திரு. அரவிந்த் நீலகண்டன், அவர் சிறு வயதில் படித்த மிர் பதிப்பக கதைகளைப் பற்றி மிக அழகாக எழுதுவார். அதைப் போலவே கிரியும் சொல்கிறார். அறிவியல், அவருக்கு கதைகளின் வழியே சுவையான அனுபவமாக ஆகியிருக்கிறது. அறிவியலும், அறிதல் முறைகளும், அவர், தன் முன்னுரையில் சொல்வதைப் போலவே, இந்தக் கதைகளில் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக விஞ்ஞான ஆய்வுகளுக்காக, தொழில்நுட்பத்துறையும், கச்சிதத்திற்காக விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று உந்தியபடி வளர்வது சுவாரஸ்யமான போட்டி.
Tag: ரா.கிரிதரன்
அதிஜனநாயகம் -2
குரல் கேட்கக்கேட்க என் முகத்தருகே எதோ கரிய அமிலம் படர்வதைப் போல உணர்ந்தேன். முகத்தில் வியர்வை கொட்டியது. என் கதையில் எழுதியது போல வான்குடியினராக இவர்கள் இருக்கக்கூடாதா என ஒரு கணம் எண்ணினேன். அப்படியிருந்தால் இவர்களை நாம் அழித்திருப்போம். மனிதர்களுக்கு என முடிவெடுக்க ஒரு பேரரசு அமைந்திருக்கும். அவர்கள் சொல்வதைக் கேட்டு நாம் நடக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு இல்லாதது எத்தனை பெரிய விடுதலை
அதிஜனநாயகம்- 1
சில நிமிடங்கள் என் அறையில் உட்கார்ந்திருந்தேன். சூடாக ஒரு கோகா நீரைக் குடித்தேன். பயம் மொத்தத்தையும் சோதித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டதா? இல்லை இப்படி ஆமை ஓட்டுக்குள் முடங்குவது போல கிடப்பது என் பயத்தை நேரடியாக சந்திக்கத் துணியாத கையாலாகாத்தனமா? இந்த பயமெல்லாம் என் கற்பனை மட்டுமே.
கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை உலகம்
சிறுவனான சந்திரகாந்தின் பயிற்சியிலிருந்து கதை முஸ்தபாவின் நாட்குறிப்புக்குள் சென்று சேரும் இடம் கரானாவின் வரலாற்றை சொல்லத் தொடங்கும் இடம். ஜாபர் கான் என்பவர் யார்? அவரது இசையின் தொடக்கம் என்ன எனும் கேள்விகளிலிருந்து கரானாவின் ஆரம்ப காலங்களுக்குள் கதை செல்கிறது. சுதந்திரத்துக்கு முன்னான காலத்தில் அமைந்திருப்பதால் வரலாற்றின் சிறு பின்னல்களும் கதையினூடாகச் சொல்லப்படுகிறது. நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய வகையில் வரலாற்றுப் பாடம் இல்லை. அது இந்த நாவலின் வேகத்துக்கு உதவியிருக்கிறது என்றாலும் நாவலின் பலகீனமும் இதுதான். பல தலைமுறைகளின் கதையைச் சொல்ல முற்படும்போது நாம் கால மாற்றத்தையும், மனிதர்களின் எழுச்சி வீழ்ச்சிகளை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
ரா.கிரிதரன் குறுங்கதைகள்
மதியம் பனிரெண்டு மணிக்கு ஒரு முறையும் ரெண்டு மணிக்கு ஒரு முறையும் இறந்ததாக நர்சரி பள்ளிக்கூடத்து டீச்சர் மாலினி சொன்னாள். எப்படி ரெண்டு தடவை ஒருவர் இறக்க முடியும் எனக் கேட்கக்கூட அவளுக்கு நேரம் இருக்கவில்லை. ரெண்டரை மணிக்குள் குழந்தைகளை வீட்டில் சேர்க்காவிட்டால் பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் ஓடிவிட்டாள்.
கல்பகாலத்தில் ஒரு காதல்
அந்த நீளமான அறையைத் தாண்டி அலுவலகத்துக்குள் வந்ததும் இன்று விடுப்பு எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. என்னைத் தாண்டி ஒரு இளம் ஆய்வாளர்கள் கூட்டம் உள்ளே சென்றது. மதியம் ரெண்டு மணிக்கு இவ்வளவு பரபரப்பாக சென்னை டெலிமெட்ரி வளாகம் இருந்ததில்லை. துறைமுகத்தை ஒட்டி புதிதாகக் கட்டப்பட்ட அமைப்பில் ஊட்டி தொலைநோக்கியின் நேரடி கட்டுப்பாட்டு அறையும், தென் தமிழகத்தின் வானவியல் அமைப்பும் இயங்கி வந்தன. இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனின் தரைக்க்கட்டுப்பாடு கூடம் இருந்த கட்டடத்தில் மட்டுமே அத்தனை பரபரப்பு
அயல் மகரந்தம்
உலகம் சுருங்கி தகவல் பெருகிவிட்ட இன்றைய சூழலில் தமிழிலும் உலகளாவிய கதைகளை சொல்ல தேவை இருக்கிறது. அப்படிப்பட்ட கதைகளை சொல்வதற்கான அற்புதமான சூழல் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்த்திருக்கிறது.அப்படிபட்ட கதைகளங்களை எழுத கிரியின் இந்த தொகுப்பு புலம் பெயர் எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டி என கொள்ளலாம்.
அனைத்துக்கும் சாட்சியாக நாம்
ஒவ்வொரு காலகட்டமும் ஏதோரு விதத்தில் அதன் சாராம்சத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. பாரதியாரின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் அரசர் காலத்தில் இருந்து ஜனநாயகக் காலம் அடைந்த தாவலின் சித்திரத்தை கண்டு கொள்ள முடியும். உலகலாவிய புது சிந்தனைகளை முன்வைத்துப் பேசிய முதல் தமிழரின் படைப்புகள் என்பதையும் உணர முடியும். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எழுதிய வ.வே.சு ஐயர் அவர்கள் காலனிய ஆட்சியால் தொலைந்து போன பண்பாட்டுச் செல்வங்களை மீட்டுப் பேசத் தேவையான சிந்தனைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்கினார். இருவரும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை தமிழில் நவீனத்துவமும் பின்நவீன நவ காலனிய யுகமும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைந்திருக்கும்
2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம்
2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும் முக்கிய காரணங்களாக சொல்ல வேண்டும். இணையத்தின் வாயிலாக வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வாசகர்களின் நெருக்கம் அதிகமாக, விவாதங்களும் அதிகரித்தன. எல்லா முக்கிய சிறுகதைகதைகளும், சிறுகதையின் சூட்சமங்கள் எளிதாக வாசிப்பாளர்களிடமும் சென்று சேர்ந்தன. புதுமைப்பித்தன் மீண்டும் மறுவாசிப்பு உள்ளானார்.
ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
அவரது சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையும், முதல் கதையுமான “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” இரண்டாம் உலகப்போர் பின்னணியில் ஜெர்மனி வதைமுகாமில் நிகழ்கிறது. சிறையில் சிக்க நேர்ந்த பொதுஜனங்கள், வாழ்வுக்கும் சாவுக்குமிடையே போராடும் அவலங்களை விவரித்தபடி துவங்குகிறது கதை.
“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”
ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””
இருளின் விசும்பல்கள் – By Night in Chile
ஏமாற்றும் கலையின் உச்சகட்டத்தை சீலே அடைந்துவிட்டது. நாடு எதிர்காலமற்ற பாதையில் செல்லும் பயணத்தில் உள்ளது. உச்சகட்ட பயம், அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் ஆட்சியாளர்கள் மக்களிடையே பரப்ப நினைத்த உச்சகட்ட பயம். ஒரு தீவிரமான விமர்சகரான உரோசியாவுக்கு இதுபோன்ற வகுப்புகள் எடுப்பது என்பது மரணத்துக்கு ஒப்பானது. இதை செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன என ஃபேர்வெல் கேட்டபோது அது மிக அவசியம் என ஆவேசத்துடன் சொல்ல முடிந்தது. யாருக்கும் கவலை இல்லை. எல்லாருக்கும் ஆட்சி அதிகாரத்தில் சிறு துளியை ஸ்பரிசிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet
கதையைக் கூறத் தொடங்கும்போது மெக்ஸிகோ நாட்டுப் பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்கிவிட்டிருந்தது. அவள் இன்னமும் நான்காம் மாடி கழிப்பறையில் அடைபட்டுக்கிடக்கிறாள். அவளது உடல் அங்கு கிடந்தாலும், மனம் தொன்மங்களிலும் வரலாற்றின் இருண்ட சொதிகளிலும் விழுந்து கிடக்கிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டதாக அவளது கதைகூறல் இருந்தாலும், அரூபமான விவரங்கள் நிகழ்வுகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன.
‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து
கிரியின் இந்தத் தொகுப்பு மேற்கத்திய செவ்வியல் இசைக்கு தமிழில் நல்ல அறிமுகமாக இருக்கிறது. நான் குறிப்பிட்ட முன்னறிமுகமும் , சிறு பயிற்சியும் மேற்கத்திய செவ்வியல் இசை கேட்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்தத் தொகுப்பில் கண்டிப்பாகக் கிடைக்கும். ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழேயும் அவர் கொடுத்திருந்த சுட்டிகள் அவர் பேசும் பொருளை உடனடியாகக் கேட்டு ரசிக்க மிகவும் உதவியாக இருந்தன…
உயர்ந்த உள்ளம்
பிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக்காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது.
ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை
“நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்” மிகப் பெரும் நோக்கு கொண்டது. ஓர் ஓவியத்தின் பார்வையில் உலகளாவிய ஏகாதிபத்திய வரலாற்றையும் வெவ்வேறு காலனிய தூரதேசங்களில் அதன் சமூக தாக்கங்களையும் சித்தரிக்கிறது. புத்தகத்தின் சிறந்த வாக்கியம் இந்தக் கதையில்தான் இருக்கிறது – “கண்கள் மட்டும் பக்கவாட்டில் துடுப்பு போட்டபடி இருந்தது”. சால் பெல்லோ எழுதியிருக்க வேண்டியது.
நிலவை நோக்கி – கனவுப்பயணம்
படக்கதை நூலுக்கு ஒரு தனி மொழி அமைந்துள்ளதை இந்த நூலில் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. சாதாரண கார்டூன் போல வரும் பல கிரஃபிக் நாவல்களுக்கு மத்தியில் பல கோணங்களை ஒன்றாகத் தொடர்புறுத்தும் இது போன்ற நூல்கள் திரைப்படம், கதைபுத்தகம் போன்றவற்றைத் தாண்டி மற்றொரு பரிணாமத்தை அளிக்கிறது.
கணிப்புக்குடில்
பூஜ்ஜியத்துக்கு இருக்கிற சிறப்பு யாருக்கும் இல்லை எனும் கர்வம் இருந்தாலும், பல சமயங்களில் தான் ஒரு பூஜ்ஜியம் தானே எனும் மனக்குறையும் அதற்கு உண்டு. பெரியவள் எனும் பொறுப்பைக் கொண்டதால் கணிப்புக்குடிலின் எந்த விதியையும் அது மீறாது. யார் என்ன சொன்னாலும் கேட்கும். செக்கு மாடு எனும் கிண்டலையும் மீறி அவளோடு நட்போடு இருப்பது ரெண்டு மட்டுமே. கணிப்புக்குடிலின் விதிக்கு ஏற்றவாறு ஒன்றோடு சேர்ந்து சுற்றும் என்றாலும் அவளுக்குப் பிடித்தது ரெண்டு தான். ஏனோ எண்களிலிலேயே அழகானது ரெண்டு மட்டுமே எனும் ரகசிய மையல் அதற்கு உண்டு.
ஆகஸ்ட் மாதப் பேய்கள்
அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.
