உலகமயமாக்கல் – முடிவை நோக்கி?

எழுபதுகளிலும்,எண்பதுகளிலும் உற்பத்தி துறையில் (தயாரிப்பு சந்தை) உலகமயமாக்கல் பெருமளவில் ஏற்பட்டது ; பல மேலாண்மை வகுப்பறைகளில் பகிரப்பட்ட நிகழ்வு – “ஃபோர்ட் கார்களின் கதவுகள் பார்சிலோனாவிலும், குஷன்கள் புடாபெஸ்டிலும்,கியர்பாக்ஸ் பாரீஸின் புறநகரிலும்,ம்யூசிக் சிஸ்டம் ஒசாகாவிலும் தயாரிக்கப்பட்டு, ஷாங்காயில் ஒருங்கிணைக்கப்பட்டு தாய்லாந்தில் காராக விற்கப்பட்டது. இதில் அமெரிக்க பங்கு என்பது எங்கே? இது நாடு கடந்தது – புவியியல் வரம்புகளுக்கு அப்பாற்பட்டது; எனவே உலகளவில் சிந்தியுங்கள் – உள்ளூரளவில் செயல்படுங்கள்” என்று சொன்னார்கள். ’Glocal-க்ளோகல்’ என்ற…

முத்ரா மூலமாக நிதிச்சந்தைகளை உள்ளிணைப்பது

சமீப காலகட்டங்களில் வட்டி விகிதங்கள் மெதுவாக இறங்கி வருகின்றன. வங்கிகளிடமிருந்து கடன் பெறும் பெருநிறுவனங்கள் ஆண்டிற்கு 12%க்கும் குறைவான வட்டியில் நிதிகளைப் பெற முடிகின்றன. ஆனால், என்னுடைய பழக்காரியும் காய்கறி விற்பவனும் நாளொன்றுக்கு அரை சதவிகித வட்டியில் கடன் வாங்குகிறார்கள். ஆண்டிற்கு 180% வட்டி கொடுக்கிறார்கள். என்னுடைய பெட்டிக்கடை முதலாளி ரூ. 50,000 என்று கடன் பத்திர ஒப்பந்தம் போட்டு ரூ. 45,000 பெறுகிறார். அதன் பிறகு நாளொன்றுக்கு ஐநூறு ரூபாய் வீதமாக நூறு நாளுக்குத் திரும்ப செலுத்துகிறார். (வருட வட்டி விகிதம் 40 சதவீதத்திற்கு மேல் ஆகும்.) என்னுடைய நாவிதர் சீட்டுப் பணத்தின் மூலம் நான்கு சதவிகிதம் மாதாமாதம் வட்டி கொடுக்கிறார். (வருட வட்டி 48 சதவீதமாகும்.)

உலக வங்கிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்தாயிற்று

உலக வங்கி தேகநலம் சம்பந்தப்பட்ட சில திட்டங்களுக்கான தன் உதவியை நிறுத்தி விட்டதாகவும், அதற்குக் காரணம் அந்தத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் இருந்த ஊழல்தான் என்றும் செய்தி கிட்டியிருக்கிறது. நிதி அமைச்சர் உலக வங்கிக்குத் தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு எழுதியிருப்பதாகவும் செய்தி வந்தது. இந்த ஒரு விஷயத்தில் உலக வங்கி கொடுக்கும் அழுத்தம் தேவையானது என்று நாம் ஏற்றாலும், மொத்தமாகப் பார்க்கையில், இந்த நிறுவனத்தின் விதிகளும், முன் நிபந்தனைகளும், உலகளவில் முக்கியமான சக்தியாக எழுந்து கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு அத்தனை பொருத்தமானதாக இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்

கோடிகள் ஈட்டும் இலாப-நோக்கற்ற நிறுவனங்களுக்கும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று அறிய முடியாத என்.ஜீ.ஓக்களுக்கும் உகந்த பூமியாக இந்தியா இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு வரவாகும் தொகையில் பெருமளவு, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்துவம் கொண்டவர்களால் நடத்தப்படும் வியாபாரங்களுக்கும் செல்கிறது என்று ஊகிக்கப்படுகிறது. அதைக் குறித்த கட்டுரை

‘கோவில் பொக்கிஷங்கள் சந்தைப் பொருட்கள் அல்ல’

இவற்றை வெறும் “சொத்து”க்கள் என்று மட்டுமே பார்க்க முடியாது. இவை நமது கலைப் பொக்கிஷங்கள். கலைப் பொக்கிஷங்கள் சந்தையில் விற்கப்படும் பொருள்கள்(commodity) அல்ல. உதாரணமாக, தஞ்சை பெரிய கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலில் இருக்கும் ஓவியங்களை வெறும் “சொத்து”க்கள் என்று நீங்கள் கூறமுடியுமா? சோழர் கால சிலைகளை வெறும் “சொத்து” என்று வகைப்படுத்திவிட முடியுமா? ”இவற்றையெல்லாம் அரசாங்கம் கைப்பற்றி அதை சந்தையில் விற்று விட வேண்டும். அந்த பணத்தைக் கொண்டு மக்கள் நலப்பணித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்ற சொல்லத் துணிவது எத்தகைய முட்டாள்த்தனம்!

சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?

பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் – கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல.

பேரரசின் தொலைந்த தொடுவானங்கள்

மத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.