ஏற்றப்படாத விளக்குகள்

அப்பாவிடம் சர்ச்சுக்குப் போய்விட்டு வருவதாகத் தான் சொல்லிவிட்டு வந்தாள். என்றாலும் அந்த மாதிரி யோசனை அவளிடம் இல்லை. நிஜத்தில் அடுத்து அவள் செய்ய என்கிறதாய் எதுவும் யோசனையே அவளிடம் இல்லை. இப்படியே காலாறப் போய்க்கொண்டே அடுத்த சோலியை யோசிக்கலாம்… என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டபடி நடந்து கொண்டிருந்தாள். எப்படியானாலும் ஒரு மாதிரி மௌன இறுக்கமான சர்ச்சில் இந்த ராத்திரிப் போதில் முடங்குவது அபத்தம். யாராவது உபதேசமாய், உத்தேசமாய், அவளது பிரச்னைக்கு சம்மந்தமே யில்லாமல் என்னமாவது பேசிக் கொண்டிருப்பான். ஒரு நெருக்கடி அவளுக்கு வந்து கொண்டிருக்கிறது…

தனிமை

தங்கள் அடுக்கக கட்டட வாயிலை அடைகிறார்கள். உள்வராந்தா இருட்டிக் கிடந்தது. திடுதிப்பென்று, சொல்லப்போனால் யோசனையே இல்லாமல் அவன் தன் கையில் இருந்து கத்தியை வெளியெடுத்தான். அந்தச் சந்தில் தட்டுப்பட்டானே அவன்… ஒருவேளை எங்களைக் கொல்ல முயற்சி செய்திருந்தால்?… என யோசித்தான். கத்தியை நீட்டிக்கொண்டான். ஒரு சுத்து சுத்தி மனைவியைத் தாக்கினான். ரெண்டு முறை, ஒரு டஜன் முறைகள், பைத்தாரத்தனமாய்க் குத்தினான். ஒரு அலறல். மனைவியின் உடல் சரிந்தது.