சட்டென ஒரு எண்ணம் தோன்றியது. எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தேன். இலேசாகத் திடுக்கிட்டு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தாள். வியர்வையில் கலந்த மெல்லிய மல்லிகை மணம் அவள் மேல் இருந்து வீசியது. அது சுர்ரென நாசியில் ஏறி மூளைக்குள் புகுந்தது. தலை இலேசாகக் கிறுகிறுத்தது. நானும் அவளும் மட்டுமே தனியாக இருப்பது போன்ற ஒரு உணர்வு. என் உடலில் ஒரு நடுக்கம்.
ஆசிரியர்: kolappan
குருவி பிடித்த காலம்
ஒரு வயதுக்குப் பிறகு குருவி பிடிக்கும் பழக்கம் நின்று விட்டது. சொல்லப் போனால் நாங்கள் எல்லோருமே குருவிகளின் பாதுகாவலனாக மாறத் தொடங்கினோம். அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குருவி பிடிக்க முனைந்த போது, பறவையிலாளர் சலீம் அலி ரேஞ்சுக்கு அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். சிறுவயதில் சலீம் அலியும் குருவிகளைப் பிடித்து வறுத்துத் தின்றதாக தன்னுடைய சுயசரிதையில் (The fall of a Sparrow) எழுதியிருக்கிறார்.
கால வெள்ளத்தில் கரைந்து போன கலைஞர்கள்
மறைந்த செம்மங்குடி சீனிவாசய்யரின் குருவான சகாராமராவ் திருவிடைமருதூர்க்காரர். செம்மங்குடியின் பேச்சில் எப்போதுமே சகாராமராவைப் பற்றி ஒரு செய்தி இருக்கும். அந்த சகாராமராவ் வாழ்ந்த திருவிடைமருதூரையும், அவர் குடும்பத்தினரையும் பார்த்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில்தான் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். ஆனால் அவர்களைத் தேடிப்பிடிப்பது அத்தனை எளிதாக இல்லை.
பேரிசையின் பின்னணி: தவில் கண்ட மாற்றங்கள்
நாஞ்சில் வீட்டுத் திருமணத்தைப் பொறுத்தவரை, எழுத்தாளர்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவதற்கான வாய்ப்பை தவில் சத்தம் கெடுத்து விட்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆகவே ஒவ்வொருவராக வெளியேறி வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் உரையாடலில் பங்கெடுத்தாலும், என் காதுகள் என்னை அறியாமல் மண்டபத்திற்கு உள்ளே சென்று கொண்டிருந்தன. அதே சமயத்தில் தவில் ஒலி குறித்த எண்ணமும் வளர்ந்தது. தவில் மிகு ஒலியை எழுப்பும் ஒரு வாத்தியம். ஒரு காலத்தில் கோயிலில் பூசை தொடங்குவதையும் சுவாமி புறப்பாடு தொடங்குவதையும் மக்களுக்கு அறிவிக்க அதற்கு ஒரு தேவை இருந்தது. “தொம் தொம்” என்று அலாரிப்புடன் மல்லாரிக்காக தவில் வாசிக்கும் போது, அது இசை இரசிகனிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை இன்னவென்று சொல்லி விட முடியாது. மலைக்கோட்டை பஞ்சாமி என்று அழைக்கப்படும் பஞ்சாபகேசபிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோயில் இராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசன் என கடந்த காலத்து வித்வான்கள் தொடங்கி, இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம், ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், திருவாழபுத்தூர் கலியமூர்த்தி, திருப்புங்கூர் முத்துக்குமாரசாமி என மாபெரும் தவில் கலைஞர்கள் வரிசை நீள்கிறது. ஆனால் இவர்கள் எல்லோருடைய வாசிப்பையும் தொடர்ந்து கேட்கும் ஒரு இரசிகன், காலந்தோறும் தவில் வாத்தியத்தின் சத்தத்திலும் வாசிப்பிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் புரிந்து கொள்வான்.
வன்மம்
நாகர்கோயிலுக்கு வரும் பெரும் தலைவர்கள், அதற்கு முன்னதாக முத்தம் பெருமாள் அண்ணாச்சியின் அழைப்பின் பேரில் ஊரில் ஒரு அரை மணி நேரம் பேசி விட்டுப் போனார்கள். இயக்கத்தின் கோட்டையாக ஊர் மாற ஆரம்பித்தது. காங்கிரஸ்காரர்களின் பிள்ளைகளும் இரகசியமாக இயக்கத்துக்கு ஓட்டுப் போடப் போவதாகப் பேசிக் கொண்டார்கள். இயக்கத் தலைவரே நாகர்கோவிலில் பேச வரும் போது, “நாஞ்சில் நாட்டில் நான் கண்டெடுத்த முத்துதான் இந்த முத்தம்பெருமாள்” என்று தூக்கி வைத்து பேசினார். அண்ணாச்சிக்கு பிரச்சாரம் செய்ய “அறிவுலக மேதையே” ஒருமுறை மெனக்கெட்டு வந்து போனார்.
உதிரம்
கும்மிருட்டுக்கு மனித உருவம் கொடுத்தது போல் நிற்கிறாள். கூந்தல் பின்காலைத் தொட்டுப் புரள்கிறது. பத்து கைகள். நெருங்க நெருங்க இன்னும் உருவம் தெளிவானது. கழுத்தில் போட்டிருக்கும் செவ்வரளி மாலை விம்மி நிற்கும் முலை மேடுகளில் லேசாக மடிந்து கால் முட்டுகளைத் தொடுகிறது. சூலம், அம்பு, சூரிக்கத்தி என எட்டு கைக்கும் ஒவ்வொரு ஆயுதம். ஒரு கையில் கொப்பரையில் குங்குமம். தரை வரை நீளும் ஒரு கையில் துண்டிக்கப்பட்ட தலையை முடியைப் பிடித்து தூக்கி வைத்திருக்கிறாள். எந்த யுகத்தில் கொல்லப்பட்ட எந்த அரக்கனோ? அறுபட்ட கழுத்தில் இருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. கைகளில் எல்லாம் சீமந்தம் முடிந்த சூலிக்கு அடுக்கியிருப்பது போல் வளையல்கள். இன்னும் நெருங்கிய போது அந்த கருமையான முகத்தில் செவ்வரியோடிய வெள்ளை விழிகள் பளிச்சென தெரிகின்றன. முகத்தில் சாம்பிராணி தைலம் பூசப்பட்டிருந்தது. அதன் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கில் பேசரி பளிச்சென மின்னுகிறது. காதுகளில் குண்டலங்கள். இரத்த சிவப்பில் வாய். உக்கிரமான பத்திரகாளி வந்து விட்டாள். உலகம் அழியப் போகிறது. தன்னையறியாமல் கையை எடு்த்துக் கும்பிட்டார். கண்ணில் நீர் தாரை தாரையாகப் பாய்ந்தது.
வெறுமை
லேசா இராகம் வாசிச்சதும் ஆபேரியோணு நெனக்கதுக்குள்ள ஹிந்துஸ்தானி மாதிரி கேக்கு. பீம்பிளாசப் போட்டு உருக்கிட்டாரு. இவரு வாசித்ததும் தவிலுல உருட்டுச் சொல்லு அடிச்சுட்டு, கையைப் பொத்தி வலந்தலையிலே ஜிம் ஜிம்முன்னு ஒரு முத்தாய்ப்பு வைச்சான். யாரு? சண்முகவடிவேலுதான். கந்தன் கருணை புரியும் வடிவேலுண்ணு இவரு எடுத்தாரு. மதுரை மணி பாடி எத்தனை தடவைக் கேட்டிருக்கேன். “வடிவேல்” என்று அவர் பாடுகையில் பழனி சுப்புடு மிருதங்கத்தில் பிளாங்குனு ஒரு சாப்பு கொடுப்பாரு. அது ஒரு அனுபவம். காருக்குறிச்சி வேறு தினுசு. ஒவ்வொரு வரியும் வாய்ப்பாட்டு மாதிரியே கேக்கு.