எழுத்தாளர்கள் எப்படி எழுதத் துவங்குகிறார்கள்? அவர்களின் முதல் நாவல் எவ்வாறு உருவானது? பாரிஸ் ரிவ்யூ பல நாவலாசிரியர்களை பேட்டி கண்டிருக்கிறது. அகில் ஷர்மாவின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்:
Author: பதிப்புக் குழு
மழை காற்றும் மாரி வாசமும்
மேலும்: Ask Smithsonian: Why Does Rain Have A Distinctive Smell? | At the Smithsonian | Smithsonian
பல்லவர்களின் பெரிய கோவில்
காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலுக்குச் சென்ற மதுமிதா கோபாலன் தன்னுடைய படங்களையும் அனுபவத்தையும் ஆலய வடிவமைப்பையும் இங்கே பகிர்கிறார்.
வாசகர் கடிதம்
திருமணத்திற்கு முன் எங்கள் வீட்டில் ஒரு சைக்கிள் கூடக் கிடையாது. கணவருடன் காரில் போய்விட்டு வந்தாலும் ஆட்டோமொபைல் பற்றிய அறிவு பூஜ்யம். பிள்ளைக்கு அப்போது மூன்று வயது. அவனையும் இடுப்பில் வைத்துக்கொண்டு காலையில் 9 மணிக்கு கடையைத் திறக்கவேண்டும். நட்டும், ஸ்க்ரூவும் ஆக ஏகப்பட்ட சாமான்கள். கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும். அபூர்வமாக யாராவது வந்து ஏதாவது கேட்டால் தேட ஆரம்பிப்பேன். நான் தேடுவதைப் பார்த்து வாங்க வந்தவர்கள் போய்விடுவார்கள். ‘ஏன் தேடவேண்டும்? கடையில் சும்மா தானே உட்கார்ந்திருக்கிறாய்? ஒவ்வொரு சாமானாகப் பார்த்துக் கொண்டே வா. புரியும்!’ ஒருமுறை கூட கடைக்கு வந்து உதவியது கிடையாது. வீட்டின் அருகிலேயே கடை இருந்தது மட்டுமே எனக்கு சாதகமான விஷயம்.
மகரந்தம்
மில்டன் தன் 90வயதுக்கு அப்புறமும் படங்கள் எடுத்து வந்திருக்கிறார். இவருடைய முக்கிய கவனம் ’உழைப்பாளி மக்கள்’ மீதுதான் இருந்தது. தன் கருது பொருளானவர்களை ரோகோவின் ‘மறக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்தாராம். ரோகோவின் எடுத்த பல நூறு படங்கள் மிகக் கச்சிதமாக ஒளியூட்டப்பட்டு, தொழிலாளர்களை அவர்களின் முழு கண்ணியத்தோடும், தொழிலில் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டைப் பிரதிபலிக்கும் விதமாகவும், எந்தச் சூழலில் அவர்கள் உலக மக்களின் நலனுக்குத் தம் அளிப்பைக் கொடுத்தனரோ அந்தச் சூழலையும் உள்ளிழுப்பதாகவும் அமைந்த படங்கள் என்று இன்று ஒளிப்பட நிபுணர்கள் கருதுகிறார்கள்.
குளக்கரை
இது குழந்தைகளின் வார்த்தைத் திறனையும் பாதிக்கிறது. வளமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, தன் 4 வயதிற்குள் 45 மில்லியன் வார்தைகளைக் கற்றுக்கொள்கிறது. ஆனால், வறுமைக் குடும்பத்தைச் சேர்ந்த அதே வயதுக் குழந்தை 13 மில்லியன் வார்த்தைகளை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.
ராமானுஜன் பற்றி கென் ஓனோ: நேர்காணல்
அகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை
கண்ணுக்குத் தெரியாதத்தை அகச் சிவப்பு ஒளிப்படங்கள் (infra-red photos) மூலம் உணரவைக்கிறார் எட்வர்ட் தாம்ஸன். அகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன. மருத்துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளை இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்து, வலிகள், வீக்கங்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவின என்பதை ஆவணமாக்கி நினைவு கூற வைக்கிறார்: The “அகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை”
ஒளி இடுக்கி-கண்டு பிடித்த இயற்பியலாளர் ஸ்டீவன் சூவுடன் ஒரு பேட்டி
இயற்பியலில் கண்டு பிடிப்புகளுக்காக 1997 இல் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் சூ, கலிஃபோர்னியா பல்கலையின் பெர்க்லி நகர வளாகத்தில் தொலைக்காட்சி நிகழ்வொன்றுக்குக் கொடுத்த பேட்டி இது. ஸ்டீவன் சு சீன வம்சாவளியைச் சேர்ந்தவர், ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து கல்வி பயின்றவர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி “ஒளி இடுக்கி-கண்டு பிடித்த இயற்பியலாளர் ஸ்டீவன் சூவுடன் ஒரு பேட்டி”
மகரந்தம்
மிருகக் காட்சி சாலை என்பது மிருகங்களை மனிதர்கள் பார்க்கும் இடமா அல்லது மனிதர்களை மிருகங்கள் பார்க்கும் இடமா என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஃபிலடெல்பியாவிலுள்ள மிருகக்காட்சி சாலை இதை உண்மையாகவே பரிசோதித்துப் பார்க்க நினைத்திருக்கிறது. மிருகங்களை ஓரிடத்தில் அடைத்து வைக்காமல், அவைகளுக்கென்று தனிப்பாதைகள் ஏற்படுத்தி (மூடப்பட்ட, பாதுகாப்பான பாதைகள் தான்) அவற்றை அந்தப் பாதைகளில் உலவ விட்டிருக்கிறார்கள். தலைக்கு மேல் நடமாடும் மிருகங்களைப் பார்த்து மக்களும் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். ஆனால்அங்கு வரும் மனிதர்களைப் பார்த்து மிருகங்கள் என்ன நினைக்கின்றன ?
குளக்கரை
அமெரிக்கர்கள் தொடர்ந்து ’சீனா உடையும், நொறுங்கிச் சின்னாபின்னமாகும்’ என்று கனவு காண்பதில் நேரம் கழித்துக் கொண்டிருக்கையில், சீனா அண்ட சராசரங்களையும் எப்படி ஆள்வது என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது. வளர்ந்த ஏகாதிபத்தியம் தன் உந்து சக்தியை இழந்தபின் எப்படிக் காலம் கழிக்கும் என்பதற்கு அமெரிக்கா உதாரணமென்றால், வளர்ந்து உலக அதிபத்தியத்தைப் பிடிக்க முயலும் ஏகாதிபத்தியம் எப்படி நடந்து கொள்ளும் என்பதற்குச் சீனா உதாரணம் எனலாம். இரண்டுமே தொடர்ந்த அரசியல், ராணுவ, பொருளாதார சூதாட்டத்தில்தான் அதிகாரத்தை வென்று/இழந்து, மறுபடி வென்று வருகின்றன, வந்தன.
சுற்றுசூழல் புகைப்பட விருது – 2016
(“மனிதனால் ஏற்பட்ட செயற்கை பேரிடர் பாதிப்பு” – இந்திய செய்தி நிறுபர் குமார் ஷந்த், சென்னை கடற்கரையோரம் எடுத்த படம்) அட்கின்ஸ் CIWEN சுற்றிசூழல் விருதுகள் 2016 – தேர்ந்தெடுக்கப்பட்ட பிற புகைப்படங்கள் இங்கே
குளக்கரை
அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் சிரியாவிலிருந்து வந்திருந்தாலும், அவர்களுள் ஆப்கானியரும், ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தோறும் உண்டு. இதில் உண்மையான அகதிகள் யார், பொருளாதார நிலையில் தங்களை உயர்த்திக்கொள்ள வேலை வாய்ப்புத் தேடிவந்தவர் யார் என்று தீர்மானிப்பது ஒரு பிரச்சனை. ஆப்கானிஸ்தான் அமைதி நிலவும் நாடு என்று ஐ.யூ தீர்மானித்துவிட்டதால் அங்கிருந்து வருபவர்களை அகதிகளாகக் கருத மறுக்கிறது. எனவே அவர்கள் வேலை வாய்ப்புத் தேடி வந்தவர்களாகவே கருதப்பட்டு, திரும்பச் செல்லுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள்.
அமெரிக்கா – 200 வருட குடியேற்ற சித்திரம் ( 1820 – இன்று வரை)
உலகின் வரலாற்றில் மக்கள் தாம் பிறந்த நிலப்பரப்புகளை விட்டு விட்டுப் பல விதங்களில் பிற நிலப்பரப்புகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் பெயர்தலில் அனேக நிலங்களிலிருந்து மக்கள் ஒரு நிலத்துக்குக் குடியேறியது என்பது சிறிதாவது வினோதமானது. இப்படிப்பட்ட குடிபெயர்தல் அமெரிக்காவிற்கு நேர்ந்தது. அமெரிக்கா எனும்போது யு.எஸ் என்று அறியப்படும் “அமெரிக்கா – 200 வருட குடியேற்ற சித்திரம் ( 1820 – இன்று வரை)”
மகரந்தம்
இங்கு ஐஸிஸி என்பது இண்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட். இது அனேகமாக யூரோப்பியரால் நடத்தப்படும் ஒரு அமைப்பு. இதற்கு இனிமேல் உலகளவில் ஆமோதிப்பு கிட்டாது என்பதை இந்த உகாண்டாவின் அதிபர் தெளிவாகச் சுட்டுகிறார். ஆஃப்ரிக்கர்கள் ஒரு வழியாக யூரோப்பியர்களின் கைப்பிடியில் நசுங்குவதிலிருந்து விடுபடத் துவங்கி இருக்கிறார்கள். இந்தியாவின் இங்கிலிஷ் பேசும் பெரும் மத்திய வர்க்கம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடும் என்று கேட்க வேண்டி இருக்கிறது.
குளக்கரை
அறிவியல் பூர்வ முறைகளை கையாளாமல், விலங்குகளைக் கொன்று குவிக்க இந்திய அரசாங்கம் அனுமதி தந்துவிட்டது என்கிறது இந்தக் கட்டுரை. குறிப்பிட்ட வனவிலங்கானது என் பயிரை பாதிக்கிறது என விவசாயிகள் சொன்னதாகச் சொல்லி, அந்த வனவிலங்கை “பயிர் அழிப்பான்” என்று மாநில அரசு பட்டியல் இட்டு விடுகிறதாம். இந்த பட்டியலுக்குள் வந்த வனவிலங்குகளைக் கொல்வது சட்டப்படி தவறு இல்லையாம். இப்படிப் பட்டியலிடப்பட்ட வனவிலங்குகள் இந்தியாவில் மட்டுமே காணப்படும் நீல்கை மான், காட்டுப் பன்றி, மற்றும் ரூஸஸ் குரங்கு வகைகள். இந்த பிராணிகளின் எண்ணிக்கையையோ, இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் ஏற்பாடும் சூழல் பாதிப்புகளையோ அரசு கண்டுகொள்ளவில்லை என்கின்றனர் பிராணிகள் நல அமைப்பினர்.
மகரந்தம்
கிளவுட்ஸ் ஆஃப் சில்ஸ் மரியா (Clouds of Sils Maria) என்னும் படமும் ஸ்விட்சர்லாந்தில் படமாகிறது. தில்வாலே துல்ஹானியா லெ ஜாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge – DDLJ)வும் ஸ்விஸ்ஸில் படமாகிறது. எந்தப் படத்திற்கு பனிச்சறுக்கு மலையின் உச்சியில் ஆளுயுர பிரும்மாண்ட கட் அவுட் வைத்திருக்கிறார்கள்? விடையை மேலே பார்த்திருப்பீர்கள். இருநூறு படங்களுக்கு மேல் இங்கே படமாகியிருக்கின்றன. ஏன்? காஷ்மீர் பிரச்சினை காரணமா அல்லது வெள்ளைத் தோல் கொண்டவர் நமக்கு சிப்பந்தியாக அடிபணிவது காரணமா என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரை எழுப்புகிறது. உள்ளூர் சிம்லாவில் படப்பிடிப்பை வைத்தால், கால்ஷீட்டை மட்டும் கொடுத்துவிட்டு டிமிக்கி தருபவர்களை மலைப் பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றால், நாயகன் / நாயகி காணாமல் போகும் தொல்லையில்லாமல் …
விலங்குகளின் தருணங்கள்
விலங்குகளின் தருணங்களை அழகாக காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் இவை. ட்ரோன்களை குறித்து விவாதங்கள அறியாத கழுகு அதை கையாளும் அந்தப் புகைப்படம்!
மகரந்தச் சிதறல்
ரீங்கார மகரந்தச்சேர்க்கை என்பது சில வகை செடி கொடிகளில் இருந்து மகரந்தத்தை கலைத்துப் போடுவது. அதற்கு ஒரு வகை வண்டு மட்டுமே உதவுகிறது. அந்தத் துளைபோடும் வண்டு பறப்பதை மென் நகர்வாக இங்கே படம் பிடித்திருக்கிறார்கள். இது இயற்கையாக பறக்கும் வானூர்தி. தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை செழிப்பாக்க “மகரந்தச் சிதறல்”
குளக்கரை
வன்முறைக்கு ஒரு கட்டுப்படுத்தும் முயற்சியும் அமெரிக்க அரசாலோ, காவல் துறையினராலோ, மேலும் சுற்றியுள்ள சமூகத்தினராலோ மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. 2015 இல் மட்டும் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவங்களை மட்டும் கணக்கிட்டால், 358 சம்பவங்கள் நடந்திருக்கின்றன, இந்த சம்பவங்கள் மத்திய தரச் சமுதாயங்கள் நடுவே இல்லை, ஏழை பாழைகள் நடுவேதான். இவற்றில் 18-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் அனேகமாக இறக்கிறார்கள். இறப்பவர்களில் நான்கில் மூன்று பேர் கருப்பினத்தவர். இவற்றில் பெருமளவும் கருப்பினத்தவரே கருப்பினத்தவரைக் கொல்வதாக அமைவதால் நாடோ, சுற்றுச் சமுதாயமோ இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. அரை மணிக்கு ஒரு குழந்தை அமெரிக்காவில் துப்பாக்கியால் கொல்லப்படுகிறது. இதுதான் உலகுக்கு நாகரீகம் என்றால் என்ன, ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பாடம் நடத்த முயலும் நாடு. இந்த நாட்டு அறிவாளர்கள் பலர், தம் நாட்டில் நடக்கும் பண்பாட்டுக் கொலை, இன அழிப்பை எல்லாம் பற்றி ஏதும் கவலைப்பட்டு செய்தித்தாள்களில் பத்திகள் எழுதாமல், நம் ஊர் செய்தித்தாள்களில்…
மகரந்தம்
தென் கொரியாவில் 50 மிலியன் மக்களில் 80 சதவீதத்தினரிடம் இத்தகைய தொலைபேசிகள் இருக்கின்றனவாம். இவற்றில் மூழ்கி இருக்கும் இந்த மக்களுக்குச் சமீபத்தில் பலவகை மன அழுத்த நோய்கள் ஏற்படத் துவங்கி இருப்பதால் இவற்றிலிருந்து விடுபட்டு இருப்பது சாலச் சிறந்த தேர்வு என்று சிலர் கருதத் துவங்கி இருக்கின்றனராம். அப்படி யோசிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு போட்டி சமீபத்தில் நடந்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவிக்கிறது. தலை நகரான சோல் நகரில், சுமார் 60 பேர் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதைப் பயின்றனராம். 90 நிமிடங்கள் தொலைபேசிகள், கணினிகள், ஏன் கைக்கடிகாரத்தைக் கூட பார்க்காமல் சும்மா இருக்க வேண்டும் என்பது போட்டி. ஒரு பூங்காவில் நல்ல வெப்பம் நிலவிய போதும் இந்த 60 பேர் அப்படி அமர்ந்திருந்தனராம்.
அனல் காற்று
செய்தி: 1. கங்கையையும் பிரம்மபுத்ரா நதியையும் திசைதிருப்பும் திட்டம் 2. 33 கோடி இந்தியர்களை பாதிக்கும் வறட்சி 3. இத்தனை காலமாக இந்திய அரசு தண்ணீர்ப் பஞ்சம் ஆகியன குறித்து எதுவும் செய்யாமல் நீர் நிலைகளை நாடெங்கும் வீணாகப் போக விட்டதற்கு என்ன காரணம்? இது இன்று நேற்றல்ல “அனல் காற்று”
மகரந்தம்
சித்திர நாவல் என்பதே ழானர்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அவற்றுள்ளும் இலக்கியம் என்ற பெரும் ஆற்றில் கலக்கக் கூடிய திராணி உள்ள நாவல்கள் சில உண்டு. பெருமளவும் நாயக வழிபாட்டை மையமாகக் கொண்ட அதிபுனைவு நாவல்களாகவே இருக்கிறன. ( தோர், ஸ்பைடர்மான், ஃபாண்டாஸ்டிக் ஃபோர், அவெஞ்சர்ஸ் இத்தியாதி நாவல்கள் இவை). இவை தவிர சமீபத்துப் பத்தாண்டுகளில் வேறு வகை சித்திர நாவல்கள் வரத் துவங்கி உள்ளன. இவற்றில் சில வாழ்க்கைக் குறிப்பு நாவலகள், சில வரலாற்று நாவல்கள்- வரலாறு என்றால் கத்தி, குதிரை, படையெடுப்பு, வீரசாகசங்கள் என்றில்லை. ஒரு நாவல் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் விட்கென்ஷ்டைனும் பிரிட்டிஷ் சிந்தனை மரபில் ஒரு காலகட்டத்தில் எப்படி பரஸ்பரம் கருத்துப் பகிர்ந்து கொண்டார்கள், வைட் ஹெட் எனும் தத்துவாளரும், ரஸ்ஸலும் எப்படி இணைந்து சில புத்தகங்கள் எழுதினார்கள் என்பன போன்ற சிந்தனை வளர்ச்சி வரலாறை மையமாகக் கொண்ட புத்தகம்.
வாசகர் மறுவினை
எராலியின் வரலாற்று ஆய்வுகளைப்பற்றிய அறிமுகக்கட்டுரை படிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒரு புனைகதைக்குரிய வேகத்துடன் கச்சிதமான சொற்சித்திரங்களுடன் எழுதியிருக்கும் சுரேஷுக்கு வாழ்த்துகளும் நன்றியும் சொல்லவேண்டும். புத்தரில் தொடங்கி தென்னிந்தியச் சித்திரங்கள் வரையிலான வரலாற்றுத் திருப்பங்களையும் சாதனைகளையும் வீழ்ச்சிகளையும் சுட்டிக் காட்டியபடி நீண்டு செல்கிறது. வணிக உறவுகளாலும் சாதனைகளாலும் உச்சத்துக்குச் சென்று வளர்ச்சியைத் தொட்ட இந்தியாவின் எழுச்சி, ரோம் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து தேங்கிவிட்ட அம்சம் இதுவரை யாராலும் சொல்லப்படாத ஒன்று. மீண்டும் விவசாய சமூகமாக மாறி மெல்ல மெல்ல வளர்ச்சி பெறும் போக்கில் துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து …
ஆட்டிஸம் (மதி இறுக்கம்)
இது ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபேட் கருவிக்கான விளம்பரம். எனினும், அதைக் குறித்து ஆர்ப்பரிக்காமல், மதியிறுக்கம் குறித்தும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் நுட்பம் எவ்வாறு உதவும் என்பதை சுட்டுகிறது. டிலன் என்பவரால் சாதாரண மனிதரைப் போல் பேச முடியவில்லை. அதனால், அவருடைய எண்ணங்கள் வெளிப்படாமல் அவருக்குள்ளேயே அடங்கிவிடாமல் இருக்க, “ஆட்டிஸம் (மதி இறுக்கம்)”
செ குவாரா + ரோலிங் ஸ்டோன்ஸ்
கியூபப் புரட்சியாளர்கள் ‘செ’ என்று செல்லமாக அழைத்த செ குவாரா என்னும் அரசியல்வாதியையும், த ரோலிங் ஸ்டோன்ஸ் (The Rolling Stones) ஆங்கில ராக் இசைக்குழுவின் சின்னமான உதடுகளையும் ஒருங்கிணைத்த பதாகையைத் தாங்கி கச்சேரிக் கொண்டாட்டத்தில் திளைத்த கியூபா நாட்டின் தலைநகரமான ஹவானா நகரவாசிகளை இங்கே காணலாம்:
மரமும் இசையும்
மரக்கட்டையின் ஒரு பகுதியை டிரௌபெக் (Traubeck) எடுத்துக் கொள்கிறார். அந்த மரத்துண்டின் பல்வேறு வண்ண மாறுபாடுகளையும் அடர்த்தி மாற்றங்களையும் ஒளிச்சிதறல்களாக மாற்றிக் கொள்கிறார். அடர் பழுப்புக்கு ஒரு தரவு. சாம்பல் நிறத்திற்கு இன்னொரு தரவு. வெளியில் காணப்படும் மெல்லிய பட்டைக்கு ஒரு ஒலித்துண்டு. நடுவே கல்லாகிக் கிடக்கும் வடப்பகுதிக்கு “மரமும் இசையும்”
'இந்திய அறிதல் முறைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு
வெளியிட்டவர் – ரவிஷங்கர் உரை
பெற்றுக்கொண்டவர் – முனைவர் உத்ரா துரைராஜன் (இயற்பியல் துறை முதல்வர், DGV கல்லூரி) உரை
பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்) உரை
சாந்தினிதேவி ராமசாமி ஏற்புரை
அரவிந்தன் நீலகண்டன் ஏற்புரை
மகரந்தம்
கிட்டத்தட்ட 270 மில்லியன் தொழிலாளர்கள் மூலம் தங்கள் வர்த்தக பலத்தை உலகுக்குக் காட்டிய சீனா இன்று அதே மக்களுக்கு வீடு அளிக்கப் பலவித வழிகளைக் கைகொண்டு வருகிறது. கடந்த இருபது வருடங்களாக 270 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த கிராமங்களை விட்டுவிட்டு சீனாவின் நகரப்பகுதிகளுக்கு குடிபெயர்ந்திருந்தனர். இதுகாறும் சீனாவின் தொழில்வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தவர்கள் இவர்கள் தான். ஆனால், கடந்த சில மாதங்களாக சீனா பொருளாதார ரீதியில் தேக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் இம்மக்கள் வீடு வாங்குவதும், வாங்கிய கடனை அடைக்கும் சக்தியும் குறைந்திருப்பதாக சீனா கவலை தெரிவித்துள்ளது.
அகதி
மழை பெய்த சொத சொத தரை. அந்த மண் தரையில் உறக்கம். அவரின் ஓராண்டு வயதே ஆன மகள் ஈரத்தில் கிடக்கிறாள். கிரேக்கத்தில் நுழைந்த நாளில் இருந்தே அடைமழை. அந்தக் காட்சியை உலகெங்கும் ஒளிபரப்ப ஆளில்லாமல் இயக்கப்படும் தூரயியங்கிகள் அவர்களின் தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் “அகதி”
வேற்றுலகக் கொண்டாட்டம்
வருடாவருடம் அர்ஜெண்டினாவில் வேற்றுகிரக வாசிகளுக்கான திருவிழா எடுக்கிறார்கள். கெப்பிலா டெல் மாண்டே என்னும் இடத்தில் கொர்டொபா (Capilla del Monte, Cordoba) என்னும் நகரத்தில் முப்பதாண்டுகள் முன்பு பறக்கும் தட்டு வந்ததைப் பார்த்தவர்கள் தொடங்கி வைத்த வைபவம். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல் கருத்துப் பரிமாற்றமாகவும் ஆன்மிக விழாவாகவும் “வேற்றுலகக் கொண்டாட்டம்”
போரும் அமைதியும்
புகழ் பெற்ற கதாபாத்திரங்களை தற்காலத்திற்கேற்ப மறு ஆக்கம் செய்வது ஒரு சுவாரசியமான விஷயம். உதாரணத்திற்கு கிங்காங் – 1933லிருந்து இதுவரை ஏழு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 2017 மற்றும் 2020 களில் இன்னும் இரு திரைப்படங்கள் வெளிவர இருப்பதாக விக்கி சொல்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் – சமீபத்தில் பிபிஸியில் வெளிவந்த “போரும் அமைதியும்”
பதாகை சிறப்பிதழ்
ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.
முதல் குடியரசு தினம்
இந்திய கலை திருவிழா – 2016
டெல்லியில் நிறைய ஓவியக் கண்காட்சிகளும் கலைவிழாக்களும் நடக்கின்றன. வரைபட சந்தைக்கும் ஓவிய விழாவிற்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் என்ன என்று சற்றே வியந்துவிட்டு, ஜனவரி 14 முதல் 17 வரை நடந்த கொண்டாட்டத்தில் பிடித்த படங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். கீழே ராக்கீ ராய் ஓவியம்.
மகரந்தம்
சில தினங்கள் முன்பு ஒரு சீன பல்கலையாளரைப் பார்க்க நேர்ந்தது. அவர் இந்திய மொழிகளுக்கும், சீன மொழிக்குமிடையே ஒரு பாலத்தைக் கட்ட முயல்கிறார். சில பத்தாண்டுகளாக இந்தி மொழியைக் கற்று, சீனாவில் அதைப் போதித்து வரும் இந்தப் பேராசிரியர் தற்போது சீன மொழிக்கு பல இந்திய மொழிகளில் இருந்து மொழி பெயர்ப்பு மூலம் இலக்கியப் படைப்புகளைக் கொண்டு சேர்க்கும் ஒரு திட்டத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். அவர் அடிக்கடி தெரிவித்த ஒன்று- சீனாவில் நிறைய முயற்சிகள் அரசுடைய கட்டுப்பாட்டில் இருப்பவை. தன்னை அழித்துக் கொள்ளுதல் என்பதில் சீனர்களுக்கு நிறைய பயிற்சி உண்டு என்பது தெரிந்தது. அதே நேரம் அவர்கள் கூழையாகவும் இல்லை. நிமிர்ந்த நோக்குடன்…
மகரந்தம்
இதற்கு போப் பிரான்ஸிஸ் அவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போப் பிரான்ஸிஸுக்கும் கனடா நாட்டு அரசு அமைப்புக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்கிறது என்கிறார் இந்த கட்டுரையாசிரியர் – கிறிஸ்துவ தேவாலயங்களால் நடந்தப்பட்ட பள்ளிகளில் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக குடும்பத்திலிருந்து பிரித்து காப்பகங்களில் தங்கவைத்து வன்முறை மூலம் ‘சீரமைப்பதாக’ குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அறிவிப்புகள்
ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” பரிசுத்தொகை : முதல் பரிசு – 15,000, இரண்டாம் பரிசு – 10,000, மூன்றாம் பரிசு – 5,000. கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.
ஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்
ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாய் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். முன்னுமொரு காலத்தில் அமெரிக்காவில் சுட்டுத் தள்ளி மரண தண்டனை கொடுத்தார்கள். இப்போது அமெரிக்காவின் சில மாநிலங்களில் விஷ ஊசி போட்டு கொலை செய்கிறார்கள். சவூதி அரேபியாவில் கூரிய வாளை வைத்து தலையைக் கொய்கிறார்கள். அவ்வாறு ஒரேயொரு நாளில் மட்டும் “ஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்”
அன்னை தெரசா
துன்பப்படுபவர்களின் துயரம் நீக்குவதற்கான வழியை காண்பிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் சோகத்தை ‘அன்னை தெரஸா’ கொண்டாடிக் கொண்டிருந்ததாக நியூ இண்டெர்னேஷனலிஸ்ட் சஞ்சிகையில் வெளியான கட்டுரை எழுதியிருக்கிறது. மிகச் சிறப்பான மதபோதகராக செயல்பட்ட அன்னை தெரசா, சிகிச்சை அளிப்பதிலும் சக மனிதரை உயிராக பாவித்து இரட்சிப்பதிலும் எவ்வாறு நிலைதவறினார் என்றும் விளக்குகிறார்கள். “அன்னை தெரசா”
சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்
கலந்துரையாடல் பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன் இவர்களுடன் சொல்வனம் சார்பில் ரவி சங்கரும், நவீன விருட்சம் சார்பில் அழகியசிங்கரும் இடம் : பனுவல் விற்பனை நிலையம் 112 திருவள்ளுவர் சாலை திருவான்மியூர், சென்னை 600 041 தேதி 02.01.2016 (சனிக்கிழமை) நேரம் துவக்கம்: மாலை 5.30 மணி “சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்”
அறிவிப்புகள்
“விமுக்தா” என்ற கதைத் தொகுப்பிற்காக திருமதி ஒல்கா சாகித்ய அக்காதமி விருதை பெறுகிறார். இந்தக் கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்ரதாரியாக சொல்லப்பட்டவை.
திசைகள் தளம் மின்னூல்களைப் பதிப்பிக்கிறது. சொல் சார்ந்தவை (text based) , ஓவியங்கள், புகைப்படங்கள் கொண்டு மெருக்கூட்டப்பட்டவை (image based), காணொளிக் காட்சிகள் கொண்டவை (video books) என்று எல்லா வகையான நூல்களும் பதிப்பிக்கப்படும்.
மதச்சார்பின்மையும் சோஷலிஸமும்: இந்தியக் கல்வி
சனியின் குடும்பம்
பூமிக்கு ஒரே ஒரு நிலவு. சனிக்கோளுக்கோ 62 நிலவுகள் இருக்கின்றன. சனி கிரகத்தின் இரு நிலவுகள் ஆன என்சிலாடஸ் (Enceladus) மற்றும் டெத்திஸ் (Tethys) இயைந்து தோன்றிய காட்சியை காஸினி (Cassini) விண்கலம் புகைப்படம் எடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் சனியைச் சுற்றியிருக்கும் வளையங்களையும் பார்க்கலாம்.
குளக்கரை
பல கருத்துக் கட்டுகளைப் போல மதங்கள் எனப்படுபவையும் கருத்துகளும், மூட நம்பிக்கைகளும் கலந்து கட்டியவை என்று துவங்கும் இந்தக் கட்டுரை எப்படி கதோலிக்க மதம் ஆஃப்ரிக்க மக்கள் நடுவே பரவி இருப்பது அம்மக்களுக்குப் பேராபத்தாக்க் கூடும் என்று எச்சரிக்கையை எழுப்புகிறது. ஆஃப்ரிக்காவில் ஏற்கனவே பல கொடும் வியாதிகள் உலவுகின்றன. சில இயற்கையாகப் பன்னெடுங்காலமாக இருப்பவை- மலேரியா, ஸிக்கில் செல் அனிமியா, எபோலா போன்றவை இவை. ஆனால் நவீன உலகின் அளிப்புகளான எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோய்கள் ஆஃப்ரிக்காவில் வருடந்தோறும் பல லட்சம் மக்களைக் கொல்கின்றன. இவற்றுக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த தடுப்பு சாதனம் மிக எளிய ஒன்று. அது ஆணுறை (பெண்ணுறையும்தான்). கதோலிக்க சர்ச் ஆஃப்ரிக்காவில் இந்த ஆணுறையைப் பயன்படுத்துவது பெரும்பாவம் என்று பிரச்சாரம்
மகரந்தம்
பச்சை குத்துவது என்பதை சடங்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவும், ஓரளவு குடும்ப/ குல அடையாளத்தைத் தொடரும் வகையாகவும் எல்லாம் இந்தியர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அன்பைத் தெரிவிக்கவும், வேடிக்கையாகவும், கலையார்வத்தால் உந்தப்பட்டும் சிலராவது இதைச் செய்து பார்ப்பதும் உண்டு. உலகெங்கும் பல இனக்குழுக்கள், குறிப்பாக பழங்குடி மக்கள் இதைப் பற்பல காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். குழு அடையாளமாக, குழுவுக்குள் சில பதவிகள், அல்லது திறமைகளுக்கான அடையாளங்களைச் சித்திரிக்க இவை பயன்பட்டிருக்கின்றன. இந்தக் கலையின் ஒரு தனித்தன்மை அது அருங்காட்சியங்களில் காட்சிப் பொருளாக வைக்கப்பட முடியாதது. ஆனால் அரும் காட்சியகங்கள் மனிதத் தோலில் வரையப்படும் இந்த ஓவியங்களை, வடிவுகளை வேறெப்படிக் காட்சியில் வைக்க முடியும்? அந்தக் கேள்விக்கான பதிலை …
குளக்கரை
அமெரிக்கா தனது மூளையின் திறனைக்காட்டியிருப்பதல்ல இங்கு செய்தி. ஆனால் ஒரு அரசு சாரா சேவை அமைப்பில் வேலை செய்வதாக நினைத்து பென்டகனின் பணத்தில் வாழ்ந்த உண்மையான சேவை மனப்பான்மை கொண்டவர்களது மனசாட்சிக்கு பதில் என்ன? சேவை அமைப்பில் சேர்ந்து ஈடுபட நினைப்பவர்கள் தாங்கள் வலையின் எவ்விதமானக் கண்ணி எனச் சதா வெம்பிப்போகவேண்டுமா?
மகரந்தம்
டச்சு காலனியத்தால் இந்தோனேசியா என்று இன்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் இருந்த மக்கள் எப்படி எல்லாம் அவதிப்பட்டனர். எப்படிப் படுகொலைகளை யூரோப்பியர் நிகழ்த்தினர். இன்று அதே யூரோப்பியர் எப்படி ஆசியர்களுக்கு அறபோதனை செய்கின்றனர் என்பதைப் பற்றி ஒரு இந்தோனேசியப் பத்திரிகையில் நடக்கும் சிறு சர்ச்சை. இந்தியர்களில் யூரோப்பை விழுந்து வணங்குவோரில் இந்திய இடதுசாரிகள் முதல் வரிசையில் இருப்பவர்கள்.
தீபாவளி வாழ்த்துகள்
நேஷனல் ஜியாகிரபிக் புகைப்பட போட்டி
நேஷனல் ஜியாகிரஃபிக் பத்திரிகை நடத்தும் ஒளிப்பட போட்டிக்கு வந்திருக்கும் சில படங்கள்:
