சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 2

சீர்காழி கோவிந்தராஜன் குரலில், அறுபது ஆண்டுகளாக நான் கேட்டுவரும் எடுப்பான பாடல் ஒன்று. அது இந்த நூலின் பாடல் என்று இந்தக் கணம் வரை எனக்குத் தெரியாது. மார்கழி மாதத்தின் அதிகாலைக் குளிரில், ஆண்டாள் திருப்பாவையின் ஐந்தாம் பாடலான ‘மாயனை, மன்னு வடமதுரை மைந்தனைத், தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை. ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத், தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைப்’ பரவும் நாளில் இந்தப் பாடலை எழுதும்போது, அதன் ஓசை நயம் எனக்கு சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது.

வாசகர் மறுவினை

குமரன் எழுதிய “இசைபட வாழ்…”,அவரே குறிப்பது போல், நினைவுகளில் தோய்ந்த வண்ண ஓவியம் இதையே மீண்டும் மீண்டும் வாசிக்கையில், இதன் வடிவும் வண்ணமும் புதுப்புது முகம் காட்டும்.

சீனா குட்டி

சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

சந்தை நாள்

முதன்முதலாய் அவனைக் கவனமாய் பார்த்து உண்மையாய் அவனை பாராட்டியது பழவியாபாரி பியாரிலால்தான்: ‘வா கேகுபாய், என்ன நேர்த்தியாய் உடை போடுறிங்க! காலையில் கடைக்கு வரும்போது இருப்பது போலவே நாள் கடைசிவரைக்கும் உங்கள் உடை மடிப்பு கலையாமல், புதிதாய், அப்படியே இருக்கே. உங்கள் வேலைலே உங்களுக்கு நிஜம்மாகவே எத்தனை விருப்பம்!!” என்றான். இது கேகுவின் உள்ளத்தைத் தொட்டு, அன்றிலிருந்து இரு கடைக்காரர்களிடையும் ஒரு பந்தம் உருவானது.

அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல்

உயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது? மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன? பறவைகள் கூடு கட்டுவது எப்படி? சிலந்தி வலை பின்னுவது எப்படி?… இன்னும் இதே போன்ற “எப்படி?” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும். மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உயிர்களின் நடத்தைகளில் பலவற்றுக்கு ‘அது அவ்வுயிரின் இயல்பு’ என்று ஒற்றை வார்த்தையில் விளக்கம் கொடுத்துவிடலாம். ‘உயிர்களின் இயல்பு’ என்பதைத் தெளிவாக, உயிரியல் சார்ந்து விவாதிக்கத் தகுந்த வகையில் புறவயமானதாக வரையறை செய்ய வேண்டுமென்றால், ‘ஒரு உயிரினத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரியல் பண்புகளில் மிக அடிப்படையானவை,’ என்று சொல்லலாம்.

கண் விழித்த கானகம்- பொய்களும் சுயமயக்கங்களும்

‘கண் விழித்த கானக’த்தின் இலக்கியத் தகுதியைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் அத்தனை அலட்சியம் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், இன்று ஜார்கண்ட் மாநிலமாக அறியப்படும் பகுதியில் பழங்குடியினத் தலைவர் ஒருவர், சென்ற நூற்றாண்டின் துவக்கங்களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நிகழ்த்திய ஆயுதப் போராட்டத்தை விவரிக்கும் நாவல் இது. இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் உள்ள ஒரே ஆதிவாசித் தலைவரின் உருவப்படம், 1870 முதல் 1900 வரை முப்பதாண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த பிர்ஸா முண்டாவின் படம்தான்.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 7

என் அனுபவத்தில் எத்தனையோ வேறுபட்ட செல்லப்பாக்களைப் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக தன் நேர்ப்பார்வையிலும் சிக்கனமாகவும் அதோடு எந்த வித ஆடம்பர அருவருப்புகளும் அற்ற எளிமையும் நல்ல கட்டமைப்பும் கொண்ட புத்தகங்களை எழுத்து பிரசுரமாக அறிமுகப்படுத்தியது. அந்த நாட்களில் எழுத்து பிரசுர புத்தகங்கள் எளிமைக்கு நேர்த்திக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

தற்செயலாய் உருவான பிரபஞ்சம்

முன்பு விபத்துகளாகக் கருதப்பட்ட நிகழ்வுகளை, அடிப்படைக் கொள்கைகளுக்கும் காரணங்களுக்கும் உட்பட்ட நிகழ்வுகளாக நிலைநிறுத்துவதே அறிவியலின் வரலாற்றுச் செயல்பாடுகள். இதுவரை தெள்ளத் தெளிய விளக்கப்பட்ட நிகழ்வுகளோடு பட்டியலில் சேர்க்க வேண்டியவை இதோ: வானத்தின் நீல நிறம், கோள்களின் சுற்றுப்பாதைகள், ஏரியில் இயக்கப்படும் படகு விட்டுச்செல்லும் வழித்தடம் , உதிர்பனித்துகளின் அறுகோணப் பாங்கு, பறந்து செல்லும் வான்கோழியின் எடை, கொதிக்கும் நீரின் வெப்ப நிலை, மழைத்துளியின் பரிமாணம், சூரியனின் வட்டவடிவத் தோற்றம் எனப்பல.

எஸ்.ஜானகி – பத்மபூஷன் இழந்த கெளரவம்

ஜானகி பாடிய பல்வேறு முக்கிய பாடல்களை/ ஒவ்வொருத்தரின் தனி விருப்பபாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம்/ சரித்திரம் என்றெல்லாம் மார்பு தட்டுவதோ அல்லது அவரின் வாழ்க்கை/தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ இது வரை வாங்கிய விருதுகளை பட்டியலிடுவதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய கௌரவத்தை புறக்கணிக்கும் அளவிற்கு அவருக்கு இருக்கும் நேர்மையான நிலைப்பாட்டை அங்கீகரிப்பது மட்டுமே.

மகரந்தம்

சமீபத்தில் ஃப்ரெஞ்சுப் படையினர், மாலி நாட்டிலிருந்து இந்தக் கும்பலை ஒழித்துக் கட்டவென்று ஒரு படையெடுப்பைச் செய்து அந்நாட்டின் பெரும் பகுதிகளிலிருந்து இவர்களை விரட்டி இருக்கின்றனர். கடந்த ஒரு வருடமாகப் பல நகரங்களைக் கைப்பற்றி இருந்த இஸ்லாமியவாதிகள் துரத்தப்பட்டு மக்கள் விடுதலை பெற்ற பின்னர் அந்த ஒரு வருட பயங்கரங்கள் வெளிவரத் துவங்கி இருக்கின்றன.

ழான் பியே ஸேர் (Jean-Pierre Serre) மற்றும் இடவியல் (Topology)

ஒரு பொருளைக் கிழிக்காமலும் வெட்டி ஒட்டாமலும் அதன் தற்போதைய வடிவத்திலிருந்து வேறு வடிவத்திற்கு மாற்ற முடியுமெனில், இடவியல் இந்த இரு பொருட்களையும் ஒத்த இயல்பு கொண்டவையாகப் பார்க்கிறது. உதாரணத்திற்கு காபி கோப்பையும் ஓட்டை போட்ட வடையும் இடவியல் அடிப்படையில் ஒன்றுதான்.

விஞ்ஞான முட்டி மோதல் –9

ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆய்வு இன்னும் சில ஆண்டுகள் தொடரும். இந்த ஆய்வின் முடிவு,நம் அணுக்கட்டுமானம் பற்றிய நம் புரிதலை உறுதி செய்யலாம். இல்லையேல், புதிய அணுகுமுறைக்கான உந்துகோலாகவும் இருக்கலாம். விஞ்ஞானிகள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள். சரி, இந்த ஹிக்ஸ் விஷயத்தை விட்டால் வேறு எந்த விஷயமும் இல்லையா?

பித்து

மறுநாள் மாலை வேலையிலிருந்து திரும்பும்போது அந்தப் பெண்ணை அதே கட்டிடத்தில் பக்கத்தில் திரும்பப் பார்த்தேன். 25 , 30 வயது இருக்குமோ என்னவோ. மொட்டைத் தலையில் முடி அங்கங்கே முளைத்திருந்தது. மண்டையில் நீளமாய் தையல் போட்ட தழும்பு இருந்தது. குச்சியான உடம்பிற்கு மிகபெரிதான ஒரு நைட்டியை போட்டுக் கொண்டிருந்தாள். நிறைய கிழிசல்கள். கையில் எதையோ வைத்துக் கொண்டு கட்டிட வாட்ச்மேனின் சின்னக் குழந்தையை ‘வா வா’ என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – கன்னடம்

மர்மமான நிறுத்ததுக்கு அழைத்து செல்ல
ஓட்டுனர் அற்ற ஒரு பஸ்ஸைப் போல்
இரவு எங்கள் இருவர் மேலும்
ஒரே காலத்தில் படிந்திருந்தது.

மேலும் கீழும்

சௌமியா, மெதுவாக ஒரு புஸ்வானத்தை எடுத்து வைத்தாள். அது ‘புஸ்ஸ்ஸ்’ என பெரிய சத்தத்தோடு பொங்கி எழுந்தது. இருவரும், அதன் சத்தத்தையே கேட்டுக்கொண்டிருந்தனர்.கீழிருந்து டி.வி யின் சத்தம் அதிகரித்தது. ஒருவர் மாற்றி ஒருவர், புஸ்வானங்களை விடத் தொடங்கினர். அது தீர்ந்ததும் தரை சக்கரங்கள். ஸ்ருதி மெதுவாக சௌமியாவைப் பார்த்து,’அப்போ, நிஜமாவே அம்மாவும் அப்பாவும் டைவர்ஸ் பண்ணின்றுவாளா?” என கேட்டாள். அதுவரை, அது ஏதோ சௌமியா தான் படிக்கும் கதைப் புத்தகங்களிலிருந்து, தன்னை பயமுறுத்த சொல்லும் கற்பனை என்றே நினைத்திருந்தாள்.

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – தெலுங்கு

கண்ணாடியென்றால்
சுவற்றில் தொங்கும் உடலென்று பொருளல்ல
உன் மனச்சாட்சி
எப்போதும் உன் பிரதிபலிப்பின்
பின்னாலிருக்கும் மாயாஜால வித்தைக்காரன்

ப்ரூஸ் ஸ்டெர்லிங்க் – ஒரு பேட்டி

ப்ரூஸ் ஸ்டெர்லிங் அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தில் ஆஸ்டின் என்கிற நகரில் 1954 ஆம் வருடம் பிறந்தவர். அறிவியல் நவீனங்கள் எழுதிப் புகழ் பெற்றவரானார். அறிவியல் நவீனங்களில் ‘சைபர் பங்க்’ என்கிற ஒரு கிளைப் பிரிவைத் தோற்றுவித்த சிலரில் இவர் ஒருவர் என்று அறியப்பட்டவர். சமீப காலத்தில் இவர் வலையுலகின் விமர்சகர்களில் ஒருவராகவும், சைபர் உலகின் கருத்தாளராகவும் அறியப்பட்டு, யூரோபியன் உயர்கல்வி நிலையம் ஒன்றில் விரிவுரையாளராகச் செயலாற்றுகிறார். அது இவர் செய்யும் பல வகைத் தொழில்களில் ஒன்று.

சகல கலா ஆசார்யர் – வித்வான் எஸ்.ராஜம் ஆவணப்படம்

எஸ்.ராஜம் கர்னாடக சங்கீதத்தின் ஒப்பற்ற கலைஞர், ஓவியர், சங்கீதக் களஞ்சியம் என பல முகங்கள் கொண்டவர் என்றாலும், நமது பாரம்பரியக் கலையின் கடைசி ஆன்மா என அவரது ஆவணப் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. கலையின் அணையாத கங்கு கலைஞர்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டில் அடங்கியுள்ளது. அது என்றும் நீடித்திருக்கும் பெரும் தீ. காலகாலத்துக்கும் கலையின் எண்ணிலடங்கா முகங்களை உயிர்ப்போடு வைத்திருப்பது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம்.

பனுவல் போற்றும் பனுவல் போற்றுதும்

ஏன் இன்னும் நாம் புத்தகங்களை கொண்டாட வேண்டும்? காரணம் மிக எளிதானதுதான். சினிமா, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என மீடியாக்கள் அனைத்தும் செய்திப்பகிர்வையும், பொழுதுபோக்கையுமே பிரதானமாகக் கொண்டு இயங்கிவருகின்றன. ஆக செய்திகள், அனுபவங்கள் மீதான தொடர் சிந்தனைகள், ஆய்வுகளை நிகழ்த்த நமக்கு இருப்பது புத்தகங்கள் மட்டுமே.