குளக்கரை

தென் சீன கடல் பகுதிகளில் தான் கோரும் உரிமை செல்லுபடியாகாது என ஹேக் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து சீனா பல கோணங்களில் எதிர்வினை ஆற்றி வருகிறது. ஒருபுறம் எப்போதும் போல அந்த தீர்ப்பைக் குறித்த வலைதளங்களை முடக்கியது. அடுத்ததாக அந்த தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால எதுவும் மாறப் போவதில்லை என்றும் அறிக்கை விட்டது. பிறகு தென் சீன கடலின் செயற்கை தீவுகளின் கட்டுமானத்தை துரிதப்படுத்தி அதை பிரகடனப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பொருளாதார, வர்த்தக குடையின் கீழ் உள்ள நாடுகள் இந்த தீர்ப்பை ஒட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பாதவாறு பல நடவடிக்கைகளை எடுக்கிறது.