சாமானியனின் முகம்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கான கதாபாத்திரங்கள் உருவாவதை விட, கதாபாத்திரங்களுக்கான முகங்களை, மனிதர்களைத் தேடிப்பிடித்து நடிக்க வைக்கும் முயற்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதானிருக்கிறது என்றாலும், இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அத்திபூத்தாற் போல் எப்போதாவது, ஏதாவது ஓர் அதிசயம் நிகழாமல் இல்லை. அந்த அதிசயங்களில் கொஞ்சம் நேர்மை இருக்கும் பட்சத்தில், அதற்கான அங்கீகாரமும் தானாய்த் தேடி வந்து விடத்தான் செய்கிறது. தமிழ் கதாநாயகர்களின் வரிசையில் தற்போதைய அதிசயமாகத் திகழும் தனுஷ், ஏற்கனவே இங்கு நட்சத்திரமாகி சில வருடங்கள் ஆகின்றன. அவரது உடல்மொழி, மற்றும் முகபாவங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற விதமாக, யதார்த்த வாழ்க்கைக்கு வெகு அருகில் அவரைக் கொண்டு சென்று, சேவற்சண்டையில் பங்கேற்கும் ஓர் இளைஞனாக அவரை உருமாற்றி, சென்ற முறை தேசிய விருது வாங்கிக் கொடுத்தார் இயக்குனர் வெற்றிமாறன்.

கருப்பு நகரம்

மூலக்கடை ஜங்ஷனில் வழக்கமாக நடுரோட்டில் நிற்கும் பழக்கடைகளும், பூக்கடைகளும் ஓடாத வண்டிகள் தந்த இடத்தையும் சேர்த்து முழுரோட்டையும் ஆக்ரமித்துக் கிடந்தன. ”எங்கள் ஆண்டவனைக் கேள்வி கேட்ட மால்கம் ஸ்பீடே! மன்னிப்பு கேள்” என்ற அந்த பச்சைநிறத் தமிழ் பேனரை சச்சின் படிப்பாரா இல்லை மால்கம் ஸ்பீட் படிப்பாரா என்றெல்லாம் யோசிக்க விழையவில்லை ”பெட்ரோல் பெட்ரோல்” என்று மனனம் செய்து கொண்டிருந்த என் மனம். கிட்டத்தட்ட ஒண்ணரை கிலோமீட்டர் உருட்டலுக்குப் பின் மூலக்கடை பஸ் டிப்போ வரை சென்று சேர்ந்ததில் கயிறு பிடித்து இழுத்து மூடிக் கிடந்த பெட்ரோல் பங்கை தரிசனம் செய்ய நேர்ந்தது.

விடுதலையாதல்!

அப்பாவுக்கு பக்கவாதம் என்று சொன்னார்கள். குழறிக் குழறிப் பேசினார். வலது பக்கக் கையும் காலும் உணர்ச்சியற்றுப் போயின. இடது பக்கத்தில் உணர்ச்சிகள் இருந்தன. ஆனால் மருத்துவர்கள் அதற்கு மருந்துகள் உண்டு என்றார்கள். கொஞ்ச காலம் ஆனாலும் பேசுவார், நடப்பார் என்றார்கள். அதெற்கெல்லாம் ஏராளமாகப் பணம் வாங்கிக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப சில நாட்களில் அப்பா தெளிவாக இருந்தார். ஓரிரு வார்த்தைகள் பேசினார். அசையவும் புரளவும் செய்தார். அவள் நம்பிக்கைகள் வேர் பிடிக்கத் தொடங்கும்போது மீண்டும் சாய்ந்து விடுவார். ஆறு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்தார்.

காணாமல் போன கனவுக்கன்னிகள்

எனது முதல் கனவுக்கன்னி, இயக்குனர் சத்யஜித்ரே அவர்களால், ‘உலகின் மிக அழகிய பெண்களில் ஒருவர்’ என்று வர்ணிக்கப்பட்ட ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதா. ஆம்… ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாதான். ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்ரதாவோ, ’47 நாட்கள்’ ஜெயப்ரதாவோ அல்ல. ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதா மட்டுமே என் கனவுக்கன்னி. சமீபத்தில் மலையாள இயக்குனர் ப்ளெஸ்ஸியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ப்ரணயம்’ என்ற மலையாளப் படத்தில் ஜெயப்ரதாவைப் பார்த்தபோது, மனம் பழைய ஜெயப்ரதாவையே சுற்றி சுற்றி வந்தது.

சிற்றூரும் தளபதியும் – சென் ஷிஸு

அடுத்த இரண்டு நாட்களுக்கு மரத்தடியில் தளபதியைக் காணோம். ஊர்மக்கள் அவரைப் பற்றி விதவிதமாக வம்புபேச ஆரம்பித்து விட்டனர். அவருடைய ஆரோக்கியம் சரியில்லை என்றனர். அவரது நோய் முற்றியிருந்தது. மருத்துவமனையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அடுத்த நகரிலிருந்த இராணுவப் பொதுமருத்துவமனைக்குப் போக அளிக்கப்பட்ட அரசாங்க ஜீப் சவாரி மறுக்கப் பட்டிருந்தது. ஓர் இரவில், கண்ணியம் மின்னிய சில இளைஞர்கள் வந்தனர். முன்னால் இரண்டு கூலிகள் நடந்தனர். டோலியில் கிடத்தித் தூக்கிக் கொண்டு இராணுவ மருத்துவமனைக்கு விரைந்தனர்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 11

குலோத்துங்கன் படைகளில் நெருங்கி நடக்கும் யானைகள், கடல் நீரைப் பொழிகின்ற மலைகளைப் போல் மதம் பொழிகின்ற இரண்டு கன்னங்களை உடையன. நெருப்புப் பிறக்கும் மேகங்கள் என அவற்றின் விழிகளில் இருந்து கனல் பிறந்தன. பகைவரது யானைகளின், குதிரைகளின் உடல்களைப் பிளப்பன போன்று பிறைச் சந்திரனை ஒத்த இரு தந்தங்களை உடையன. உலகம் நடுங்கவும் வடவைக் கனல் போன்றும் முழங்கும் ஒலி எழுப்பின.

வாசகர் மறுவினை

கடந்த பல பத்தாண்டுகளில், உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதப் படும் எல்லா வரலாற்று நூல்களிலும் பொதுயுகம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். தமிழில் இது பற்றிய அறிதல் இன்னும் வந்து சேரவில்லை போலும். அதனால் பழைய பெயர்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கி.மு, கி.பி, என்பதற்குப் பதிலாக பொ.மு, பொ.பி. என்ற வழக்கை நாம் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். வரலாறு குறித்த எனது கட்டுரைகள் எல்லாவற்றிலும் அப்படித்தான் நான் எழுதி வருகிறேன்.

ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து…

அமெரிக்காவின் எண்ணைவளம் பற்றி வெளியான செய்தி போலவே, உலக எண்ணைவளத்தைப் பற்றிய செய்தியை ஓப்பெக் குழு 2004இல் சந்தடியின்றி வெளியிட்டது. அதிகரித்துவரும் எண்ணைத் தேவையின் கணிப்பு சவுதி அரேபியாவின் சோர்வடைந்த எண்ணைக்கிணறுகளுக்கு சவால்: இதுதான் பிப்ரவரி 24, 2004 அன்று வெளியான நியூயார்க் டைம்ஸ் செய்திக்கட்டுரையின் தலைப்பு. இக்கட்டுரையில் உலகில் அதுவரை எண்ணை உற்பத்தியில் முன்னனியில் இருந்த சவுதி அரேபியாவின் எண்ணைக்கிணறுகள் காலியாகிவருவது குறிப்பிடப்பட்டது; அதாவது அவை நூறு சதவிகித உற்பத்தி அளவை தொட்டுவிட்டன.

ஹென்னிங் மான்கெல் – பன்முக ஆளுமை கொண்ட முன்னோடி

மான்கெல் வெறும் குற்றப் புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, அவரின் ஆளுமை இன்னும் விரிவானது. ஒரு முழுமையான பார்வையைத் தரவேண்டும் என்பதற்காக அவருடைய நாடகப்பணி, பிற எழுத்துக்கள் பற்றி இத்தனை விரிவாகச் சொல்கிறேன். இன்ஸ்பெக்டர் வலாண்டர் தொடரைத் தவிர, தனி நாவல்கள், சிறாருக்கான இரு தொடர் நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகள் என பலவற்றில் மான்கெல் ஈடுபட்டுள்ளார்.

சதி பதி

வைகாசி பிறந்தால் மாரியம்மாளுக்கு முளைப்பாரிக் கும்மி. வானம் பொய்த்தால் மழைக்கஞ்சிக் கும்மி. வாழ்க்கையை முழுக்க முழுக்க சந்தோசமாக அனுபவிக்கப் பிறந்தவள் மாதிரி சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தாள். மரம் ஏறித் தேங்காய் பறிப்பவளா இப்படிப் பூக்கட்டுகிறாள் என்று தோன்றும்படிச் சரம் தொடுப்பாள். சாமிக்குக் கலக்கமாகக் கட்டி சடைக்கு வைக்க நெருக்கமாகக் கட்டும்போதே நூலில் ஐந்து முடிச்சுப் போட்டுக் குஞ்சாரமாக்கி விடுவாள்.

அணு ஆற்றலின் அரசியல் – பகுதி 3

விஞ்ஞானப் பிரச்சினைகளில் நிபுணர்கள் அனேகமாய் எப்போதுமே திடமான ஒத்தக் கருத்துடன் இருப்பதில்லை. இதனால்தான் இந்த இழுபறி விஞ்ஞான உண்மைக்காக என்றல்லாமல் விஞ்ஞானச் சர்ச்சையே எனப்படுகிறது. ஃபுகூஷிமா பேரிடர் மற்றும் ஜப்பானின் ஆற்றல் கொள்கை பற்றிய ஆணையங்களில் குழு உறுப்பினர்களிடையே கடுமையான உடன்பாடின்மை அபரிமிதமாய் நிலவுகிறது.

மகரந்தம்

தொழில்முறைப்பட்ட விவசாயம் குறைப்பார்வையோடு பரந்த வகைகள் கொண்ட விவசாயத்தை மிகச் சில வகைகளான விதைகளில் குறுக்கி நாசத்தைக் கொணரவிருக்கிறது. நாம் பாரம்பரிய விவசாயத்தை முற்படுத்தி பன்முகப்பட்ட விளைச்சல் முறைகளைக் கொணர்வது மிக மிக அவசியம். இந்தியாவின் பாரம்பரிய விவசாயிகள் வெகு காலமாக இதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நகரத்தின் அறிவாளர்கள் அவர்களை இளக்காரமாகப் பார்த்து இந்திய விவசாயத்தை பெருமளவு நாசம் செய்திருக்கிறார்கள்.

குருவி பிடித்த காலம்

ஒரு வயதுக்குப் பிறகு குருவி பிடிக்கும் பழக்கம் நின்று விட்டது. சொல்லப் போனால் நாங்கள் எல்லோருமே குருவிகளின் பாதுகாவலனாக மாறத் தொடங்கினோம். அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குருவி பிடிக்க முனைந்த போது, பறவையிலாளர் சலீம் அலி ரேஞ்சுக்கு அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். சிறுவயதில் சலீம் அலியும் குருவிகளைப் பிடித்து வறுத்துத் தின்றதாக தன்னுடைய சுயசரிதையில் (The fall of a Sparrow) எழுதியிருக்கிறார்.

வீட்டுக் குருவிகளைக் காப்போம்!

வீட்டுக் குருவிகளைக் காக்கும் இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.. வீட்டுக் குருவிகள் நம் நாடெங்கும் எந்த நிலையில் உள்ளன, எந்தப் பகுதிகளில் பரவலாகவும் எங்கு குறைவாகவும் உள்ளன என்பது குறித்து நீங்கள் பகிரக்கூடிய தகவல்கள் முக்கியமானவை. http://www.citizensparrow.in என்ற தளத்தில் ஒரு ஐந்து நிமிட அளவில் நீங்கள் உங்கள் சுற்றுவட்டாரத்தில் குருவிகளின் இருப்பை ஆவணப்படுத்துவதன் மூலம் இந்தியாவெங்கும் உள்ள வீட்டுக் குருவி ஆர்வலர்களோடு நீங்களும் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.

பார்த்தும், போர்ஹெஸ்ஸும் பின்னே டயரும் – சில அறிமுகக் குறிப்புகள்

இன்னும் பொருத்தமாகச் சொன்னால், டயர் (Geoff Dyer) வாழ்க்கையின் விசித்திரங்களையும், பாணிகளையும் ஈடுபாட்டுடன் கவனிக்கும் வாழ்க்கை ரசிகர் ; அதில் குதூகலமாய் திளைக்கும் விசிறி என்று கூடச் சொல்லலாம். அதனால் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போகாமல்- அதான் நாவலெழுதுகிறார், புனைவுகளை எழுதுவது எப்படி என்று பல்கலையில் போதிக்கிறார், அவற்றைச் செய்யாமல்- பார்ப்பது, கேட்பது, ருசித்தது, அனுபவித்தது என்று பலதையும் பற்றி தனக்காகவும், நமக்காகவும் குறிப்புகளை எழுதித் தள்ளுகிறார். தனக்காகவும் என்று சொன்னதை இலேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

திரவ ஒளி தேவதை

நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய கருப்பு திட்டு மண்தரையிலிருந்து மேலெழும்பி வெளிச்சத்தினூடே அந்தரத்தில் ஊர்ந்து செல்லத் துவங்கியது. பூச்சியோ என்னவோ என்று முதலில் சந்தேகித்தேன். ஆனால் அது உயிரிலி என்பதை என்னால் சீக்கிரத்தில் கிரகித்துக்கொள்ள முடிந்தது.ஒழுங்கற்ற வடிவில் பிய்த்தகற்றப்பட்ட நிலத்துண்டென உருக்கொண்டிருந்த அந்த இருள்திட்டை ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவனைப் போல் நான் பைக்கில் பின்தொடரலானேன்.

சரித்திரத்தை அழிக்கப்போகும் சாலை

1300 ஆண்டுகள் பழமையான சிவாலயம் ஒன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இடிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு நிற்கிறது. அந்த ஆலயம் ச்மபந்தரால் பாடப்பட்ட ஒன்று. சோழ அரசர்களின் கல்வெட்டுகள் கோவிலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. திருப்பரவூர் பனங்காட்டீஸ்வரர் கோவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனையபுரம் கிராமத்தில் உள்ளது. அதையொட்டி பெண்ணையாறு ஓடுகிறது. பரவைபுரம் என்றும் அந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.

விருதுகள், பரிசுகள், பதவிகள், அங்கீகாரங்கள்

தனிப்பட்ட பிடித்தங்கள், சார்புகள், காழ்ப்புகள் தேர்வு, ஆதரவு, எதிர்ப்பு எல்லாவற்றையும் கறைபடுத்துகின்றன. நாஞ்சில் நாடனின் கும்பமுனி தனக்கு ஏன் ஒரு விருதும் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணங்களைப் பட்டியலிடுவார். நான் முற்போக்கு இல்லை, பிராமணன் இல்லை என்று அது போகும். லா.ச.ரா. தனக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் எதுவும் கிட்டாததற்கு தான் பிராமணன் என்பது காரணம் என்பார்.