சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்

கலந்துரையாடல் பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன் இவர்களுடன் சொல்வனம் சார்பில் ரவி சங்கரும், நவீன விருட்சம் சார்பில் அழகியசிங்கரும் இடம் : பனுவல் விற்பனை நிலையம் 112 திருவள்ளுவர் சாலை திருவான்மியூர், சென்னை 600 041 தேதி 02.01.2016 (சனிக்கிழமை) நேரம் துவக்கம்: மாலை 5.30 மணி “சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்”

என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்!

சரியான சொல்லால் கூறவேண்டுமெனில் பாரதியாரின் பாடலைத்தான் துணைகாணவேண்டும். ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,’ எனும் பாடலில் ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ,’ என்று கூறுவார். ‘உன்மத்தம்’ என்பதற்கு மதிமயக்கம் – அல்லது ஊமத்தம்பூவை உண்டநிலை போன்ற அனுபவம் எனலாம். குழந்தையைத் தழுவிக்கொண்ட அந்தத்தருணங்களில், உலகினையும், நம்மையும் மறந்து, நமது நிலையையும் இடம், ஏவல், பொருள் அனைத்தையுமே மறந்து தன்வயமிழந்து விடுகிறோம். இதனால்தான் குழந்தைகளை ‘மயக்குறு மழலை’ என்றார் புறநானூற்று…

ஈராக் – ஓர் அறிமுகம்

ஈராக்கின் வரலாற்றை முடிந்தவரை சுறுக்கினால் மேலுள்ள அளவே சொல்ல முடியும். ஈராக்கில் நான் 2012 செப்டம்பரில் முதன்முதலாய் வந்தேன். நாளொரு குண்டுவெடிப்பும், பொழுதொரு கடத்தலுமாய், அரசாங்கம் என்ற ஒன்றிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் வகையிலும், எங்கெங்கு காணினும் லஞ்ச, லாவண்யங்கள் தலைவிரித்தாடும் ஒரு தோற்றுப்போன நாட்டையே கண்டேன்…
நம்மூரில் தனியார்ப் பேருந்துகள் வாடிக்கையாளர்களை அழைப்பதுபோல நஜஃப், கர்பெலா, பாஸ்ரா, எர்பில் எனப் புறப்பட தயாராக இருக்கும் வண்டிகளில் இருந்து இன்னும் ஒரு சீட்டுதான் பாக்கி, இரண்டு சீட்டுதான் பாக்கி என கூவிக்கூவி அழைத்துக்கொண்டிருப்பார்கள். ட்ரைவர் அருகில் உள்ள சீட்டில் வசதியாக அமரவேண்டுமெனில் பின்னாலிருக்கும் இருக்கைகளைவிடக் கூடுதலாக எட்டு டாலர் வசூலிக்கப்படும். என்னைப்போன்ற வெளிநாட்டவர்களே பெரும்பாலும் அந்த சீட்டுகளில் அமர்வார்கள். இல்லையெனில் பின்னால் இருக்கும் சீட் எல்லாம் நிரம்பிவிட்டால் வேறு வழியின்றி அதே காசுக்கு அழைத்துச் செல்வார்கள். பாக்தாத்திலிருந்து பஸ்ரா செல்ல கட்டணம் 35,000 ஈராக்கி தினார். (30 டாலர்கள்.) தூரம் 540 கிலோமீட்டர்.

தீட்டு

‘இருபத்தொன்று…இருபத்திரெண்டு…இருபத்தி மூன்று..ஊகூம். முடியாது. நகரவே முடியாது. உடல் நடுங்கியது. கம்பை இறுகப் பிடித்துக் கொண்டார். ரொம்பத் தாகமாயிருந்தது. ஒரு சொம்புத் தண்ணீராவது வறண்ட நாக்குக்குக் குடித்துவிட்டு வந்திருக்கலாம். இருபத்தி நான்கு…இருபத்தி ஐந்து…’ கால்கள் பலமே இல்லாமல் நடுங்கின. தள்ளாடினார். கம்பை இறுகப்பற்றியபடி உடல் எடை காலில் தங்காமலிருக்க முயற்சி செய்தார். பிடிமானம் தவறி அப்படியே முன்னால் விழ நடு நெற்றி நங்கென்று தார் ரோட்டில் முட்டியது. இரத்தம் சுற்றுலா வந்த் கூட்டம்போல படர்ந்தது. ‘அப்பாடி. இனி கடைக்குப் போக வேண்டியதில்லை. ஆ….சிகரெட்’. நெஞ்சு நிறைய காற்றை இழுத்து ஊதினார்.

ரயிலுக்கு வெளியே

இரும்பு நாற்றத்துடன் ரயில் மெதுவாக வந்து நின்றது. ரயில் பாகங்கள் உள்ளே விலகி அமையும் ஓசையும், அழுத்தங்களை வெளியிடும் ஓசையும் கேட்டது. டீ வியாபாரிகள் ரயிலருகே சென்று விற்க தொடங்கினார்கள். வழக்கம் போல் என் கண்கள் பெண்களைத் தேடின. என் முன்னிருந்த ரயில் பெட்டியின் ஒரு பகுதியில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று குடும்பங்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பெண்கள் கட்டியிருந்த புடவைகளைப் பார்க்கும் போது எங்கோ கல்யாணத்திற்குச் சென்று திரும்புகிறார்கள் என்று தோன்றியது. குழந்தைகள் கூட முழித்திருந்தார்கள். அவர்களுக்குச் சற்று பின்னே ஒரு இளம் ஜோடி ஒரே படுக்கையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். அவன் ஏதோ வாங்க இறங்கி ஓடினான். அவள் தூக்க விழிகளுடன் ரயில் நிலையத்தைப் பார்த்து கொண்டிருந்தாள். அவள் அழகி. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கும் அது தெரிந்திருக்கும். ஆனால் அவளுக்குத் தெரியுமா அவள் இருக்கையின் நேர் கீழே வெட்டப்பட்ட தலை உருண்டுகிடப்பது?

எண்ணங்கள், சிந்தனைகள்

மனித சமூகத்தின் மேல் ஆர்வம் உடையவர்களாக இருந்தால், இன்னொரு மனித சிந்தனையின் உச்சம் பலிகளையும் இரத்தத்தையும் அல்லாமல் உன்னதத்தை அடித்தளமாகக் கொண்டு எழும்ப வேண்டும் என விரும்பினால், நாம் அனைவரும் தனிமனிதச் சிந்தனைக்கான விழைவுகளை நம் மனதில் உருவாக்கியாக வேண்டும். சிந்தனைகள் என்று நம்மை வந்தடையும் வெற்று எண்ணங்களை, மேலும் எண்ணங்களாக நம் மனதினுள் பெருக்கிக் கொள்ளாமல் சுய சிந்தனையின் மூலம் விழிப்புணர்வின் மூலம் நம் கருத்துருவாக்கங்களை அடைய வேண்டும். இந்த இயக்கம் ஒன்றினால் மட்டும்தான், இப்போதைய சூழ்நிலையில் அழிவை உருவாக்கும், பொதுவெளியில் சிந்தனைகளாகப் புழங்கும் எண்ணங்களின் அழிவு சக்தியை எதிர்கொள்ள முடியும். தனிமனித சிந்தனை குறைந்தப்பட்ச அளவை எட்டும்போது, பொதுவெளியில் உண்மையான சிந்தனைகள் தளிர்க்கத் தொடங்கும். அதன்பின் மனித இனம் உன்னதத்தின் மேல் எழும்பி நின்று கொண்டாடலாம்.

அற்புத மானுக்கு முடிவில்லாத வேட்டை

அவன் மோசமாக ஒப்பிக்கிறான், மூக்குக் கண்ணாடியை அடிக்கடி நேராக்கியபடி. ஆனாலும் மனதைத் தொடுகிறான். எனக்குப் புரிந்தது.. அவன் என்ன உணர்கிறான் என்பது எனக்குப் புரிந்தது. அவனுடைய இடைவிடாத உடல் கோணல்கள், அந்தக் கண்ணாடி, அவனுடைய அதிர்வுகள்.. ஆனால் அவன் என்ன ஒப்பித்தான் என்பதை நான் சுத்தமாக மறந்து விட்டேன், அது ஏன் முக்கியமாக இருந்தது என்பதையும் மறந்து விட்டேன். உணர்ச்சிகள் தனிப் பிறவிகள்- கஷ்டப்படுவது, காதல், மென்மையாக உணர்தல். அவற்றுக்குத் தமக்கென வாழ்வு இருக்கிறது; நாம் அவற்றை உணர்கிறோம், ஆனால் நாம் அவற்றைப் பார்ப்பதில்லை. நீங்கள் திடீரென்று வேறு ஒருவரின் வாழ்வில் ஒரு அங்கமாகி விடுகிறீர்கள்,

ஒளி வளைவு அறிதல்

கருந்துளையை (black hole) எடுத்துக் கொள்வோம். சந்திரசேகர் முன்கணித்த படி ஒரு குறிப்பிட்ட அளவு நிறையைக் காட்டிலும் அதிகமாக உள்ள விண்மீன்கள் இறுதியில் கருந்துளைகள் ஆகிவிடுகின்றன. நியூட்டானிய இயற்பியல் தன்னளவில் கருந்துளைகளை விளக்கிட முடியும். புவி ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிச்செல்லும் திசை வேகம் புவி ஈர்ப்பு விசையினை ஏற்படுத்தும் நிறையைப் பொறுத்தது. ஒரு பொருளின் புவி ஈர்ப்பு விசையின் தப்பிச்செல்லும் திசை வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது கருந்துளை ஆகிவிடும். கருந்துளையின் இருதய பகுதியில் பொது சார்பியல் கோட்பாடு கால-வெளிக்கு ஒரு முடிவிலி வளைவு இருப்பதை காண்கிறது. கருந்துளையின் மையத்தின் ஆரம் பூஜ்ஜியம் என்கிறது பொது சார்பியல் கோட்பாடு. ஆனால் க்வாண்டம் இயற்பியல் கட்டாயம் ஆரம் இருந்தாக வேண்டும் என்கிறது – அது மீச்சிறியதினும் சிறியதாக இருப்பினும் இருந்தாக வேண்டும் என்கிறது.

யாப்பில் தோய்ந்த மொழியாக்கம்

நாஞ்சில் நாடனிடம் கம்பனைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர் ரா. பத்மநாபன் பற்றிக் குறிப்பிடாமல் இருந்ததில்லை. மும்பையில் இருந்தபோது ரா.ப. அவர்களிடம் மூன்றரை ஆண்டுகள் நாஞ்சில் கம்பராமாயணத்தை எழுத்தெண்ணிப் பாடம் கேட்டவர். இன்றக்கும் நாஞ்சிலின் எழுத்தில் அவ்வப்போது கம்பனின் வரிகள் மின்னுகின்றன என்றால் அதற்கு ரா.ப. அவர்களே காரணம். தமிழ் நாட்டின் முக்கியமான கம்பன் மேடைகளில் நாஞ்சில் மேடை ஏறி இருப்பதற்கும் அவரே காரணம்.

க. நா. சு. கவிதைகள்

நான் எழுதுவதில் நல்ல காபி சாப்பிடுவதில்போல, அழகிய யுவதி ஒருத்தியைப் பார்ப்பதில்போல, நல்ல நூல் ஒன்றை படிப்பதில்போல – ஒரு ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தம் வாழ்வை நிறைவுறச்செய்ய எனக்கு அவசியமாக இருக்கிறது. எழுதுகிறேன், தினமும், இடைவிடாமல் எழுதுகிறேன் நான் – கவிதை, கதை, நாவல், விமரிசனம், சிந்தனைகள் எல்லாம் எழுதுகிறேன். இப்படி எழுதுவதிலே ஒரு விஷேஷம் என்னவென்றால் தமிழில் எழுதுவதில் – மற்ற மொழிகளில் எழுதுவதை விட – அதிக ஆனந்தம் கிடைப்பதாகத் தோன்றுகிறது. எழுதுகிறேன் – தினம் எழுதுகிறேன். ஆங்கிலத்தில் எழுதுவதிலும் அவ்வளவில்லா விட்டாலும் – சற்றுக் குறைவான ஆனந்தம் இருக்கிறது என்று கண்டு ஆங்கிலத்திலும் வேறு சில மொழிகளிலும் கவிதைகள், கதைகள், நாவல்கள், விமரிசனங்கள் எழுதுகிறேன். ஆயினும் எனக்காகவேதான் எழுதிக்கொள்கிறேன். ஆனால் நான் எழுதுவதை நீங்கள் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமோ, சந்தோஷக் குறைச்சலோ இல்லை. அதனால்தான் G.M.L. பிரகாஷ் இந்த நூலை வெளியிடுகிறேன் என்று சொன்னபோது, முதலில் தயங்கினாலும் பின்னர் சம்மதித்தேன்.

காலத்தினால்….

இணையப் போராளிகள்!,வெட்டி அரட்டை கும்பல், முதிர்ச்சியற்ற இளைஞர்கள் என்றெல்லாம் பிறரால் அலட்சியமாக எண்ணப்பட்ட இளையஞர்களின் ஆற்றலை இப்பேரழிவு நாம் உணர்ந்து கொள்ள வைத்தது. ட்விட்டர் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் உலவுகையில் நான் எண்ணுவதுண்டு சினிமா கதாநாயகர்களுக்காக இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே, திரையிசையைத் தவிர இளைய சமுதாயத்திற்கு வேறு இசைஞானமே இல்லையே என்றெல்லாம்… ஆனால் சென்னை மழையில் இவர்களின் பெரும் பங்கு என்னைப் போன்றவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கியது. ட்விட்டர் பேஸ்புக் மூலம் இவர்கள் மிகத் திறமையாக உதவிகளை ஒருங்கிணைத்தார்கள். இரவும் பகலும் விழித்திருந்து…

ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சின் முக்கியத்துவம்

இந்த வருடத்து இலக்கியப் பரிசை பேலாருஸ் நாட்டின் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சுக்குக் கொடுக்க நோபெல் கமிட்டி முடிவு செய்தபோது உலக இலக்கிய மஹா சக்திகளான நாடுகளில் அதிசயிப்பு எழுந்தது. ’ஸ்வெட்லானாவா, யாரது? பேலா- என்ன நாடு அது?” என்றே ஒரு கருத்தாளர் கேட்டாராம், கடைசியாக நோபெல் பரிசை ஒரு அமெரிக்க எழுத்தாளர் வென்றது 1993 இல் (அவர் டோனி மாரிஸன்) என்பதைச் சொல்லி வருந்தியபடி. இங்கிலிஷ் பேசும் உலகில் ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச் பற்றி மிகவும் கொஞ்சமாகத்தான் தெரிந்திருக்கிறது என்பதும்,

அறிவிப்புகள்

“விமுக்தா” என்ற கதைத் தொகுப்பிற்காக திருமதி ஒல்கா சாகித்ய அக்காதமி விருதை பெறுகிறார். இந்தக் கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்ரதாரியாக சொல்லப்பட்டவை.
 
திசைகள் தளம் மின்னூல்களைப் பதிப்பிக்கிறது. சொல் சார்ந்தவை (text based) , ஓவியங்கள், புகைப்படங்கள் கொண்டு மெருக்கூட்டப்பட்டவை (image based), காணொளிக் காட்சிகள் கொண்டவை (video books) என்று எல்லா வகையான நூல்களும் பதிப்பிக்கப்படும்.

விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)

“ஊர்மிளா எங்கே?”
ஸ்ருதகீர்த்தியின் முகம் நிறம் மாறியது. அவள் முகத்தைப் பார்த்ததும் சீதைக்கு பயம் ஏற்பட்டது.
“ஊர்மிளாவுக்கு என்னவாயிற்று? நலம்தானே?”
சீதையின் பதற்றம் புரிந்தாலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை ஸ்ருதகீர்த்திக்கு.
அவள் ஊர்மிளாவைப் பார்த்து பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன.

மனம் ஒரு குரங்கல்ல…

இவைகளை சரி அல்லது தவறு என்று தராசில் பார்ப்பதைவிட எண்ண அலைகளின் சக்தியை புரிந்து கொள்ளும் கோணத்தில் பார்த்தால் தெளிவாகும்.. உலகில் எத்தனையோ பேர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக எத்தனையோ சாகசங்களை செய்யவதும் இது போன்ற என்ணங்களின் வலிமையால்தான். ஆழ்கடலில் குதிப்பது, நெருப்பை விழுங்குவது, பாம்பு தேள்களை உடலில் விடுவது, அதள பாதாளத்தில் பாய்வது, அந்தரத்தில் தொங்குவது… இவர்களை இப்படி செய்யத்தூண்டும் எண்ண அலைகள்தாம்…

Le Rainbow Warrior – COP 21

பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா ஹொலாந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து உலகத் தலைவர்களுக்கு வரிசையாகக் கைலுக்க நேர்ந்ததில் தோள் சுளுக்குடன் இருப்பதாக் கேள்வி. இத்தனைக்கும் அவர் எல்லோருடனும் கைகுலுக்கவில்லை. செட்டியார் முடுக்கா சரக்கு முடுக்கா எனப்பார்த்தே வரவேற்றார். அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பியநாடுகளின் சில தலைவர்களுக்குத்தான் அவருடைய கை குலுக்கல் கிடைத்தது. அடுத்தக் கட்டத் தலைவர்களை வரவேற்றவர் பிரான்சு நாட்டின் பிரதமர் மனுவெல் வால்ஸ். அதற்கடுத்த நிலை உலகத்தலைவர்களை வரவேற்றவர்கள் நாட்டின் வெளிவிவகார அமைச்சர்

பிக் டேட்டா: தகவல்களின் விஸ்வரூபம்

அமெரிக்க அதிபரிலிருந்து அடுத்த வீட்டுக்காரர் வரை எல்லோரைப் பற்றியும் உங்கள் கருத்துகளைக் காரசாரமாக ட்விட்டரில் புகுத்தி விடுகிறீர்கள் அல்லவா? அத்தகை ட்வீட்கள் ஒரு நிமிடத்துக்கு 90,000 வீதமாக வருகிறதாம். முழுக் கோட்டாவையும் நீங்கள் உபயோகிக்கவில்லை என்றாலும் ஒரு ட்வீட்டுக்கு 50 – 70 எழுத்துகள் என்ற வீதத்தில் எத்தனை பைட்கள் ஒவ்வொரு நிமிடமும் தோன்றிக் கொண்டிருக்கின்றன – இப்படியெல்லாம் ஜனித்த விஷயங்களைச் சேமித்து வைக்க பிரம்மாண்டமான தகடுகள் தேவைப் படும் என்பது மட்டும் பிரசினை அன்று. இந்தத் தரவுகளை அலசி ஆராய்ந்து அவற்றின் பொருள் காண வேண்டும். யாருக்கு வேண்டும் இந்த விஷயங்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்த தகவல்களும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் சில செய்திகளைத் தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

குளக்கரை

பல கருத்துக் கட்டுகளைப் போல மதங்கள் எனப்படுபவையும் கருத்துகளும், மூட நம்பிக்கைகளும் கலந்து கட்டியவை என்று துவங்கும் இந்தக் கட்டுரை எப்படி கதோலிக்க மதம் ஆஃப்ரிக்க மக்கள் நடுவே பரவி இருப்பது அம்மக்களுக்குப் பேராபத்தாக்க் கூடும் என்று எச்சரிக்கையை எழுப்புகிறது. ஆஃப்ரிக்காவில் ஏற்கனவே பல கொடும் வியாதிகள் உலவுகின்றன. சில இயற்கையாகப் பன்னெடுங்காலமாக இருப்பவை- மலேரியா, ஸிக்கில் செல் அனிமியா, எபோலா போன்றவை இவை. ஆனால் நவீன உலகின் அளிப்புகளான எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோய்கள் ஆஃப்ரிக்காவில் வருடந்தோறும் பல லட்சம் மக்களைக் கொல்கின்றன. இவற்றுக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த தடுப்பு சாதனம் மிக எளிய ஒன்று. அது ஆணுறை (பெண்ணுறையும்தான்). கதோலிக்க சர்ச் ஆஃப்ரிக்காவில் இந்த ஆணுறையைப் பயன்படுத்துவது பெரும்பாவம் என்று பிரச்சாரம்

மகரந்தம்

பச்சை குத்துவது என்பதை சடங்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவும், ஓரளவு குடும்ப/ குல அடையாளத்தைத் தொடரும் வகையாகவும் எல்லாம் இந்தியர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அன்பைத் தெரிவிக்கவும், வேடிக்கையாகவும், கலையார்வத்தால் உந்தப்பட்டும் சிலராவது இதைச் செய்து பார்ப்பதும் உண்டு. உலகெங்கும் பல இனக்குழுக்கள், குறிப்பாக பழங்குடி மக்கள் இதைப் பற்பல காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். குழு அடையாளமாக, குழுவுக்குள் சில பதவிகள், அல்லது திறமைகளுக்கான அடையாளங்களைச் சித்திரிக்க இவை பயன்பட்டிருக்கின்றன. இந்தக் கலையின் ஒரு தனித்தன்மை அது அருங்காட்சியங்களில் காட்சிப் பொருளாக வைக்கப்பட முடியாதது. ஆனால் அரும் காட்சியகங்கள் மனிதத் தோலில் வரையப்படும் இந்த ஓவியங்களை, வடிவுகளை வேறெப்படிக் காட்சியில் வைக்க முடியும்? அந்தக் கேள்விக்கான பதிலை …

கருவிகளின் இணையம் – கருவி இணையத் தொழில்நுட்பம்

பல புதிய பயன்பாடுகளில், உணர்விகளுக்கு ஏதாவது ஒரு செயலியுடன் கம்பியில்லாத் தொடர்பு தேவைப்படுகிறது, உதாரணத்திற்கு, நாம் பார்த்த அணிக் கருவிகள் பெரும்பாலும், நகரும் மனிதர்கள் பயன்படுத்துவதால், கம்பித் தொடர்பு ஒரு இம்சையாகக் கருதப்படும். அதே போல, சாலைப் போக்குவரத்தைக் கணிக்கும் ஒரு அமைப்பில், பல உணர்விகள் கம்பித் தொடர்புடன் உருவாக்கப்பட்டால், மிகவும் விரும்பப்படாத ஒன்றாக மாறிவிடக் கூடும் (இதற்காகச் சாலைகளைத் தோண்ட வேண்டும்). காரில் பயன்படுத்தும் உணர்விகளும் பெரும்பாலும் கம்பியில்லாமல் இருந்தாலே, அது ஓட்டுனருக்குத் தோதாக இருக்கும்.