நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைக் குறிப்புகளை அரிய புகைப்படங்களையும் அவரைக் குறித்த ஒலிப்பதிவுகளையும் கொண்டு இங்கே தொகுத்திருக்கிறார்கள்.

வம்ச விருக்ஷா – எஸ் எல் பைரப்பா

சிந்தனைகளின் மோதல்’ என்றுகூட இப்புத்தகத்துக்கு தலைப்பு வைத்திருக்கலாம். ஸ்ரீனிவாச ஷ்ரோதிரி, சதாசிவ ராவ், காத்யாயனி என்ற மூன்று மையப் பாத்திரங்களைக் கொண்டு இந்த மோதலை நாவல் உருவாக்குகிறது. ஸ்ரீனிவாச ஷ்ரோத்ரி பீஷ்ம பிதாமகர் போன்ற ஒரு பாத்திரம். தன்னைச் சுற்றிலும் துன்பகரமான நிகழ்வுகள் அரங்கேறக் கண்டும் கலங்காமல் சமநிலை காக்கும் மனத்தெளிவு அடைந்த ஆதர்ச பாத்திரம் இவர். சாஸ்திரங்கள் பயின்ற, மிகவும் மதிக்கப்படும் சம்ஸ்கிருத பண்டிதர், இந்து மரபில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு வாழப்பட வேண்டியதே வாழ்க்கை என்று அவர் நம்புகிறார்.

கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 3

இரண்டு விதமான மனிதர்களுக்கு உலகம் இதயத்தில் இடம் தருகிறது. இந்திய மனதுக்கு இது அமைதியையும், செம்மையையும் வாழ்வாகக் கொண்ட இராமனாகவும், குதூகலத்தையும், சாகசத்தையும் வாழ்வுமுறையாகக் கொண்ட க்ருஷ்ணனாகவும் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் சமீபத்திய சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலே சிவந்த நிறமும், நல்லதனங்கள் அனைத்தின் உருவகமாகவும் படங்களில் நடித்த எம்ஜியாரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் கருப்பான, புகைபிடிப்பதையும், குடிப்பதையும் திரையில் செய்யும் ரஜினிகாந்த். .

என்றுதானே சொன்னார்கள் – கவிதைத் தொகுப்பு

இப்போதும் பசியும் வறுமை சார்ந்த அவலங்களும் இருக்கின்றன, ஆனால், மொத்த சமூகமே மிகச் சிக்கலானதொரு வலைப்பின்னலுக்குள் வந்துவிட்டிருக்கிறது. தற்காலத்தின் மிகப் பெரிய அவலமே, இப்புதிய யதார்த்தத்தை உணர்ந்துகொள்வதற்கான அவகாசத்தையோ அவசியத்தையோ அளிக்காத பிழைப்புச் சூழல்.இன்று எத்தனைக் கவிஞர்களால் புல்வெளிகளைப் பற்றியோ நதிகளைப் பற்றியோ மலைகளைப் பற்றியோ எழுத முடியும்?

கவிதைகள் – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்

கசங்கிய
காவி நிறத்த
கிட்டத்தட்ட ஒரு ஆளின்

நீளமும் பருமனையும்
உடைய காகிதமொன்று
சாலையில்

ஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள்

“நாய்க்கு முழுத்தேங்காய் நன்றாய் ருசிக்குமோ?” என்பதில் நாம் சற்று பொருளேற்றம் செய்தால், நமக்கு ருசித்திருப்பதாக நாமே நினைத்துக் கொண்டு, உடைக்கும் வழி அறியாது உருட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்னும் முழுத்தேங்காயின் உள்ளிருக்கும் பருப்பை பார்ப்பதற்குத்தான் பல பிறப்போ? என்னும் கேள்வி செறிந்த ஆன்மத்தின் பாதாளத்தில் நாம் விழுந்து விட்டிருப்பதை உணர்வோம்.

இவரின் “வேதாந்தக் கப்பல்” கட்டுமானம் “காயக் கப்பல்” வடிவிலேயே இருக்கிறது. “பஞ்சபூதப் பலகை கப்பலாகச் சேர்த்து” என்று துவங்குவது காயக் கப்பல் சித்தர் பாட்டு. ஆவுடையக்காளோ…

மராத்திக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு

சிவப்பு பச்சை என
எந்தக் குறியுமில்லை
கண்ணுக்குப் புலப்படாத போது
எப்படித் தொலைய முடியும்

வைரத் தீவு: ஆல்கட்ராஸ்

“ஆல்கட்ராஸ், வெள்ளை மனிதன் இட்ட பெயர். நம்முடைய மக்களுக்கும், அவர்களின் தொன்மங்களிலும் அதை ஆலிஸ்டி டி-டானின்-மிஜி [வானவில் பாறை] வைரத் தீவு என்றே அறிந்துள்ளோம். நம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அருமருந்தை அத்தீவினில் போய் தேடுமாறு இரட்டை எலி சகோதரர்களுக்கு பழங்காலத்தில் சொல்லப்பட்டது என நமது கதைகள் கூறுகின்றன. இட்-ஆ-ஜூமா [பிட் நதி]யின் இறுதி வரை சென்று அவர்கள் தேட வேண்டியிருந்தது. அதைக் கண்டடைந்து, எடுத்து வந்தார்கள். அந்த ‘வைரம்’ எல்லா இடங்களில் வாழும் நம் மக்கள் அனைவருக்கும் நன்மை அளிக்கும் என சொல்லப்பட்டது. உப்பு நீர் நிலையின் அருகில் உள்ள தீவில் ஒரு “வைரம்” இருப்பதாக எங்களுக்கு எப்போதும் சொல்லப்பட்டது. ஒரு சிந்தனை அல்லது உண்மையே அந்த “வைரம்” என்றும் கூறப்பட்டது.

அரியன்னூர் கலசப்பாக்க அற்புதங்கள்

ஜெயச்சந்திரன் பெருமையாகக் கூறும் விஷயம் அரியன்னூர் ஆல மரங்கள். அரியன்னூரின் தனிச்சிறப்பு பறவைகளால் உருவாக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தால் ஏரிகளில் நீர் வற்றுவதில்லை. எல்லாம் திறந்தவெளிக் கிணறுகளே. அந்த ஊரில் யார்ம ஆழ்துளை கிணறு இறக்காமல் மழை நீர் செமிப்பால் கிணறுகள் ரீசார்ஜ் ஆகின்றன. இவர் தலைவராயிருந்தபோது அரியன்னூர் உயிர்ச்சூழல் கிராமமாக அறிவிக்கப்பட்டு மாநில அரசு பாராட்டு பெற்றுள்ளது.

நேரம் சரியாக.. – 5

இதுவரை விளக்கிய அணு கடிகாரங்கள் மிகவும் சிக்கலானவை, மற்றும் மிகவும் உயர் தொழில்நுட்பம் தேவையானவை. சரி, அப்படி என்ன நமக்குத் துல்லியத் தேவை? சரியாக ஒரு நாட்டிற்கு நேரம் சொல்வது ஒரு முக்கிய சேவை,. இதைத் தவிர வேறு எதற்காக இத்தனை மெனக்கிட வேண்டும்?

முதலில், இப்படிப்பட்ட அணுகடிகாரங்கள் ராணுவ மையங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. ராணுவ தேவையில்லாமல் இத்தனை பணம் யாரும் செலவழிக்க மாட்டார்கள். இத்தனை துல்லியத்தில் என்ன பயன்பாடுகள் இருக்கலாம்?

ரெட் படப்பெட்டி – எண்ணியல் படக்கருவி

சாதாரணமாகப் படக்கருவிகளைக் கையாள ரத கஜ துராதிபதிகள் தேவை. ஒளிப்பதிவு இயக்குநர் கோணங்களை கவனிப்பார். அவருக்கு உதவியாக கேமிராவை இயக்க இருவர் இருப்பார்கள். கூடவே டிராலி தள்ள நாலைந்து பேர் வேண்டும். இவ்வளவு பெரிய படை எல்லாம் ரெட் கருவிக்கு தேவையில்லை. ஒருவர் போதுமானது. அஷ்டே!

சொல்லப்பட்ட கதையும், சொல்லில் வராத கதைகளும்

இதில் எந்தவகை உணர்வாக இருந்தாலும் அது இயல்பாகக் கிளர்ந்து எழ வேண்டும் என்பதைத்தான் முக்கியமானதாக நான் எண்ணுகிறேன். வாசகர் தன் மேதமையைக் காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகக் கதையைப் பார்க்காமல், படைப்பைப் பற்றித் தான் உண்மையாக உணர்வதை, அதைப் பகிர்வதற்கான ஒரு வடிகாலாக அவரது எதிர்வினை இருப்பது நல்லது.

70 மில்லியனிலிருந்து 600 வரை

சரி, இரட்டைப் பகா எண்களைப் பற்றிய கேள்விக்கான பதிலைத் தான் நிறுவ முடியவில்லை, குறைந்தபட்சம் இயல் எண் நேர்கோட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிலான எண் வித்தியாசத்தில் இரண்டு பகா எண்களைக் கண்டறிய முடியுமா என, 200 ஆண்டுகளுக்கும் மேலாக கணித ஆய்வாளர்கள் முயன்று வந்தார்கள்.. இங்கு தான் சாங், தனது முக்கியமான முடிவை இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்டு, கணித உலகத்தையே திகைக்க வைத்தார்.

மகரந்தம்

அரிஸ்டாட்டிலும் டேகார்த்தும் கலிலீயோவும் மாக்கியவெல்லியும் திருடு போய்விட்டார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்களின் பண்டைப் பிரதிகள் காணாமல் போய்விட்டன. ஒவ்வொரு புத்தகமும் சராசரியாக பத்து பதினைந்து மில்லியனுக்கு ஏலம் போகும். நேப்பிள்ஸ் நூலகத்தின் காப்பாளரும் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் எப்படி கால்முளைத்து சென்றன என அறியேன் என்று கைவிரித்து விட்டார்.

கடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்

தொடர்ந்து இழிவையும், நசிவையும், ஆபத்தையுமே படித்து, பார்த்து, கேட்டு வரும் மக்களுக்கு நாளாவட்டத்தில் மனமும், உணர்வுகளும் மரத்துப் போக வாய்ப்பு அதிகம் என்பதோடு, தம் சமூகம், நாகரீகம், அரசு, நாடு ஆகியன குறித்து நம்பிக்கையின்மை, அலட்சியம், இழிவுணர்வு ஆகியன அம்மக்களிடம் நிரம்ப வாய்ப்பு அதிகம். முன்னாள் காலனிய நாடுகளாயிருந்து, இன்னும் அந்த வியாதியின் பீடிப்பிலிருந்து விழிப்புணர்வோடு மீள முயற்சி செய்யாத இந்தியா போன்ற ஒரு நாட்டில் இத்தகைய விட்டேற்றியான மனோபாவம் பரவலாக இருக்கத்தான் செய்யும், அதையே இந்த ஊடகங்கள் மேன்மேலும் உறுதிப்படுத்தி, பெருக்கவும் செய்கின்றன.

ஒரு வேளை நம்மிடையே இருந்து போன பற்பல சாதனையாளர்கள் பற்றித் தொடர்ந்து எழுதினால் நம் நாகரீகமும் தன்னளவிலும், ஒப்பீட்டிலும் மேன்மைகள் கொண்டதே என்ற ஒரு எதார்த்தமான உணர்தல் நம்மிடம் பரவுமோ என்ற நப்பாசை எங்களுக்கு உள்ளது. இதை ஒட்டி இந்திய/ தமிழகச் சாதனையாளர்கள் என்று எங்களுக்குத் தெரிய வருபவர்கள் பற்றித் தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரிக்க இருக்கிறோம்.