மேலாளன் என்பான்…

தன் மேலாளனுக்கு வேலை தெரியாது என்று புறம் கூறுவர் சிலர். மேலாளனைவிட தாம் அதிகத் திறன் பெற்றவர் என்று பீற்றிக் கொள்வர் சிலர். சச்சின் டெண்டுல்கர் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுள் ஒருவர். அவரளவுக்கு, பேட்டிங் திறனும், ஸ்டைலும் அற்றவர் தோனி. ஆனால், தோனிக்கு, சச்சின் டெண்டுல்கரோடு, இன்னும் ஒன்பது பேரைச் சேர்த்து, அதை ஒரு வெல்லும் அணியாக மாற்றும் திறன் உண்டு என்பதை நாம் யாவரும் அறிவோம். சச்சினின் செயல் திறனை, அணிக்குத் தேவையான பயன் திறனாக மாற்றி, இலக்கை எட்டுபவர் தோனி.

தெற்கு சூடான்

நீண்ட போராட்டத்திற்கு பிறகு தெற்கு சூடான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறது. தங்களுக்கென ஒரு நாட்டை பெற்ற அந்த மக்களின் மகிழ்ச்சி தருணங்கள் இங்கே புகைப்பட ஆவணமாய் :

அறிவியலும் மதமும்

இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் மோதல் பல நூற்றாண்டு பாரம்பரியம் வாய்ந்தது. ஸ்டெம் செல்(stem-cell) ஆராய்ச்சி குறித்து மேற்குலகில் மதவாதிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கீழே இருக்கும் ஒளிப்படத்தில் மதவாதிகளின் வாதத்தை மறுத்துப் பேசுகிறார் சாம் ஹாரிஸ். இவர் பிரபல எழுத்தாளர். சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர். “அறிவியலும் மதமும்”

ஆயிரம் தெய்வங்கள் – 12

உலக வரலாற்றில் நதிப்புற நாகரிகங்கள் – எகிப்து – மெசப்பட்டோமியா – சிந்து போன்றவை – செல்வாக்கிழந்த பின்னர் மத்திய தரைக்கடல் தீவுகளில் புதிய நாகரிகங்கள் வேர்விட்டன. இவற்றில் கிரேக்க – ரோம நாகரிகங்கள் படைத்த தெய்வங்கள் பற்பல. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க நாகரிகம் “ஜனநாயகம்” என்ற கருத்தை வழங்கயதைப் போல் ரோமின் வழங்கல், குடியரசு. எனினும் கிரேக்கர்களின் வழங்கலில் கலை, தத்துவம், விஞ்ஞானம் போன்ற பல்கலைக்கழகப் படிப்புகள் சிறப்பானவை. தென்கிழக்கு ஐரோப்பாவில் மத்திய தரைக்கடலில் சங்கமமாகும் ஒரு குறுகிய குறிஞ்சி நிலப்பகுதியில் வளர்ந்த கிரேக்கக் கலாச்சாரமே மேலை நாடுகளின் கலாச்சாரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

துப்பாக்கி நண்பர்கள்

தொட்டிக்குள் இறங்கிப் பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்து இறங்கியபோது காலில் பாம்பு ஒன்று விரல் இடுக்கில் மாட்டிக்கொள்ள, பதறி தொட்டிக்குள் விழுந்தேன். அது பாம்பு இல்லை, வெறும் தோல் பெல்ட் என்ற அத்வைத ஞானம் பெற்றபிறகு உயிர் வந்தது. அந்த பெல்டை இழுத்துப் பார்த்தபோது எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. பெல்ட்டின் மறு முனையில் துப்பாக்கி ஒன்று உறையுடன் இருந்தது

செயற்கை கிராமங்கள்

பெரும்பணக்காரர்கள் அந்நியர்களையும் திருடர்களையும் உள்ளே விடாமல் தமது வளாகத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவரும் கிராதிக் கதவும், வேலியும் போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வேலிபோட்ட கிராமங்களோ இடம்பெயர்ந்து உழைக்கும் வர்க்கத்தை ‘உள்ளே’ வைக்கும் வழி. இது மனித உரிமைக்கு எதிரானதென்ற கருத்துதான் பரவலாக நிலவிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு “பூட்டி வைக்கப்படும் கிராமங்கள் எல்லோருக்குமே நன்மை செய்யும்”, என்றொரு பதாகை நகரில் ஆங்காகே ஒட்டப்பட்டிருந்தது.

மின் புத்தகப் புழுக்கள்

விருந்தினர்கள் வீட்டிற்கு வரும் பொழுது, சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றை மேற்கோள் காட்டி அப்படியே தன்னுடைய புத்தக அறைக்கு சென்று அந்த புத்தகத்தில் சரியாக எந்த பக்கத்தில் அப்படி சொல்லியிருக்கிறது என்று சுட்டிக் காட்டுவதன் பெருமையே/சுகமே தனி. சிறிய மின் புத்தகக் கருவியை இயக்கி, அதில் மிக எளிதில் புத்தகங்களில் தேடி இதைக் காட்டும் பொழுது, ஏதோ எலக்ட்ரானிக் தில்லாலங்கடி செய்வது போல பிசு பிசுத்து விடுகிறது!

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 15

எந்தக் கலையும் இரு பகுதிகளை உள்ளடக்கியது. ஒன்று, இணைத்தல் அல்லது கூட்டுதல்; மற்றது பிரித்தல் அல்லது கழித்தல். இதில் இணைந்த கலைஞர்கள் படைப்பை எளிமைப் படுத்துதல் என்னும் வகையில் இசை, ஓவியம், சிற்பம் போன்றவற்றில் புதிய உத்திகளைப் புகுத்தி நவீனப் படைப்பு களை அறிமுகப்படுத்தினர். கவிதையில் இடைவெளிகளைப் புகுத்தி வரிவடிவங் களை நீக்கி புதிய வடிவம் கொண்ட கவிதை படைப்பது என்று இப்பாணி வளர்ந்தது. அக்கவிதைகள் குழுவாகப் பாடப்பட்டன (Choral Groups). பின்னர், இப்படைப்புதளம் திரைப்படத் துறையிலும் நுழைந்தது.

கண்ணாடி வீடுகள்

சமூகத்தில் மாற்று அரசியலின் குரலாகவும், தார்மீகத்தின் அதிபதியாகவும் தன்னை முன்னிருத்தும் இந்திய ஊடகங்களுக்கு உண்மையிலேயே அத்தகைய ஒரு இடம் உண்டா என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

இரு புத்தகங்கள்

பொதுவாக தியானத்துக்கு கற்பனையைத் தடையாகச் சொல்வார்கள். ஆனால் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் விசாரத்துக்குரிய நெய்யொழுக்கு காணப்படுகிறது- அவரது கதைகளை நெறிப்படுத்தப்பட்ட மனதின் கட்டற்ற கற்பனை என்று சொல்லலாம்: வாழ்விலிருந்து கிளைத்தாலும் வாசிப்பில் கிளைத்தாலும் அசோகமித்திரனின் கற்பனை வெகு விரைவிலேயே அவரது சிந்தனைக்கு இயல்பான தனியொரு வண்ணம் பெற்று வளர்கின்றன: அவரது கற்பனை எப்போதும் இருப்பின் ஆதாரங்களை தொடர்ந்து விசாரித்தவண்ணம் இருக்கின்றது.

வாசகர் மறுவினை

யானைகளுடன் பேசுபவன் நூல் அறிமுகக்கட்டுரையைப் படித்தேன். ஒரு புனைகதையைப் படிக்கும்போது கிடைக்கக்கூடிய மன எழுச்சியை இக்கட்டுரை வழங்கியது. அருணகிரி விவரிக்கும் துண்டுதுண்டான சம்பவங்கள் புத்ததகத்தைப் படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

மகரந்தம்

நார்வேயில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பும் துப்பாக்கி சூடும் பலரது உயிரை குடித்துள்ளது. இந்த நிகழ்த்திய அந்த மூடனின் 1500 பக்கங்களைக் கொண்டு கையேடு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த கையேட்டின் ஒரு சில பகுதிகள் கீழே இருக்கும் பக்கத்தில் படிக்கக் கிடைக்கின்றன. மத அடிப்படைவாதம் நிரம்பிய, சக மனிதனை நேசிக்கத் தெரியாத ஒரு முட்டாளின் உளறல்கள் என்று இதைப் படிப்பவர்களால் நிச்சயம் சொல்லிவிட முடியும்.

ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு

ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிக்கைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிக்கைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப் பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது.

தஞ்சம் புகுதலின் சுமை

ரத்தம் தோய்ந்த பஞ்சாபி மற்றும் வங்காளப் பிரிவினை பற்றி ஏராளமான ஆய்வுகள் மற்றும் புதினங்கள் எழுதப்பட்டுவிட்ட நிலையில், அமைதியாக, எந்த வன்முறையும் இல்லாமல் நிகழ்ந்த சிந்திக்களின் குடிபெயர்வு குறித்து இந்திய வரலாற்றில் ஒரு வெற்றிடம் இருக்கிறது என்ற குறையைப் போக்கும் வகையில் தன் புத்தகத்தை முன்வைக்கிறார் ரிடா கோதாரி.

இரு மணிகள்

மிருதங்க மேதைகளான மணி ஐயர், பழனி இருவரும் சமகாலத்தில் கோலோச்சியவர்கள் என்ற போதும், அவர்கள் உயரத்தை அடைந்த விதம் வேறாக அமைந்தது. அவர்கள் கடந்து வந்த பாதையே அவர்களின் ஆளுமையையும், வாசிப்பு அணுகுமுறையையும் பாதித்தது. இடது கைப்பழக்கம் கொண்டதாலும், ஆரம்ப நாட்களில் கணக்கு வழக்குகளில் அதிகம் ஈடுபட்டதாலும் அதிக கச்சேரிகள் வாய்ப்புகள் இன்றி இருந்தார் பழனி. அவரது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பாடுபவருக்கு அணுசரணையாய் வாசிக்க ஆரம்பித்த உடன் அவருக்கு கச்சேரி வாய்ப்புகள் பெருகின. பழனியின் தன்மையான பேச்சு அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியதென்றால். மணி ஐயரின் மௌனம் அவர் மதிப்பை உயர்த்திக் காட்டியது.