பிரமீள்- மேதையின் குழந்தைமை

விமர்சனத்தை ஒரு கலை வடிவாக அமைத்தவர் பிருமீள். அழகியல் ரீதியிலான அனுபவத்தை சொல்லும் ஒரு தோரணையாக விமர்சனத்தை மாற்றினார். சுயமான விமர்சனச் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

க.நா.சு.வும் சி.ஐ.ஏ.வும்

(க.நா.சு.)உலக இலக்கியவாதிகளை தமிழ்நாட்டில் உலவவிட்டவர். நாங்கள் அவருடைய உலக இலக்கிய வரிசை நூல்களைத் தேடித்தேடிப் போட்டிபோட்டுக் கொண்டு படித்தோம். (உபயம் – கோணங்கி). மிகப் பரந்த வாசிப்பும், மிகச் சிறந்த ரசனையும் கொண்ட, இலக்கியத்துக்காகவே வாழ்ந்து தீர்த்த க.நா.சு.வை இங்ஙனம் செய்யும்படி எது இயக்கியது? கடைசி காலம் வரை அவருடைய ஒரே துணையான அந்த டைப்ரைட்டர் அவரிடம் என்ன சொல்லியிருக்கும்? தன்னை விளம்பரப்படுத்தும் கலைநுட்பம் மலிந்த இன்றைய இலக்கிய உலகில் அவருடைய படைப்புகளின் மதிப்பீடு என்ன? காற்றில் அலையும் கேள்விகள்!

எக்ஸிஸ்டென்சலிசமும் எமனின் அழைப்பும்

எழுத்தாளன் என்பவன் களவும் கற்று மறக்க வேண்டும். வாழ்வின் அத்தனை சூழ்நிலைகளையும் அனுபவித்து உணர வேண்டும் என்று ஆசைப்பட்டோம். பாரதி தொடங்கி ஜி.நாகராஜன் வரை எல்லா ஆளுமைகளின் வாழ்வனுபவங்களும் எங்களுக்கு பொறாமையூட்டின. அது மட்டுமல்ல அப்போது எதை எழுதினாலும் இது உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? என்றெல்லாம் கேள்விக்கணைகளை எதிர் கொள்ள வேண்டியதிருந்தது.

பிலோமியின் காதலர்கள்

வேலை தேடும் காண்டம் சென்னை வரை நீண்ட போது அங்கும் வீடு தேடிச் சென்று வண்ணநிலவனைச் சந்தித்தேன். அது தான் கடைசியாக நான் வண்ணநிலவனைச் சந்தித்தது என்று நினைக்கிறேன். ஆனால் கடல்புரத்தில் நாவல் என்னுடன் எப்போதும் இருந்தது. எப்போது இலக்கியம் பற்றிப் பேசினாலும் கடல்புரத்தில் பற்றிய பேச்சு வராமலிருக்காது. பிலோமியின் நினைவு வராமலிருக்காது. நான் பிலோமியின் காதலனாக இருந்த காலம் கண்ணில் ஆடும்.

கலாமோகினியின் கடைக்கண்பார்வை

சிலசமயம் வண்ணதாசனின் கலைக்கமுடியாத ஒப்பனைகளைப் படித்து விட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும். வண்ணநிலவனின் எஸ்தர் படித்து விட்டு அதன் உணர்ச்சி வேகம் அடங்குமுன்னே கதை எழுதுவோம். அப்படியே வண்ணநிலவன் கதை மாதிரியே இருக்கும்.