உள்ளடி தரகு என்பது பிரசித்தமானது. சுருக்கமாக இப்படி விவரிக்கலாம். நிறுவனங்கள் வாங்குவதையும் விற்பதையும் தொழிலாகக் கொண்ட வங்கியில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். யாருடன் எப்பொழுது எந்த அமைப்பு இணைய வேண்டும் என்பதை பரிந்துரைப்பவர், அந்த இரகசியத்தை உங்கள் காதில் ஓதுவார். அதை ஒரு கைக்குட்டையில் கிறுக்கி, குறிப்பிட்ட முக்குசந்தில், பங்குத்தரகராகிய உங்களின் ஒன்றுவிட்ட சகோதரியிடம் கொடுப்பீர்கள். அவரும் அதைப் படித்துவிட்டு, அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்வார். குறிப்பிட்ட நிறுவனத்தின் செய்தி, தொலைக்காட்சியில் வந்தவுடன், அதன் பங்குகள் எகிறும். உடனடியாக, அந்த சகோதரி, நிறுவனத்தின் பங்குகளை விற்று இலாபம் அடைவார். உங்களுக்கு ஐம்பது சதவிகிதம் மாமூல் கொடுத்துவிடுவார். தெருமுக்கு என்றில்லை… இதை கோல்ஃப் விளையாட்டின் நடுவே கூட நிறைவேற்றலாம்.
Category: பொருளாதாரம்
எண்ணெய்யும் தண்ணீரும்: நிரந்தர சொர்க்கம்
நிகோலா டெஸ்லா பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து மறைந்த ஒரு சுவாரசியமான மனிதர். செர்பியாவில் பிறந்து வளர்ந்து பின்னால் அமெரிக்காவில் தாமஸ் எடிசனின் கம்பனிக்கு வேலை செய்து, அதன்பின் எடிசனின் மிகப்பெரிய போட்டியாளராவும் மாறியவர் இந்த விஞ்ஞானி. இவர் வரலாறும், கொள்கைகளும், பணி புரிந்த விதமும், செய்த ஆய்வுகளும் வினோதமானவை. அவருடைய லட்சியங்களில் ஒன்றாக சொல்லப்படுவது உலகில் உள்ள எல்லோருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் இலவச மின்சார விநியோகம் செய்வது! இலவசம் என்றால், நிறைய வரிகளை விதித்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து இலவச மின்சாரம் வழங்குவது மாதிரியான அரசாங்க திட்டம் இல்லை. யார் தயவையும் நம்பாமல், தன்னுடைய கண்டுபிடிப்புகள், கருவிகள், திட்டங்கள் முதலியவைகளை மட்டுமே கொண்டு எல்லோருக்கும் தேவையான அளவு இலவச மின்சாரம் தருவது பற்றி இவர் யோசித்துக்கொண்டிருந்தார். அவர் கனவு நனவாகி இருந்தால் இந்த எண்ணெய் எரிவாயு துறையே தேவையற்ற ஒன்றாக போயிருக்கக்கூடும்!
எண்ணெய்யும் தண்ணீரும்: எரிவாயு பிரச்சினைகள்
பத்து வருடங்களுக்கு முன் வேலை நிமித்தமாக நானும் ஒரு பிரிட்டிஷ் சக ஊழியரும் டென்மார்கில் உள்ள ஒரு சின்ன ஊரில் சில நாட்கள் கேம்ப் அடித்திருந்தோம். ஓரிரவு ஏதோ ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்தியபடி பேசிக்கொண்டிருந்த போது பேச்சு எங்கெங்கோ போய்விட்டு எண்ணெய் எரிவாயு பக்கம் திரும்பியது. வடகடலில் (North “எண்ணெய்யும் தண்ணீரும்: எரிவாயு பிரச்சினைகள்”
முத்ரா மூலமாக நிதிச்சந்தைகளை உள்ளிணைப்பது
சமீப காலகட்டங்களில் வட்டி விகிதங்கள் மெதுவாக இறங்கி வருகின்றன. வங்கிகளிடமிருந்து கடன் பெறும் பெருநிறுவனங்கள் ஆண்டிற்கு 12%க்கும் குறைவான வட்டியில் நிதிகளைப் பெற முடிகின்றன. ஆனால், என்னுடைய பழக்காரியும் காய்கறி விற்பவனும் நாளொன்றுக்கு அரை சதவிகித வட்டியில் கடன் வாங்குகிறார்கள். ஆண்டிற்கு 180% வட்டி கொடுக்கிறார்கள். என்னுடைய பெட்டிக்கடை முதலாளி ரூ. 50,000 என்று கடன் பத்திர ஒப்பந்தம் போட்டு ரூ. 45,000 பெறுகிறார். அதன் பிறகு நாளொன்றுக்கு ஐநூறு ரூபாய் வீதமாக நூறு நாளுக்குத் திரும்ப செலுத்துகிறார். (வருட வட்டி விகிதம் 40 சதவீதத்திற்கு மேல் ஆகும்.) என்னுடைய நாவிதர் சீட்டுப் பணத்தின் மூலம் நான்கு சதவிகிதம் மாதாமாதம் வட்டி கொடுக்கிறார். (வருட வட்டி 48 சதவீதமாகும்.)
நவீனப் பொருளாதாரத் துறையின் வெறுமை
கண்ணுக்குத் தெரியாத கரம் என்று ஸ்மித் சொன்னதாக எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், அவர் சந்தையின் இயல்பு என்று ஒரு பொதுத் தத்துவமாக அப்படிச் சொல்லவில்லை…..”த வெல்த் ஆப் நேஷன்ஸ்’ புத்தகத்தில் இந்தக் கண்ணுக்குத் தெரியாத கரம் ஒரே ஒரு முறைதான் பேசப்படுகிறது- ஆனால் சந்தையில் உள்ள இந்தக் கண்ணுக்குத் தெரியாத கரம், தெய்வத்தின் சித்தமாகவோ அல்லது தானாய் தோற்றம் கொள்ளும் ஒழுங்கு நடவடிக்கையாகவோ, சுயநலனைப் பொதுநலமாக எப்போதுமே மாற்றிக் கொண்டிருக்கிறது என்று ஸ்மித் நம்பியது போல் சந்தைப் பொருளாதாரத்தின் ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத கரம் தெய்வச் சித்தம் என்றால், தெய்வம் சிலரை மட்டுமே நெறிப்படுத்துகிறது. தன்னலமிக்க நபர்களால் நிகழ்த்தப்படும் பல்வேறு அநீதிகளைப் பட்டியலிடும் ஸ்மித், பொது நலனுக்கும் சுய நலனுக்கும் முரண்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத எண்ணற்ற சூழ்நிலைகளை கவனமாக முன்னிலைப்படுத்துகிறார்… ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையைச் செய்வது என்ற நிலையில் ஏற்படும் எதிர்மறை சந்தை விளைவுகளைத் தவிர்க்கவே முடியாது என்கிறார் அவர்.
பர்மாவின் செட்டியார்கள்
கடனுக்கான வட்டி வந்து சேரவில்லை என்றால், அந்த நிலமும் அதன் விளைச்சலும் கடனுக்கு ஒத்தியாக எடுத்துக்கொள்ளப்படலாம். இந்த ஏற்பாட்டிற்கு சட்டத்தின் வழி பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பை அளித்தது. கையில் பணம் இருந்த சீனர்களும், பர்மியர்களும், நாட்டுக்கோட்டை செட்டியார்களும் பர்மிய அரிசி வியாபாரத்திற்கு வங்கிக்கடன் வழங்குவதன் வழியாக பர்மிய வணிகத்தில் போட்டி போடத்தொடங்கினர். 1852-இல் 1000 ஏக்கருக்கும் குறைவான நிலமே வேளாண்மை நிலமாக பர்மாவில் இருந்தது. செட்டியார்கள் பர்மாவின் அரிசி வியாபாரத்தில் நுழைந்த அடுத்த 80 வருடங்களில் இது பத்துமடங்கு அதிகரித்தது
எண்ணெய்யும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள்
இப்படி நோண்டிக்கொண்டே போனால் இறுதியில் அந்த 2000 மீட்டர் தூரத்தையும் கடந்து எண்ணெய் பேசினை தொடும்போது உள்ளே சுமார் 2000 பிஎஸ்ஐ அழுத்தத்தில் இருக்கும் கச்சா எண்ணையும் எரிவாயுவுமான குழம்பு பீரிட்டுக்கொண்டு பூதமாய் வெளிவரும். ஒரு ஒப்புமைக்கு சாதாரண கார் சக்கரத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம் வெறும் 40 பிஎஸ்ஐ மட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொள்ளலாம்! எனவே அதற்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுத்து ஜாக்கிரதையாக அந்த கிணற்றை இறுக மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.
உலக வங்கிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்தாயிற்று
உலக வங்கி தேகநலம் சம்பந்தப்பட்ட சில திட்டங்களுக்கான தன் உதவியை நிறுத்தி விட்டதாகவும், அதற்குக் காரணம் அந்தத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் இருந்த ஊழல்தான் என்றும் செய்தி கிட்டியிருக்கிறது. நிதி அமைச்சர் உலக வங்கிக்குத் தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு எழுதியிருப்பதாகவும் செய்தி வந்தது. இந்த ஒரு விஷயத்தில் உலக வங்கி கொடுக்கும் அழுத்தம் தேவையானது என்று நாம் ஏற்றாலும், மொத்தமாகப் பார்க்கையில், இந்த நிறுவனத்தின் விதிகளும், முன் நிபந்தனைகளும், உலகளவில் முக்கியமான சக்தியாக எழுந்து கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு அத்தனை பொருத்தமானதாக இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.
ஐ.பி.எம். – ஒரு யானை எலி ஆகிறதா?
தன் மீது தனக்கே நம்பிக்கை இல்லாத நிறுவனங்களும், பங்குதாரரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியாக பணத்தைத் தூண்டில் போடும் நிறுவனங்களும், பாரம்பரியமான அந்தக் கால பழக்கவழக்கங்களைக் கொண்ட வட்டி போடும் நிதி நிறுவனங்களும் காலாண்டு தோறும் ஈவுத்தொகை கொடுக்கிறது. அந்த வர்க்கத்தில், தொழில் நுட்பம் போன்ற நொடிக்கு நொடிக்கு புது அரிதாரம் கோரும் துறையில் இயங்கும் ஐ.பி.எம். அங்கம் வகிப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம். ஆண்டுக்கணக்காக, இவ்வாறு கணக்குப்பதிவில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி மந்தையில் போட்டு ஒருவாறாக இலாபக் கணக்கைப் பதிந்தாலும், தொலைநோக்கில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த செய்முறைகள் அவநம்பிக்கையை உருவாக்கியது.
பொருளாதார சிந்தனைச்சோதனைகள்
மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஆக்ஸில்ராட், நீதி, நியாயம் என்றெல்லாம் சமூகம் நமக்கு போதிப்பதை ஓரங்கட்டிவிட்டு அறிவியல் பூர்வமாக வாழ்வில் நாம் எப்படி நடந்து கொள்வது லாபகரமானது என்று ஆய்ந்து பார்க்க முடிவெடுத்தார். இந்த ஆய்வுக்காக 1980 வாக்கில் அவர் ஒரு போட்டியை அறிவித்தார்.
வணிகவியல் சிந்தனைச்சோதனைகள்
இந்த நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கை உள்ள, தர்மநியாயத்தை கடைபிடிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, படித்த, சமூகத்தில் நல்ல மதிப்புள்ள ஒரு பெண் என்றெல்லாம் தன்னை கூறிக்கொள்ளும் ஒரு போட்டியாளர், சற்றே பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படும் எதிராளியான ஒரு ஆணிடம், “என்னை பார்த்தாலே தெரியவில்லையா? கடவுள் மீதும், என் குழந்தைகள் மீதும் சாட்சியாக நான் “பிரி” பந்தைதான் எடுக்கப்போகிறேன். எனவே நீங்களும் “பிரி” பந்தையே தயவு செய்து தேர்ந்தெடுங்கள். நாம் பரிசுத்தொகையை பிரித்தெடுத்துக்கொண்டு…
வயிற்றின் குரல்
அழிக்கப்பட்ட ஆற்றையோ, நிலத்தடி நீர்ச்சூழலையோ மீண்டும் உண்டாக்க எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பது மனதில் பெரும் கேள்விகளை எழுப்பும். அவற்றை மீட்டெடுக்க இயலாத சூழலில் வெவ்வேறு வழிகளில் பணத்தைச் செலவு செய்து தீர்வுகளைத் தேடும் மனிதன் தன் இனத்திற்கே துரோகம் செய்வதை மெதுவாகவே உணர்ந்து கொள்வான்.
வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்
கோடிகள் ஈட்டும் இலாப-நோக்கற்ற நிறுவனங்களுக்கும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று அறிய முடியாத என்.ஜீ.ஓக்களுக்கும் உகந்த பூமியாக இந்தியா இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு வரவாகும் தொகையில் பெருமளவு, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்துவம் கொண்டவர்களால் நடத்தப்படும் வியாபாரங்களுக்கும் செல்கிறது என்று ஊகிக்கப்படுகிறது. அதைக் குறித்த கட்டுரை
அமெரிக்காவில் கதிரொளி ஆற்றலின் பிரும்மாண்டங்கள்
அக்டோபர் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது சோதனைக் கட்ட நிலையில் இருக்கும் 3500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த மின்சார உற்பத்தி நிலையம், சரியாக இயங்குமேயானால், உருவாக்கபடும் மின்சாரமானது இந்த வருட முதல் பாதியில் கலிபோர்னியா மாநிலம் முழுவதுமாக உபயோகப்படுத்தப்படும். இவ்வாறாக சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் மிகப்பெரிய நிலையமாக ஐவன்பா விளங்கும். இதனால் சுமார் 377 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு கிட்டத்தட்ட கலிபோர்னியாவின் 140,000 வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். இதை போன்ற ராட்சத அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டின் பல பகுதிகளில் முளைக்கத் தொடங்கியுள்ளன. குத்து மதிப்பாக இதே போன்று 232 மின் உற்பத்தி நிலையங்கள் பலதரப்பட்ட கட்டங்களில் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
தாது வருஷப் பஞ்சம்
பஞ்சங்களை நினைவு கூரும் ஒரு சில அடையாளங்களை இன்றும் சென்னையில் காணலாம். ஒரு உதாரணம், இன்றைய சென்னை நகரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் – இதன் பெரும்பகுதி தாது வருஷப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது. பல ஆண்டுகள் தமிழகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிடையே போக்குவரவுக்குப் பயன்பட்ட இந்தக் கால்வாய் இன்று சர்வ ரோகச் சாக்கடையாகச் சுருங்கி விட்டது. கொள்ளை நோய்களும், லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் பஞ்சங்களின் உடனடி விளைவுகள். குறிப்பாக, பஞ்சத்தின் முக்கிய விளைவு மனித மதிப்பீடுகளின் வீழ்ச்சி. பஞ்சத்தைத் தொடர்ந்து சென்னையில் அடிமை வாணிபம் பல ஆண்டுகளுக்கு நிலை கொண்டது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?
கடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்
தொடர்ந்து இழிவையும், நசிவையும், ஆபத்தையுமே படித்து, பார்த்து, கேட்டு வரும் மக்களுக்கு நாளாவட்டத்தில் மனமும், உணர்வுகளும் மரத்துப் போக வாய்ப்பு அதிகம் என்பதோடு, தம் சமூகம், நாகரீகம், அரசு, நாடு ஆகியன குறித்து நம்பிக்கையின்மை, அலட்சியம், இழிவுணர்வு ஆகியன அம்மக்களிடம் நிரம்ப வாய்ப்பு அதிகம். முன்னாள் காலனிய நாடுகளாயிருந்து, இன்னும் அந்த வியாதியின் பீடிப்பிலிருந்து விழிப்புணர்வோடு மீள முயற்சி செய்யாத இந்தியா போன்ற ஒரு நாட்டில் இத்தகைய விட்டேற்றியான மனோபாவம் பரவலாக இருக்கத்தான் செய்யும், அதையே இந்த ஊடகங்கள் மேன்மேலும் உறுதிப்படுத்தி, பெருக்கவும் செய்கின்றன.
ஒரு வேளை நம்மிடையே இருந்து போன பற்பல சாதனையாளர்கள் பற்றித் தொடர்ந்து எழுதினால் நம் நாகரீகமும் தன்னளவிலும், ஒப்பீட்டிலும் மேன்மைகள் கொண்டதே என்ற ஒரு எதார்த்தமான உணர்தல் நம்மிடம் பரவுமோ என்ற நப்பாசை எங்களுக்கு உள்ளது. இதை ஒட்டி இந்திய/ தமிழகச் சாதனையாளர்கள் என்று எங்களுக்குத் தெரிய வருபவர்கள் பற்றித் தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரிக்க இருக்கிறோம்.
ஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 3
இந்திய நாணயம் சரிந்ததும் அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே பாடிப்பாடிப் புளித்துப் போன அதே பழைய பல்லவியைப் பாடினர். நாம் அளவுக்கதிகமாய் எரிபொருள்களை உபயோகிக்கிறோம், தங்கம் முதலான அத்தியாவசியமில்லாத உலோகங்களை வீட்டில் சேர்க்கிறோம் என நாட்டு மக்களைக் குற்றம் சாட்டி பெட்ரோல்/ டீசல் விலைகளையும் தங்கம் இறக்குமதி செய்யச் சுங்க வரிகளையும் உயர்த்தின. இவை சரியான காரணங்களா?
ஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 2
வட்டி வீதம் மிகவும் குறைவானாலொழிய மீண்டும் கடன் வாங்கும் சூழலை ஏற்படுத்துவது குதிரை கொம்பான விஷயம். மீண்டும் வங்கிகளிடையே, நிறுவனங்களுக்கிடையே, மக்களுக்கிடையே பணம் புழங்க, அனைவரையும் மேலும் கடன் வாங்க வைக்க, பொருளாதார சந்தையில் வட்டி வீதத்தை குறைத்து மலிவு விலையில் மூலதனத்தை கிடைக்கப் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஆதாரமற்ற பொருளாதாரம் – 1
வங்கிகள் தன்னிடம் காசு இல்லாமலேயே பிறருக்கு கடன் வழங்கிக் கொண்டிருக்கின்றன. என்னிடம் நூறு ரூபாய் இருந்தால்தான் நான் உங்களுக்கு நூறு ரூபாய் கடனாக தர முடியும். ஆனால் கையிருப்பை விட அதிகமாக பிறருக்கு கடன் கொடுக்கும் உரிமை வங்கிகளுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் பல பல மடங்கு அதிகமாக கடன் கொடுப்பது வழக்கமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இது எப்படி சாத்தியம் ஆகும்?
எண்ணை விலை உயர்வால் உலகமயமாக்கம் முடங்குமா?
எண்ணை விலை (ஒரு பேரல் விலை டாலர்களில்) மூன்றிலக்கமாகும் போது, உலகமயமாக்கலுக்குப் பின்னடைவு ஏற்படும். அது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மறுமலர்ச்சி அடைய வழி வகுக்கும். நாம் எதிர்கொள்ளப் போகிற உலகில், தூரம் விலையேற்றத்தை ஏற்படுத்தும். குறைவான ஊதியம் ஏற்கும் உழைப்பாளர் கிடைப்பதால், சீனாவில் உற்பத்தி செய்து, அந்த சரக்குகளை மேற்கு ஐரோப்பாவிற்கோ அல்லது வட அமெரிக்காவுக்கோ ஏற்றுமதி செய்வது பல சமயங்களில் விவேகமான செய்கையாக இருக்காது. சரியாகச் சொன்னால், உழைப்பின் விலையால் நீங்கள் சேமித்ததை விட அதிக தொகையை போக்குவரவில் இழந்திருப்பீர்கள்.
முப்பரிமாண நகலி – எதிர்காலத்தின் ஊடறுக்கும் தொழில்நுட்பம்
நம்மை சுற்றிக் காணப்படும் எல்லா பொருட்களும் ஏதோ ஒரு தனி வடிவமைப்பாளரின் அல்லது வடிவமைப்புக் குழுவின் கற்பனையில்தான் முதலில் உருவாக்கப்பட்டவை. இயந்திர வழி உற்பத்தியின் காலத்திற்கு முன்னால் வடிவமைப்பாளனே ஒரு பொருளை உருவாக்கினான். இயந்திர உற்பத்தியின் அறிமுகத்திற்கு பின் வடிவமைப்பாளனின் பொறுப்பு மாதிரிகளை உருவாக்குவதில்தான் கோரப்பட்டது.
தங்கத்தின் மறுபக்கம்
உற்பத்தி இல்லாமல் லாபம் மட்டும் வருகிறதென்றால் எங்கோ யாரோ நட்டப்படுகிறார் என்பது எளியமொழி. உண்மைதான் 1971ல் 200ரூபாய்க்கு விற்ற தங்கம் 2011ல் 25000ரூபாய்க்கு உயர்ந்துள்ளது என்றால் நாற்பது ஆண்டுகள் 125 மடங்கு லாபம் என்று பொதுபுத்தியில் எட்டலாம். ஆனால் 1981ல் 10000 ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனம் 2011ல் 7 பில்லியன் டாலர் மதிப்புடையதாகிறது(இன்ஃபோசிஸ்) என்றால் காரணம் முதலீடு உழைப்பு சார்ந்த, உற்பத்தி சார்ந்த துறையில் அமைந்துள்ளதே காரணம். மாறாக 10000 ரூபாயை 1981ல் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அதிகபட்சம் 3ஆயிரம் டாலர் 2011ல் கிடைத்திருக்கும். அந்த உற்பத்தி மூலம் எத்தனை பேர் வருமானம் ஈட்டிருப்பார்கள்? அரசுக்கு எத்தகைய லாபம்? என்று யோசித்தால் இது எவ்வளவு பெரிய நட்டம் என்பது புலப்படும்.
பெருங்கொள்ளையும், அன்னிய வங்கிக் கணக்குகளும்
ஒரு முறை தன்னிடம் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கொடுப்பதென்று தீர்மானித்து விட்ட இந்த வங்கிகள், இதர நாடுகளின் அரசுகள் இத்தகைய கணக்குகளைப் பற்றிய தகவல் சேகரிக்க முனைந்தால் தருவதாக உறுதி கொடுத்திருக்கின்றன. ஒரு நாடு மட்டும் இந்தக் கணக்குகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது எந்த நாடு என்று யோசியுங்கள்!! ஆம், அது இந்தியாதான்.
மத்தகங்கள் வீழ்ந்த காலம்!
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் விளம்பரப் படுத்தி, சிகரெட் வியாபாரத்தில் கொண்டிருந்த வலிமையை உபயோகித்து, பொருளை எளிதாகச் சந்தைப் படுத்தவும் செய்தது. கார்ட் வீல் பல்டி அடித்து வந்து அன்னையைத் தழுவிக்கொள்ளும் குட்டிப் பையன் விளம்பரம் அன்று மிகப் பிரபலம். 90களின் இறுதியில், ஐ.டிஸி, எண்ணெய்த் தொழிலை, கான் அக்ரா என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றது. ஏன்?
சந்தை என்னும் கோவில்: நுகர்வோர் என்னும் கடவுள்
குப்புற விழுந்து, மூஞ்சியும் முகரையும் பெயர்ந்த பின்பு, அந்நிறுவனம், தொலைபேசிக் கட்டணம், ஒரு தபால் கார்டை விட மலிவானதாக இருக்க வேண்டுமென்று எங்கப்பாரு சொன்னாருன்னு ஒரு புதுக் கதை சொன்னது.. நுகர்வோருக்கான மாபெரும் சலுகை என்று அலைபேசிக் கருவிகளை ஐந்நூறு ரூபாய்க்குத் தந்தது.. பல ஆயிரம் கோடிகள் நஷ்டம்……தேவைப் பட்டால், விதிமுறைகளையும் அரசாங்கங்களையும் மாற்றும் வல்லமை படைத்தவர்கள். ஆனால், பாவம் பத்து ரூபாய் ப்ரீபெய்ட் வாங்கும் ஒரு சாதாரண நுகர்வோரை வீழ்த்த முடியாமல் போயிற்று.
சந்தை என்னும் கடவுள்
ஒரு ப்ரசெண்டேஷனுக்கு ஆறு கோடியா? சொக்கா என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த 45 நாட்களுக்குள் 1000 டன்னையும் வாங்கி ஒரு பெரிய எண்ணெய் டாங்கில் சேமித்துவைத்தோம். மே மாதம் துவங்கி, ஊர் எல்லை மைல்கல்லில் காத்திருக்கும் பாரதிராஜாவின் கதாநாயகி போல் ஓணம் வரக் காத்திருந்தேன். ஓணம் முடிந்தபின் விலைகள் எகிறும் என்பதே எங்கள் தாரக மந்திரம். 60 ஆண்டுகளின் புள்ளிவிவரம் எங்களுக்குச் சொன்னது அஃதே. ஓணம் வரை விலை 60லிருந்து 63க்கு எழுந்தது. எங்களுக்கு லேசான பெருமிதம். நாங்க யாரு?
இலவச இணையம் – எப்படி சாத்தியம்?
முதலில் ஹாட்மெயில், பிறகு யாஹூ மற்றும் ஜிமெயில் மின்னஞ்சல் வந்து இன்று பல கோடி மக்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வியாபார சம்மந்தப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பல கோடி மக்களின் மின்னஞ்சல் மற்றும் புகைப்படங்களை சேகரிப்பதற்கு ராட்சச வழங்கி கணினி வயல்கள் (server farms) தேவை. அவற்றைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எதற்காக இலவசமாக இவர்கள் இந்தச் சேவையைக் கொடுக்கிறார்கள்? இவர்களுக்கு வருமானம் எப்படிக் கிடைக்கிறது?
உள்ளம் கவர்ந்த உள்வேலை
இந்த ஊழலின் விளைவுகளை இன்றும் உலகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச்சரிவால், குறைந்தபட்சம் 1.5 கோடி பேர் மீண்டும் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்கள் உலகெங்கும் வேலை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஒரு நிதி நிறுவனத் தலைமை அதிகாரி கூட இன்றுவரை சிறை செல்லவில்லை. இதைக் குறித்து அழகாக விளக்குகிறது ‘Inside Job’ என்ற விவரணப்படம்.
பட்ஜெட் 2010 – ஒரு பேட்டி
2010ஆம் ஆண்டின் நிதி அறிக்கை (budget) பற்றிச் சில கேள்விகளை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (பெங்களூரு) பேராசிரியர் திரு. ரா.வைத்தியநாதனுடன் உரையாடினோம். பெருகிவரும் தாராளமயமாக்கல், கிராமப் புற வளர்ச்சித் திட்டங்கள், விவசாயம், உள்கட்டுமானம் போன்ற துறைகள் மீது இந்த பட்ஜெட்டின் கவனம் குறித்து உரையாடல் நீண்டது. “தனியார் மயமாக்குவது என்பது அதனளவிலேயே ஒரு இலக்காக ஆக முடியாது. அது ஒன்றும் மந்திரக் கோல் அல்ல. நம் அமைப்பும் மிகவும் குழப்பம் நிறைந்த ஒரு அமைப்பு. தவிர அரசு நிறுவனங்களைச் சரியான மதிப்பு போட்டு விற்பது என்பதும் எளிய செயலல்ல.”
கனவுகளின் நிதர்சனங்கள்
வள விநியோகம், அதிகாரப் பகிர்வு போன்றவை இந்த புதிய முயற்சிகளின் அடிநாதமாக அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலானவை, அந்நோக்கங்களின் எதிர்மறைப் புள்ளியை சென்றடைவது வரலாற்றின் ஆகப்பெரும் முரண்நகை.
பேரரசின் தொலைந்த தொடுவானங்கள்
மத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.
