இங்க்லீஷ் விங்க்லிஷ்: எளிதாகப் புரியும் மொழி

ஆங்கிலம் தெரியாத ஒருவர் படும் சிரமங்களை வைத்து முழுநீளப் படமாக வெளிவந்திருக்கிறது இங்க்லீஷ் விங்க்லிஷ். தெற்கில் பெரும் வெற்றி பெற்று வடக்கில் வாகை சூடிய நடிகை ஸ்ரீதேவி பல வருடங்களுக்குப் பின்னர் நடித்திருக்கும் படம், சீனி கம் மற்றும் பா படங்கள் மூலம் ஹிந்தியில் அழுத்தமாக முத்திரை பதித்த இயக்குனர் பால்கியின் தயாரிப்பு என்று நிறைய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கிறது படம்.

நீரில் கரையாத கறைகள்

ஒரு கட்டத்தில் அம்மா தெரிந்தவர்களின் வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்கப் போனது, ஒரே வாரம் தான், அதற்குள் அப்பாவுக்கு உடல்நிலை சரியாகி அவர் விண்ணப்பித்திருந்த வேலையும் கிடைத்தது, வீட்டு வேலைக்கு சென்று வந்த ஒரு நாளில் அம்மா யாரிடமும் பேசாமல் சாமி விளக்கைப் பார்த்துக்கொண்டே அழுதது என மறையாமல் நினைவில் உறைந்து விட்ட காட்சிகள் மெல்ல நகரும் சலனப்படம் போல் அழிக்கவொட்டாமல், மறக்கவொட்டாமல் மீண்டும் தோன்ற…

காமன்வெல்த்: கோலாகலமாய் முடிவுறும் குழப்பம்

பளுதூக்கும் போட்டியில் தங்கம் வாங்கிய ரேணு பாலா வீடு திரும்ப எந்தவித போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரக் காத்திருப்புக்குப்பின் ஒரு ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்தார். இந்தக் கஷ்டங்களுக்கு இடையிலும் தங்கள் திறமையை நிரூபித்து வரும் இந்திய வீரர்களின் மன உறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

காமன்வெல்த்: கல்மாடி கட்டும் மண்மாடி

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஏற்பாட்டில் தாமதம், பெரும் அளவிலான ஊழல், குளறுபடிகள் என்று கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் சுரேஷ் கல்மாடியின் லீலைகளையும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டு உண்மையான அர்ப்பணிப்போடு உழைக்கும் சாந்தி போன்ற ஏழை விளையாட்டு வீரர்களின் நிலையையும் ஒருமுறை நினைத்துப்பாருங்கள். ரத்தக்கண்ணீர் வரும். இத்தனை செலவு செய்து தன் பெருமையை நிலைநாட்டிக்கொள்ளும் இந்திய அரசு, இந்த செலவில் ஒரு சிறு சதவீதத்தை நம் விளையாட்டு வீரர்களின் நலனுக்கு செலவிட்டால் கூடப்போதும். எவ்வளவோ சர்வதேசப் பெருமைகளை நாம் ஈட்டிக்கொள்ள முடியும். மிகப்பெரும் மனிதவளம் உள்ள இந்தியா, ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் என்றாவது முதல் பத்துக்குள் வர முடிந்ததா?

களவாணிகள் : யதார்த்த சினிமாவின் இறங்குமுகம்

மணிரத்னம் போல் புவியியல் நிபுணர் யாருமில்லை எனலாம். அவரைப் பொருத்தவரை சிறுநகரம், கிராமம் எல்லாம் திருநெல்வேலியுடனேயே முடிவடைகின்றன. மதுரையைத் தாண்டினால் மத்திய ஆப்ரிக்கா வந்து விடுவதால் அவர் அங்கெல்லாம் செல்வதில்லை. காட்டுக்குள் நடக்கும் கதை என்றால் இந்தியாவின் எந்த காட்டிற்கும் சென்று வந்து விடுவார். நமக்கு விஷுவல் தானே முக்கியம். கதையுடன் தொடர்புடைய நிலமாவது மண்ணாவது.

ராஜ்நீதி, ராவண்: கசக்கியெறிந்த காவியங்கள்

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக்கதைகளை எடுத்தாள்வதில் ஒரு சௌகரியம் உண்டு. ‘ஓஹோ ‘ ப்ரொடக்ஷன் நாகேஷ் போல் ‘கதை’ க்காக அலையவேண்டியதில்லை. ராமாயணம் என்றால் கதாநாயகியை வில்லன் கடத்துவது, மகாபாரதம் என்றால் குடும்ப-அரசியல் தகராறு என்று ஒரு மெல்லிய கதையை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் எடுத்துவிடலாம். இந்த இருபெரும் காவியங்களில் வரும் ஒவ்வொரு சின்னச்சின்ன பாத்திரமுமே அதற்கென்ற தனித்தன்மையுடனும், ஆழத்துடனும் இருக்கும். ஆனால் உங்கள் திரைவடிவக் கதையில் அதை எவ்வளவு எளிமையும், மலினமும் செய்யமுடியுமோ அவ்வளவு செய்துவிடலாம்.