். கிழக்குல இந்திரன், தென்கிழக்குல அக்னி, தெற்குல யமன், தென்மேற்கு ல நிருதி, மேற்குல வருணன், வடமேற்கு ல வாயு, வடக்குல குபேரன், வடகிழக்குல ஈசானன்” என்று ஒவ்வொன்றாக புள்ளிவைத்து, “மொத்தம் ஒன்பது கட்டங்க.

நிழல்

“மைந்தர்கள் தந்தையரின் உச்ச கணத்தில் பேரண்ட பெருங்களிப்பில் நிகழ்கின்றனர். தந்தையரின் விந்தில் நாம் உற்ற போது மைந்தராகிய நாம் நிகழ்ந்துவிடுகிறோம். பிறத்தல் என்பது பின்னர் தான் நிகழ்கிறது. “தந்தையே, தந்தையே ” என்ற நம் குரலை அவர் அப்பெருங்களிப்பில் இருக்கும் போது செவி மடுக்கவேண்டும். ஆயிரமாயிரம் குரல்களில் எக்குரலுக்கு அவர் செவி மடுக்கிறாரோ அவரையே தந்தையர் தன் மகன்களாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களே அன்னையரின் கருவில் திகழ்ந்து பிறக்கவைக்கப்படுகின்றனர்.

தேனாண்டாள்

இது வெறும் காடுல்ல. கரியராமன் உறங்குற எடம். அவனோட காடுல இது. இங்க இருக்க ஒவ்வொரு தேனீப்பூச்சியும் அவனோட இருப்பாகபட்டது தான். அதோட நாசில புகையபோட்டு வெரட்டினா அது எங்களுக்கே சாபமால்ல மாறிடும். அந்த பொகையோட நெடி அதோட நாசில அப்படியே தங்கிபோய்டும். அப்புறம் எந்தவொரு பூவும் அதுக்கு உவக்காது பாத்துக்கோங்க. பின்ன தேனேது மரமேது காடேது. நாளப்பின்ன இந்த காடேல்ல அழிஞ்சுபோகும். ஒரு பொட்டு காடு கூட மிஞ்சாது. அப்படிப்பட்ட வேலைய நாங்க செஞ்சிட மாட்டோம் சார். இது எங்க பாட்டன் காலத்து தொழிலு.

ஆப்பிளும் விஷமும்

“கங்கேச யமுனே சைவா கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு” என்று சொல்லி எங்கு நீராடினாலும் இந்த அனைத்து நதிகளிலும் நீராடுவதற்கு சமானம். அப்பா வழி தாத்தா ஒவ்வொரு நாள் குளியலிலும் இதனைச் சொல்வார். இந்த ஏழு நதிகளும் கிளைத்து பரந்து ஊடுருவி வேர் விட்ட மண் இந்த இந்திய நிலம்.

த்ருஷ்டி

பூமியின் ஒவ்வொரு மூலைகளிலிருந்தும் மக்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களில் தேர்ந்த அதி தீவிர தகவமைப்புத் திறன் பெற்ற ஜீன்களைக் கொண்டுள்ள மனிதர்களுள் முதல் முப்பது மனிதர்களை தெரிவு செய்து, அவர்களை விண்கலம் மூலம் வானத்தில் ஏவி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூமியில் அவர்களை குடி அமர்த்த முடிவெடுக்கப்பட்டு இருந்தது. அத்தகைய மனிதர்களை அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மரபணு மாற்றத்தில் ஈடுபடுத்தி வம்சாவளிகளாக பேணிக்காத்து வந்திருந்தனர். அவர்களின் மரபணுக்கள் அதீத கதிரியக்கங்களை தாங்குவதற்காகவும், குறைந்த ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி சுவாசிப்பதற்காகவும் சேர்ப்பனவற்றைச் சேர்த்தும் கழிப்பன வற்றை கழித்தும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இப்படி மாற்றி அமைக்கப்பட்ட மரபணுக்களால் உடனடியாக எந்த விளைவுகளும் இருக்காது. மந்த நிலையில் இருக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும்போது தூண்டப்பட்டு விழித்துக்கொண்டு, மனித பரிணாமத்தின் அடுத்த படிநிலையை எட்டும்.



குருடு

“சந்தேகி. சந்தேகித்தலே அறிதலெனும் தேரின் வடம். தேர் நகர்வது சக்கரத்தினால். நகர்த்தப்படுவது அதன் வடத்தினால் தான்” என்றார் கிழவர்.

அவன் உச்சிவானில் எழுந்த கதிரவனின் அலைகள் ஆற்று நீரில் நெளிவதைச் சற்று நேரம் பார்த்தான். பின்னர் கேட்டான். “நான் இப்போது உங்களைக் காண்கிறேன். நீங்கள் என்முன் அழிந்தழிந்து தோன்றுகிறீர்களா என்ன?’

“ஆம்” என்றார் குரு. “‘உனக்கு தெரியும் நான்’ என்பது, உன் புலன்களின் வழியே உன் அறிதலாகி நீ உருவகிப்பது. ‘உனக்கு தெரியும் நானும்’, ‘உலகிற்குத் தெரியும் நானும்’ வேறுவேறானவை. உன் அறிதலை வைத்து இவ்வுலகிற்கும் அதுவே ‘நான்’ என என்னைப் பொதுமைப்படுத்துவது உன் வறட்டு ஆணவம் மட்டுமே” என்றார் குரு.