குருதிப் பலி

ஆர்ப்பரித்தபடி அதைச் சுற்றிலும் இளம்பெண்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் தங்கள் கருவுற்ற வயிற்றில் ஒரு கையை அவ்வப்போது வைத்து ஏதோ சொல்லிக் கொள்கிறார்கள். பீடத்தில் இருந்த குழிவில் தலை வைத்து அசைவற்றுக் கிடக்கிறேன் நான். கூட்டத்தின் ஓசை உச்சமாகிறது. முள்முடி தரித்த நீண்ட அங்கியணிந்த ஒருவர் ஒரு பெரிய வாளேந்தி அப்பீடத்தில் ஏறுகிறார். கூட்டத்தில் அவரை வாழ்த்திப் பேரொலி எழுகிறது. எனக்கும் திரும்பி அவரை ஒருமுறையேனும் பார்த்து விடவேண்டும் என்று இருக்கிறது. களிப்பின் உச்சத்தில் சில பெண்கள் தங்கள் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு இரத்தத்தைப் பீச்சியடித்து ஆடுகிறார்கள்.

சௌவாலிகா

நான் ஒரு கவிஞனாகவோ இசைக் கலைஞனாகவோ இருந்திருக்கலாம். ஒயினும் பெண்களும் அரட்டையுமாக எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்! வீரம், நாட்டுக்கான சேவை என்றெல்லாம் என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போலவே இருக்கும் இன்னொரு மனிதன் எப்படி என் எதிரியாகிறான்? அவனது மனைவியைத் தொட எப்படி என்னால் முடிந்தது?

கெய்ரா

என்னதான் அயல்நாட்டு வாழ்க்கை எனக்கு பொருந்திப் போயிருந்தாலும் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விசித்திரமான முன்வாழ்க்கையைத் தனக்குள் புதைத்து வைத்திருப்பதை என்னால் ஜீரணிக்க முடிவதில்லை. இதோ இத்தனை நாள் ஒரு கனவு தேவதை போலிருந்தவள் இப்போது மெல்லத் தன் பங்கிற்குச் சில முடிச்சுகளை அவிழ்க்கிறாள்.

யூதாஸ்

“இந்த வாய்ப்புக்காக நீண்ட நாள்களாகக் காத்திருந்தேன் கெவின். அதென்ன, அப்படியொரு ஆட்டிடியூட், தான் மட்டும்தான் பெரிய இவன், மற்றவர்கள் எல்லாம் மயிர் மாதிரி என்று? இவன் எத்தனை வாழ்க்கைகளை இல்லாமல் ஆக்கியிருக்கிறான் தெரியுமா? பிரச்சினை என்று ஒன்றும் இருக்காது, இவன் முகத்தை நேராகப் பார்த்துப் பதில் சொன்னதற்காக ஒரு பெண்ணை மீன் கழிவுப் பிரிவில் சுத்தம் செய்ய விட்டுவிட்டான் தெரியுமா?

சாபம்

நான் குழப்பத்தில் நின்றேன். முந்தைய வருட சண்டையோடு அம்மாவிற்குக் காசு அனுப்புவதும் தம்பி வீட்டிற்குச் செல்வதும் நின்று போனது. அவள் முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்றுதான். தம்பி அவ்வப்போது வந்து போய் இருந்தான்.
“எப்பா, பைசா போனா போட்டும்…ஒங்கம்மக்கி என்ன வேணுமோ அனுப்பிருங்கோ..அவ சாபம் நமக்கு வேண்டாம்ப்பா…பிள்ளக்கி ரெண்டாவது தடவ அதே மாதி வந்துட்ட..நா என்ன செய்வேன்?” என்று அழுதாள்.

அக்னி

அப்போதிருந்து அம்மாவிற்கும் நெருப்பிற்கும் ஒரு உறவு ஆரம்பித்திருக்க வேண்டும். உச்சபட்ச மகிழ்ச்சியிலும், கடும் துயரத்திலும் சில சமயங்களில் நீண்ட மௌனத்தின் முடிவிலும் அம்மா என்னிடம் கேட்பது, “அம்மய எரிக்கணும் மக்ளே” என்பதுதான்.

முகவரி

“வாடே வா, எல்லா எடத்துலயும் கொமைக்கப்புடாது கேட்டியா? வெளாட்டுக் காரியமில்ல..வந்து தோப்புக் கரணம் போடு..” என்று அவர் என்னைப் பார்த்துக் கத்த அம்மா என்னை முன் தள்ளினார். கோவிலைப் பார்த்தவாறு நான் தோப்புக்கரணம் போட, அவர் அம்மா, அப்பா, அண்ணனுக்குத் திருநீறு பூசி விட்டார். பின், என்னைக் கைகாட்டி நிறுத்தச் சொல்லி திருநீறு பூசி, உற்றுப் பார்த்தார்.

கெவுரவம்

“மக்கா..அதுல ஒரு மேட்டரு இருக்கு…ஒனக்கு அதெல்லாம் புரியாது…விடு மக்கா.. லைஃப நல்லா என்ஜாய் பண்ணுவோம் மக்கா..நம்மூரு மீங்கறி US-ல கெடைக்குமா சொல்லு….எங்களுக்குல்லாம் அவியலா, லட்சம் ரூவாயான்னு கேட்டா அவியல்னு தா சொல்லுவோம்…விடு டே..ஒனக்குப் புரியாது..”