டிஜிடல் இந்தியா என்ற கனவை நடைமுறைபடுத்த மோடி அரசு மிக துரிதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணமற்ற வணிகம் என்பது டிஜிடல் இந்தியாவின் ஆதார கூறுகளில் ஒன்று. அது சீராக நடைபெற தொய்வில்லாத இணைய வசதி எப்போதும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக வியாபார நிறுவனங்களுக்கு ஸ்திரமான இணைய சேவையும், தொடர்பும் இரவு பகலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.
அதே சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரக் கூடிய காலங்களிலும், இடங்களிலும் இதே அரசு இணைய தொடர்புகளை முழுவதுமாக முடக்குவதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக மக்கள் குறைந்த அவகாசத்தில் தங்களை ஒருங்கிணைப்பதற்கு செல்பேசி இணைய தொடர்புகளை தொடர்ச்சியாக அரசு பல இடங்க்களில் கடந்த 2 வருடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வாரங்கள் முடக்கியுள்ளது.
