‘தான் எந்த வீட்டுக்கு சொந்தம்’ என்று சாவித்திரியை யோசிக்க வைத்தது.
தனியே படுத்து அசை போடுகிறாள். கண் தெரியாத மாமியார்… தடவித் தடவி நடக்கிறாளாமே! கணவன் செத்துவிட்டால் மாட்டுப்பெண் என்ற கடமையும் செத்து விடுமா? கிருஷ்ணமூர்த்தி இருந்தால் இப்படி நடப்போமா? புது இடம் என்று நாம் சங்கோஜப் படக் கூடாதென்று எத்தனை அரவணத்த ஜென்மம் அவள்!
பாராட்டுவதைக் கூட செல்லமாகச் செய்த அந்த வீட்டுக் கடமையில் இருந்து நான் நழுவுகிறேனா? சாவித்திரி கண்ணீரால் தலையணையை நனைக்கிறாள்.