‘அது’கள்

செல்பேசித் திரையில் அரும்பிய தகவலைப் பார்த்துச் சிரித்தாள் ஆஷா. ஓர் இனம் புரியாத சந்தோஷம். ’அது’ அனுப்பிய மின்னஞ்சல். “லட்சுமி, ஸ்டார்ட் ஆயிடு.” என்று ரஜினி காரிடம் பேசிப் பார்த்திருக்கிறோம். கார் நம்மிடம் திருப்பிப் பேசும் காலம் வந்து விட்டது. மிகச் சமீபத்தில் வாங்கிய அவளுடைய கார். அவ்வப்போது தன் நிலவரம் குறித்து மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ அனுப்புகிறது. டயரில் காற்று குறைந்தால் ஆஷாவுக்கும், தலை போகிற பிரச்சனையாயிருந்தால் நேரடியாக சர்வீஸ் டீலருக்கும் தகவல் அனுப்பி விடுகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கம்ப்யூட்டர் என்றால் இயந்திர மனிதன் என்றே…

ஸ்நேகிதி

நியாயமாய் அவள் பார்வையில் கோபத் தீ பற்றி எரிய வேண்டும். அல்லது வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கவும் செய்யலாம். ஆனால் முன்வரிசைப் பற்கள் பளிச்சிட அழகாய்ச் சிரிக்கிறாள். பெரிய கண்களை இன்னும் விரித்து ஆச்சரியமாய்க் கூவுகிறாள்.