பிலோமியின் காதலர்கள்

வேலை தேடும் காண்டம் சென்னை வரை நீண்ட போது அங்கும் வீடு தேடிச் சென்று வண்ணநிலவனைச் சந்தித்தேன். அது தான் கடைசியாக நான் வண்ணநிலவனைச் சந்தித்தது என்று நினைக்கிறேன். ஆனால் கடல்புரத்தில் நாவல் என்னுடன் எப்போதும் இருந்தது. எப்போது இலக்கியம் பற்றிப் பேசினாலும் கடல்புரத்தில் பற்றிய பேச்சு வராமலிருக்காது. பிலோமியின் நினைவு வராமலிருக்காது. நான் பிலோமியின் காதலனாக இருந்த காலம் கண்ணில் ஆடும்.

பனுவல் போற்றுதும் – மும்மணிக்கோவை

நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி கொப்பளிக்கும் இவ்வகை இலக்கண வரையறைகளுக்குள் இயங்க. நாம் எம்பாடு? நமக்கு விதித்தது சந்தம் இல்லாத, இலக்கணம் இல்லாத , எதுகை மோனை இல்லாத, இசைக் கணக்குகள் இல்லாத, தொடைகள் இல்லாத, சீர்தளை இல்லாத, எழுத்து எண்ணி பாப்புனையும் இறுக்கம் இல்லாத புதுக்கவிதை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டன்.

பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா – இரு காந்தியர்கள்

பி.எஸ். ராமையாவின் சிறுகதைகளின் இலக்கியத்தரம் இன்று கேள்விக்குரிய ஒன்றாகக்கூட இல்லாத நிலையில், அவரது கதைகளைப் பற்றிய திறனாய்வுக்கு என்ன இடம் இருக்க முடியும்? ஒன்று, சி.சு. செல்லப்பாவின் கணிப்பு சரியானது என்று காலத்தால் மெய்ப்பிக்கப்படக்கூடும், அல்லது, செல்லப்பா தான் சரியென்று நினைத்த விஷயத்தை நிறுவுவதில் எத்தகைய அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார் என்பதற்கான இலக்கிய ஆவணமாக இது அமையக் கூடும். வாசகர்களும் விமரிசகர்களும் காலமும் மட்டுமல்ல, ராமையாவாலும்கூட கைவிடப்பட்ட கதைகள் இவை.

2012 டிசெம்பர் சங்கீத விழா: ஒரு நூற்றாண்டு நினைவு விழா அனுபவம்

மறைந்த விழா நாயகரின் சிறப்பு குணம் ஒன்று உண்டு. உடன்வாசிப்பவர்களை எப்போதும் உற்சாகப்படுத்துபவர் என்பதை விழாவில் பேசியவர் குறிப்பிட்டுச் சொன்னதை முற்பகுதியில் விவரித்தோம். நம் பாடகரும் அதற்கு பேர் போனவர்தான். சமயத்தில் பாடுவது பத்து நிமிஷம் உற்சாகப்படுத்துவது கால் மணி நேரம் என்று கூட அவர் கச்சேரிகளில் நடந்துவிடுவதுண்டு. நேற்றைக்குப் பாவம் உடன் வாசித்தவருக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லை. தன்னிச்சையாய் வராத பாராட்டு சமயத்தில் ஃபுல்டாஸான யார்க்கராகிவிடுவதுண்டு. பாடகர் பாடிய ஸ்வரத்தை உடனே கிரகித்துக் கொள்ள முடியாமல் திணறி எடுப்பை குத்துமதிப்பாய் அணுகி சற்றே தப்பி சாஹித்யத்தை அவர் எடுக்கும் போது துல்லியமாய் எழுந்தது பாடகரின் ‘பலே’.

வாசகர் மறுவினை

அண்மையில் சொல்வனம் இதழில் நான் படித்தவற்றில் ஆகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. இணையம் மற்றும் அச்சு ஊடகங்களால் பரபரப்பிற்காக திரிக்கப்பட்டு வெளியிடப்படும் அறிவியலின் தற்கால நிலையையும், அறிவியல் துறையில் இல்லாமலேயே அறிவியலைப் பற்றி எழுதும் அரைபண்டிதர்களைப் பற்றியும் அறிவியல் இயங்கும் விதம் பற்றிய அறிவு இல்லாமல் அங்கலாய்ப்பவர்களைப் பற்றியும் நகைச்சுவையுடன், அண்மைய உதாரணங்களோடு சாட்டையடியாக எழுதியிருக்கிறார் அருண்.

விஞ்ஞான முட்டி மோதல்

குவாண்டம் பெளதிகம் என்பது ஒரு நூறாண்டுக்கு மேல் விஞ்ஞானிகளின் உழைப்பினால் உருவாக்கப்பட்டத் துறை. இதனால், நம் நுண் அளவு புரிதல் (understanding of the small) வளர்ந்துள்ளது. மின்னணுவியல் துறையின் வளர்ச்சியால் இன்று கணினி, செல்பேசி, தட்டை திரை டிவி, டிஜிட்டல் காமிரா, தொலைத்தொடர்பியல் யாவும் வளர்ந்து சமுதாயத்திற்கு உதவியுள்ளன. 20 -ஆம் நூற்றாண்டின் பெரும் மனித வளர்ச்சிக்கு உதவியது குவாண்டம் பெளதிக துறையை அடிப்படையாய் கொண்ட பல துறைகள் என்றால் மிகையாகாது.

எங்கிருந்து அழைக்கிறேன் நான்?

கண்ணிமைக்கும் நேரத்தில் ஜேபி அவளை பின்தொடர்ந்து முன்வராந்தாவுக்குச் சென்றான். வராந்தாவின் திரைச் சீலைக் கதவை அவளுக்காக அவன் திறந்துவைத்தான். அவளுடன் படிகளில் இறங்கி அவள் தன்னுடைய டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்றான். அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருந்தது அது. உலகத்தில் வேறு எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. கால்களை நடுநடுங்கச் செய்யும் ஒருத்தியை அவன் சந்தித்திருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டான். அவளது முத்தம் இன்னும் அவன் உதடுகளில் எரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான்.

ஆயிரம் தெய்வங்கள் – ஓடிஸ்ஸஸ் ஊர் திரும்பிய கதை

கிரேக்க ஓடிஸ்ஸஸ் லத்தீன் வழக்கில் யூலிஸ்ஸஸ் ஆயிற்று. ஆங்கில கவிஞர், டென்னிஸனா எபைரனா என்று சரியாக நினைவுக்கு வரவில்லை, யூலிஸ்ஸஸ் ட்ராயிலிருந்து ஊர் திரும்பும்போது ஃபாசி என்ற தீவில் போதை மயக்கத்தில் சிக்கிக்கொண்ட விவரத்தை மையமாக வைத்து ‘லோட்டஸ் ஈட்டர்ஸ்’ என்ற கவிதை எழுதியிருக்கிறார். நயமான கவிதை. இலியத் போர் முடிவுற்றபின் ட்ராயிலிருந்து ஓடிஸ்ஸஸ் தன் சொந்த தேசமான இதாகாவுக்குத் திரும்பிய கதை இலியத் காவியத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.

உழைப்பாளி எறும்பு : செதேஷ்வர் பூஜாரா

(பூஜாரா) சிரமம் எடுத்து ஆடுபவரோ இல்லை. அவரிடம் கள்ளத்தனமும் இல்லை, அடாவடியும் இல்லை.. அவரிடம் இருப்பது ஒரு முழுமை. இவரை ஆட்டம் இழக்கச் செய்வது எதிர் அணிக்குக் கஷ்டமான வேலை. லீக் மேச்சுகளின் வழக்குப்பேச்சில் சொன்னால் அவர் ஒரு ‘திடமான’ பேட்ஸ்மன்., ‘த்த்த்த்த்த்த்த்………..திடம்” இந்தப் பதம் எத்தனை நீளமாகிறதோ அவ்வளவு கவனம் செலுத்தப்படவேண்டியவர் அவர் என்று அர்த்தம்.

வைதேஹி – அறிமுகமும் கவிதைகளும்

ஜானகி ஸ்ரீனிவாசமூர்த்தி எனும் வைதேஹி சமகால கன்னட எழுத்தாளர். கதை, கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனப் பலவகை எழுத்தில் தன் முத்திரையைப் பதித்துள்ளவர். இவர் தன்னை ஒரு பெண்ணிய எழுத்தாளராய் அடையாளப்படுத்திக் கொள்ளவிட்டாலும், ஆணாதிக்க சமுதாயத்தில் சாதாரண மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்வுப் போராட்டங்களைச் சுற்றியே இவரது கதைகள் பெரும்பாலும் அமைந்துள்ளன. உரத்து கோஷம் போடாமல் நம் சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கையை அது இருப்பது போலவே காட்டி அதன் மூலம் தெரிந்து கொள்ளவேண்டியதை நமக்கே விட்டுவிடுகிறார்.

எதையோ கனவுகிற விளையாட்டு

அந்தக் குரலிலேயே தெரிந்து போகிறது, மிகக் கவனமாக பீதியடையாமல் இருக்க முயற்சி நடப்பது. மிகவும் பயந்து போயிருக்கிற ஒரு தாய், தன்னிடம் உள்ள அத்தனை அலசலறிவையும் பயன்படுத்தி, தன் மூளையின் வேதிப்பொருட்களின் உத்வேகத்தை மீறித் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைப் பல்லாலும் நகத்தாலும், ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளாமல், புத்திசாலித்தனத்தால் எதிர் கொண்டிருக்கிறாள் என்பது. “ஏதாவது மோசமாக நடந்து விட்டதா?”

அவனி

பின் எப்போதோ விழிப்பு வந்தபோது கடிகாரம் நின்றுபோயிருந்தது. வெளிச்சம் அதிகம் என்று தூங்கும் முன்பு மூடிய ஜன்னலைத் திறந்து பார்க்கையில் அங்கு இருட்டி இருந்தது. முன்பு இருட்டாய் இருந்த எதிர்பக்க ஜன்னலிலிருந்து இளம் வெய்யிலின் இழைகள் தெரிந்தன. ‘இந்த சூரியனுக்கு வேறே என்ன வேலை – இந்தப் பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் அல்லாடுவதைத்தவிர,’ என்று முணுமுணுத்துக்கொண்டே கட்டிலை விட்டு கீழே இறங்கக் காலை நீட்டினாள். தரை எட்டவில்லை.

மகரந்தம்

காஸா போரில் பல கடும் பிரச்சினைகளின் உண்மை முகங்கள் தெரிய வருகின்றன. உலக நாடுகளின் பல சாய்வுகளும் புலப்படுகின்றன. சில நாடுகள் இரண்டு பக்கமும் பங்கெடுக்கும் நிலையில் உள்ளனர். இவற்றின் நடுவே, எங்கும் வெடிகுண்டுகளும், ராக்கெட்டுகளும் வெடித்துக் கொண்டிருக்கையில் அதிகம் வெளித் தெரியவராத போர் ஒன்றும் நடக்கிறது. உலகில் இப்போது நாடுகள், அவற்றின் ராணுவங்களைத் தவிர வேறொரு சக்தியும் உருவாகி உலவுகிறது. நிஜமாகப் பார்த்தால் இப்படி நாடுகளின் வடிவுகளைத் தாண்டிய பல சக்திகள் சில பத்தாண்டுகளாக உலக அரசியல் இழுபறிகளில் பங்கெடுத்து வந்திருக்கின்றன

எறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்

கங்கையில் குளிக்கும் போது அந்தப் பெண் தான் விரும்பியவாறே அன்னையாகிறாள். நிர்வாண சாதுக்களுக்கும், அவளுக்கும் உடல் என்னும் தடை இல்லை. பின்னணியில் அன்னையைப் போற்றும் பாடலில் இது உணர்த்தப்படுகிறது. கூடவே பயணம் செய்தும் தருக்க மனம் வாதங்களின் அக்கப்போரில் சிக்கி கரையிலேயே தங்கி விடுகிறது. உண்மையான தேடலும், நம்பிக்கையுமுள்ள உணர்வு பூர்வமான மனம் கங்கையில் மூழ்கி எழுந்து தன் ஞானத்தை கண்டடைகிறது. பரிபூரண மனிதர் எழுதித் தந்த “தோட்டத்துப் பனித்துளிக்குள் முழு உலகம்” என்னும் வரிகளின் மூலம் கடவுள் புறத்தே தேடவேண்டிய விஷயம் இல்லை, உள்ளேயே இருப்பது தான் என்னும் இரண்டற்ற அத்வைத நிலை உணர்த்தப்படுகிறது.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 3

செல்லப்பாவுக்கு எழுத்து தன் மணிக்கொடி சகாக்களால் எல்லாம் கைவிடப்பட்ட பிறகு அவருக்கு ஆதரவாகவும், தனக்கு உத்வேகம் தருபவராகவும் பார்த்தது பிச்சமூர்த்தியைத் தான். பிச்சமூர்த்தியின் கவித்வத்தைப் பற்றி அவர் பங்களிப்பைப் பற்றி மறைமுகமாக மறுத்துப் பேசிய புனைபெயர் கட்டுரைகளும் எழுத்துவில் வந்தன. அதில் ஒருவர் எழுத்து மூலமாகவே விமர்சகராகவும் கவிஞராகவும் தெரிய வந்த நகுலனும். இது மாதிரி திரை மறைவு வேலைகளை, தான் தெரிய வந்த தொடக்க காலத்திலிருந்தே ஒரு விஷமச் சிரிப்புடன் செய்தவர் நகுலன்.

பாட்டையா பார்த்த மனிதர்கள்

‘ஜவஹர்லால் நேரு இவரு தோள்ல கைபோட்டாராம்லா! நல்லா கத விடுதாருவே, பாட்டையா’ என்றுதான் ‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ கட்டுரையைப் படித்தபோது நினைக்கத் தோன்றியது. ஆனால் பெரியவர் வெங்கட் சாமிநாதன் தன்னுடைய அணிந்துரையில்(அது அணிந்துரைதானே?) ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவாவது, மனுஷன் அளக்கிறார் என்று தோன்றலாம். இல்லை, அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் நிறைய உண்டு’ என்கிறார். உண்மைதான். பாட்டையா நேரில் சொன்ன, எழுத்தில் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை அறிவேன். அதையெல்லாம் அவர் எழுதினால், இணையத்தில் பாய்கிற 66A மாதிரி, வேறேதாவது A,Bயில் தொடங்கி Z வரை அவர் மீது பிரியமாகப் பாய்ந்துத் தழுவக்கூடும்.