பிரிட்டிஷ்காரர்களை செட்டியார்கள் பின்தொடரவில்லை என்பது வரலாற்று ரீதியாக சரியான பார்வையல்ல. பிரிட்டிஷ்காரர்களை பின்தொடர்ந்தே செட்டியார்கள் பர்மாவில் கால் வைக்கிறார்கள். சரியாகச்சொன்னால், முதல் பிரிட்டிஷ்-பர்மிய போரில் பிரிட்டிஷ் இந்திய துருப்புகளுடன் சேர்ந்து பயணம் செய்தே அவர்கள் பர்மாவைச் சென்றடைகிறார்கள். (ஷான் டர்னல்). பிரிட்டிஷ்காரர்களுடன் நகரத்தார்களுக்கு இருந்த வணிகப்பிணைப்பும் பல இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஒன்றே. பிரிட்டிஷ்காரர்களை அண்டி அரசியல் செய்த நகரத்தார்கள் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள் வழியாக தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கவும் செய்தார்கள்.
ஆசிரியர்: அருணகிரி
பர்மாவின் செட்டியார்கள்
கடனுக்கான வட்டி வந்து சேரவில்லை என்றால், அந்த நிலமும் அதன் விளைச்சலும் கடனுக்கு ஒத்தியாக எடுத்துக்கொள்ளப்படலாம். இந்த ஏற்பாட்டிற்கு சட்டத்தின் வழி பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பை அளித்தது. கையில் பணம் இருந்த சீனர்களும், பர்மியர்களும், நாட்டுக்கோட்டை செட்டியார்களும் பர்மிய அரிசி வியாபாரத்திற்கு வங்கிக்கடன் வழங்குவதன் வழியாக பர்மிய வணிகத்தில் போட்டி போடத்தொடங்கினர். 1852-இல் 1000 ஏக்கருக்கும் குறைவான நிலமே வேளாண்மை நிலமாக பர்மாவில் இருந்தது. செட்டியார்கள் பர்மாவின் அரிசி வியாபாரத்தில் நுழைந்த அடுத்த 80 வருடங்களில் இது பத்துமடங்கு அதிகரித்தது
அமெரிக்க-பாகிஸ்தான் உறவு – எங்கே செல்லும் இந்தப்பாதை?
சொல்லப்போனால், நல்ல அரசாக இருப்பதற்காக அல்ல, பயங்கரவாத அரசாக இருக்காமலிருக்க தொடர்ந்து பில்லியன் கணக்கில் டாலர்களைக்கொட்டு என்று மிரட்டி கப்பம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் ஆகியிருக்கிறது. இது உண்மையில் அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சியையே சுட்டுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக பல சக்திகளைத் திரட்டி அமெரிக்காவைத் தடுமாற்றத்திலேயே வைத்திருப்பதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று வருகிறதென்றால் அதற்குக்காரணம் கடந்த பத்தாண்டுகளில் அடிவாங்கியிருக்கும் அமெரிக்கப்பொருளாதாரமும், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களால் அயர்ச்சியடைந்திருக்கும் அமெரிக்க மனோநிலையும்தான்.
வெட்டுப்புலி
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.
கண்ணீரால் காத்த பயிர்
இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் பங்கேற்க காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் பிரிட்டனிற்கு போர் நேரத்தில் இந்திய உள்நாட்டு எழுச்சியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. 1940-இல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமமந்திரியானதைத் தொடர்ந்து பயிற்சியும் திறமையும் மிக்க இந்திய ராணுவத்தினரை இந்தியாவிலிருந்து அகற்றுவது காலனி அரசுக்கு முக்கியக் கடமையானது. உள்நாட்டில் அவர்களில் ஒரு பகுதியினர் தமக்கு எதிராகத்திரும்பினால் கூட இந்தியாவைத் தக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உலகப் போரின் தோல்வியில் இருந்து இங்கிலாந்தே தப்ப முடியாது என்பதும் சர்ச்சிலுக்கு தெரிந்திருந்தது. ஏனெனில் இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான மணற்சாக்கு மூட்டைகளிலிருந்து, அரிசி, கோதுமை, உணவுப்பொருட்கள், ராணுவத் தளவாடங்கள் என்று அத்தனை போர்க்காலப்பொருட்களுக்குமான உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான ஆதார கேந்திரமாக இந்தியா விளங்கியது.
யானைகளுடன் பேசுபவன்
யானைகளின் அதிசய தொலை தொடர்பு திறமையை அடிக்கோடிடும் இன்னொரு சம்பவம் சூடானில் நடந்திருக்கிறது. வடக்கு சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இருபது வருடங்களாக உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் யானைகள் தந்தக்களுக்காகவும் மாமிசத்திற்காகவும் கொடூரமாக வேட்டையாடப்படுகின்றன. இதன் விளைவாக பெரும் திரளாக யானைகள் சூடானிலிருந்து பல நூறு மைல் தொலைவிலுள்ள கென்யாவிற்கு இடம் பெயர்கின்றன. ஆனால் போர் நிறுத்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே அங்கிருந்து கிளம்பி மீண்டும் சூடானுக்கு வந்து விடுகின்றன. சூடானில் அமைதி திரும்பியது என்பது எப்படியோ அந்த ஒட்டுமொத்த யானைக்கூட்டத்துக்கும் தெரிந்து விட்டிருக்கிறது!
அரபு நாடுகளில் புரட்சி – ஜனநாயகம் சாத்தியமா?
பேரரசின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் மன்னன் என்கிற ஒற்றைப் பேரதிகார மையம்தான் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டிக்கொண்டே வந்திருக்கிறது. சர்வாதிகார அமைப்பில் இரக்கம் மிகுந்த சர்வாதிகாரி இருக்கும்வரை படகு நன்றாகச் செல்லலாம். ஆனால் அது எளிதில் கவிழ்க்கப்படக்கூடிய நிலையற்ற ஒரு அமைப்பு. மட்டுமன்றி, பல சர்வாதிகாரிகளுக்கு மக்களின் அதிருப்தி தெரிவிக்கப்படும் ஊடகப் பாதைகள் மூடப்பட்டு விடுகின்றன. எனவே தவறான பாதையில் படகு சென்றாலும் சரியான நேரத்தில் சரியான வழியில் திருத்திச்செலுத்துவது கடினமாகிறது. அவசர நிலைக்குப்பிறகு நடந்த தேர்தலில் இந்திரா தோற்றவுடன், தனது நண்பர் குஷ்வந்த் சிங்கிடம் “இவ்வளவு கொடுமைகளும் துஷ்பிரயோகங்களும் நடக்கின்றன என்று ஏன் என்னிடம் ஒருவருமே சொல்லவில்லை?” என்று கேட்டதற்கு, குஷ்வந்த் சிங் சொன்ன பதில் “சொல்லக்கூடிய அத்தனை வாய்களையும்தான் நீங்கள் அடைத்து விட்டிருந்தீர்களே?”
அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும்
எகிப்தின் புரட்சி படிப்படியாக அத்தனை சர்வாதிகார அரபு நாடுகளையும் கவிழ்த்து விடும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என்று இஸ்லாமிய/அரேபிய பகுதிகள் சொல்லப்பட்டாலும். வட ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் (அதாவது எகிப்திற்கு கிழக்கே, எகிப்திற்கு மேற்கே எனலாம்) அவற்றின் சமூக, அரசியல் வரலாற்றை ஒட்டி பல வேறுபாடுகள் உள்ளன. எகிப்திற்கு கிழக்கில் மத்திய கிழக்கில் புகுந்து போகப்போக இது போன்ற புரட்சிகள் எளிதாக வெற்றி பெறுவது கஷ்டம்.
மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்
மக்கள் தொகை என்று எடுத்துக்கொண்டால் இன்றைய அராபியச்சமூகம் மிகவும் இளமையான ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை 15-இலிருந்து 29-க்குள் உள்ள இளைஞர் கூட்டம். எகிப்து போன்ற நாடுகளில் இவர்கள் படித்த ஆனால் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். அராபிய நாடுகளின் ஃபேஸ்புக் பயனாளர்களில் 22% எகிப்தில் உள்ளனர். பிற அராபிய நாடுகள் போல அரசாங்கம் வலைத்தளங்களை கடுமையாய்க் கட்டுப்படுத்துவதும் எகிப்தில் கிடையாது. இந்த சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பங்கெடுப்பது 15-லிருந்து 29-க்குள் இருக்கும் இளைஞர்களே.
பாகிஸ்தான் உறவு – பத்ரிக்கு ஓர் எதிர்வினை
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்த பல காரணங்கள் இருக்கலாம்- அமெரிக்காவின் அழுத்தம் உட்பட. ஆனால் அவை எல்லாவற்றிலும் நம் தேசியப்பாதுகாப்பு முதன்மையாய் இருக்க வேண்டும். இதைத்தான் இந்தியா சரியாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்காமல், பாக்- அரசே தெளிவாக ஆதரித்து வளர்த்து விடும் கொலைக்கும்பல்களை ஒழிக்காமல் காஷ்மீரையோ வேறு எந்தப்பிரச்சனையையோ பேச முற்படுவது என்பது, மென்மையாகச்சொன்னால் – மடத்தனம்.
ஐரோப்பாவிலிருந்து அங்காடித்தெரு வரை – 2
அநீதியும் சுரண்டலும் எக்காலத்திலும் இல்லாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஆனால் அவற்றை எதிர்த்து சமூகத்திலும், சட்டரீதியாகவும் குரல் எழுப்ப முடிகின்ற அரசியல் சூழல் அமைந்து விட்டால், அநீதியும் சுரண்டலும் அதிக காலம் ஓரிடத்தில் நீடிக்கவும் முடிவதில்லை. அப்படிப்பட்ட குரல் எழுப்ப இயலுகின்ற சூழல் உருவாக ஜனநாயகமும், சுதந்திர நீதித்துறையும், ஊடகங்களும் அவசியமானவை, இவை எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இயங்க முடிகிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வலுப்பெறுகின்றது.
ஐரோப்பாவிலிருந்து அங்காடித்தெரு வரை
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் பல தொழிலாளர் விவரணைகளைப் படிக்கையிலும் இரக்கத்தை விட மேலோங்கி நிற்கும் ஆசிரிய உணர்ச்சியாக இரண்டு விஷயங்களை நம்மால் எளிதாக இனம் காண முடியும்: எரிச்சல் மற்றும் எதிர்பார்ப்பு (”எப்போது புரட்சியாய் வெடிக்கப்போகிறது”) ஆகியவையே அவை. மார்க்ஸும் ஏங்கெல்ஸும் அன்றைய ஐரோப்பிய தொழிலாளர் வாழ்க்கையின் பரிதாபச்சரிவை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கினர் என்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம்.
அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – இறுதிப் பகுதி
குளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்றைய உலக அரசியலின் ஒரு பகுதியாக வெற்றிகரமாக நிறுவனப்படுத்தப்பட்டு விட்டது. குளோபல் வார்மிங் என்ற பெயரில் வெளியிலிருந்து வரும் அத்தனை அழுத்தங்களையும் பாரதம் நிராகரிக்க வேண்டும்.
அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 2
அரசியல் கலப்பற்ற அறிவியலாக இந்த விவாதம் இருந்திருந்தால் டாக்டர். மான் குழுவினரின் MBH98 வரைபடம் அடுத்த சில ஆண்டுகளிலேயே தவறான வழிமுறைகளை அடிப்படையாக்கியது என்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்தான். ஆனால் குளோபல் வார்மிங் 1970லிருந்தே படிப்படியாக அரசியலாக்கப்பட்டு, 1988இல் IPCC மூலம் நிறுவனப்படுத்தப்பட்டு இருந்தது.
அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 1
பூமிப்பந்து சூடடைவது என்பது ஏதோ 20-30 வருட காலக்கணக்கில் முடிவு செய்யக்கூடியது அல்ல. ஏனெனில் பூமியின் வயது பல பில்லியன் வருடங்கள். பூமிப்பந்து எரிகுழம்பு வழிந்தோடும் பரப்பாக இருந்திருக்கிறது. பனியுகத்தில் பனிப்பாளங்களால் நிரப்பப்பட்டு இருந்திருக்கிறது. பிறகு மீண்டும் சூடாகியிருக்கிறது. பனிப்பாளமாய் இன்று இருக்கும் ஐஸ்லாந்தில் ஒருகாலத்தில் வைக்கிங்குகள் விவசாயம் செய்திருக்கிறார்கள்.