ஆயிரம் தெய்வங்கள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சொர்க்கம் – நரகம் என்ற கருத்துகள் வந்தன. இக்கருத்து எல்லா நாகரிகங்களுக்கும் பொது. இறப்பை ஏற்காதவர்கள் இன்றும் உள்ளனர். அன்றும் உள்ளனர். பனிக்கட்டிக்காலத்தில் மதத்தின் மூலவேர் லாஸ்கோ ஓவியத்தில் தென்பட்டது. மிருக வழிபாட்டின் தொடக்கம்.
வேதகால ஆரியர்கள் கடாவெட்டி யாகம் செய்தார்கள். தானியங்களை அக்னிக்கு அதாவது தீயிலிட்டார்கள். இதெல்லாம் ஏன்?

களவாணிகள் : யதார்த்த சினிமாவின் இறங்குமுகம்

மணிரத்னம் போல் புவியியல் நிபுணர் யாருமில்லை எனலாம். அவரைப் பொருத்தவரை சிறுநகரம், கிராமம் எல்லாம் திருநெல்வேலியுடனேயே முடிவடைகின்றன. மதுரையைத் தாண்டினால் மத்திய ஆப்ரிக்கா வந்து விடுவதால் அவர் அங்கெல்லாம் செல்வதில்லை. காட்டுக்குள் நடக்கும் கதை என்றால் இந்தியாவின் எந்த காட்டிற்கும் சென்று வந்து விடுவார். நமக்கு விஷுவல் தானே முக்கியம். கதையுடன் தொடர்புடைய நிலமாவது மண்ணாவது.

அத்தனை கேஸும் முத்தின கேஸ்!

காதலனுடன் சண்டை போட்டுக்கொண்ட இளம் பெண் மனச் சோர்வு அடைந்து, இறுகிய முகத்துடன் பார்க்கில் உட்கார்ந்து புல்லைக் கிள்ளிக் கிள்ளிப் போடுவது, கடைசியில் அந்த ராஸ்கல் செல்போனில் கூப்பிடும்போது துக்கத்தில் பேச்சு வராமல் தடுமாறுவது – இதற்கெல்லாம் பெயர் ‘அட்டென்யுவேடட் சைக்காடிக் சிம்ட்டம்ஸ் சின்ட்ரோம்’. எல்லாவற்றையும் விட விசேஷமான வியாதி, ‘டெம்ப்பர் டிஸ்ரெகுலேஷன் டிஸார்டர்’ எனப்படுவது. இது வேறொன்றுமில்லை, மனிதனாகப் பிறந்தவனுக்கு சில சமயம் கோபம் வருகிறதே, அதுதான் !

ராகம் தானம் பல்லவி – பாகம் நான்கு

முதலில் கூன் போடாமல், நிமிர்ந்து சம்மனம் போட்டு (சப்ளாமூட்டி) உட்காருங்கள். முகத்தை சீரியஸாய் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் உள்ளங்கையால் தொடையில் செல்லமாக ஒரு தட்டு (நம் தொடையில் கொசு உட்கார்ந்திருந்தாலோ, தொடை அடுத்தவரதென்றாலோ படார் என்று அடித்துக்கொள்ளலாம்). பிறகு சுண்டுவிரலில் தொடங்கி மூன்று விரல்களை கட்டைவிரலால் தொட்டு எண்ணிக்கொள்ளுங்கள்.

கை நிறைய காண்டம்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அல்லது விஜயகாந்தை கூப்பிடலாமா என்று கூட தோன்றியது. நான் என் அலுவலகத்துக்கு போன் செய்து இப்படி நடக்கிறது, யாராவது பெரிய மேனேஜர் கட்டாயம் இங்கே வர வேண்டும் என்றேன். “அதுக்குத்தானே உன்னை அனுப்பினோம் யூ ஹாண்டில் த சிச்சுவேஷன்,” என்று இங்கே நடப்புப் புரியாமல் பேசினார்கள். நிறைய பட்டுவிட்டதால், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று சின்ன வயதில் படித்த கதை ஞாபகத்துக்கு வந்தது. ஒரு பிளான் போட்டேன்.

அறன் வலி உரைத்தல்

மனிதரில் பத்து சதவீத புண்ணியவான்களுக்கு இப்படியொரு சாமர்த்தியம். எஞ்சியிருக்கிற 90 சதவீதத்தினர் செக்குமாடுகள்போல சாவகாசமாக வாழ்க்கையை சுற்றிவரபழக்கப்பட்டவர்கள். அந்த அசட்டு மந்தையில் நானும் ஒருவன். இப்படி எப்போதாவது எதையாவது உளறிக்கொண்டிருக்கிறேன். நியாயங்களை அல்லது நியாயங்களென்று நம்புவதை கேட்பாரற்ற(?) வெளிகளில் உதறிவிட்டு, கோடைகால காவிரிப்படுகைபோல ஈரம் காணாமல் வெப்பத்தை உண்டு பசியாறுகிறேன்.

எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு

பிறந்து, வளர்ந்து, உண்டு, படித்து, வேலைபார்த்து, தாம்பத்யம் நடத்தி, சீரியல் – சினிமா பார்த்து கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் ஓர் அற்ப மானுட சீவனுக்கு – விபத்தில் மாண்டால் இரண்டு இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுக்குத் தகுதியானவருக்கு – பெயர் வைக்க, எய்ட்ஸுக்கு மருந்து காணும் முயற்சி போல் தம்பதியர் உழைக்கும்போது, பல நூறு ஆண்டுகள் சீவித்திருக்கப் போகிற – சீவித்திருக்குமா என்பதோர் உப கேள்வி – புத்தகத்துப் பெயரிட எத்தனை சிரமப்பட வேண்டும்?

பாகிஸ்தான் உறவு – பத்ரிக்கு ஓர் எதிர்வினை

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்த பல காரணங்கள் இருக்கலாம்- அமெரிக்காவின் அழுத்தம் உட்பட. ஆனால் அவை எல்லாவற்றிலும் நம் தேசியப்பாதுகாப்பு முதன்மையாய் இருக்க வேண்டும். இதைத்தான் இந்தியா சரியாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்காமல், பாக்- அரசே தெளிவாக ஆதரித்து வளர்த்து விடும் கொலைக்கும்பல்களை ஒழிக்காமல் காஷ்மீரையோ வேறு எந்தப்பிரச்சனையையோ பேச முற்படுவது என்பது, மென்மையாகச்சொன்னால் – மடத்தனம்.

மகரந்தம்

அறிவியல் புனைவு படைப்புகள் கற்பனை என்ற சட்டகத்தை தாண்டிய வாசிப்பை கொண்டதாக இருக்கும். சமகால சமூக(அல்லது)அரசியல் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை தனக்குள் கொண்டிருக்கும். தான் வாழும் சமூகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள், புனைவின் வழியாக தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கும் அவசியம் எழுத்தாளனுக்கு ஏற்படுகிறது.

அனிமேஷன் திரைப்பயணம்: 02 – இரு பரிமாண உலகம்

1980களில் நுண்ணிய கணினிகள் (microcomputers) வரத் தொடங்கின. கணினிகளின் சக்தியை ஆரம்பத்தில் வெறும் எழுத்து வடிவத்திற்கே பயன்படுத்தினாலும் கொஞ்ச கொஞ்சமாக படம் வரைய வைக்கத் தொடங்கினார்கள் கணினிப் பொறியாளர்கள். ஆரம்பத்தில் ‘o’ என்ற எழுத்தை வைத்து பச்சை கணினித் திரையில் பிள்ளையார் படம் வரைந்த இந்திய பொறியாளர்கள் முகத்தில் ஒரு எவரெஸ்ட் களைதான் போங்கள் – அந்நாளிலேயே ஓ போட்டவர்கள்!

சீனாவிலும் எண்ணெய்ச் சிதறல்

அமெரிக்காவை சகல விதத்திலும் சமமாக துடிக்கும் சீனா இந்த விஷயத்திலும் சந்தோஷப்படலாம். சீனாவின் டாலியன் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் மட்டுமன்றி, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் என்று சேதம் பல அடுக்குகளுக்கு பரவியிருக்கிறது. சிந்திய எண்ணெயை மீண்டும் அள்ளி இறைக்கும் பணி செவ்வனே “சீனாவிலும் எண்ணெய்ச் சிதறல்”

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ்

ஜூலை 25ல் இருந்து விக்கி லீக்ஸ் என்ற பெயரே இணையத்தில் அதிக அளவு தேடப் பட்ட ஒரு சொல்லாக, அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அனைத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பெயராக இருந்தது. அதே வேகத்தில் ஒரு வார காலத்திற்குள்ளாகவே அந்தப் பெயர் மீடியாக்களின் கவனத்தில் இருந்து திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டும் விட்டது. ‘விக்கி லீக்’ யார், அவர்கள் எதை வெளியிட்டார்கள்? ஏன் வெளியிட்டார்கள்? அமெரிக்காவில் அதன் தாக்கம் என்ன? இந்தியாவுக்கு அந்தக் கசிவினால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன? அதன் முக்கியத்துவம் ஏன் அமெரிக்க அரசால் அமுக்கப் படுகிறது?

தனிமை

தங்கள் அடுக்கக கட்டட வாயிலை அடைகிறார்கள். உள்வராந்தா இருட்டிக் கிடந்தது. திடுதிப்பென்று, சொல்லப்போனால் யோசனையே இல்லாமல் அவன் தன் கையில் இருந்து கத்தியை வெளியெடுத்தான். அந்தச் சந்தில் தட்டுப்பட்டானே அவன்… ஒருவேளை எங்களைக் கொல்ல முயற்சி செய்திருந்தால்?… என யோசித்தான். கத்தியை நீட்டிக்கொண்டான். ஒரு சுத்து சுத்தி மனைவியைத் தாக்கினான். ரெண்டு முறை, ஒரு டஜன் முறைகள், பைத்தாரத்தனமாய்க் குத்தினான். ஒரு அலறல். மனைவியின் உடல் சரிந்தது.

வாசகர் எதிர்வினை

திரு.நரசய்யா எழுதிய சிட்டி நினைவுமலர் வெளியீட்டு விழாவைக் குறித்துப் படித்தேன். மிக்க நன்றி. வீரராகவன் போன்றவர்கள்தான் நம் இலக்கியத்தின் தூண் போன்றவர்கள். வெளியீட்டுவிழாவின்போதே புத்தகத்தில் எச்சில் துப்பும் எழுத்தாள மேதைகளும், எழுத்தாளன் இருக்கும் வரை அவன் ரத்தத்தை ஒரு பைசா காபிரைட் காசு தராமல் உறிஞ்சிக் குடித்துவிட்டு செத்தபின் விழாவெடுப்பவர்களும் இல்லை.