பாணருடைய படைப்புகள் நீள நீளமான சம்ஸ்க்ருத கூட்டு எழுத்துக்களால் ஆன வசன நடை. காதம்பரியில் எளிய சொற்களை பயன்படுத்திய பாண கவி, இந்த ஹர்ஷ சரித்திரத்தில் பத பிரயோகங்களும், வசனங்களுமாக கடினமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார். பதங்களைப் பிரித்தபின் திரும்ப படித்தால் தான் பொருளே புரியும், மற்ற மூன்று நாடகங்கள் பிரசித்தமானவை. ரத்னாவளி, நாகாநந்தா மற்றும் பிரிய தர்சிகா. அவர் காலத்தில் ஹிந்து மதமும், பௌத்தமும் தழைத்திருந்தன என்று அறிகிறோம்.
Series: பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்
Bhanabattar Banabatta Harsha Charithra Sriharsha History
ஹர்ஷ சரித்திரம்- 2
ஆபரணங்களின் ஒளி கண்களைக் கூசச் செய்ய, நடுவில் ஒரு இள வயது வீரன், மாலதி மலர்களால் ஆன மாலை இடை வரை தொங்க, உலகையே வெற்றி கொள்ளும் முக பாவனையோடு அமர்ந்த்திருந்தான். அணிந்திருந்த பொற் சங்கிலியில் பதிக்கப் பட்டிருந்த சிவந்த மாணிக்கம் தூசியினால் மறைக்கப் பட்ட அவன் முகத்தை தெளிவாக காட்டியது. வன தேவதையில் கையில் பல வண்ண மலர்கள் இருப்பது போல அவன் உடலில் பத்ம ராக, வெண்ணிற மணிகள் அலங்காரமாக பதிக்கப் பட்ட ஆடை.
ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
ஒரு பக்கம் மல்லிகை போன்ற மணம் வீசும் மலர்கள் குவித்து வைக்கப் பட்ட கடை வீதிகள். மறுபக்கம் அதைப் போல அட்டகாசமாக சிரிக்கும் சத்தம். மல்லிகை மலரின் வெண்மையும் அட்டகாசமான சிரிப்பும் வெண்மையாக வர்ணிக்கப் படுகிறது. கடைகள்-அட்டா எனப்படும். சிரிப்பும், மலரின் இதழ் விரிதலும் ஹாஸம் என்ற சொல்லால் வர்ணிக்கிறார். தவிர மகாகாலன் என்ற தேவன் சிவ பெருமான் உள்ள இடம். கல்பம் முடிந்து பிரளயம் வரும் காலத்தில் மகா கால அட்ட ஹாஸமாக சிரித்து உலகை சம்ஹரதே – சம்ஹாரம் செய்கிறார்
ஹர்ஷ சரித்திரம் – 4
என் பால பருவம் வெறுமையாக இருந்திருக்கவில்லை. “சதாயுஷ: புருஷ:” மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. அதற்குள் தங்களைத் தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடனேயே வளர்ந்தவன் நான். மறு உலகம், மறு பிறவி உண்டு என்பதை நம்புவதால், இதையும் நம்பி அதற்கான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் போதிக்கப் பட்டவன். என் பால பருவம் வீணாக ஆனதாக நான் நினைக்கவில்லை. எந்த குறையும் இல்லை.
தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
அதன் பின் ஜ்யேஷ்டா ஆடி மாத க்ருத்திகா நக்ஷத்திரத்தில், பஹுல பக்ஷ ( தேய் பிறை) துவாதசி திதி முடியவும், ப்ரதோஷம் ஆரம்பித்து விட்ட நிலையில், இரவின் ஆரம்பத்தில், திடுமென அந்த:புரத்தில் கோலாஹலமான சப்தம் எழுந்தது. பரபரப்புடன் யசோவதியின் நெருங்கிய தாத்ரி, சுபாத்ரீ என்ற பெயருடையவள், அரசனிடம் வந்து வணங்கி, ‘தேவ! அதிர்ஷ்ட வசமாக, உங்கள் இளைய மகன் பிறந்து நலமாக இருக்கிறான்’ என்றாள். செய்தி சொன்ன அவளுக்கு அரசன் பலவிதமாக பரிசுப் பொருட்கள் கொடுத்தான்.
தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
மிருக ராஜனின் மகன் போல- சிங்கத்தின் குட்டி – கூட்டில் அடைத்து இருப்பது போல எங்கும் ஆயுதம் தரித்த காவல் வீரர்கள் சுற்றி நின்றனர். ஹர்ஷன், தாத்ரியின் கை விரலைப் பற்றிக் கொண்டு ஐந்தடி வைத்தான். அந்த சமயம் மூத்தவன் ராஜ வர்தனன் ஆறாவது வயதை அடைந்தான். மகாராணி ராஜ்யத்தின் செல்வத்தை மேலும் கூட்டுவது போல அடுத்து கருத் தரித்தாள். பகவான் ஸ்ரீமன் நாராயணன் பூ தேவியை தாங்கியது போல என்று வர்ணிக்கிறார் கவி. பின்னால் ராஜஸ்ரீ என்றே அழைக்கப்பட இருக்கும் பெண் மகவை கருவுற்றாள்.
ஹர்ஷ சரித்திரம்
ராஜ்யஸ்ரீ தன் தோழிகளுடன் மணமகளுக்கான அலங்காரங்களுடன் தயாராக நின்றாள். சந்த்யா கால சிவப்பை ஒத்த தலையை மூடியிருந்த குங்கட்- முகத்திரை. எதையும் குறிப்பாக பார்க்காமல், சற்றே தலை குனிந்து இருந்தவளை மணமகன் நெருங்கினான். வெட்கம் அவள் முகத்தின் அழகை தூக்கி காட்டியது. சந்தனத்தால் செய்த கொடி போன்ற உடல், சௌந்தர்யமே உருவாகி வந்தவள் போல, உவமைகளுக்கு அப்பால் நின்றவளாக, வசந்த ஹ்ருதயம் – மன்மதனின் சகா வசந்தன் – அவன் முன்னால் வந்து மன்மதனுக்கு உதவி செய்வதாக செய்தி- அவன் தானே வந்து மேற்பார்வையிடுவது போல இருந்ததாம்.
தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
ஒரு நாள் காட்டுத் தீ ஜுவாலையாக பரவி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். உண்மையா கனவா? ஒரு பெரிய சிங்கமே அந்த ஜுவாலையில் மாட்டிக் கொண்டு தவிப்பதைக் கண்டான். அதே சமயம் குட்டியை காக்க பெண் சிங்கம் வேகமாக வந்து அதனுள் குதித்து குட்டியை தூக்கி வெளியில் போட்டது. குட்டி பிழைத்து எழுந்து நின்றது. ஆனால் தாயான பெண் சிங்கம் தன்னை காத்துக் கொள்ள இயலாமல் தீயின் ஜுவாலையில் மடிந்தது. ஹர்ஷன் திகைத்தான்
இராஜகுமாரனின் மன விசாரங்கள்
தந்தைக்குரிய பொறுப்புகளுடன் அவனுக்கு கல்வி கற்கவும், மற்றும் தேவைகளையும் கவனித்துச் செய்தார். என் தாய் அவனுக்கு அதே போலத் தானே தாயாக இருந்து வருகிறாள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் தானே, ஏன் இந்த முடிவு? அரச குலமே ஒரு நல்ல மகனை இழந்து விட்டதே. ஏன் இப்படி செய்தான்? அப்படி என்ன துக்கம் அல்லது கவலை? தலை கனம் தாங்க முடியாமல் இந்த கேள்விகளால் தவித்த ஹர்ஷன், ராஜ பவனத்துக்கு போகாமல் அங்கேயே அமர்ந்து விட்டான்
சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
சத்ர சாமரங்கள் இன்றி, இந்த அறிவிப்பு முடியும் முன்னேயே தனியாக உள்ளே வந்து விட்ட சகோதரனைக் கண்ட ஹர்ஷன் திகைத்தான். பல நாட்களாக பராமரிப்பின்றி விட்ட கேசமும், நீளமான உடையும், எந்த விதமான அலங்காரமோ, ஆசமனம் என்பதை விட்டவனாக,(தினசரி செயல்கள் எதுவுமே செய்யாமல் இருந்தான் என்பது சொல்லப் படுகிறது.) பல நாட்களாக நீராடலோ, சரியான உணவோ, நல்ல தூக்கமோ இல்லாமல் சிவந்த கண்களும், தன் அந்தரங்க சேவகர்கள் மட்டுமே உடன் இருக்க சாதாரண பிரஜை போல உடல் முழுவதும் பிரயாண களைப்பும் தூசி படிந்த உடலுமாக, வசுந்தரா- பூமி, ராஜ்யம், அதற்கு பொறுப்பான மூத்தவன், ஹூணர்களை வெற்றி கொண்டு வந்திருக்கிறான்.
ஹர்ஷனின் சபதம்
இந்த துக்கமும், அதனுடன் எழுந்த என் ஆத்திரமும் என்னை செயலற்றவனாக்கி விட்டன. இந்த அதமன், சண்டாளன்,, துஷ்டன், பாபி, உலகில் நிந்திக்கப் படும் செயலைச் செய்தவன், உயிருடன் இருக்கும் வரையில், என் சோகம் தணிய வழியில்லை. இவர்களை அடியோடு அழிக்கும் வரையில், என் உடன் பிறந்தானை ஏமாற்றி கொல்ல துணிந்தவனை அதே போல அழிக்கும் வரையில் என் கையால் விடும் ஜலாஞ்சலி- நீர்க் கடனை அவர் ஏற்பாரா?
அணிவகுத்த படைகள்
மூன்றாவது யாமம் தொடங்கியதுமே, பிரயாண படஹ என்ற வாத்யங்கள் ஒலிக்கலாயின. நிச்சப்தமாக இருந்த இரவில் அவை கம்பீரமான ஒலி அலைகளை பரப்பி, அனைவரையும் எழுப்பி விட்டது. திக்குகளில் கும் கும் என்ற நாதமே நிறைந்திருக்க பொழுது புலரும் முன் வழியனுப்ப அனைவரும் வந்து கூடினர். முன்னால் நின்று பிரயாண க்ரோசம் என்ற பெயரில், எட்டு பேர் தனித்தனியாக படஹத்தை வாசித்து அதன் நியமத்தை அனுசரித்தனர்.
துவங்கிய பயணமும் வந்த பரிசும்
அரசன் இந்த குடையின் வரவினால் தன் பிரயாணத்தின் ஆரம்பமே சோபனம்- நிறைவான பயன் தருவதாக அமைந்து விட்டது என்று மனம் மகிழ்ந்தான். ஹம்சவேகனிடம் பிரியமாக பேசினான். ‘ பத்ர! பரமேஸ்வரனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய எல்லா ரத்தினங்களையும், இந்த பெருமை மிக்க குடையையும், குமாரன் அனுப்பியதில் வியப்பில்லை. அவனே பாற்கடலில் நிலவு தோன்றியது போல உயர்ந்த ராஜ குலத்தில் பிறந்தவன். அந்த குலத்தில் வந்தவர்களின் அன்பளிப்பு அவர்களுக்கு கை வந்த கலை.
பூமியில் அரசர்களின் அனுராகம்
தன் சுய கௌரவம் இன்றி தண்ணீருக்காக உடலை வளைத்து கை நீட்டுவான். இதற்கு உதாகரணம் துலா யந்திரம் – எடை பார்க்கும் கருவி. கௌரவம்-கனம், சுய மதிப்பு இரு பொருள். துலா யந்திரம் கனத்தை கீழே தள்ளூம். யாசிப்பவன் என் கௌரவத்தை இழப்பான். கஞ்சன்- தர மாட்டான் என்று தெரிந்தும் அவன் காலைப் பிடித்து வேண்டுபவன் போல, அவன் திட்டினாலும் பொருட் படுத்தாமல் தன் தேவைக்காக நெருங்குபவன் மனதில் எந்த அளவு வேதனை இருக்கும்.
சகோதரியை தேடி
‘தேவ! ராஜ்யவர்தன தேவன் மறைந்த பின், குசஸ்தலம் என்ற பிரதேசத்தை குப்தன் என்பவன் கைப்பற்றி விட்டான். தேவி ராஜ்யஸ்ரீயை சிறை பிடித்திருந்தனர். அவள் எப்படியோ தப்பி, சில உண்மையான பரிவாரங்களுடன் விந்த்ய மலை சென்று விட்டாள். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. மக்கள் மத்தியில் உள்ள பேச்சு இது. அவளைத் தேடி பலரை அனுப்பினோம். இன்று வரை எவரும் வந்து சேரவும் இல்லை, என்ன நடந்தது என்று தெரியவும் இல்லை என்றான்.
தொடரும் தேடல்
புது நிலப் பகுதி. அடர்ந்த காடுகளை அறியாதவன். ஆனாலும், மனம் சகோதரியை தேடும் ஒரே நினைவுடன் இருந்ததால், பல நாட்கள் அங்கேயே சுற்றி வந்தான். ஒரு நாள் அந்த வனத்தின் தலைவனைக் கண்டான். அவன் பெயர் சரபகேது என்பவரின் மகன் வியாக்ர கேது என்று அறிந்தான். அருகில் ஒர் சிறுவன். ஒரு நிமிடம் அவனையும் தன்னையும் அரசன் ஒப்பிட்டு பார்த்து கொண்டான் போல இருந்தது.
கண்டான் சகோதரியை!
மைதியாக இருந்த இடம் – திடீரென இந்த அழுகுரல் கேட்கவும் விரைந்து ஓடி அருகில் சென்றேன். பல பெண்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த பெண்ணோ, பிடிவாதமாக நெருப்பில் இறங்க முயன்றாள். யாரோ துரத்தி வந்தார்களோ, என்ன காரணம் தெரியவில்லை பாதங்கள் வீங்கி இருந்தன. நகங்கள் உடைந்து கிடந்தன – அடிபட்டிருந்தது போலும். போஜ பத்திரங்களால் முழங்காலில் கட்டு போட்டிருந்தாள். வழியில் பேரீச்ச மரங்கள் உண்டு. முள் கிழித்ததோ என்னவோ. தண்ணீர் விட்டான் கிழங்குகள் என்போம், அதிலும் முள் உண்டு. அது தான் குத்தியதோ, கீறல்கள் தெரிந்தன. தாறு மாறாக வளர்ந்த கொடிகள் அவள் ஆடையில் சுற்றிக் கொண்டு விட்டன போலும்
ஹர்ஷனின் உறுதிமொழி
என் உடன் பிறந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவனை பழி வாங்கும் வரை, என் தந்தை மறைந்தபின் வரிசையாக வந்த பல துன்பங்களால் வருந்தும் என் பிரஜைகளுக்கு என் கடமையை செய்யும் வரை, என் மனம் ஆறுதல் அடையாது. அதன் பின் நானும் வருகிறேன். உங்களிடம் தர்ம உபதேசங்களை கேட்கவும், உங்கள் அடி பணிந்து தவ வாழ்க்கையை மேற் கொள்ளவும் வருகிறேன். இந்த உபதேசங்களால் என் ரஜோ குணங்கள் அடங்கட்டும்
