கொல்லி

நீ தப்பிச்சி ஓடினதுக்கு அப்பறம் வேல்ராஜ விட்டானுக. ஆனா உன்ன எங்கிருந்தாலும் பிடிக்காம விடமாட்டேன்னு அந்த ஆளு துடிக்கிறான். மனு குடுக்க வந்த கூட்டத்துல நீ அவன் சட்டய புடிச்சது அவனுக்கு அவமானமாயிட்டு. காக்கி மேல கை வச்சிட்டான் இனி அவன் செத்தான்டான்னு சொன்னான்.

ஓ கங்கரே!!!

“வேணா நாங்க பிடிச்சிக்கிறோம்” என ஆணும் பெண்ணும் மாட்டைப் பிடித்துக்கொள்ள மாடு திமிறிக் கொண்டிருந்தது. தாத்தா அதன் கண், சுவாசம், நாக்கு மற்றும் உடம்பைப் பாரத்துக்கொண்டிருந்தார். திமிறிய மாட்டை அந்த முறுக்கேறிய கைகளும் கால்களும் பிடித்துக்கொண்டிருந்தன. கால்களில் சகதியோ, தொழியோ, சிமெண்டோ வெள்ளையடித்திருந்தது.

மூன்றாவது சிலுவை

“கரைய பாத்தியாடே ! பசுங்கொப்பையெல்லாம் வாரிக்கிட்டு வரதப் பாரு. இனிமே கூடத்தாமிடே செய்யும். நீ ஒன்னும் பயப்படாண்டா கேட்டியா. யான் இடுப்புல ஒத்த கயித்த மட்டும் கட்டிகிடுதேன் இந்தா இந்த முனயை அந்த வேம்பில கட்டிட்டு கயித்த நீயும் பிடிச்சுக்டே- ஒரு வேளை வாரிட்டுன்னா!”.
ம் அப்புறம் இதுகள ஒவ்வொன்னா அக்கரைக்குக் கடத்திடுதேன். பெறவு இடுப்புக் கயித்த எதுக்க இருக்கப் பின்ன மூட்டுல கட்டிருவேன். மெதுவா அத பிடிச்சிக்கிட்டு நீயும் வந்திரு என்னா ?” என்று சொல்லி சிரித்தவரை மரிராசு மருண்டு போய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மந்திரமாவது….

இனி பேசி பிரயோஜனமில்லை. அமைதியாக இருக்க ஆரம்பித்தான். வண்டி மெதுவாக ஊர்ந்து செல்ல தொடங்கியது. வாந்தி வருவது போல நாறியது. தார் நெடி. முகத்தை சுளித்துக் கொண்டான். ரயிலடிலிருந்த மெயின் ரோட்டின் நடுவே இருந்த குழியை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ரொம்ப நாளாகவே அது அப்பிடியே தான் இருக்கிறது. இப்போதாவது மாற்றுகிறார்களே என நினத்துக் கொண்டான். அவர் மேலும் ஏதோ கேட்டு கொண்டிருந்தார். முகத்தை திருப்பி வெளியே பார்த்தான். இப்போது எதுவும் பேச வேண்டாம் என சங்கல்பம் செய்து கொண்டான். மனம் அலை பாய்ந்தது. தட்டு தடுமாறி எண்ணப் பள்ளத்தாக்குகளின் இடுக்குகளில் மாட்டிச் சிந்திச் சிதறியது. சத்தமில்லாமல் மனதிலேயே எண்ணிக் கொண்டான்.

இருத்தல்

கீழ்வீட்டைக் கடக்கும் போது சின்னதாய் ஒரு தயக்கம்; ஸ்ரீலஸ்ரீவெங்கடகிருஷ்ணனை தரிசித்து விடக் கூடாது; இல்லையானால் மூன்றுமாத வாடகை பாக்கியிலிருந்து, பாகவதம், ஞானம் என்று போய்விடுவார். வீட்டுக்காரர் என்பதற்காக அவர் சொல்லும் “நேதி நேதி “ – இது இல்லை இது இல்லை- என தேடும் வேத விசாரணைகளில் மாட்டிக் கொள்வது அவனுக்கு உதறலாய் இருந்தது. ஆனால் இன்று அவரிடம் மாட்டிக்கொள்வது ஓரளவு உறுதியாகி விட்டிருந்தது. வாசலிலேயே உட்கார்ந்திருந்தார். பட்டையாய் இருந்த சந்தன கீற்றின் நடுவே குங்குமம் வைத்திருந்தார். பஞ்சகச்சம் இல்லாமல் வெள்ளை வேட்டியை நீளமாக உடுத்தி இருந்தார். வெற்றிலையை குதப்பிய வாயை ஊதுவது போல் குவித்து மென்று கொண்டே பேசிக் கொண்டிருந்தார். இடை இடையே ஜீவன், ஆத்மா, மனம் என்று பேசுவது கேட்டது. பக்கத்தில் வேறு யாரோ ஒருவர் உட்கார்ந்து …

ஒரு எக்ஸும் ஒரு ஒய்யும்

இதுபோலச் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த சிந்தனைக் கிளியின் கழுத்தை யாரோ சொலுக்கென்று திருப்பினார்கள். அவர் தான் தலையைத் திருப்பி வேகமாகக் கீழே அமிழ்த்து வைத்தார். லேசாக வலித்தது.