குஞ்ஞுண்ணி மாஷ் கவிதைகள்

குஞ்ஞுண்ணி (1927 – 2006) மலையாளக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆசிரமவாசியாகவே வாழ்ந்தார். மலையாள மொழியின் நெளிவுகளை விடுகதை/வார்த்தை விளையாட்டு போல பயன்படுத்தி எளிய வாக்குகளில் சின்னஞ்சிறிய கவிதைகள் நிறையப் புணைந்திருக்கிறார். அதனால் கேரளத்தில் குழந்தைக் கவிஞர் என்று பரவலாக அறியப்பட்டாலும், ஆழ்ந்த தத்துவர்த்தமான பொருளுள்ள கவிதைகள் இவருடையது.

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா?

மேல்நாட்டுச் செருப்பு

மேலை நாட்டினர் அவர்களின் குறுகிய புரிதலுக்கு ஏற்ப உருவாக்கிய செருப்புக்கு ஏற்ப இந்துமதத்தின் கால்கள் வெட்டப்பட்டு அச்செருப்புக்குள் தினித்து நிற்க வைக்கப்படுகிறது. நம்முடைய தத்துவங்களை விளக்க நாம் இந்தச் செருப்புக்குள் நின்று கொண்டு விளக்க வேண்டியதில்லை.

மயக்கம்

அப்பாவிடம் பலமுறை திரும்பத்திரும்ப சொல்லச்சொல்லி கேட்டது தான். சுந்தாச்சுச் சித்தப்பா யானையின் பின்னால் ஓடிப்போன கதை. எத்தனை முறை கேட்டாலும் ராமனுக்குச் சலிக்காது, அவன் அப்பாவிற்கும் சொல்லிச் சலிக்காது. ஒவ்வொரு முறையும் அவரின் மனநிலையைப் பொறுத்து பல கிளைக் கதைகளுடன் வளர்ந்துகொண்டே வந்தது.

அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல்

உயிரினங்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு பல அடிப்படையான கேள்விகள் யோசிக்க யோசிக்க பெரும் வியப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு தாயின் மார்பில் வாய் வைத்து பால் உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது? மனிதரில் மட்டுமல்ல எல்லாப் பாலூட்டிகளிலும், கண்ணைக் கூட திறக்காத குட்டிகள் தங்கள் உயிர் வளர்க்கும் உணவு அன்னையின் முலையில் இருப்பதாக அறிந்து எப்படி நேராக ஊர்ந்து சென்று சேர்கின்றன? பறவைகள் கூடு கட்டுவது எப்படி? சிலந்தி வலை பின்னுவது எப்படி?… இன்னும் இதே போன்ற “எப்படி?” என்ற கேள்விகளின் வரிசை முடிவில்லாமல் நீளும். மேலே கேட்கப்பட்டவை உட்பட இன்னும் உயிர்களின் நடத்தைகளில் பலவற்றுக்கு ‘அது அவ்வுயிரின் இயல்பு’ என்று ஒற்றை வார்த்தையில் விளக்கம் கொடுத்துவிடலாம். ‘உயிர்களின் இயல்பு’ என்பதைத் தெளிவாக, உயிரியல் சார்ந்து விவாதிக்கத் தகுந்த வகையில் புறவயமானதாக வரையறை செய்ய வேண்டுமென்றால், ‘ஒரு உயிரினத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரியல் பண்புகளில் மிக அடிப்படையானவை,’ என்று சொல்லலாம்.

வாழ்வெனும் வரம்

தென்னமெரிக்க கடற்கரையில் நல்ல வெளிச்சமும் வெப்பமும் உள்ள ஒரு பகல் பொழுது. கடல் அலையின் ஆர்ப்பரிப்பைத் தவிர அந்த வெளியை நிரப்பிய ஒருவித மௌனம் மட்டும். திடீரென்று வெண்மையான கடற்கரை மணல் ஆங்காங்கே அசைந்து மொட்டுவிடுவது போல சிறிய குமிழாக வளர்ந்து விரிசல் விடுகிறது. உள்ளிருந்து கரிய ஆமைக்குஞ்சுகள் முட்டையை உடைத்துக்கொண்டு தலைநீட்டுகின்றன. தலையை இருபுறமும் அசைத்து, பிஞ்சு துடுப்பை விரித்து முட்டையின் ஓட்டைக் கிழித்துக் கொண்டு மிகுந்த சிரமப்பட்டு ஆமையாக விடுபடுகின்றன. அந்த நொடியிலேயே கடலை நோக்கி சின்னஞ்சிறிய கால்களையும், துடுப்புகளையும் வீசியபடி, முதுகில் ஓட்டைச் சுமந்துகொண்டு அடித்துப் புரண்டு கொண்டு ஓடுகின்றன.

அனுபவமாவது எது?

கீழே மண்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான மரங்களின் கோடிக்கணக்கான கிளைகளில் முளைத்து உதிர்ந்தபடி இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத இலைகளில் ஏதோ ஒரு இலையின் நரம்புகளில் ஒரு பக்கவாட்டு நுண் இழையின் நுனி மட்டும்தான் நான் என்று எண்ணிக் கொண்டதும் ஒரு விடுதலை உணர்வு. இங்கு நடக்கும் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் ஒன்றுமே இல்லை -ஆனால் நான் இல்லாமல் இந்தக் காடு முழுமை பெறாது.

நிசப்தத்தில் பிறந்த இசை

மண்ணில் புரட்டியெடுக்கப்படும் காந்தத் துண்டு மற்ற அனைத்தையும் உதறி இரும்புத் தூசியை மட்டும் உடலெங்கும் அப்பியெடுத்துக் கொண்டு வருவது போல, இரைச்சலான ஓசைகள் மிகுந்த புற உலகில் இருந்து இனிய இசைக்கான தூய ஒலிக்குறிப்புக்களை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கும் நுண்மையான செவித் திறன் கொண்ட குர்ஷித்தின் இசை எப்படி நிசப்தத்தில் இருந்து பிறந்த இசையாக இருக்க முடியும்?

எறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்

கங்கையில் குளிக்கும் போது அந்தப் பெண் தான் விரும்பியவாறே அன்னையாகிறாள். நிர்வாண சாதுக்களுக்கும், அவளுக்கும் உடல் என்னும் தடை இல்லை. பின்னணியில் அன்னையைப் போற்றும் பாடலில் இது உணர்த்தப்படுகிறது. கூடவே பயணம் செய்தும் தருக்க மனம் வாதங்களின் அக்கப்போரில் சிக்கி கரையிலேயே தங்கி விடுகிறது. உண்மையான தேடலும், நம்பிக்கையுமுள்ள உணர்வு பூர்வமான மனம் கங்கையில் மூழ்கி எழுந்து தன் ஞானத்தை கண்டடைகிறது. பரிபூரண மனிதர் எழுதித் தந்த “தோட்டத்துப் பனித்துளிக்குள் முழு உலகம்” என்னும் வரிகளின் மூலம் கடவுள் புறத்தே தேடவேண்டிய விஷயம் இல்லை, உள்ளேயே இருப்பது தான் என்னும் இரண்டற்ற அத்வைத நிலை உணர்த்தப்படுகிறது.

பகத்சிங்கின் மரணம் – மறைக்கப்பட்ட உண்மைகள்

பிரிட்டிஷ் அதிகாரிகளின் உதவியுடன் ‘ஆபரேஷன் ட்ரோஜான் ஹார்ஸ்’ என்னும் ரகசியத் திட்டம் வகுத்து சாண்டர்ஸின் உறவினர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்று அந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. பகத்சிங்கும் அவரது நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் கழுத்து மட்டும் முறிக்கப்படும் வரை தூக்கிலடப்பட்டு அரைமயக்கத்தில் இருந்தவர்களை இறந்துவிட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது.

செயற்கைக் கருவூட்டல் : கவனமின்மையும் பின்விளைவுகளும்

விந்தணு தானம் போன்ற செயற்கைக் கருவூட்டல் சிகிட்சைகள் அளிக்கும் மருத்துவமனைகள் இந்தியப் பெருநகரங்களில் முன்னெப்பொழுதையும் விட வேகமாகப் பெருகி வருகின்றன. விந்தணு வங்கிகள், குழந்தைபேறுக்கான மருத்துவ உதவி செய்யும் மருத்துவமனைகளின் தரம், விந்தணுக்கள் அல்லது கருமுட்டைகளில் தொற்று நோய்கள் மற்றும் மரபணுக்கோளாறுகளை கண்டுபிடிக்கும் பரிசோதனைகளைச் செய்வதில் அவற்றின் உண்மையான நடவடிக்கைகள், விந்தணு கொடையாளர்களின் தகவலட்டவனையை (Database) மேம்படுத்தி வைத்திருக்கும் விதம் போன்றவை தீவிரமாகக் கண்கானிக்கவும் நெறிப்படுத்தவும் படவேண்டும்.

மதப்பிளவும் தேசப்பிரிவினையும்

சிறிய சிறிய மூட்டை முடிச்சுகளையும் கூட கீழே போட்டுவிட்டு வெறும் கூடான உடலில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அதற்கடுத்து அவர் சொல்வது தான் இத்தனை ஆண்டுகள் தாண்டியும் கேட்கும் நம் நெஞ்சங்களை உலுக்குகின்றது. தாய்மார்கள் தாங்கள் நொந்து சுமந்து பெற்ற குழந்தைகளைக்கூட ஒரு கட்டத்தில் தூக்கமுடியாமல் துவண்டு, கதறி அழவும் தெம்பில்லாமல் உயிருடன் கீழே இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.

இருப்பு

உண்மையில் நான் இருப்பது கற்பனை செய்யமுடியாத அதிமகத்தான ஒரு மனித மூளையின் எண்ணற்ற மடிப்புகளுக்கிடையில் ஏதோ ஒரு இடுக்கில் என்று அறிந்தேன். மேலே கவிழ்ந்த அரைக்கோளமாய் மண்டை ஓடு தொட்டுக்கொண்டிருப்பதையும் மங்கலாகக் காணமுடிந்தது. இது என்னால் கொஞ்சம்கூட ஊகிக்கப்படவே முடியாதது என்று புரிந்தபோது மெல்ல என் திண்மையழிந்து, எடையிழந்து நான் இல்லாமலாவதை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். மூளைக்குள் நானிருக்கிறேன் என்றால் என் உடல் எங்கே என்று கேட்டுக்கொண்டேன். அல்லது நான் என்பதே வெறும் எண்ணம் தானா?

மொழியின் விதை

மூளையில் மொழி மையங்கள் இருப்பது உறுதியானாலும், மூளை என்பது உடல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும், கட்டளைகளைக் கடத்தும் கட்டுப்பாட்டு மையம் மட்டும் தான். மூளையின் செயல்க்கட்டுப்பாட்டு மையங்களைத் தூண்டும் காரணிகள் அதற்கான புரதங்களே. புரதங்களோ மரபணுக்களால் குறிக்கப்படுபவை. மரபணுக்களே உயிரியல் பண்புகளைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் அடிப்படை அலகுகள். அப்படியானால் மூளையின் மொழிமையங்களின் வளர்ச்சிக்கும், தூண்டுதலுக்கும், இணைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமான மரபணுக்கள் எவை?

லீலை

தங்கள் மூதாதையர், காலத்தை வெல்ல, காலமே இல்லாத ஓரிடத்தில் வந்து நிலைபெற்றனர் என்பது மெல்ல மெல்லப் புரியும் தோறும் தேஜாவின் உடல் ஒளி வெப்பமாக அடங்காத அலைகளாக வெளியேறியது. தனக்கு முன் யாரும் இவற்றை உணர்ந்திருக்கிறார்களா என்று தேடி தன் ஆழ்மன அடுக்களில் இறங்கி தங்கள் ஒளிர்கிரகத்தின் நியமங்களில் நகர்ந்தான். அறிந்தவர்களின் மன அலைகள் இன்னும் ஆழத்தில் கிடப்பதை அவன் மனம் கண்டுகொண்டது. ஒருவேளை அவர்கள் எல்லாம் மனவிலக்கம் அடைந்து பிலத்திற்குள் சென்று விட்டார்களோ என்று நினைத்துக் கொண்டான்.

நுண் உயிர்களும், மூளையும்

நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்! நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம்! எடை கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ. ஏறத்தாழ ஐநூறு வகையான நுண்ணுயிர் இனங்கள். நாம் இம்மாபெரும் குடியேறிகளுடன் சமரசம் செய்தபடியேதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறோம். இந்த எண்ணிக்கையும், வகைவிரிவும் தான் நம்மைச் சற்று மிரட்டி அவற்றைப் பொருட்படுத்திப் பார்க்க வைக்கிறது. இவற்றுள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியனவும் (Probiotic), சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகளும் (Opportunistic pathogens), இதர நோய்க்கிருமிகளும் உண்டு. பிறக்கும்போது மனதைப் போலவே குடலும் மிகத் தூய்மையாகத்தான் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுகின்றது. பிறந்து இரண்டே வருடங்களில் ஒரு முழு வளர்ச்சி அடைந்த மனிதனின் குடலுக்குள் இருக்கும் அதே அளவுக்கு பல்வேறு இனவகை நுண்ணுயிர்கள் பெருகிவிடுகின்றன. இந்த ஆரம்ப கட்ட குடல் நுண்ணுயிர்ப் பெருக்கம், மூளை வளர்ச்சியிலும் பிற்கால நடத்தையைத் தீர்மானிப்பதிலும் பங்கு வகிக்கலாம். மனிதனில் இன்னும் நேரடியாக ஆராயப்படவில்லை. ஆனால், எலிகளை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது

அறிவாற்றல் மரபுப் பண்பா?

நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா இல்லை சமூக சூழ்நிலையால் அமைவதா?”