அசைந்தாடு சீலை ஆலாபனம் – உஸ்தாத் அஞ்சலி

This entry is part 1 of 22 in the series இசைவாணர்

தனி வாத்தியத்தில் மட்டுமே தங்களை அர்ப்பணிப்பவர்கள், அந்தக் கருவியில் புதுமையான ஆழத்தை அடைந்து, இசையை உச்சத்தில் கொண்டு செல்வதற்கான திறனைக் கொண்டவர்கள். மேலும் நுணுக்கமாக பார்த்தால், ஒவ்வொரு வாத்தியக் கருவியிலும் பல்வேறு சங்கீத பரிமாணங்கள் மறைந்திருக்கின்றன. எந்த வாத்திய கருவியிலும் இன்னும் முழுமையாக மீட்டபடாத இசை, அறியாத இசைப் பரிமாணங்கள் உள்ளது,  அதைப் புதியதாக உருவாக்கும் திறன் இருக்கின்றது

நடமிடும் விரல்கள்

This entry is part 2 of 22 in the series இசைவாணர்

‘கோபாலி மேடைக்கு வருவது தெரியும், உட்கார்ந்திருப்பது தெரியும், உட்காருவது தெரியாது, மைனா கிளையில் அமர்வதைப் போல’ என்று மரப்பசுவில் தி ஜா எழுதியிருப்பார். ராக ஆலாபனையின் போது அவரது கவனம் முழுக்க ஸ்ருதியில் இருக்கும்; சின்னச் செல்லத் தட்டலுடன் ஒற்றை ஓசை வரும். பிறகென்ன, கலைஞருக்கும் இவருக்குமான கொடுக்கல் வாங்கலில் மொத்தப் பரிசும் ரசிகருக்கே. இரு கைகளின் விரல்கள், விரிந்தும், குவிந்தும் வரும் பாங்கில் மொழியின் ஒலி கேட்கும்

துவாரம் மங்கத்தாயாரு

This entry is part 3 of 22 in the series இசைவாணர்

வயலின் குறித்த ஆராய்ச்சியை நோக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிற்ப வடிவங்களில் பெண்கள் வயலின்போன்ற ஒரு இசைக்கருவியை வாசிப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வடிவில் பிடிலு என்று கன்னடத்திலும் பிடில் என்று தமிழிலும் கூறப்படும் வயலின், 18ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் கர்னாடகாவில் முதலில் தோன்றியது. பொ.யு.1784இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வரையப்பட்ட ஒரு சுவரோவியத்திலும் கிட்டத்தட்ட பொ.யு.1850இல் செதுக்கிய ஒரு மர சிற்பத்திலும் பெண்கள் வயலின் வாசிப்பது காட்டப்பட்டிருக்கிறது.  (காண்க ஸ்ருதி. 1 அக்டோபர் 1985) புகழ்பெற்ற வாக்கேயக்காரரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பியான பாலஸ்வாமி தீட்சிதர்தான் முதலில் வயலின் பயின்றார் என்று பிற்காலத்தில் கூறப்பட்டது. இது வாத்தியத்தின் வரலாற்றை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதை ஆண்களின் வாத்தியமாகவும் மாற்றிவிட்டது

மன்னார்குடி சாவித்ரி அம்மாள்

This entry is part 4 of 22 in the series இசைவாணர்

மற்ற பத்திரிகைக் களஞ்சியங்கள், இணைய தேடல்கள், மூத்த ரசிகர்களுடன் உரையாடல்கள் மூலம் கடந்த ஒரு வருட காலமாக சாவித்ரி அம்மாளைப் பற்றி தகவல்கள் சேகரிக்க முயன்றேன். அந்த மேம்போக்கான தேடலில் அதிகம் ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பினேன். சில வாரங்களில் தற்செயலாக மிருதங்க வித்வான் கே.எஸ்.காளிதாஸ், அவருடைய யூடியூப் சானலில் சாவித்ரி அம்மாளின் பதிவு ஒன்றை வலையேற்றினார். அந்தப் பதிவைக் கேட்ட போது கல்கி குறிப்பில் உள்ள ‘நிதானம்’, ‘அழுத்தம்’ என்ற வார்த்தைகளின் பொருத்தத்தை உணர முடிந்தது.

எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர்

This entry is part 5 of 22 in the series இசைவாணர்

ஒரு மகத்தான இசை கலைஞனை பற்றி எழுதுவது ஒரு சிக்கலான காரியம். முதலில் அவரின் இசையை எழுத மொழி நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும், எல்லாம் எழுதி முடித்த பிறகும் நாம் எதுவும் எழுதவில்லை என்று தோணும். மன்சூர் போன்ற மேதைகள் தங்கள் ஆன்மாவை இசையில் கலந்ததை எப்படி வார்தைகளால் வர்ணிக்க முடியும்?

நானன்றி யார் வருவார்….

This entry is part 6 of 22 in the series இசைவாணர்

மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி  சபரீஸ் ஹோட்டலில் ‘ஆர்டர்’ செய்து விட்டுக் காத்திருந்தபொழுது, ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை…..’ என்று மனதுக்குள் காலையிலிருந்து பாடிக்கொண்டிருந்த வாணி ஜெயராம் திடீரென்று ஆம்பிளைக் குரலில் வெளிப்பட்டுவிட, எதிரே பிரும்மாண்டமான சோலாப்பூரிக்குப் பின்னிருந்து தலையைத் தூக்கி ‘தர்பாரி கானடா?’ என்றவரின் முகம் இன்னும் “நானன்றி யார் வருவார்….”

இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்

This entry is part 7 of 22 in the series இசைவாணர்

பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.

கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்

This entry is part 8 of 22 in the series இசைவாணர்

பெரம்பூரில் வளர்ந்த எனக்கு விதுஷி சீதா நாராயணனைக் கேட்க இளமையில் நிறைய வாய்ப்புகள் இருந்திருந்தாலும் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு கர்நாடக இசையில் பெரிய ஈடுபாடு இல்லை. எனக்கு ஈடுபாடு வந்ததும் நான் துரத்தித் துரத்திக் கேட்டவர்களில் அவர் இல்லை. 2014-ல்தான் அவரை நான் கேட்க “கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்”

உஸ்தாத் பிஸ்மில்லா கான்

This entry is part 9 of 22 in the series இசைவாணர்

பிஸ்மில்லா கான் தனது வாரணாசி வேர்களுடன் ஆழமான பிணைப்பை வைத்திருந்தார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உட்பட, வெளிநாடுகளில் தங்குவதற்கான பல அழைப்புகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் எல்லாவற்றையும் மறுத்து, “கங்கை அமெரிக்காவில் பாய முடியுமா?” என்று கேட்டுப் பதிலளித்தார். இந்த வார்த்தைகள் அவரது பிறந்த இடம் மற்றும் புனித நகரமான வாரணாசியின் கலாச்சார பாரம்பரியத்திற்கான அவரின் நிலையான பக்தியை வெளிப்படுத்தின. எவ்வளவு உயர்ந்த புகழைப் பெற்றாலும், அவரது இசையின் ஆழமும், மனதின் நிலைத்தன்மையும் வாரணாசியோடு இணைந்தே இருந்தன.

வாழ்நாள் சாதனையாளருடன் நேர்காணல்

This entry is part 10 of 22 in the series இசைவாணர்

அங்கு பள்ளியில் தவில் படிப்பு என்பது என்பது மூன்று ஆண்டுப் பயிற்சி. என் குருநாதருக்கு என்னை இன்னும் கூட அவருடன் வைத்து நிறையச் சொல்லித் தர வேண்டுமென்று ஆசை இருந்திருக்கும் போல. எனக்கு அந்த வயதில் அது புரியாமல் போனது. மற்ற பிள்ளைகள் மூன்றாண்டுப் படிப்பை முடித்துக் கிளம்பும்போது நானும் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். நான் அப்படிச் செய்ததைப் பார்த்ததும் அவருக்குக் கடும் கோபம். “போ! போ! இனி என் முகத்திலேயே விழிக்காதே.”, என்று திட்டினார்.

காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்

This entry is part 11 of 22 in the series இசைவாணர்

சோமுவின் முதல் அகாடமி கச்சேரியைப் பற்றிய குறிப்பு, ”ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது”, என்கிறது. 1960-களிலும் 1970-களிலும் சோமு பாடியுள்ள பல பதிவுகள் இன்றும் கேட்கக் கிடைக்கின்றன. அவற்றைக் கேட்கும் போது சோமுவுக்கு இயற்கையில் சாரீரம் கனமாகவும் அதே சமயம் எளிதில் வளையும் (pliant) தன்மை கொண்டதாகவும், அதி துரித சஞ்சாரங்களை அநாசாயமாக வெளிப்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது. பொதுவாக கேட்கக் கூடிய குரல்களில் மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து …

சீனா குட்டி

This entry is part 12 of 22 in the series இசைவாணர்

சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு

This entry is part 13 of 22 in the series இசைவாணர்

தனக்கு இருபது வயதாகும்போது கண்ணன் அரியக்குடி, செம்பை, ஜிஎன்பி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாசித்திருத்தார். “என் பக்கவாத்தியம் இல்லாத தண்டபாணி தேசிகரின் கச்சேரியை நீங்கள் கண்டுபிடிப்பது அரிது,” என்கிறார் கண்ணன்.

இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி

This entry is part 14 of 22 in the series இசைவாணர்

ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.

மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம்

This entry is part 15 of 22 in the series இசைவாணர்

ஒரு நல்ல நாளன்று நான் வாய்ப்பாட்டையும் வீணையையும் கிருஷ்ணசாமி நாயுடுவிடமும், மிருதங்கத்தை பீதாம்பர தேசாயிடமும் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். இப்போதெல்லாம் ஒருவரே பல துறைகளில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏதோ ஒன்றில் தேர்ச்சியை அடைய வேண்டுமென்றாலும் மற்ற அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்று நம்பினோம். நான் வீணையையும் வாய்ப்பாட்டையும் மிருதங்கத்துக்காக விட்டுவிட்டேன்”.

பழநி முத்தையா பிள்ளை

This entry is part 16 of 22 in the series இசைவாணர்

மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர்களுள், கச்சேரி வித்வானாக தட்சிணாமூர்த்தி பிள்ளைக்குப் பெரும் பெயர் இருந்த போதிலும், லய விவகாரங்களில் தேர்ச்சியைப் பொறுத்த மட்டில் முத்தையா பிள்ளையின் பெயர் சிறந்து விளங்கியது. “எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும் முத்தையா பிள்ளை காலால் அவிழ்த்துவிடுவார். ஆனால் முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை தலையால் அவிழ்ப்பதே முடியாத காரியம்”, என்றொரு சொலவடை லய உலகில் இருந்து வந்ததாக எம்.என்.கந்தசாமி பிள்ளை கூறியுள்ளார்.

இரு மணிகள்

This entry is part 17 of 22 in the series இசைவாணர்

மிருதங்க மேதைகளான மணி ஐயர், பழனி இருவரும் சமகாலத்தில் கோலோச்சியவர்கள் என்ற போதும், அவர்கள் உயரத்தை அடைந்த விதம் வேறாக அமைந்தது. அவர்கள் கடந்து வந்த பாதையே அவர்களின் ஆளுமையையும், வாசிப்பு அணுகுமுறையையும் பாதித்தது. இடது கைப்பழக்கம் கொண்டதாலும், ஆரம்ப நாட்களில் கணக்கு வழக்குகளில் அதிகம் ஈடுபட்டதாலும் அதிக கச்சேரிகள் வாய்ப்புகள் இன்றி இருந்தார் பழனி. அவரது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பாடுபவருக்கு அணுசரணையாய் வாசிக்க ஆரம்பித்த உடன் அவருக்கு கச்சேரி வாய்ப்புகள் பெருகின. பழனியின் தன்மையான பேச்சு அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியதென்றால். மணி ஐயரின் மௌனம் அவர் மதிப்பை உயர்த்திக் காட்டியது.

மான்பூண்டியா பிள்ளை

This entry is part 18 of 22 in the series இசைவாணர்

கஞ்சிராவில் விடாமல் சாதகம் செய்து, மிக வேகமான உருட்டுச் சொற்களைக் கூட தெளிவாகவும் இனிமையாகவும் வாசிக்கும் திறனை பெற்றார் மான்பூண்டியாப் பிள்ளை. அவர் கற்பனைக்கு உதித்த நடை பேதங்கள், மொஹ்ராக்கள், கோர்வைகள் ஆகியவை அதற்கு முன்னால் எவருக்குமே தோன்றாத புது வழியில் அமைந்திருந்தன. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லாம், “கர்நாடக இசையில் ராகங்களின் நுணுக்கங்களை எல்லாம் வெளிக் கொணர தியாகபிரம்மம் தோன்றியது போல, லய நுணுக்கங்களை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லத் தோன்றியவர் இவர்”, என்று கூறி மகிழ்ந்தனர்.

தட்சிணாமூர்த்தி பிள்ளை

This entry is part 19 of 22 in the series இசைவாணர்

காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, “பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்”-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை.

குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு

This entry is part 20 of 22 in the series இசைவாணர்

கே.வி.நாராயணசாமி நினைவாக நடந்த அந்தக் கச்சேரியில் விரிவாக காபி ராகத்தைப் பாடி, “இந்த சௌக்ய” பாடினார். அன்றிலிருந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு வருகிறேன். பாட்டில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி. நல்ல அழுத்தம். கனமான சாரீரம் இருந்தும், குரலின் ஆற்றல்களைக் காட்டுவதில் கவனம் செலுத்துவதை விட, பாவப் பூர்வமாய் பாடுவதில் கவனம் செலுத்துகிறார். சொல்வனத்துக்காக இவரோடு நடத்திய உரையாடல் இது.

விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை

This entry is part 21 of 22 in the series இசைவாணர்

சடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.

அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை

This entry is part 22 of 22 in the series இசைவாணர்

கச்சேரி தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே என் முன்முடிவுகள் எல்லாம் தகர்ந்து விழுந்தன. இத்தனைக்கும் சிம்மேந்திரமத்யமத்தை அத்தனை ‘கர்நாடக’ ராகமென்று வகைப்படுத்த முடியாது. ஆரோகண/அவரோகண ஸ்வரங்களைப் பிரதானமாகக் கொண்டு வாசிக்கக்கூடிய ராகம்தான். இருப்பினும் ஜோஸ் வாசித்த ஆலாபனையின் ஒவ்வொரு பிடியிலும் கர்நாடகத்தன்மை தன்னிச்சையாய் சொட்டியது.