கோபுலு – மறக்க முடியாத நினைவுகள்

பெருநகரத்தின் நடைபாதை வாழ்வு சார்ந்த செங்கல்பட்டு, வட ஆற்காடு உழைப்பாளி மக்களை மிக வேகத்துடனும், துல்லியத்துடனும் அவர் வரைந்திருப்பார். ஜார்ஜ் டவுன் ஜனப்பிரவாகத்தில் அவர் வரைந்த பல முகங்களை நான் பல முறை எதிர்கொண்டிருக்கிறேன். செம்புதாஸ் தெரு கார்ப்பரேஷன் பள்ளியில் என்னுடன் படித்த என் பால்யகால சகியும், நடைபாதை வாசியுமான பாஞ்சாலியின் முகச் சாயலை கோபுலுவின் ஏதோ ஒரு கோட்டோவியத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். பாஞ்சாலி மட்டுமன்று; நடைபாதைகள் சேரிகளின் பல குணச்சித்திரங்கள் அவர் தூரிகையில் உயிர் பெற்று எழுந்தார்கள். பிராமண முகங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். குறிப்பாக தஞ்சை மாவட்ட பிராமண முகங்களின் அத்தனை வகைகளையும் அவர் வரைந்து தீர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அன்று விகடனில் அவர் வரைந்த தொடர்கதைகளுக்கு தலைப்பு எழுத்துகளை ஒட்டி சின்னதாக ஒரு முகப்போவியம் வரைந்திருப்பார் பாருங்கள்!

தாது வருஷப் பஞ்சம்

பஞ்சங்களை நினைவு கூரும் ஒரு சில அடையாளங்களை இன்றும் சென்னையில் காணலாம். ஒரு உதாரணம், இன்றைய சென்னை நகரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் – இதன் பெரும்பகுதி தாது வருஷப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது. பல ஆண்டுகள் தமிழகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிடையே போக்குவரவுக்குப் பயன்பட்ட இந்தக் கால்வாய் இன்று சர்வ ரோகச் சாக்கடையாகச் சுருங்கி விட்டது. கொள்ளை நோய்களும், லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் பஞ்சங்களின் உடனடி விளைவுகள். குறிப்பாக, பஞ்சத்தின் முக்கிய விளைவு மனித மதிப்பீடுகளின் வீழ்ச்சி. பஞ்சத்தைத் தொடர்ந்து சென்னையில் அடிமை வாணிபம் பல ஆண்டுகளுக்கு நிலை கொண்டது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?

பயம்

மனித மனம் விசித்திரமானது. சிலரைப் பார்த்ததும் உடனே பிடித்துவிடும். சிலரைப் பார்த்ததும் காரணமே இல்லாமல் எரிச்சல் வரும். அந்த இளைஞனின் நிதானமும், பணிவும் கண்டுச் சுந்தருக்கு அவனைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் சுந்தருக்கு இப்போது எரிச்சல்தான் வந்தது. காலங்காலையில் வந்துத் தொந்தரவு செய்கிறானே என்ற எரிச்சல். ஏதாவது நன்கொடை என்று கேட்டால் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடவேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.