லூயி பாஸ்டர் வெறிநாய் கடித்த சமயத்துக்கும் ரேபிஸ் நோய் உருவாகும் சமயத்துக்கும் இடைப்பட்ட தேக்க நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த தடுப்பூசியை வெற்றிகரமாக சிகிச்சைக்கு பயன்படுத்தினார். ரேபிஸ் தடுப்பூசி லூயிபாஸ்டர் கண்டுபிடித்த நான்காவது தடுப்பூசி முன்பே அவர் Pig Erysipelas என்னும் பறவை/பன்றிகாய்ச்சலுக்கும், ஆந்தராக்ஸ் மற்றும் பறவை காலராவுக்கும் தடுப்பு மருந்துகளை கண்டறிந்திருந்தார்.
Tag: லூயி பாஸ்டர்
சர்க்கரை பூஞ்சை
எப்போது, எங்கிருந்து ஈஸ்ட் மனிதனால் நொதித்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும் அகழ்வாய்வுகள் அவை பண்டைய எகிப்திலிருந்தே பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என சொல்லுகின்றன. 8000 ஆண்டுகள் பழமையான ஒய்னும் 7000 ஆண்டுகள் பழமையான பியரும் நமக்கு கிடைத்திருக்கிறது எனினும் 1680 வரை அவை ஈஸ்டினால் உருவானவை என்று உலகிற்கு தெரிந்திருக்கவில்லை.
