துயர்சூழ் உலகில் தனிமை

சில நேரங்களில் மனிதர்களை நேசிக்கிறேன். சிலநேரங்களில் வெறுக்கிறேன். என் ஆசைகள் நிறைவேறுவது என் கையில் இல்லை என்று தெரிந்தாலும் அவை பகல் கனவாகப் போவது என்னை வருத்துகிறது.

எரிதழல் உள்ளம்

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30ம் தேதியும் டிசம்பர் 31ம் தேதியும் மிசோகி எனப்படும் குளியலை ஜப்பானியர்கள் மேற்கொள்வார்கள். ஆற்றில் மூழ்கிக் குளிப்பதாகவோ அல்லது சிறிதளவு நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதாகவோ அமையும் இது உடலை மட்டுமின்றிக் கடந்த ஆறு மாதங்களாக மனதில் சேர்ந்த அழுக்கையும் தூய்மைப் படுத்துவதாக நம்புகிறார்கள். 

துன்பம் போக்குவதே தூயப்பணி

பனி பொழிந்தால் மீண்டும் அடுத்த சுழற்சியில் புதிய பனி உருவாகும். சக்குரா உதிர்ந்தால் மீண்டும் அடுத்த பருவத்தில் புதிய மொட்டு உருவாகும். ஆனால் முதுமை என்பது தொடர்ச்சியாக நிகழ்வது. எனவே, உண்மையில் உதிர்ந்து கொண்டிருப்பது நாம்தான் என்கிறார் புலவர்.

 காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!

தறியில் துணியை நெய்து முடித்தபின் அதைத் துவைத்து ஒரு கல்லின்மேல் காயவைப்பார்கள். நன்றாகக் காய்ந்தபின் கல்லின் மேற்பரப்புக்கு ஏற்பத் துணி சீரற்ற வடிவத்தில் மேடுபள்ளமாக இருக்கும். எனவே, கினுதா என்றொரு கருவியைப் பயன்படுத்தி அதைத் தட்டித்தட்டிச் சீராக்குவார்கள். பின்னர் அத்துணி துவைத்த மற்றும் காயவைத்த சுவடே தெரியாமல் அப்போது நெய்த புதுத்துணிபோல் காட்சியளிக்கும்

உடைகளும் சுமையடி தனிமையிலே!

ஓஷிமா மீனவர்களின் உடையை உவமையாகக் கூறுவது ஒருவகை என்றால் கடலுக்குள் எப்போதும் ஈரமாகவே இருக்கும் பாறையை உவமையாகக் கூறுவது தொடர்ச்சியாக நிற்காமல் கண்ணீர் பெருகிக்கொண்டிருக்கிறது என்று பொருள்தரும்படி இயற்றுவது அடுத்தவகை.

ரகசியமானது காதல்

இப்பாடலுக்கு மறுமொழியாக இப்புலவர் இயற்றியது “ஓஷிமா மீனவர்களின் உடையைவிட அதிகமாக நனையும் அளவுக்கு என் கண்ணீர் வற்றாமல் இருக்கிறது” என்பது. இப்பாடலின் இறுதி அடியில் கைப்பகுதியின் வண்ணம் மாறியிருக்கிறது என்று வருகிறது.

தூவானமும் வெண்வானமும்

நாணல் தண்டின் ஒரு கணுவின் வெட்டப்பட்ட சிறு பகுதியும் துளிர்த்து வளர்ந்து பரிசலுக்கு நீர்மட்டம் காட்டும் கோலைச் சூழ்ந்து மறைப்பதுபோல் ஓர் இரவு மட்டும் நிகழ்ந்த நமது சந்திப்பு குறுகியதாக இருப்பினும் அந்நினைவுகள் வளர்ந்து வாழ்வில் குறுக்கிடுகின்றன.

உள்ளத்தில் உள்ளேனா?

வானத்தில் வட்டநிலா என்னை அழச்சொல்கிறது. இல்லையில்லை. அழவைப்பது என் உள்ளத்தின் நினைவுகளே. கண்ணீர் பெருக்கெடுப்பதற்கு நிலவைக் குறை கூறுவானேன்?

துயரறுத்தலே துயரமோ?

வாழ்வின் துயரங்களிலிருந்து விலகியிருக்க விரும்பினாலும் மலைக்குடிலுக்குத் தொலைவில் கேட்கிறது அடிபட்ட மானின் துயரக்குரல்.

மைக்குழற் செறிவன்ன காதல்

மே மாதங்களில் ஹொதொதொகிசு என்றொரு குயிலினம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வலசை வரும். மே மாதம் என்பது ஜப்பானில் வசந்தகாலம் முடிந்து கோடை தொடங்குவதற்குச் சற்று முன்னர் என்பதால் இக்குயிலின் முதல் கூவல் கோடையின் வரவை அறிவிப்பதற்கானது என்று ஜப்பானியர்கள் காத்திருப்பார்கள். இப்படித்தான் இப்பாடலாசிரியரும் அவ்வாண்டின் முதல் கூவலைக் கேட்டுக் குயிலைக் காண ஆவலோடு ஓடிவந்து பார்த்திருக்கிறார்.

இடம்பெயரும் புள்ளினங்காள்!

புதினத்தின் நாயகன் கென்ஜி, சுமா என்னும் ஊரில் தங்கியிருக்கும்போது கடற்பறவைகள் இரைதேடிக் கிளம்பும் ஒலியைக்கேட்டுத் துயிலெழுவார். இப்பாடலும் புதினமும் சமகாலத்தவை. 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்ட பல இலக்கியங்களில் கென்ஜியின் கதையில் வரும் நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றன

துள்ளிவரும் வெள்ளலையே!

நதியின் ஓட்டத்தில் எதிர்ப்படும் பாறை நதியின் பாதையை இரண்டாகப் பிரித்தாலும் பாறையைத் தாண்டியபின் ஒன்றாகக் கூடுவதைப்போல் இப்போது பிரிவை எதிர்கொள்ளும் நாமும் பின்னர் ஒன்று சேர்வோம்.

கேட்டதும் கிடைத்ததும்

இப்பாடலின் ஆசிரியர் முன்பு தனது காதலியின் வெறுப்பைக் குறைக்கப் போதிசத்துவரிடம் வேண்டியிருக்கிறார். ஆனால் அது குறையாமல் வளர்ந்துகொண்டே வருவதைக்கண்டு அடுத்தமுறை இக்கோயிலுக்கு வந்தபோது இப்பாடலை இயற்றினார். வளர்ந்துகொண்டே வரும் காதலியின் கோபத்தை அதிகரித்துவரும் மலைக்காற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.

காதல்மொழிகள் கடலலை போலே!

இடைக்கால ஜப்பானிய இலக்கியங்களில் சட்டையின் கைப்பகுதி நனைவது காதலரின் பிரிவால் வாடும்போது உகுக்கும் கண்ணீரை உணர்த்துவது என்றும் அரண்மனைக் காதல்கள் எல்லாம் குறுகிய வாழ்வை உடையவை என்றும் பார்த்தோமல்லவா? போட்டிப்பாடல் பாடியவர் தனது செயலுக்குக் கடலலையை உவமையாகக் காட்டியதால் இவரும் இப்பாடலில் அத்தகைய பிரிவைக் கடற்கரையில் உடையை நனைக்கும் அலையுடன் இணைத்துப் பாடியிருக்கிறார்

உள்ளும் புறத்தும் தனிமையே!

தனிமையின் வெறுமையை விளக்கும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரில் பல பாடல்கள் தனிமை குறித்தனவாக இருக்கின்றன. பல பாடல்கள் துணையைப் பிரிந்த காதல்வலியையும் சில பாடல்கள் காதல் குறித்த சுட்டலின்றித் தனிமையை மட்டும் குறிக்கின்றன.

விழியிலிருந்து நினைவுக்கு

கவிஞர்களை இரு வரிசைகளில் எதிரெதிரே அமர்த்தி இருவர் இருவராகக் கவிதைகள் புனைந்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. கவிஞர் யுய்யே எழுதிய பாடலுக்குப் போட்டியாகப் புனையப்பட்ட இப்பாடல் பரிசை வென்றது. இரு பாடல்களும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் அவ்விடத்தை அழகுபடுத்துவதாகப் புனையப்பட்டவைதான்.

எனக்கெனவே மலர்ந்தாயோ?

அந்நாளில் புத்தமதத் துறவிகள் பிரார்த்தனையின்மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் ஒரு பகுதியாகப் பல ஆண்டுகள் தொடர்ந்து மனிதர்களையே காணக்கூடாது. இப்பயிற்சி பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை.

பனிவிலகலில் அக்கரை வெண்மை

இந்த நதியின் கரையில் அஜிரோகி என்றொரு வகையான மூங்கில் செடிகள் வளர்கின்றன. மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்படும் முன் இம்மூங்கிலின் பட்டைகளைச் சிறிது இடைவெளியுடன் முறம்போல் பின்னி ஜப்பானியர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவலை இப்பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது.

காவலும் தாண்டுவது காதல்

இசே கோயிலினுள் கடுங்காவல் வைக்கப்பட்ட காதலி மசாகோவுக்கு வெளியிலிருந்து இப்பாடலைத் தூதாக அனுப்புகிறார். எப்படி அனுப்பினார் என்ற விவரங்கள் தெரியவில்லை. கடைசியாக ஒருமுறை பார்க்க இயலாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று இளவரசிக்கு உணர்த்தும் இப்பாடல் இடையில் வேறொருவர் கையில் கிடைத்துவிட்டால் என்ன செய்வது?

இடம் மாறினும் மணம் மாறுமா?

அதிர்ச்சியுற்ற இவர் துணிந்து உடனடியாக சக்குராவின் எட்டடுக்குகளை அரண்மனையின் ஒன்பதடுக்குகளுடன் இணைத்து இப்பாடலை இயற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார். தலைநகரானது ஒன்பதடுக்குப் பாதுகாப்பால் சூழப்பெற்றுள்ளது என்றும் அரண்மனை ஒன்பது வாயில்களைக் கொண்டுள்ளது என்றும் இருவிதமாகப் பொருள்கொள்கிறார்கள்.

நிலவினும் நெடிது!

மனைவியின் வீட்டுக்குக் கணவன் இரவில் மட்டும் வந்து செல்வது வழக்கமாக இருந்த காலத்தில் ஒவ்வொரு இரவும் கணவன் தம் வீட்டுக்கு வருவாரா அல்லது வேறொரு மனைவியின் வீட்டுக்குச் சென்றுவிடுவாரா எனப் பெண்கள் தவித்திருப்பார்கள். கணவன் வரும்போது கொண்டுவரும் பரிசுப்பொருட்கள் அப்பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருப்பவை.

மலைவளி வீழ்த்து தருக்கள்!

இவ்வாறு காற்றுக்கான சித்திர எழுத்தை வைத்து அது தொடர்பான மென்காற்று, வன்காற்று, புயல், சூறாவளி என வெவ்வேறு பெயரடைகளைப் பயன்படுத்திப் பல சொற்கள் உருவாக்கப்பட்டன. கசே(風) என்றால் பொதுவாகக் காற்று என்று அழைக்கப்படுவது. மலை மீதிருந்து தவழ்ந்து வரும் தென்றலை யமாகசே(山風-மலைக்காற்று) என்பார்கள். யமா(山) என்றால் மலை. தவழாமல் வேகமாக வீசும் காற்றை அராஷி(嵐) என்பார்கள். மலையையும் காற்றையும் அடுத்தடுத்து இரு எழுத்துக்களாக எழுதாமல் ஒரே எழுத்தாக மேல்பாதியாகவும் கீழ்ப்பாதியாகவும் எழுதினால் அது சூறாவளிக்காற்று எனப்படும்.

ஜப்பானியப் பழங்குறுநூறு

பழந்தமிழரின் வாழ்வைக்கூறும் நம் இலக்கியங்களைப் போலவே ஜப்பானிய மொழியிலும் இலக்கியங்கள் உள்ளன. நம்மைப் போலவே, புலவர்கள் மட்டுமின்றிப் புரவலர்களும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். கி.பி. 7ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட பல அரசர்களும் அரசியரும் நிலப்பிரபுக்களும் மதகுருக்களும் இயற்றிய பாடல்களில் சிறந்த 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த சதாய்யே என்ற மன்னர் கி.பி. 1235ல் 百人一首 (Hyaku nin isshu – Verses from Hundred people) என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார். இவர் இயற்றிய ஒரு பாடலும் 97வது பாடலாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.